Blog Archive
Sunday, May 09, 2010
அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்
எல்லோரும் வாழ வேண்டும்.
பதிவுலக பாசமிகு அன்னையருக்கும் அவர்களைப் பெற்ற
அன்னையருக்கும்,சுற்றம்,பந்தம் என்று அனைத்து அம்மாக்களுக்கும்,
இனிமேல் அம்மாவாகப் போகிறவர்களுக்கும்
எல்லோருக்கும் என் மனம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்னையுள்ளம் கொண்டு நம்மப் பேணிக் காத்துக் கல்வி அளித்தப்
பள்ளியிலிருக்கும் கன்னித்தாய்களுக்கும்,
அண்டை வீட்டுக் குழந்தையயும் தன் குழந்தையாகப் பாதுகாக்கும்
அடுத்த வீட்டு அம்மாக்கள்,அத்தைகள் அத்தனை பேருக்கும் வாழ்த்துகள்.
பாட்டியான பிறகும், தன் தள்ளாத வயதில், பள்ளியிலிருந்து திரும்பும் பேரன்கள் பேத்திகளுக்கு
உணவு அளித்து மகிழ்ச்சியும் பாதுகாப்பும் தரும்
ஆயாக்களுக்கும்,அம்மம்மாக்களுக்கும், கூடவே உதவும் அன்னையுள்ளம் கொண்ட
தாத்தாக்களுக்கும் நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்.
தாயுள்ளம் உலகில் உயிர்த்திருக்கும் வரை குழந்தைகளும்
தழைத்தோங்கும் என்பதில் சந்தேகமென்ன,.!!
Subscribe to:
Post Comments (Atom)
29 comments:
அருமையான பதிவு.
அப்படியே வழிமொழிந்து சொல்லிக் கொள்கிறேன் நானும் அன்னையர் தின வாழ்த்துக்களை!
Happy mother's day Mrs Simhan. ஓசி காஃபி யோட அன்னையர் தினம் நிறைவு பெற்றது இங்கே :)) என் அம்மாவுக்கு ஃபோன் பண்ணி வாழ்த்தினேன். சிரிச்சா. "நன்னா இருக்கு.நமக்கெல்லாம் வழக்கமாக்கும். எல்லாரும் அவா அவா இடத்துல நன்னா க்ஷேமமா சமத்தா இருந்தா அது போறாதோ அம்மக்களுக்கு"ன்னா. எங்களுக்கு மனசாற சொல்லணும் அம்மா!! காலம் போயிடுத்துன்னா கிடைக்காதுன்னேன். சந்தோஷமா ஆமா,, ஆமா அப்ப சொல்லுன்னா . பேத்தியும் ஃபோன் பண்ணீருக்கா. பாவம் மனதின் அருமை தெரிந்தது.
வயது ஏறும் தாயார்கள் " நோயற்ற வாழ்வுடன் நிம்மதியுடன் வாழ வேண்டும்" சின்னவா எல்லா நலங்களுடனும் வாழவேண்டும். மொத்தத்தில் எல்லாரும் ஹாப்பியா இருக்கணும் :))
”அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”
நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்!
வல்லியம்மா, உங்களுக்கும், இங்கு வரும் மற்ற அன்னையர்கள் அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்....:-)
அன்பு ராமலக்ஷ்மி,உங்களுக்கும்
உங்கள் அன்னைக்கும் வாழ்த்துக்கள்.
அன்னையர் இருக்கும் வரை அன்புக்கும் பஞ்சமிருக்காது.
உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள் வல்லிம்மா!
உண்மைதான் ஜயஷ்ரீ
உங்களுக்கும் அம்மாவுக்கும் அன்னையர்தின வாழ்த்துகள்.
எங்க அம்மாவுக்கும் 1980ல நான் முதல் தடவை பரிசு கொடுத்தபோது ஒரே சிரிப்பு.
பிறகு எல்லா தினங்களையும் ரசிக்க ஆரம்பித்தாள்.
சின்ன விஷயம்தான். இருந்தாலும் சந்தோஷம் கொடுக்கும் தினம்.
நலமா கோமதி. பேரன் என்ன சொல்றான்.
ஹாப்பி க்ராண்ட்மா'ஸ் டே சொல்லி இருப்பானோ மழலையில்.:)
உங்களுக்கும் ,மகளுக்கும் மருமகளுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
வரணும் வரணும் மௌலி. நல்ல பிள்ளையைப் பெற்ற
அம்மாவுக்கும், நல்ல கணவனைப் பெற்ற உங்க மனைவிக்கும்,
நல்ல பெண்ணாக விளங்கப்போகும் உங்கள் செல்விக்கும் வாழ்த்துகள்.
எல்லா அம்மாக்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!!அதும் என்னைப்போல ரெட்டை வால் ரெங்குடுகளை பெத்த அம்மாக்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்!!!
எனக்கு பசங்க ட்ரீட்டே கொடுத்தாங்க.
பதிவு போட்டிருக்கேன்
உங்களுக்கும் மற்ற தோழிகளுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் வல்லிம்மா.
அன்னையர் தின வணக்கங்கள் அம்மா
அனைவருக்கும் அன்னையர் தினத்துக்கான வாழ்த்து(க்)கள். (அமெரிக்கக் கணக்குன்னு வச்சுக்குங்க. ஒருநாள் பிந்திருச்சு)
புது அம்மாவான என் மகளுக்கு வாழ்த்துச் சொன்னேன் இந்த வருசம்.
ஜூபிடர் என்னும் ம்யாவை தத்து எடுத்துருக்காள்!
வாழ்த்துக்கள் வல்லிம்மா. சொன்னமாதிரி, தாயுள்ளம் கொண்ட எல்லாருக்கும் பொருந்தும்!!
//புது அம்மாவான என் மகளுக்கு வாழ்த்துச் சொன்னேன் இந்த வருசம். ஜூபிடர் என்னும் ம்யாவை தத்து எடுத்துருக்காள்!//
துளசி டீச்சர், ஆனாலும் இது கொஞ்சம் ஓவராத்தான் படுது!! ;-))
மிகவும் நன்றி பாலரஜன் கீதா.
உங்கள் குடும்பத்துக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.
அன்பு சுந்தரா வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றிப்பா.
அன்பு துளசி, உங்கள் மகளுக்கு சிறப்பு வாழ்த்துகள்.
உயிர்களஒ பேணுவது எவ்வளவு கடினம் என்பது தெரிந்த விஷயம். அதிலும் வாயில்லாத ஜீவனை ஒரு
கைவிடப்பட்ட செல்லங்கள் இருக்கும் இடத்திகிருந்து எடுத்து வளர்ப்பதும் மனதில்
அன்பை வளர்க்கும் என்பது உண்மை.
அபி அப்பா, ரெட்டைவால் நாலுவாலெல்லாம் வளர்ப்பது அம்மாக்களுக்குச் சிரமமே இல்லை.
ஒரு அழகுப் புன்னகை கிடைத்தால் எல்லாம் மறந்துவிடும்.
அன்பு ஹுசைனம்மா, உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
எங்கும் அன்பு எ[[அவும் நிலைக்க அன்னையர்கள் தேவை. அதில் ஒரு நல்ல
அம்மா இங்கு வந்து வாழ்த்தியது மிகவும் சந்தோஷம்.
அன்பு தென்றல் உங்கள் குழந்தைகளை நீங்கள் பக்குவமாக
வளர்த்திருப்பதே இந்த நாளுக்குப் பெருமை கொடுத்திருக்கிறது.
மனம் நிறைந்த வாழ்த்துகள்மா.
அன்னையர் தின வாழ்த்துகள் வல்லியம்மா! :-) படங்களும் ஹெட்டரும் வழக்கம் போலவே அழகு!
//அன்னையுள்ளம் கொண்ட
தாத்தாக்களுக்கும் நமஸ்காரங்களும் வாழ்த்துகளும்//
ஹிஹிஹி! தாங்கீஸ் அக்கா!
இவ்வளோ நல்லா எழுதற ஜெயஸ்ரீ அக்கா பதிவு ஏதும் எழுதாதது குறையா இருக்கு!
[அப்பாடா என் பங்குக்கு ஏதோ முடிஞ்சது கொம்பு தீட்டியாச்சு! :-))]
உண்மைதான் தம்பி வாசுதேவன். நம்ம துளசியோட ஊர்ல தான் இருக்காங்க. அவங்களும் டாக்டர்தான்.
நிறைய விஷயங்கள் தேறி இருக்கும். எழுதினால் நன்றாக இருக்கும்.
தாத்தாக்கள் உதவி இல்லாம எப்படிப் பேத்திகளை எப்படி சமாளிக்கறது.
எல்லோரையும் வாழ்த்தியது அழகு. வாழ்த்துகள்.
Ramalakshmi & Jayashree,
repeartttttttttttt!!!!!
Happy grandma' Day to Thulasi!!!
Post a Comment