Blog Archive

Monday, July 19, 2010

தொடருகிறது 6 ஆம் பாகம்

chicago arora temple 2007
Add caption



ஆயிற்று. குழந்தைகளை பாமா காவேரி ஆற்றங்கரையைப் பார்க்க ,காரியஸ்தர்

ராமனுடன் அனுப்பி இருந்தாள்.

காலணிகளை கழற்றாமல் நடக்க அவர்களுக்கு அறிவுரைகள் கொடுக்கப்பட்டன.

நாணிப்பாட்டி செய்து கொடுத்த தேங்காய் சேவையையும்,மோர்க்குழம்பையும் ருசித்தவாறே,

ஒருவிதமான அமைதியில் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.



மதிய சாப்பாட்டின் போது பாமா அந்த வீட்டு நிலவரத்தை எடுத்துச் சொல்லி

ராதாவுக்கும் கோவிந்தனுக்கும்

விளக்க வைக்க முயன்றாள். கிருஷ்ணா(ராதாவின் பெண்) மாமாவுடன் உட்கார்ந்து பாகவததில்

தசம ஸ்காந்தத்தை மிருதுவாகப் படித்துக் கொண்டிருந்தாள்.

கண்கள் திறந்த நிலையில் மருமகளீன் இனிமையான குரலைக் கேட்டுக் கொண்டிருந்தார்.



குழந்தையாக இருக்கும் போது இதே கிருஷ்ணா ஊஞ்சலில் ஏறிக்கொண்டு

தன்னைத் தள்ளிவிடச் சொன்ன நாட்களை நினைத்துக் கொண்டார்.

இறங்கவே மாட்டேன் என்ற பிடிவாதம் வேறு.



மாமாவின் பிள்ளைகளுக்கு ஈடு கொடுத்து சடுகுடு,ஓடிப்பிடிப்பது எல்லாம் விளையாடுவாள்.

அப்புறம் எங்க போயிற்று இந்த பந்தம் எல்லாம்.?

எல்லோருக்கும் பிந்திப் பிறந்தவள் கிருஷ்ணா.

பாமாவுக்கே அவளைத் தன் வீட்டு மருமகள் ஆக்கிக் கொள்ள ஆசை.

மாப்பிள்ளை ஒத்துக்கவில்லை.

இருபத்துமூன்று,இருபத்தைந்து என்றிருந்த தன் மகன்களுக்கு

கரூர், கொடியாலம் என்று பரம்பரையாகத் தெரிந்தவர்கள் வீட்டிலிருந்து

தான் பெண் எடுத்துத் திருமணம் செய்துவைத்தார்.

அந்தப் பெண்களுக்கு ஸ்ரீரங்கம் ஒரு குக்கிராமமாகத் தெரிந்தது.

சின்ன வயதிலேயே சென்னை சென்று படித்து,மீண்டும் ஒரு சின்ன ஊருக்கு வந்துவிட்டதாக
நினைத்தார்கள்.

அவர்கள் வசதிக்காக முதல் தளத்தில் பல வசதிகளையும் செய்தார்.
மகன்களையும் வீட்டு விஷயத்தில் தொந்தரவு செய்வதில்லை.
அவரவருக்குத் தனித் தனி வண்டி.
ஒட்டியது, இந்தப் பட்டுக் குட்டி ஒன்றுதான்.
நிலைதெரியாமல் மருண்ட பாமாவையும் புத்தி சொல்லி
இந்த நிலைமைக்கு பழக்கப் படுத்தினார்.

''நாம் நம் வீட்டிலேயே வானப் பிரஸ்தம் செய்யலாம் பாமா.
அவர்களுக்கும் வயது வரும்போது புரிந்து கொள்வார்கள் என்று சொன்னார்.

அவள் தான் குடும்ப நிகழ்ச்சிகள், தெய்வ ஆராதனை என்று ஒன்றிலும் பங்கெடுக்க
முடியாதவர்கள் இங்க இருந்துதான் என்ன பயன்,

திருச்சி, கொஞ்சம் பெரிய ஊர்,அங்கே போய் இருக்கட்டுமே என்று சொல்லிப் பார்த்தாள்.

அவருக்கு மகன்களைத் தினம் பார்க்கவேண்டும், ஒரு வார்த்தை பேச வேண்டும்

இதெல்லாம் அவர்களை இங்கே இந்த ஸ்ரீரங்கவிலாசத்தில்
நிறுத்திவைத்தது.


பட்டு மட்டும் திருச்சியில் இருக்கும் ஒரு நல்ல பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.
சின்ன மகனுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

இந்த நிலையில் தான் சிகாகோவில் பிள்ளைகளொடு குடியேறிவிட்ட

ராதா, சில பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஸ்ரீரங்கம் வருவதாகவும்,
தன் பழைய அறையை ஒழித்து வைக்குமாறும் ஒரு மாதம் தங்குவதாகவும் மெயில் அனுப்பி இருந்தாள்.
அதுவும் சின்னவனுடைய கணினியின் மெயில் ஐடிக்குத் தான் வந்தது.
அவன் அந்த மெயிலைப் படித்த அடுத்த நிமிடம்,
''அம்மா, அத்தைக்கு வேறு ஏற்பாடு செய்து கொடு.
அவர்களுடைய அமெரிக்கப் பழக்கங்களுக்கு நம் வீடு ஒத்துக் கொள்ளாது''
என்று சொல்லிவிட்டான்.

யார் சொல்லி அந்த வார்த்தைகள் வெளிவருகிறது என்று புரிந்து கொண்டாலும்,
பாமா எத்தனையோ முயன்றாள்.

வீட்டுப் பெண் அவள்டா. அவளுக்கும் இந்த வீட்டில் உரிமை உண்டு
பிறந்து வளர்ந்த பாசத்தில் அவள் நம்மை வேறு

விதமாக நினைக்க மாட்டாள், பதினைந்து

வருடங்கள் கழித்துவருகிறாள்.

சுபாவத்திலயே நல்லவள்ப்பா ராதா,. வித்தியாசம் பார்க்காதே.
நம் பெரிய ஹால் ஒன்று போதும் அவர்களுக்கு, வாசல் பக்கம் இருக்கும்
ஆபீஸ் ரூமையும், தாத்தா ரூமையும் ஒழித்து வைக்கிறேன். எல்லாத் திருத்தலங்களுக்கும் போய் வரத்தான்
அவர்களுக்கு நேரம் இருக்கும். இரவு மட்டும் தங்க வருவார்கள்.
அப்பாவுக்கும் அவர்கள் வருவது உற்சாகமாக இருக்கும் என்றும்,

உங்களுக்கு ஒரு தொந்தரவும் இருக்காது என்றெல்லாம் வாதாடித் தோற்றுவிட்டாள்.



சிறுவயதில் அத்தை பிள்ளைகள் போலத் தன்னால் அமெரிக்கா போய்ப்

படிக்க முடியாத குறை இருவர் மனதிலும் இருந்தது.

அவர்களுக்கு எந்த யூனிவர்சிடியிலியும் இடம் ,கிடைக்காதது,
வேறு(இருபது வருடங்களுக்கு முன்னால்) அவர்களைக் குறைப்பட வைத்தது.

இரு மகன்களும் தன் சகோதரியை ஒதுக்குவது ஸ்ரீநிவாசனைப் பாதித்தது.
அது ஸ்ட்ரோக் ரூபமாக அவரைப் படுக்க வைத்தது.
பாமா, தைரியமாக நிலைமையைச் சமாளிக்க முற்பட்டாள்.

கணவரைச் சிகித்சைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்ற நாளிலிருந்து,

காரியஸ்தரை, வரும் விருந்தாளிகள் தங்கும்படியாக , ஒரு இடம் ஒரு மாதம் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தாள்.

அவரும் ஓரிடத்தைக் கண்டுபிடித்து விவரம் சொன்னார்.
அவர்கள் வீட்டிலிருந்து கொஞ்சம் தள்ளித் தான் இருந்தது.

இருந்தாலும் ராதா மனம் நோகாமல் எல்லா ஏற்பாடுகளையும்

செய்து முடித்தாள்.
ராதாவுக்குப்பிடித்த நாணிப் பாட்டியையும், சின்னப் பொண்ணுவையும்
மீண்டும் அழைத்துக் கொண்டாள்.ராதாவும் ,கோவிந்தனின் சென்னையில் இருக்கும் அவர் உறவுகளைப பார்த்துவிட்டு திருச்சிக்கு வண்டி ஏறினார்கள்.

எல்லோரும் வாழ வேண்டும்.
Posted by Picasa

10 comments:

எல் கே said...

இன்று பலரின் வீட்டில் நடக்கும் நிதர்சனமான உண்மை

துளசி கோபால் said...

125

துளசி கோபால் said...

ம்ம்ம்......சொல்லுங்க....அப்புறம்?

எப்படி அமெரிக்காப் போனாங்க? எப்போ? அதெல்லாம் சொல்லவே இல்லை?

வல்லிசிம்ஹன் said...

இப்ப சமீபத்தில் நடந்து அந்த தம்பதியரையும் பார்க்கப் போயிருந்தேன் எல்.கே.

அவர் உடல் நலம் தேறி வருகிறார்.
போன வருடந்தான் ராதா, கோவிந்தனின் அழைப்பில் பாமாவும் ஸ்ரீநிவாசனும்
சிகாகோ போய் வந்தார்கள்..
இனி இப்படித்தான் இருக்குமோ.இல்லை மனம் மாறுவார்களா.

வல்லிசிம்ஹன் said...

துளசி 1 2 5?
பாராவில் தப்பா. படங்களில் தப்பா?
புரியலை.
கதை இன்று முடிக்கணும் நாளைக்கு எல்லா டெஸ்டும் இருக்கு:0)

வல்லிசிம்ஹன் said...

அமெரிக்காக்கு பொண்ணுகல்யாணம் ,பிள்ளைக்கு வேலை,அவன் க்றிஸ்டினா கல்யாணம், குழந்தைகள் பிறப்பு எல்லாவற்றுக்கும் உதவிக்குப் போய்ப் போய், அங்கயே வொர்க் பர்மிட் (கன்சல்டண்ட்)கோவிந்தனுக்கும்
கிடைக்கவே எல்.ஏலயும் சிகாகோவிலும் மாறி மாறி இருக்கிறார்கள்

Jayashree said...

''நாம் நம் வீட்டிலேயே வானப் பிரஸ்தம் செய்யலாம் பாமா.
அவர்களுக்கும் வயது வரும்போது புரிந்து கொள்வார்கள் என்று சொன்னார்””


"Your living is determined not so much by what life brings to you as by the attitude you bring to life; not so much by what happens to you as by the way your mind looks at what happens." - Kahlil Gibran

I cant deny that some of the lines and incidents do give me a sense of “Déjà vu” நெருங்கிய ஒரு தம்பதியினரின் வாழ்வின் புரட்டப்பட்ட பக்கங்கள் . ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். அதை சார்ந்த உணர்ச்சிகள் என்னமோ ஒன்றுதான்

Unknown said...

கண் முன் நடக்கும் நிகழ்ச்சிகளை போல் உள்ளது. படிக்கும்போது மனதுக்கு வருத்தமாக இருந்தது வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,ஜயஷ்ரீ,
இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்ட போது, இன்னும் நெருங்கிய ஒருவர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகளும் ,முப்பது வருடங்கள் ஆன போதிலும் ஞாபகத்துக்கு வந்தன. நாம் ஒரு செயல் செய்யும்போது அதன் பின்விளைவுகளை யோசித்துவிட்டு செய்தால் எவ்வளவொ தேவலை. ஒரு காலத்தில் நமக்கும் இந்த நிலைமை வரக்கூடும் என்று யாரும் நினைப்பதில்லை. எல்லாம் இன்றே இங்கே இப்போது தான்:(
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சுமதி,
நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவதால் தான் இவ்வளவு நீண்டுவிட்டது.
இது ரொம்ப சகஜம்மா. எல்லோரும் எப்பவுமே நல்லவர்களாக இருப்பது சிரமம் இல்லையா.அனுபவிக்கத்தான் வேண்டும்.