Blog Archive

Tuesday, February 23, 2010

502,எண்ணங்கள் நல்லதனால்























எத்தனையோ கொடுத்து வைத்திருந்தால் தாம் இப்படி ஒரு கணவர் அமைவார்.
நீங்க அதை நினைச்சு சந்தோஷப்படணும்.
என்னை மாதிரியா பாருங்கோ. இவர் இப்படி விபத்தில காலைக் கொடுத்துட்டு நிக்கிறாரெ.
மருமகள் சரியில்லை. மகன் சம்பாதிக்கிறது போறது என்று மருமகள் வேற இருபதாயிரம் சம்பாதிக்கிறாள்.
இருந்தாலும் என் நிலைமையைப் பார்த்தீர்களா.
இந்த மாதிரிப் பட்சணம் பலகாரம் செய்து
வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

''என்ன மூணரை க்ரௌண்ட் நிலம் திருவள்ளூர்ல மாமா செயலா இருக்கும் போது வாங்கிப் போட்டது.
இப்போ ....லட்சங்களுக்குப் போகுமாம்.
எதுக்குச் சொல்ல வரேன்னா ,பர்சைத் திறந்து இந்த வார்டு பாய்,நர்ஸ் எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
எப்பவுமே பணம் கைல இருக்கும்னு நினைக்கக் கூடாது வரும் போகும் அதுதான் செல்வ. சுகிசிவம் நேத்திக்கூட கதைல சொன்னாரே''

சாமி என்று ஆகிவிட்டது எனக்கு.ஒரு அரை மணி நேர அறுவை சிகித்சை.
கண்புரை அகற்ற.

காலையிலியே நானும் இவரும் நர்சிங் ஹோமுக்கு வந்தாச்சு.
அப்போது எனக்கு முன்னாலேயெ ஒரு அம்மா அங்கே உர்ட்கார்ந்திருந்தார். அவரது கணவருக்கும் அன்று இதே அறுவை சிகிச்சை.

நான் ஏற்கனவே கொஞ்சம் பயத்தோடு இருந்தேன்.
கண்புரை சிகித்சை எவ்வளவோ முன்னேறி விட்டது .இப்போது ஒரு லேசர் முறைப்படி இருபது நிமிடங்களில் லென்ஸைப் பொறுத்திவிடுகிறார்கள்.
இதில் பயத்துக்கு என்ன இடம் என்று தோன்றுகிறதல்லவ.

நாங்கள் அணுகிய கண்வைத்தியர் சற்று இளவயதினர்.

இவரைப் பரிசோதனை செய்யும்போதே, ''மூணு வருஷத்துக்கு முன்னாடியே செய்திருக்க வேண்டியது போல இருக்கே. ஏன் சார் இவ்வளவு முற்றிய பிறகு வந்திருக்கிறீர்கள்'' என்று சொல்லி ,சிங்கத்தோட கோபத்தைச் சம்பாதித்துக் கொண்டார்.
''எனக்குக் கண்ணெல்லாம் சரியாகத் தெரிகிறது.
இரவு வாகனம் ஓட்டும்பொழுது பிரச்சினையாக இருப்பதால்தான் வந்தேன்'' என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.
பிறகு நாள் குறித்து நேரம் குறித்து ஹாஸ்பிடலுக்கும் வந்தாகி விட்டது. இவருக்கு முதல்
சிகித்சை என்பதால் ,இவரை அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
நடுவில் காப்பியும்,காலை உணவும் கொண்டு வந்து வைத்த பையனுக்கு நன்றி சொல்லி அவன் கையில் ஐந்து ரூபாய் கொடுத்தேன்.
அப்போது ஆரம்பித்தது இந்த அம்மாவின் அறிவுரை.
எனக்கோ சிகித்சை முடிந்து அரைமணியில் வெளியில் வெளியே வரவேண்டியவர் ஒரு மணியாகியும் காணோமே
என்று அவதியாக இருந்தது.


அப்புறம் வந்தார். மதியம் வரை இருந்துவிட்டு வேண்டிய மருந்துகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டோம்.
அது கதையில்லை.
இந்த அம்மா கொட்டிய சொற்கள் என் காதில் விழுந்து உள்ள போய் கடமுடா செய்யும்போதுதான் எனக்கு உரைத்தது.
நல்லதே சொன்னதாக வைத்துக் கொண்டாலும்,சொல்லும் முறை இடம் என்றெல்லாம் இருக்கிறதல்லவா.

நான் வெளியே வரும்போது, அந்த அம்மாவின் கணவருக்கும் ஆப்பரேஷன் முடிந்து அவரது அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்த அம்மாவுக்கு இன்னோரு கவலை முக மனைவி கிடைத்துவிட்டார். (பொழுதுதான் போகவேண்டுமே)
இது கொஞ்சம் சீரியஸ். இந்தப் புது அம்மாவின் கணவருக்கு ஆஞ்சியோகிராம் செய்து கொண்டிருந்தார்கள்.

கணவருக்கு நாற்பது வயது. இங்கெ உட்கார்ந்திரிந்த பெண்ணுக்கு 35 இருக்கும்.

பணம் சம்பாதிப்பதற்காக ஆண்கள் மேற்கொள்ளவேண்டி இருக்கும் கடினமாக வாழ்க்கை முறைகளே இந்த நோய்க்குக் காரணம் என்று தான் படித்த விவரங்க ளையெல்லாம் அவர் பேசப் பேச அந்தப் பெண் பதில் சொல்லாமல் ஏதோ பிரார்த்திக் கொண்டு இருந்தாள்.

மற்ற எல்லோருடைய நன்மைக்காகவும் அந்த அம்மா சீக்கிரம் வீட்டிற்குக் கிளம்பிவிட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றியது







எல்லோரும் வாழ வேண்டும்.

21 comments:

துளசி கோபால் said...

அட ராமா!!!!!

இப்படித்தான் ஆஸ்பத்ரியில் கவலையோடு இருக்கும்போது இதே சிகிச்சையில் போனவர்களைப் பற்றி விஸ்தரிச்சுக் கதை சொல்ல ஒருத்தர் இருப்பார்.

போதுண்டா சாமின்னு ஆகிவிடும்.

சிங்கம் சீக்கிரம் கண் நலம் பெற்று கர்ஜிக்க வாழ்த்துக்கின்றேன்!

சாந்தி மாரியப்பன் said...

//மற்ற எல்லோருடைய நன்மைக்காகவும் அந்த அம்மா சீக்கிரம் வீட்டிற்குக் கிளம்பிவிட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றியது//

இது பாயிண்டு வல்லிம்மா :-))))

சில பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தானும் நிம்மதியா இருக்கமாட்டாங்க, மற்றவர்களையும் இருக்க விடமாட்டாங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடடா, கருத்து கண்ணாம்பா கிட்ட மாட்டிக்கிட்டீங்களா..:(

எல் கே said...

சிங்கம் சீக்கிரம் நலம் பெற வாழ்த்துகள் .. எல்லா இடங்களிலும் இப்படி ஒருத்தர் இருப்பாங்க,.. அவர்களை தவிர்ப்பது ஒன்றே வழி

கோமதி அரசு said...

"யாவர்க்கு மாம் பிறர்க்கின்னுரை”
என்று திருமூலர் சொன்னது போல் இனிய உரைகளே நல்லவை. கவலைப்படாதீர்கள்,நலமாகி விடுவார்கள் மருத்துவம் மிகவும் முன்னேறி உள்ளது என்று இன்னுரை அளித்தால் நல்லது.
இதுவே அவர்களுக்கு ஆறுதலாய் இருக்கும்.

உங்கள் கணவர் நலம் பெற வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் துளசி. நாம் எவ்வளவுக்கெவ்வளவுமனதை ஒருமைப் படுத்திப் பிரார்த்திக்கிறோமோ அந்த அளவுக்கு இவங்க அதிகமாகாவே வேண்டாத எண்ணங்களை விதைத்தார்கள்.
பாவம். அவரது வழி அப்படி.பேசிப் பேசி தன் துன்பங்களைக் குறைத்துக் கொண்டாரோ என்னவோ.

வல்லிசிம்ஹன் said...

தன் துயரை மறக்க மற்றவர்களிடம் பேசித் தீர்த்துக் கொள்ளுகிறார்கள். அமைதிச்சாரல்.
இதைவிட டாப்,
இந்டென்சிவ் கேர் யூனிட் முன்னால் உட்கார்ந்திருந்த ஒரு மகன்,
தன் தந்தையின் உடல் நிலவரங்களை உரக்கப் பேசி மற்றவர்கள் அமைதியையும் கலைத்துக் கொண்டிருந்தார்.
அமைதியாகக் கந்த சஷ்டிக்கவசம் படித்துக் கொண்டிருந்த
தன் அம்மாவையும் விடவில்லை.:)

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா முத்து. அது கருத்துக் கண்ணம்மா. அவங்க பேரே கண்ணம்மாதான். வசம்மா அரை மணி நேரம் மாட்டிகினேன்:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் எல்.கே.
ஒதுக்கிவிட்டுப் போக முடியாமல் இருக்க வேண்டிப் போச்சு.இவர் தியேட்டரில் இருக்கும் போது, நான் எப்படி மாடி அறையில் உட்கார முடியும்!!
சிங்கம் சரியாகிவிடும். அதற்கான சாத்தியக் கூறுகள் இன்றே தெரிகிறது:)

Jayashree said...

Mr Simhan க்கு நல்லபடி cataract extraction ஆச்சா? இப்பல்லாம் lens implant னால surgery க்கு அப்புறம் reading glasses கூட சில பேருக்கு சில காலம் வரை தேவையா இருக்கறது இல்லை!!நமக்குன்னா அவ்வளவா நாம பொருட்படுத்தறது இல்லை. குழந்தைகள், கணவருக்கு ஒன்று என்றால் வயத்தில் புளி தான். இன்னும் 2 weeks, drops and review. இந்தோ, ஓடிவிடும். நல்லபடி இருக்க என் ப்ரார்த்தனைகள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ஜயஷ்ரீ. நேத்திக்கு ரெவியூ போனோம். டாக்டர் சரியா இருக்குன்னு சொன்னார். பகவான் கூட இருந்து காப்பாத்தணும்.ரொம்ப நன்றிம்மா.

திவாண்ணா said...

ஒ நல்லபடியா ஆயிடுத்தா? சந்தோஷம்!
//மற்ற எல்லோருடைய நன்மைக்காகவும் அந்த அம்மா சீக்கிரம் வீட்டிற்குக் கிளம்பிவிட்டால் நல்லது என்று எனக்குத் தோன்றியது//
லோகத்திலே எல்லா மாதிரி ஜனங்களும் இருக்காங்க. இப்படி நினைக்கத்தோணறது உங்க நல்ல மனசுக்கு அடையாளம்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன்,
ஆமாம் டாக்டர் கண்ணைப் பார்த்த சர்டிஃபிகேட் கொடுத்துவிட்டார்.
அடுத்த கண் எப்போன்னு கேட்டதும்,இவர் கொஞ்ச நாட்கள் போகட்டும்னு சொல்லியாச்சு:)

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி.
உங்கள் எல்லோருடைய அன்பு விசாரணை அவருக்கு நல்ல வாழ்த்துகளைக் கொடுக்கிறது.
அந்த அம்மாவுக்கும் ஏதோ கவலை. மீண்டும் நினைத்துப் பார்க்கையில் வேறு ஏதாவது உதவி வேண்டுமான்னு கேட்டு இருக்கணும்னு தோன்றியது.

ஹுஸைனம்மா said...

//வல்லிசிம்ஹன் said...

தன் துயரை மறக்க மற்றவர்களிடம் பேசித் தீர்த்துக் கொள்ளுகிறார்கள்.//

அதேதாம்மா. பேசாமல் மருகுவதைவிட, இப்படிப் பேசித் தீர்ப்பதே அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி. கோவம் வந்தாலும் பாவம் அவர், நம்மைப்போல நல்ல சொந்தங்கள் இல்லையோ என்னவோ? :-))

சார் நலம்தானே இப்போ?

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஹுசைனம்மா. ஆமாம் அப்படித்தான் தோன்றுகிறது. விலகி நின்று யோசித்தால் இப்படித்தான் தோன்றியது. அன்று மிகவும் யோசனையாக இருந்தது.
மறுபாதிக்கு கண் எரிச்ச்ல் எல்லாம் போய்விட்டது. இன்னும் ஒரு மூன்றுவாரங்கள் கவனமாக இருந்தால் அடுத்த கண்ணைப் பற்றி சிந்திக்கலாம்..நன்றிம்மா.

நானானி said...

வல்லி,
சிங்கம் சீக்கிரம் சிங்கப்பார்வை பார்க்க வாழ்த்துக்கள்! எந்த மருத்துவமனை?

// வசம்மா அரை மணி நேரம் மாட்டிகினேன்:)//
ஏன் மாட்டிக்கினும்? ஸ்ஷ்டாப்!சொல்லி கழண்டுக்கவும் திரியணும்.
விரைவில் இருகண்களும் சரியாகி இரவில் கார் ஓட்டி நைட்ஷோ போக வாழ்த்துகிறேன். சேரியா?

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள் ,வல்லிஅக்கா.

கலைமகளில் உங்கள் பதிவு படித்தேன்.
நன்றி ராமலக்ஷ்மிக்கு.


மகளிர் தினத்திற்கு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா நானானி. கணினி பக்கம் வரத் தாமதமாகிவிட்டது.மன்னிக்கணும்.
இவருக்குக் கண் தேவலை. கறுப்புக் கண்ணாடி கிட்ட கொஞ்சம் வெறுப்பு.:)அதற்காகப் போடாமல் இருக்க முடியுமா. லாடம் கட்டின குதிரையாட்டம் இருக்கு என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளுகிறார். நன்றிப்பா.இன்று சன் டிவியில் சங்கரன்கோவில் ஆடித்தபசு காண்பித்தார்கள். கோமாவை நினைத்துக் கொண்டேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க கோமதி.வாழ்த்துகளுக்கு நன்றி.
எங்கள் எல்லார் சார்பாகவும் பொறுப்பா ராமலக்ஷ்மி பதிவு போட்டுவிட்டார்:)

நானானி said...

அப்பா நல்ல ஆரோக்கியத்தோடு இருந்தவரை சங்கரன்கோயில் ஆடித்தபசுக்கு அழைத்துப் போவார்கள். நீங்கள் சொன்னதும் ஞாபகம் வந்துட்டு.