அன்பு மட்டுமே உனக்குத் தெரியும்
அளவில்லாமல் அள்ளிக் கொடுத்துவிட்டு பாசம் மட்டும் போதும் .பெட்டகத்தில் பூட்டிவை.அடுத்த பிறவியில் நாம்சந்திக்கும் போது உன் ஸ்கூட்டர் ஒலி யையும், கடைசியாக நீ வரேம்மா நு சொன்ன வார்த்தையையும்
உன்னிடம் திருப்பிக் கொடுக்கிறேன்.
இனிக் கனவிலாவது வந்து போ.
அப்பா மரியாதையை எப்பவும் அவர் குழந்தைகள் நாம் காக்க வேண்டும் என்று அறிவுரையும் சொல்லித் தூக்கத்திலேயே இறைவனை அடைந்துவிட்டாய்.
நீ கெட்டிக்காரன் என்று தெரியும்.
இவ்வளவு சாமர்த்தியம் உனக்கு எங்கேயிருந்து வந்தது.
நொடியில் விட்டாயே உலகை.
இருந்தும் நாளை உனக்கு 58 வயது பூர்த்தியாகிறது.
எப்பவும் போல உன்னிடம் சண்டையிட மனதில்லைடா. என் செல்லத் தம்பி.
எங்கேயிருந்தாலும் யாருக்காவது உதவிக் கொண்டிருப்பாய். அங்கே நலமாக இரு. பிறந்த நாள் வாழ்த்துகள்.
28 செப்டம்பர் 2010 .
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
12 comments:
அங்கிருந்தாலும் உங்களோடு என்றிமிருக்கும் அவருக்கு என் வணக்கங்கள்.
அன்பும்,பாசமும் நிறைந்த,மற்றவர்களுக்கு உதவிக் கொண்டு இருக்கும் உங்கள் அன்பு தம்பிக்கு வணக்கங்கள்.
அன்புத் தம்பியின் நினைவில் வாழும் உங்களுக்கு என் ஆறுதல். ’எங்கிருந்தாலும்’ நன்றாக இரு என்ற உங்கள் ஆசியைக் கேட்க...ஏன் உங்கள் அருகிலேயே இருந்தாலும் இருப்பார்.
அன்பான உறவுகளின் இழப்புகள் மனதில் என்றும் ஊடாடிக்கொண்டேயிருக்கும். அவர்களோடு மனதால் உறவாடிக்கொண்டுமிருப்போம்.
என்ன சொல்றதுன்னு தெரியலை வல்லியம்மா..உங்க கையை பிடிச்சிக்கறேன்...
காலம்பரத் தான் நினைச்சேன். பஸ்ஸிலே பார்த்தேன். :(
அன்பு உள்ளங்கள் மனதை விட்டு என்றும் மறைவதில்லை.
என்னன்னு சொல்றதுப்பா? 'உனக்கு என்ன அவசரமோ சீக்கிரம் கிளம்பிட்டே. ஆனால் என் மனசை விட்டுப்போக உன்னால் முடியவே முடியாது'ன்னு புலம்பத்தான் முடியுது.
அந்த உலகில் அமோகமா இருப்பார்.
என் வாழ்த்து(க்)களையும் சொல்லிக்கறேன்.
என் பேர் கொண்டவர்தானே? போனால் அப்படி போகணும். போன பின் இப்படி மத்தவர் சொல்லும்படி இருக்கும்போது வாழணும்.
உங்கள் மன நிலை புரிகிறது வல்லிம்மா உங்கள் தம்பிக்கு எனது வணக்கங்கள் வல்லிம்மா.
அன்புள்ள,
ராமலக்ஷ்மி,தங்கச்சி கோமதி,அன்பு நானானி,அன்பு முல்லை, அன்பு துளசி,அன்பு சுமதி,
எல்லோருக்கும் என் உணர்ச்சிகளைப் புரிந்து பதிலெழுதினதுக்கு மிகவும் நன்றிப்பா. அவன் மிகவும் இதை ரசித்திருப்பான்.
அன்பு கீதா, நானும் ஆறுவருஷமாக ஆற்றிக் கொள்ள நினைக்கிறேன்.
முடியவில்லை. நன்றிப்பா.
அன்பு ஸ்ரீராம் ஆறுதலுக்கு நன்றி./
உண்மைதான் தம்பி வாசுதேவன். கொடுத்துவைத்தவன் அவன், பெயர் ரங்கன்.
உங்கள் இருவரின் அன்பு நெஞ்சைத்தொடுகிறது.
Post a Comment