Thursday, July 15, 2010

அம்பிக்கும் அதே போல புரியாமல்விழிப்பவர்களுக்கும்:)நான் கேள்விப்பட்ட  சம்பவத்தை  ஒரு கதையாக
பதிவிட வேண்டும் என்று ஆரம்பித்த தொடர், அனுமார் வால் போல நீண்டது போதாது என்று,:)
வல்லிமா எதோ பதிவு போட்டு இருக்காங்க பார்க்கலாம் வந்தவங்களுக்கு
முன்னும் புரியவில்லை பின்னும் புரியவில்லை.

அதனால  இது  ஒரு  விளக்க(மொக்கை)பதிவாகப் போட வேண்டி வந்துவிட்டது.

மக்களே   உங்க எல்லோருக்கும் தெரிஞ்சக்க ஒரு விஷயம், நான் கணினி விஷயத்தில் அத்தனை போறாது என்பது.
அதில அப்பப்போ   நானும் குழம்பி  ,தெரிஞ்சவங்களை,   குழப்புவது ஆறு மாசத்துக்கு ஒரு தடவையாவது நடக்கும்.
ஜனவரி   முதல் தேதி, பயங்கர
 களையபரம் செய்து துளசி கோபால்  அவர்களையும்  அந்த
  சைடில மாட்டிவிட்டு பிறகு தெளிவானது,  உலகம்,அதாவது பதிவுலகத்தில் பாதி பேருக்குத் தெரிஞ்ச விஷயம்.

இங்க  அதுக்கெல்லாம் சுட்டி கொடுக்க முடியாது.
ஏன்னு கேட்டா   சிம்பிள்.
தெரியாது.

ஆனானப் பட்டவங்க சொல்லித் தர முயற்சி செய்தும் நான் கத்துக்காததுன்னால கைவிடப்பட்ட   கதை அது.

இப்ப    ரீஜண்ட்டா   ஒரு  மேஜர் குழப்பம் வந்தது.
அதாவது பதிவின் பெயர் தெரியும்.
ஆனால் பதிவு தெரியாது.:((((

படங்கள் மட்டும் தெரியும். கதை காணாமல்  போயிருக்கும்.

சரி  ஓவர் புலம்பல் ஆயாச்சு.
இன்னிக்கு  நடந்த கதைக்கு  வரலாம். மூன்று நாட்களாக ஒரு தொடர் எழுதிக் கொண்டு வருகிறேன்.
அதுவோ முடிவேனா  என்று தெரியாமல் ஓடுகிறது.
நமக்கோ பிரசி ((precise)  ரைட்டிங் பள்ளிநாட்களிலேயே
வராது.
இதுல  பாதில இந்தக் கதையைக் கேட்டுட்டு
  ''அம்பி''  அதுதான் (நம்ம தக்குடுவோட  அண்ணா) ரொம்ப நாளுக்கப்புறம் இங்க வந்துட்டு சீதை யாரு ராமன் யாரு, ராவணன் வந்துட்டானான்னு  கேட்கிறார்.

ஆகக் கூடி மக்களே தெரியாமல் ஒரு கோபத்தில் கதை எழுத வந்துட்டேன்.
இந்தப் பதிவுக்கு முன்னால இருக்கற  மூணு பதிவுகளும்  ஒரு கதையின் மூன்று பாகங்கள்.

படிக்க முடிந்தவர்கள் கஷ்டப்பட்டு படித்துவிடுங்கள்.:)
அடுத்த பதிவில முடிச்சுடறேன் .

அம்பிக்காக ...
பாமா....ஒரு பெண்
ராதா ..அவளுடைய நாத்தனார் .
இவர்களுக்கிடையே  நடக்கும்  கதை.
உபசாரம், விருந்து  இரண்டு  வார்த்தைகளையும் மறந்த இரு தம்பதியினரின்
கதை.
ஓகேயா.எல்லோரும் வாழ வேண்டும்.

22 comments:

கீதா சாம்பசிவம் said...

ஓகே வல்லி, அம்பி கொஞ்சம் தாமதமாவே புரிஞ்சுக்கிற குழல் விளக்கு டைப், தெரிஞ்சது தானே! விட்டுடுங்க. என்னை மாதிரி புத்திசாலிங்க புரிஞ்சுக்கறோமே! :)))))))))))

ambi said...

அவ்வ்வ்வ்வ், ஸ்க்ரோல் பண்ணி இப்ப தான் 3 பாகத்தையும் படிச்சுட்டு இருக்கேன்.

இப்பவே சொல்லிட்டேன் ரெண்டாவதா இருக்கற படம் தான் என்னது. :))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
அம்பியைச் சொல்லி குத்தமில்லை.

ஏதாவது சீரியஸ் சப்ஜெக்ட் எடுத்துக்கொண்டு அதை சொல்கிற சுவையோடச் சொல்லாமல் நீளமா வேற எழுதினா எப்படிப் புரியும். இல்லாட்ட கணினி இலக்கண விதிகளாவது மினிமம் தெரிஞ்சிருக்கணும். :)
உண்மையாவே புத்திசாலியா இருந்து,என் எழுத்தையும் தெரிஞ்சுக்கற புத்திசாலியாவும் இருக்கணும்:)))))))))))))))))))))))))))))00) தான்க்ஸ் பா.

LK said...

first padamthan ungalathu

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாம பெயர் வச்சுட்டு இதுவும் தொடர்கதைதான்னு யாராவது சொன்னா எப்படிப் புரியும். கீதாவைப் பாருங்க,. அவங்க எழுதற ஒவ்வொரு தொடருக்கும், இரண்டாம்பாகம் வந்தாட்டுக் கூட லைன் பிசகாம கதைய எழுதிட்டுப் போறாங்க. அதனால உன்னைச் சொல்லிக் குற்றமில்லைன்னு நான் இப்பப் பாடறேன்.நிலைமை அப்படி:)
நன்றிமா.

அபி அப்பா said...

ithu enna vanbu???copu right ambikku thaanee?? ambiyoda thambi thakkudu!

ஸ்ரீராம். said...

ஓ... இது கதை இல்லையா?.. விளக்கமா? ஓகே ஓகே... கதை(அல்ல நிஜம்) வந்ததும் வருகிறேன்...

Sumathi said...

விளக்கம் கூட நல்லாவே சொல்லியிருக்கிங் வல்லிம்மா சீதை யாரு,ராமன் யாரு, ராவணன் வந்தானா எல்லாம் புரிந்துவிட்டது வல்லிம்மா:))))

Matangi Mawley said...

Thodaroda explanation padichcha pin thaan thodar ennannu paakkalaamnu keezha scroll panninaen...

enga rangan kovil/melur road la irukkara appartments veedugal mathiri photo.. enga oor main guard gate church photo ellaaththiyum paaththodaney seththa neram halt aakittaen!

apram nithaanamaa padichchaen..

katha- neenga mudichcha pirpaadu atha paththi comment pannaraen..

oru vishayam thoniththu..

ennathaan namma enna periya oorla irunthaalum.. namma ooru- antha streets ithellaam paththi yaaru sonnaalum nostalgia thoththikkarathu!
chitra veethi/uttara veethi theru vellaam en friends! anga ovvoru veetleyum avvalavu paaramparya/kalaachaara manam veesum! thaaththaachaari gardens.. :) evening market (therku chitra veethi)

rangan kovil yaanaa... (atha enakku romba pudikkum.. ranganaayakinnu oru aana romba varusham munnaadi.. athu kuttiyaa erukkarachchelernthu theriyum.. oru sila neraththula.. evening kaai vaanga pogum pothu.. aanaya oru kadala neruththi.. Fanta vaangi koduppaar aana paagar.. :) paakkavey azhakaa irukkum!)

rangan kovil- kambar mandapamum/ thiruvaanaikkaaval- ambaal sannithi pora vazhiyum en ninaivula varathu..

enaga oor enga oor thaan!

Jayashree said...

மெகா தொடரா வந்து ஓவ்வொரு போஸ்டும் படிக்ககூடிய லெங்க்த்ல தானே இருக்கு!! இந்த விளக்கம் இல்லைனா கதைனு ஏன் பேரு? அம்பி அது கூட தெரியாம கேட்டிருக்க மாட்டார் வல்லிம்மா. ஐஸ் விஷப்பனி மாதிரி இறங்கி இருக்கு!!!. தூக்ககலக்கமா இருக்கும். அவங்க தங்கம் வந்து பாத்து நெத்திக்கண்னை திறந்தா ஜுரம் இரங்கிடும்:))))))புரிஞ்சுடும்

கீதா சாம்பசிவம் said...

Suuuuuuper Jeyasri, hats off!!!! :)))))))))))))))

அம்பி அங்கிள், மூக்கிலே இருந்து ரத்தம் வருதே! :P

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயஷ்ரீ,

ஒரு சம்பவம் இவ்வளவு நீளமா என்னை எழுத வைக்கும்னு நானும் நினைக்கலை.
அம்பி குழம்புனதில தப்பே இல்ல.
பாவம் .லைட் காமெடிக்கும் இப்படி அரக்கு மாளிகை மாதிரி கதை போறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.
அவரவருக்கு இருக்கும் வேலைகளின் நடுவே இங்கயும் எட்டிப் பார்க்கிறதே பெரிய விஷயம். நீங்கள்ளாM இருக்கும் போது எனக்கென்ன கவலை:)

வல்லிசிம்ஹன் said...

abi appaa. enna copy right? enakku puriyalaiye.
ambi thambi thakkudu. thakkudu aNNA ambi:)

வல்லிசிம்ஹன் said...

Dear Mathangi,
I feel the same way if some one talks abt the places we have lived in. we were in Trichy
for about 4 years. and Srirangam has many relatives. and we used to visit ,including THaththaachaariyaar thottam,. That mama was a visionary.
that was abt 30 years back:)
and That himaam basandh mangoes.mmmm.
take your time and come back to comment.

துளசி கோபால் said...

ஓஓஓஓஓஓஓ

பாமா ஒரு பெண்ணா?????????????

அச்சச்சோ............

:-))))))))))))))

திவா said...

இப்பதான் அம்பி படிக்கிறார்ன்னா இந்த கதையோட பாதிப்பால அவர் பஸ்ல எழுதலை. ஜெயஸ்ரீ அக்கா சொன்ன மாதிரி ஐஸ் தாக்கம்.
ஹஹஹஹஹஹா! சூப்பர் ஜெ. அக்கா! கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்கன்னு நினைக்கிறேன்.
ஒரு வேளை அம்பி ஐஸை நினைவு வெச்சுகிட்டு இருக்கார் ஆனா ஐஸ் கண்டுக்கலையோ என்னமோ? :-))))))))))

தக்குடுபாண்டி said...

வடை போச்சே!!..:(( எதோ நடந்துருக்குனு தெரியுது, பரவால்லை, முழுத்தொடரையும் படிச்சுட்டு வந்து பதில் சொல்லறேன் சரியா!!

தக்குடுவோட அண்ணா அம்பினு அடையாளம் சொன்னது கொஞ்சம் ஓவர்தான். என்ன இருந்தாலும் அம்பி நிஜ வாழ்க்கையிலும் சரி, பதிவுலகத்திலும் சரி அடியேனுக்கு முன்னவன் அவன்....:)

வல்லிசிம்ஹன் said...

தம்பி வாசுதேவன் வந்திருக்கார். எங்க வீட்டுக் குழப்பத்தில பார்க்காம விட்ருக்கேன். மன்னிக்கணும் தம்பி.
அம்பிக்குப் புரிகிற மாதிரி கதை எழுதாதது என் தப்பு.சொல்லும் வேகம் எழுத்தில் வரமாட்டேன் என்கிறது:(

வல்லிசிம்ஹன் said...

yes Thulasi Bama is a girl:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் தக்குடு. சுவைக்காகச் சொல்லப்பட்டது. என்னிக்கும் அண்ணா அண்ணா தானே. அப்பாவுக்கு அடுத்த ஸ்தானம்.
அம்பியைச் சீண்டுவதுக்கு எல்லாம் காரணமே வேண்டாம். நான் இந்தப் பதிவுக்கு முன்னால் சீண்டியதும் இல்லை. இனிமேலும் கிடையாது. சரியாம்மா.

தக்குடுபாண்டி said...

//அம்பியைச் சீண்டுவதுக்கு எல்லாம் காரணமே வேண்டாம். நான் இந்தப் பதிவுக்கு முன்னால் சீண்டியதும் இல்லை. இனிமேலும் கிடையாது. சரியாம்மா// அம்பி & தக்குடு ரெண்டு பேரையும் சீண்டர்துக்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு, நீங்க சீண்டாமா வேற யாரு சீண்டப்போறா எங்களை??...;)))

வல்லிசிம்ஹன் said...

ஆ. ஒரு எலிஜிபிள் பேச்சலர் பேசுகிற பேச்சா இது:)

பொண்ணாத்துக்காரா எல்லாம் வட்டம் போட்டுக் கொண்டு இருக்காப்பா:)

நம் வீட்ட்ல இப்ப சின்னப் பொண்கள் இல்லை. இதில கலந்துக்கலாம்னால் :)