Blog Archive

Wednesday, June 30, 2010

மகிழ்ச்சியான நேரம் மதிக்கப் படும் நேரம்

 பரபரக்கும்  காலை நேரம்.
சாண்ட்விச்களை அழகாக   பாலிதீன் உறைகளில் அடுக்கி, இறுக்க மூடிவைத்து
அதற்கான பழுப்பு நிறப் பையில் போட்டு  இரண்டு மகன்களிடமும்   கொடுத்தாள் ஊர்மிளா.
ஆ!!!!! மாம்! நாட் அகெயின்.
நான் ஸ்கூலில்  பீட்சா  சாப்பிட்டுக்கறேனேம்மா.

நானும் ,மழலையில்   சொன்னான்  இரண்டாமவன்.


வாரத்துக்கு ஒரு நாள்   பீட்சா  சரிப்பா. தினம் கிடையாது.
என் க்ளாஸ்  ல   ஜோ  தினம் காந் டீன் ல தாம்மா    சாப்பிடறான்.
அவன் அம்மா வேலைக்குப் போகிறாள்  பா  . அவளுக்கு  நேரம் கிடைக்காது.
அதனால் லன்ச்   பாக்  கொடுக்க முடியாது.
நல்ல  வேளை  நீ   ராதா ஆண்ட்டி   மாதிரி   லெமன் ரைஸ் கொடுக்காம  இருக்கியே.


பாப், ஆண்ட்ரூ  எல்லாம் என் டெஸ்க் பக்கம் வந்தாலே
''
யக்கீ!!!  ன்னுட்டுப் போறாங்க.

ஏன்  உன் ஃப்ரண்டு    தேவ்யானி, லேகா,அஷ்ரயா  எல்லாரும்  என்ன கொண்டு
வராங்க. அவங்களும் உன் வகுப்புதானே.

ஓ,தே  ப்ரிங்  சப்பாத்தி,கூர்மா''  மா.   தே  ஈட் இன் ,அஸ்  அ  க்ரூப்.

அதனால அவங்களுக்குப் பிரச்சினையே இல்லமா.
எனக்குதான்    சிநேகிதர்கள் எல்லாம்  வேற     வகுப்பில இருக்கிறதனால்
நான்    பாப் உடனும்  ஆண்ட்ரூவோடயும் தான்    லன்ச் ப்ரேக்  எடுத்துக்கறேன் மா''.

சரி நேரமாச்சு. ஃபர்ஸ்ட் பெல்லுக்கு முன்னால் இரண்டு பேரும்  கிளம்புங்க.
இருவரும் அவரவர் சைக்கிள்களில்  ஹெல்மட்டை  மாட்டிக் கொண்டு
பள்ளியை நோக்கி விரைவதைப் பார்த்து ரசித்தவண்ணம்
உள்ளே வந்தவளை  டெலிபோன்  மணி  அழைத்தது.

அவளுடைய  அமெரிக்க  தோழி   ஈவ்லின்.


''ஹேய்   ஊர்மி  ,கான்  ஐ  ப்ரிங் மை சன்ஸ்    ஃபார்  லன்ச்

திஸ் வீக் எண்ட்"?
என்ன  சமாசாரம் என்ற கேள்விக்கு வந்த பதில்,
'' ஓ, தே  ஜஸ்ட்  லவ்  யுவர்  லைம் ரைஸ் அண்ட் ரெய்த்தா'':0)

உன்    சமையல்   இந்தியா  ரெஸ்டாரண்டை  விட  நன்றாக இருக்கிறது.

























எல்லோரும் வாழ வேண்டும்.

16 comments:

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு வல்லிம்மா.

நான் போன பதிவில் சொன்னதை மாற்றிப் போட்டு சொன்னா சரியா வருதே:), ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’!

துளசி கோபால் said...

அதே அதே..... அக்கரைக்கு இக்கரை பச்சை!

//டெலிபோன் மணி அழித்தது.//

ஏன் அழிச்சதுன்னு எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்:-)))))

ஸ்ரீராம். said...

இக்கரைக்கு அக்கரையா, அக்கரைக்கு இக்கரையா..?! ஒரே மாதிரி வழக்கத்துலேருந்து மாறும்போது அந்த மாறுதல் நல்லாதான் இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ரமலக்ஷ்மி. உங்களுக்குக் கொடுக்க வேண்டிய கரைப் பதிலை மாதேவிக்கு அக்கறையாக் கொடுத்திட்டேன்.:)

உண்மைதான் இந்த ஈவ்லினுக்கு ரொம்பவே நம்ம சமையல் பிடிக்கும்.

கூடவே இரண்டுஅம்மாக்களும் பசங்களுமா நல்ல பாஸ்டா ரெஸ்டாரண்டுக்குப் போய் வருவாங்க,.:)

வல்லிசிம்ஹன் said...

யம்மாடி, போன் அழிக்க ஆரம்பிச்சுடுத்துன்னால் நம்ம கதியென்னா/:))
அதனால் அழைக்க வச்சுட்டேன் துளசி.

எ.பி. அவசரம் போகவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறது. கண்ணாடி சரியில்லப்பா.:)
ஆடி ஆடி மூக்கு மேல நிக்கறதா. டைபோ எர்ரர் வந்துடுது. இது என்ன டைப்போ:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஸ்ரீராம்.
எப்பவுமே அதே கதைதான். மாறுவதே இல்லை.
ஒரு உ-ம்... என் பெண் அவ பாட்டி வீட்டுக்குப் போகும் போது பாட்டி ஏதாவது ரூல் பேசினால், எங்க அம்மாட்டயே போறேன் என்பாள். இப்ப என் பேத்தி, கொஞ்சம் அதட்டினால் போதும் நான் அந்தப் பாட்டிகிட்டயே
போறேன்னுட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறது:)

pudugaithendral said...

ரசித்தேன்

Jayashree said...

பூரியும் இங்க்லிஷ் ப்ரேக்ஃபாஸ்ட் மார்மலேடும், தச்சி மம்முவும் இந்த ஊர் குழந்தைகள் வெச்சு வெளுத்து வாங்கும்!! நம்ப குழந்தைகளுக்கு அன்ன த்வேஷம் பிடிச்சமாதிரி கழிச்சு கழிச்சு சாப்பிட்டுண்டு முழி பிதுங்கிடும்:(((( இப்ப வளந்தப்புறம் " இண்டியன் டுடே" வாம்!ஃப்ரெண்ட்ஸுக்கு பண்ணி தறாங்கப்பா!

அன்புடன் அருணா said...

"மகிழ்ச்சியான நேரம் மதிக்கப் படும் நேரம்"
மதிக்கப்பட்டது!

Unknown said...

நல்லாயிருக்கு வல்லிம்மா படங்களும், கதையும் மேலிருக்கும் ஜோடிபுறா படம் மிக அழகாக உள்ளது வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி தென்றல் .

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜயஷ்ரீ. எல்லாம் அதே கதைதான். என் பெண் என்னிடம் லன்சுக்குப் படுத்தினதை இப்ப சொல்லிச் சிரிக்கிறாள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா சுமதி. இன்னிக்குத் தேடினதுல அமைதிப்புறா கிடைச்சுது போட்டுட்டேன். ரொம்ப நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் வரணூம் அருணா.மதிப்புக் கொடுத்தா வாங்கிக்க எப்பவுமே ரெடிதான்:)
முதல் வருகைக்கு நன்றி. நீங்கள் எழுதப் போகும் கதைக்குக் காத்திருக்கிறேன்

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே வருது. போஸ்ட் வரலை எனக்கு! நல்லா ஜூஜுபி காட்டுதுப்பா இந்த கூகிளும், ப்ளாகரும் சேர்ந்துண்டு! :P:P:P

Geetha Sambasivam said...

ஹிஹிஹி, வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே வருது. போஸ்ட் வரலை எனக்கு! நல்லா ஜூஜுபி காட்டுதுப்பா இந்த கூகிளும், ப்ளாகரும் சேர்ந்துண்டு! :P:P:P