சந்தனப் பேலா,கல்கண்டு கிண்ணம் |
பெட்டி அதனுடைய பயணத்தைத் தொடங்கிய இடம்:)
கூகிளில் கிடைத்த குடம் |
இப்படியாகத்தானே பசுமலைக்கும் மதுரை டவுனுக்கும் இரண்டு மூணு
ட்ரிப் போயி
வந்தார்கள். புதிதாக வென்னிர்த்தவலை அதற்கு மூடி வந்தது. அப்போ எங்க ஊரில காஸ் கனெக்ஷன் எல்லாம் வரவில்லை. அதனால ஒரு இரும்புக் கரிஅடுப்பு .
சில பொருட்கள் சாக்குகளில் அடைக்கலம் புகுந்தன.
நகைகள் வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாம் இந்த தரங்கில் இடம் பிடித்தன.
பித்தளை வெண்கலப் பாத்திரங்கள் அம்மாவின் இன்னொரு பெட்டியில் புகுந்து கொண்டன.
புக்கக ஸ்டாண்டர்ட் படி இது சின்னப் பெட்டிதான்.:)
இதுவும் நாகப்பட்டினத்தில் சொல்லிச் செய்து வந்த பெட்டி.
மறதியாக பெயர் பொறிக்கும் போது என்.ரேவதி என்றே பொறித்து அனுப்பி இருந்தார்கள்.என்னப்பா,என்'' போட்டு இருக்கு என்று நான் கேட்டால்,
மாப்பிள்ளை நரசிம்மன் தானே மா,
அதனால் உன் முதலெழுத்து மாறவே இல்லை. நாராயணனுக்குப் பதில்
நரசிம்ஹன் என்று அப்பா சிரித்தார்.
இப்பொழுது(அதாவது 2010il புதுப்பிக்கும்போது பெயிண்ட் அடிக்கிறவர் கிட்ட சொன்னதை நெளிவுசுளிவோடு எழுதிக் கொண்டுவந்து வைத்து விட்டார்.
தினசரி கட்டிக் கொள்ள கடாவ் வாயிலில் (19 ரூபாய் ஒரு புடவை)
ஒரு நாலு புடவை,
சின்னாளப் பட்டில்(7 ரூபாய்) நாலு புடவை. இவைதான்
என் ஜவுளி.
வைரத்தோடு மாமியாரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும் என்று
சொன்னதால்
சென்னை வந்தப் பிறகு அந்த வேலை நடந்தது.
நானும், அம்மா,அப்பா ,சின்னத்தம்பி நால்வரும் ஜனவரி 27 ஆம்தேதி
அப்போதைய திருநெல்வேலி எக்ஸ்ப்ரஸ்ஸில்
ஏறினோம்.
அம்மாவும் அப்பாவும் ரயிலில் தூங்கவே இல்லை.
நான் எப்போதும்போல அம்மா மடியில் தலை வைத்துத் தூங்கிவிட்டேன்.
அடுத்த நாள் புகுந்த வீட்டுக்கு பிரச்சண்ட் சார் சொல்ல அப்பா
என்னை அழைத்து வந்தார் மைலாப்பூருக்கு.
கட்டத் தெரியாத புடவையை தசபுசா என்று கட்டிக் கொண்டு
''அன்னத்தைவிட படு ஸ்லோவாக ' நடந்துவிட்டு அந்தப் பெரிய பங்களாவுக்குள் நுழைந்தோம்.
பிறகு எல்லாம் வேகமாக நடந்தன.புடவைகள் மணிசங்கர் கடையில் (பாரீஸ் கார்னரில் ஒரு கடை) என் விருப்பப்படி வாங்கிக் கொண்டேன்.
நிறையப் பாடங்கள் கற்றுக் கொண்டேன்.
திருமணம் முடிந்து புதுக்கோட்டைக்கு வந்தோம். எங்களுக்கு முன்னால்
பெட்டிகள் வந்துவிட்டன, சதர்ன் ரோட்வேஸில்.
பாத்திரப் பெட்டியைத் திறக்கலாம் என்றால் சாவி அதனோடு வரவில்லை.
அதான் நம் வீட்டு ஹாண்டிமான் இருக்காரே, ஒரு நெம்பு நெம்பி
க்ரோபாரினால்
மேல் மூடியைத் திறந்துவிட்டார்.
இப்படியாக இனிதே திறப்பு விழா நடந்து முடிந்தது.
சொல்ல மறந்துவிட்டேனே. மாமியார் வீட்டிலும் ஒரு பழைய ட்ரங்குப் பெட்டி கிடைத்தது.அதைத்தான் சிங்கம் உடைத்து எடுத்தார்:))
இரண்டு நாட்கள் கழித்து என் அம்மாவும் அப்பாவும்
புதுக் குடித்தனம் செட் அப் செய்ய வந்துவிட்டு,
எல்லாவற்றையும் முறையாக அடுக்கி வைத்துவிட்டு அந்த மதியமே
மதுரைக்குக் கிளம்பி போனார்கள்.
சுபம்.
இது சின்னக் குடம் |
25 comments:
enga akkava chennayil thanikkudithanam vaithathu ninaivirku varuthu
அந்த நாட்களை அழகாய் கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள். சுவாரஸ்யம். தொடருங்கள்.
பசுமை நினைவுகள் ஒரே ஜாலிதான்..அப்பல்லாம் கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலிருந்திருக்குமே :-)))
அந்தக் கால மலரும் நினைவுகள் அருமை அக்கா.
டிரங்குப் பெட்டியின் பயணம் தொடரட்டும்.
பயணம் நல்லா இருக்கு வல்லி.. படங்கள் நல்லா இருக்கு.
அஷ்டலக்ஷ்மி குடம் அழகா இருக்கு. சின்ன குடம் ஜிங்கா வா இருக்கு.
So Andal Srivathsan's life started happily thereafter !! Let it be so for ever
நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தனென்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
இந்திரனுள்ளிட்ட தேவர்குழாமெல்லாம்,
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திமணமாலை,
அந்தரி சூட்டக்கனாக்கண்டேன் தோழீநான் ""
இப்படி நீங்களும் நினைச்சேளா வல்லியம்மா அப்போ ?:))))))
வரணும் எல்.கே. உங்க தனிக்குடித்தனத்துக்கும் உங்க மாமனார் மாமியார் வந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்:)
அதிகம் எழுத யோசனையாக இருந்தது ராமலக்ஷ்மி.
ஏற்கனவே பதிந்த விஷயங்கள் இல்லையா. இப்போதைக்கு ட்ரன்க் பெட்டியை பரணில் வைக்கிறேன்.
நினைவுகளை ஒழுங்கு படுத்திப் பயணத்தைத் தொடரலாம். நன்றிம்மா.
வாங்கப்பா சாரல்.
ஒரு வார்த்தை சொன்னாலும் சரி வார்த்தை சொன்னீர்கள்.
காட்டில் விட்டது போல இருந்தாலும் மனதில் ஏகப்பட்ட தைரியம்,வாழ்க்கையில் உற்சாகம் எல்லாம் இருந்தது. காடாவது ஒண்ணாவது.:))
ஆமாம் கோமதி.
இந்தப் பயணமே எனக்கு ஒரு மருந்து மாதிரி ஆகிவிட்டது:)
இன்னும் நிறைய எழுத ஆசைதான். காலம் வரட்டும் நன்றிமா.
ஆமாம் கோமதி.
இந்தப் பயணமே எனக்கு ஒரு மருந்து மாதிரி ஆகிவிட்டது:)
இன்னும் நிறைய எழுத ஆசைதான். காலம் வரட்டும் நன்றிமா.
நன்றிப்பா கயல். பயணம் தொடரத்தான் செய்கிறது.வெள்ளிப் படங்கள் அழகுதான்,
ஆஹா.அருமையான பாசுரம்.
ஆண்டாள் என்ற பெயர் வைத்தால் அந்தத் தகுதி கிடைத்துவிடுமா ஜயஷ்ரீ.!!
உண்மையில் திருமணமே ஒரு கனவு மாதிரி தான் இருந்தது. அந்தளவுக்கு மனதில் கற்பனை சாமர்த்தியமும் கிடையாது. சொன்னதைச் செய்த பொம்மை.:))
கடந்த கால நினைவுகள் என்றுமே பேழையில் வைத்த பொக்கிஷங்கள்தான்.
இன்றோ...கிச்சனுக்குள் விறுவிறு என்று நிழைவோம்...பின் எதுக்கு, என்ன எடுக்க வந்தோம் என்பதே மறந்துவிடும்.
உங்களோடு திருமணத்திற்கு வந்து சென்றது போல் உள்ளது வல்லிம்மா. சந்தனப் பேலா,கல்கண்டு கிண்ணம் இதையெல்லாம் பார்க்கும்போதே திருமணத்தின் நினைவு வருகிறது வல்லிம்மா:))))
அருமையான பகிர்வு வல்லி சிம்ஹன்..
ஒரு பெரிய அனுபவத்தை சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள். எல்கே சொன்னது போல எனக்கும் என் அக்காவின் நினைவு வந்தது.
அன்பு நானானி,வாங்கப்பா.
அப்பவே ப்லாக் எழுத ஆரம்பித்திருந்தால் இன்னும் எத்தனை விஷயங்கள் சொல்லி இருக்கலாம் என்று தோன்றும்.
ஆனால் அதில் சுவை இல்லை. இப்பொழுது பழைய கணக்கைப் பார்க்கும் போது நிறைவாகத் தான் இருக்கிறது. கிச்சனுக்குள் போவதற்கு முன்னால் ஃப்ரிட்ஜைத் திறந்துவிட்டு மூடுகிறேன் இப்ப எல்லாம். எதற்குத் திறந்தோம் என்று மறந்து போவதால்:)
வாங்க சுமதி. யார் திருமணம் நினைவுக்கு வந்தது. உங்களதா, இல்ல அம்மா அப்பாவோடதா:)
வாங்க தேன்.
நீங்க எல்லாம் வந்து படிக்கிறீர்கள் என்றால் இன்னும் அழகாக எழுதணும்னு தோன்றுகிறது:) நன்றிமா.
வரணும் ஸ்ரீராம்.,எங்க பெண் திருமணத்தின் போது எங்கள் பசங்க ஓடியாடி உழைத்ததை இன்றும் நன்றியோடு நினைக்கிறேன். நீங்கள் எல்லோரும் வெகு சௌக்கியமாக இருக்க வேண்டும்.
இந்த வருடத்தில் நெருக்கமான சொந்தத்தில் நடந்த திருமணத்திற்கு வரமுடியாமல் போனது வல்லிம்மா அந்த திருமணத்தின் நினைவு வல்லிம்மா.
பொட்டி விஷயம் அருமைப்பா.
ப்ளொக்கர் என்ற இனத்துக்கு உள்ள குணாதியம்தான் அந்த அனிச்சை செயல்கள். ஃப்ரிஜ் திறப்பது, காரணம் இல்லாம வாசலில் போய் எட்டிப்பார்ப்பது, கிச்சன் போயிட்டு எதுக்குப்போனோமுன்னு தெரியாம நிற்பது எல்லாம்:-)
நோ ஒர்ரீஸ்.
ஒய் ப்ளட் ஸேம் ப்ளட் :-))))
அன்பு சுமதி, வெளியூர்ல இருந்தால் இப்படி நிறைய சந்தோஷங்களை விடவேண்டியிருக்கு. என் பெண்ணும் அவள் மாமா பையன் திருமணத்துக்கு வரமுடியவில்லை.என்ன செய்யலாம்:(
வாங்கப்பா துளசி,
அதேதான். இதற்குப் பெயர் வலைப்பூ வாதம்:)
சொப்பனத்தில கூட எடிட் போஸ்ட் வரதுன்னால் அதற்கு வேற என்ன பெயர் வைக்கிறது:))0
Post a Comment