குமுதம் இதழில் ஆர். சூடாமணியின் படம். |
சிறு வயதிலிருந்து அவர்களின் சிறுகதைகளையும் நாவல்களையும் படித்துவந்திருக்கிறேன்.
அவர் படங்களை ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் யாரையும் நேரில் பார்க்க விரும்பியதில்லை என்று அறிந்தேன்.
ஆனால் அவருடைய எழுத்துக்கள் அவருடைய உருவமாக என் மனதில் பதிந்தன.
எங்கேயாவது அவர் கதை வந்திருக்கிறது என்றால் உடனே படிக்கும் ஆர்வம் எப்போதும் கொழுந்து விட்டுத துளிர்க்கும்.
மனம,மன நலம் சம்பந்தப்பட்ட கதைகள் என்னைப் பிரமிக்கவைக்கும்.
இரண்டு மூன்று நாட்கள் முன்னால் தான் ஒரு வலைப்பதிவில் அவரது கதை ஒன்றைப் படித்தேன்.
சுட்டி ஒன்றும் கொடுக்க முடியாத இயலாமையை இப்போது நொந்துகொள்கிறேன்.
இதோ அந்தச் சுட்டி கிடைத்துவிட்டது.
http://azhiyasudargal.blogspot.com/2010/07/blog-post_27.html?showComment=௧௨௮௪௨௦௪௨௯௫௬௮௧
வணக்கங்கள் சூடாமணி.
மனநிறைவைக் கொடுத்த எழுத்தாளர்கள் வரிசையில் அடக்கத்தின்
உருவமாக இருந்துவிட்டு ஆரவாரமில்லாமல் கிளம்பிவிட்டீர்கள்.உங்களின் ஒரு மிகச் சாதாரண ரசிகையின் அஞ்சலிகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
4 comments:
ஆழ்ந்த இரங்கல்கள்:(
எனது அஞ்சலிகளும்!
ஒரு எழுத்தாளரையும் விடாம படிச்சுடுவீங்களா வல்லியம்மா?! ஆச்சரியமாக இருக்கிறது உங்களை பார்க்க.
நன்றி துளசி.
@சந்தனமுல்லை,
எங்கள் இளமைப் பருவ எழுத்தாளர்கள் மிகக் குறைவே மா.
அதனால் ராஜம் கிருஷ்ணனையும்,லக்ஷ்மியையும்,சூடாமணி ராகவனையும்,அநுத்தமா, கிருஷ்ணா இவர்களைச் சுற்றியே எங்கள் கருத்துகள் வலுப்பெற்றன. அப்பொழுதெல்லாம் வானொலியும்,பத்திரிகையும்தான் படிக்க வாய்ப்பு. சினிமாவுக்கு அனுப்ப மாட்டார்கள். பேசும்படம் படித்தால் கூட ரசிக்க மாட்டார்கள்:)
நீங்கள் கொடுத்த சுட்டியை படித்தேன் வல்லிம்மா கதை நன்றாக உள்ளது. அவருக்கு எனது அஞ்சலிகள் வல்லிம்மா:(
Post a Comment