Add caption |
எல்லோரும் வாழ வேண்டும்.
வெள்ளிக்கிழமை
என்றால் எப்படித்தான் தெரியுமோ இந்தக் குட்டிப் பொண்ணுக்கு!
அப்பா,தாதிர்ர்ர்,கீக் பார்க்!
தாத்தி நீயும் வடியா,தாத்தாவும் வா.
பக்கத்தில் இருக்கும் க்ரீக் பார்க்குக்குக்(creek park) காரில்
அப்பாவும் தானும் போகும்போது எங்களையும் அழைக்கிறாள்.
மிகவும் வெய்யில் ஏறும் முன் நாங்கள் போய் வந்த நந்தவனம்
உண்மையிலியே வெகு அழகாகக் காப்பாற்றப் பட்டு வருகிறது.
நல்ல பராமரிப்பு.
நிழல் தரும் மரங்கள்.
கீழே உட்கார பச்சைப் புல்வெளிகள். மற்றும் என்னை மாதிரி முழங்கால் வாதம்,
பிடிவாதக் காரர்களுக்கு உட்காரத் தோதாக சாய்மானங்கள்.
கூடவே பறக்கும் மைனாக்கள் . ஹோபோ எனும் மரங்கொத்தியின் உடல் அமைப்புக் கொண்ட ஒரு பறவை.,புறாக்கள்.
சிட்டுக் குருவிகள்.
நம்ப முடியாத ஒரு நீலக்கலர் வானம்.
இந்தப் பார்க்குக்குள் நுழைய ஒரு டிக்கெட் 5 திரம் என்று நினைக்கிறேன்.
அந்தச் சீட்டைக் கொடுப்பவர் சுதேசி.குளிரூட்டப்பட்ட அறை.
வெளியே வேலை செய்து கொண்டிருப்பவர்கள் ,நம் ஊரும் ,பக்கத்து ஊர்களிலும்
இருந்து வந்தவர்கள்.
(சென்னையில்)
எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வரும் நாகேஸ்வர ராவ் பார்க் ஊழியர்
ஒருவரின் முகத்தில் இருக்கும் சந்தோஷமோ,
செடிகளின் மேல் அவர் காட்டும் பாசமோ,
துளியும் காணப்படாத இறுகிப் போன முகங்கள்.
காரணம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்த ஒன்றுதான்.
இந்தப் பாலைவன வெய்யிலில் இந்த மாதிரி ஒரு பசுமையைக் காட்ட முடியுமானால்
எத்தனை உழைப்பும் பொருட்செலவும்
அந்த மண்ணுக்குள் போயிருக்க வேண்டும்.!!
திண்ணைப் பேச்சாக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நம் ஊரில் விளை நிலங்கள் விலைபோய்விட்டன.
இவர்கள் ஊரில் தரிசுகள் விளை நிலமாகி வருகின்றன.
நம்மூரின் அறிவு, உழைப்பு இங்கே நல்ல விலைக்கு விற்கப் படுகிறது.

24 comments:
//நம் ஊரில் விளை நிலங்கள் விலைபோய்விட்டன.
இவர்கள் ஊரில் தரிசுகள் விளை நிலமாகி வருகின்ற/
:(
பாலைவன வெய்யிலில் இந்த மாதிரி ஒரு பசுமையைக் காட்ட முடியுமானால்
எத்தனை உழைப்பும் பொருட்செலவும்
அந்த மண்ணுக்குள் போயிருக்க வேண்டும்.!!// உண்மை வல்லி..
முடிவில் சொன்னவை வருத்தமாகாத்தான் இருக்கிறது
என்னது.....பார்க்குக்குள்ளே போக கட்டணமா?
எங்கூருக்கு வாங்க. இலவசமே இலவசம். கார் பார்க்கிங்கூட பார்க்குக்குள் இலவசம்தான்.
பார்க் அழகா இருக்கு.
கடைசிவரி....... உண்மை:( சுடுது.
முடிவில் சொன்னவை வருத்தமாகாத்தான் இருக்கிறது//
வழிமொழிகிறேன். படங்கள் அருமை
வரணும் எல்.கே.
வாழ்வு தேடிச் சென்னையைத் தேடி ,நிலைத்தை விலைக்குக் கொடுத்துவிட்டுவரும் விவசாயிகள்.
அவர்களின் மக்கள்
பிறிதொரு வாழ்வு தேடி எல்லா ஊர்களுக்கும் வேலை தேடி வருகிறார்கள்.விலை பேசப்பட்ட நிலம்
ஆலைகளாகவும்,ஐ,டி. பார்க்காகவும் ஆகின்றன.
அதுதான் மனசை வருத்துகிறது முத்துலட்சுமி.
என்னவளம் இல்லை நம் திருநாட்டில்'னு முன்னால் பாட்டு ஒன்று வரும்.
இப்போது பசுமையைக் கண்ணால் பார்ப்போமா என்று ஆகிவிட்டது.
பணவளம் இருந்தாலும் அதை உபயோகிக்கும் வழிமுறையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் இங்கே.
அங்குதான் நம் நாட்டில் ஏமாறுகிறோம்.
//நம் ஊரில் விளை நிலங்கள் விலைபோய்விட்டன.
இவர்கள் ஊரில் தரிசுகள் விளை நிலமாகி வருகின்றன.//
எதப் பாத்தாலும், இதுதான் எப்பவும் மனசில் தோணும், நம்ம ஊர் இப்படி இல்லையேன்னு. சீக்கிரமே நல்லா ஆகிடும்னு ஒரு நம்பிக்கை!!
துளசி கண்டிப்பா வந்துடறேன். அந்த ஊரையும் விட்டு வைப்பானேன்:)
இங்கே வருமானத்துக்கு வழி கொடுப்பது இந்த மாதிரி வரிகள் தானே.
தொலைபேசி கட்டணம் கிடையாது. வெளியூர் பேசினால் மட்டுமே பணம் கட்டணும்.
எத்தனை எத்தனையோ சௌகர்யங்கள்.
அரசாங்கத்துக்கு இந்த முறையில் வருமானம் வர வேண்டும்.
பேருந்து, மெட்ரோ எல்லாமே கட்டுப்படியாகும் வகையில் தான் இயங்குகின்றன.
நம்ம மெரீனாவில கூட கட்டணம் போட்டா,அசிங்கம் செய்யாம இருப்பாங்களோ??
வாங்கப்பா தென்றல்.
வெகு அழகிய பார்க் மா. படங்களும் அப்படியே !
மறக்காமல் காமிராவை எடுத்துப் போனேன்.:)
வாங்க ஹுசைனம்மா.
கட்டாயமா மாறும். மாற வேண்டும்.
மனசு வைத்தால் மாற்ற முடியாதா நம் ஊர்ப் பெரியவர்களுக்கு!!
வல்லியம்மா எங்க ஊரிலும் நல்ல பல பார்க்குகள், கட்டணமின்றி நன்கு பராமரிக்கப்படுகிறது...இங்கும் நீங்க வரலாம்.. :-)
மற்ற நாடுகளில் காசு வசூல் செய்தா அதை மீண்டும் மக்களுக்கு வேறுவழிகளில் (பார்க், சுத்தம், சுகாதாரம், ரோடு வசதி இன்ன பிற) கொடுப்பாங்க.
நம்ம ஊர்ல மெரீனா பிச்சுக்கும் காசு வசூல் பண்ணலாம் தான், ஆனா வசூலாகும் காசு மீண்டும் திரும்பி மக்களுக்கு வராதே?...எங்கோ, யார்-யார் வீட்டுக்கோ போயிடுமே! :(
ஆமாம் மௌலி, பங்களூருவை மறந்து சொல்லிவிட்டேன்.
எத்தனை பெரிய உண்மை!.யார் எதை வசூலித்தாலும்
அது மீண்டும் நம்மை நோக்கி வரும் என்பது கிடையாது.
அதைச் சொல்லத்தான் இந்தப் பதிவிலே முயற்சி செய்திருக்கிறேன்:(
தலை நகர் டில்லியில் கூட இந்த மாதிரிப் பூங்கா பராமரிப்பு
சிறப்பாக இருக்கும் என்று மருமகள் சொல்கிறார்.
வல்லி அக்கா,நலமா?
பேத்தியுடன் பூங்கா வலம் அருமை.
படங்களும் அழகு.
நம் மக்கள் வெயிலில்,மழையில் நனைந்து அந்த ஊரை அழகு படுத்துகிறார்கள்.என்ன செய்வது அவர்கள் குடும்பத்தார் உடனிருந்தால்
இறுகி போன முகத்தில் மகிழ்ச்சி ஒளி
பிரகாசித்திருக்குமோ!
தாத்தியும் பேத்தியும் செம ஜாலிதான் போலிருக்கு.
//பாலைவன வெய்யிலில் இந்த மாதிரி ஒரு பசுமையைக் காட்ட முடியுமானால்
எத்தனை உழைப்பும் பொருட்செலவும்
அந்த மண்ணுக்குள் போயிருக்க வேண்டும்.//
ஒண்ணைக்கொடுத்தாதான் இன்னொண்ணை பெறமுடியும்கிறது உண்மைதானோ :-(
அழகாக படம் எடுத்து அழகாக விளக்கத்துடன் பகிர்ந்துள்ளீர்கள்.//நம் ஊரில் விளை நிலங்கள் விலைபோய்விட்டன.
இவர்கள் ஊரில் தரிசுகள் விளை நிலமாகி வருகின்றன.
நம்மூரின் அறிவு, உழைப்பு இங்கே நல்ல விலைக்கு விற்கப் படுகிறது.//அருமையான வரிகள்.வரிகளில் தெரிகின்றது உங்களின் சமூகபற்று.வாழ்த்துக்கள் மேடம்.
அன்பின் சாரல், வாங்கப்பா.
எப்பவுமே அதுதான் நிஜம் இல்லையா. எதுவுமே சும்மா வருமா.
இங்கே நல்ல உழைப்பாளிகளும்,ஊதியமும்,
வசதியைப் பெருக்க சாமர்த்தியமும் துடிப்பும் இருக்கிறது.
வாங்கப்பா கோமதி.
நீங்கள் சொல்வதுதான் உண்மை. குடும்பத்தோடு இருந்தால் இந்த இறுக்கம் முகத்தில் வராது.
அது ஒன்றுதான் சொகம். மற்றபடி வெள்ளிக்கிழமைகளில் இவர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கும்,சர்ச்சுக்கும்,தொழுகைக் கூடங்களுக்கும் போகும் சந்தோஷத்தைப் பார்க்கும் போது நமக்கும் ஆனந்தமாக இருக்கும்.
நிறையத் தொழிலாளிகளுக்குக் குடும்பத்தை அங்கே கூடக் கொண்டுபோய் வச்சுக்கறது கட்டுப்படியாகாத விஷயமாம். உண்மையா?
வாங்க ஸாதிகா,
முதல் வருகைக்கு நன்றி,
சமூகப் பற்று என்பதெல்லாம் பெரிய வார்த்தைம்மா.
கண்ணில் படுவது ,எல்லோருக்குமே இந்த எண்ணத்தைத் தோற்றும்னு நினைக்கிறேன். ஏதோ இந்த ஊரிலாவது நம்மவர்கள் பிழைக்க முடிகிறதே என்றுதான் உணர்கிறேன்.
அழகிய படங்கள்...அழகிய கட்டுரை...
//நம் ஊரில் விளை நிலங்கள் விலைபோய்விட்டன.
இவர்கள் ஊரில் தரிசுகள் விளை நிலமாகி வருகின்ற// ...:((((
சிலுசிலு வனத்துக்குள் எங்களையும் அழைத்துச் சென்றதற்கு நன்றி. கடைசிப் படத்தின் ஆதவனின் பிரவாகம் அழகு.
//நம் ஊரில் விளை நிலங்கள் விலைபோய்விட்டன.
இவர்கள் ஊரில் தரிசுகள் விளை நிலமாகி வருகின்றன.
நம்மூரின் அறிவு, உழைப்பு இங்கே நல்ல விலைக்கு விற்கப் படுகிறது.//
எங்கோ ஓரிடத்தில் தரிசுகள் விளை நிலமாவது சந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஆனால் நம்ம ஊரில் இது பற்றி யோசிப்பார்களா எனும் ஆதங்கம் உங்களைப் போலவே எங்களுக்கும்.
ஆமா டீச்சர் எல்லா பார்குக்கும் காசு இல்லை. சில பார்க்குக்கு காசு உண்டு. மௌலி சொன்ன மாதிரி அந்த காசு மெயிண்டனஸ்க்கு போகும் கண்டிப்பாக. துபாய்ல பீச்சுக்கு (ஜுமைரா பய்டு பீச்) கூட காசு உண்டு. வல்லிம்மா பேத்தி கூட ஜாலியா என்ஜாய் பண்ணுங்க!
Post a Comment