Blog Archive

Sunday, January 17, 2010

490 சினிமா ,எயிட் பிலோ,

அரோரா பொரியாலிஸ்

ஜெர்ரியின் செல்லங்கள்.

ஞாயிறுகளில் பொழுது
போவது சிறிது சிரமம் . வழக்கமாக வரும் ,அக்கம்பக்கத்து தோழிகள் அவரவர் விடுமுறையை அனுபவிக்கும் நாள்.

நமக்கோ எல்லா நாட்களுமே ஞாயிறு தானே :) அப்படியொரு நாள் வாய்த்தது.
சிறிது நாட்களுக்கு முன்னால் ஒரு ஞாயிறு ,எதோ ஒரு ஆங்கிலச் சானலில் ''எயிட் பிலோ'' என்ற இந்தப் படத்தைப் பார்த்தேன் .


வால்ட் டிஸ்னியின் படம். எயிட் பிலோ .... இதை எப்படி தமிழில் மொழி பெயர்க்கிறது??

அர்த்தம் புரிகிறது. ஆனால் புரிந்து சொல்லத் தெரியவில்லை..
கதை இப்படிப் போகிறது.

ஒருவிஞ்ஞானி , வானிலிருந்து விழும் எரிகற்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய அண்டார்டிகா போக ,அமெரிக்கன் அரசிடமிருந்து பொருள் உதவி பெறுகிறார்.

அவருடன் பயணிக்க உதவியாளர்களாகவும் விமான ஓட்டிகளாகவும் ஒரு பெண்ணும், அலாச்கன் ஹச்கீஸ் என்னும் ஒரு வகை நாய்களின் முழு விவரம் அறிந்த ஜெர்ரியும் ,இன்னும் ஒருவரும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு அன்டார்டிகாவை அடைகிறார்கள்.
அந்த மீட்டீயோரைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானி இறங்குகிறார். ஜெர்ரியும் அவருடைய ஹஸ்கீஸ் குழுவும் அவர் தேடும் இடங்களுக்கெல்லாம்
அழைத்துப் போகிறார்கள்.
ஒரு ஸ்லெட்ஜில் வேண்டுகிற உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு சீரோ டிக்ரீயை எப்பவொ கடந்துவிட்ட மைனஸ்
குளிர்.
ஜெர்ரியின் ஹஸ்கி நாய்கள் உழைப்புக்கு அஞ்சாமல் இருவரையும் அழைத்துப் போகின்றன.

ஒரு இடத்தில் எதிர்பாராத குளிர்ப் புயல் அடிக்கப் போவதாக அவர்களுக்கு ரேடியோ செய்தி வருகிறது.
அப்போதுதான் அந்த விஞ்ஞானி வெகு மும்முரமாக்,அவரது புதிஉஅ கண்டுபிடிப்பை அராய்ந்து கொண்டு இருக்கிறார்.
ஜெர்ரியின் நாய் ஒன்றுக்கு காலில் அடிபடுகிகிறது.

அதைக் கவனிக்க அவன் திரும்பும்போது விஞ்ஞானி பனிக்கட்டிகள் நிறைந்த குளத்தில் விழுந்துவிடுகிறார்.விழுந்த வேகத்தில் அவரது கால் எலும்பு முறிந்து விடுகிறது.

நிலமையின் அவசரத்தைப் புரிந்து கொண்ட ஜெர்ரி,தன் லீட்நாயான மாயாவை கீழெ அனுப்பி அவரைச் சுற்றி ஒரு கயிற்றுச் சுருக்கைப் போட்டு,
மெள்ள மெள்ள மற்ற நாய்களின் உதவியோடு வெளியே இழுத்துக் காப்பாற்றி விடுகிறான்.
அனைத்து நாய்களுடன் மிகவும் சிரமப்பட்டு பேஸ் காம்ப் வந்து சேருகிறார்கள். கண்மண் தெரியாமல் அடிக்கு பனிச் சூறாவளிக்கு நடுவில் அந்த ஹஸ்கி நாய்களின் வீரம் மிகுந்த தளராத செயலுக்கு எல்லோரும் நன்றி சொல்கிறார்கள்.
விஞ்ஞாஆனிக்கோ உடல் நிலையை உடனே கவனிக்க வேண்டிய நிலை.
பனிப்புயலோ அதிகமாகிறது. அந்தக் குட்டி விமானத்தில் இந்த ஹஸ்கீஸையும் ஏற்றிச் செல்ல முடியாத நிலை.
ஜெர்ரியின் மனம் படாத பாடு படுகிறது.
மற்றவர்களின் வற்புறத்தலின் பாதிப்பில் அந்த நாய்களை சங்கிலியில் பிணைத்து,
அவைகளிடம் தான் மீண்டு வந்து அவர்களை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்துவிட்டுக் கலங்கிய கண்களுடன் விமானத்தில் ஏறுகிறான்.


அண்டார்டிக்



கதை நீளுகிறது. அதனால் நாளை மீதிக் கதையைப் பார்க்கலாமா/.












எல்லொரும் வாழ வேண்டும்.



























அண்டார்டிக்















எல்லோரும் வாழ வேண்டும்

9 comments:

எல் கே said...

enaku padamnalae kasapu athila angila padmana kekka vendam appadi oru kasapu.....

Geetha Sambasivam said...

அடாடா??? என்ன ஆச்சு அந்த நாய்க்குட்டிங்களுக்கு??? சரியான இடத்திலே நிறுத்திட்டீங்க! :(

வல்லிசிம்ஹன் said...

Too Bad. L.K.

துளசி கோபால் said...

நம்ம வீட்டாண்டைவரை வந்துட்டு வீட்டுக்கு வராமப்போயிட்டீங்க!!!

குளிர் கூடுதலோ?????

திரைப்படங்களில் செல்லங்கள் சம்பந்தப்பட்டதுன்னா...மனம் பதைச்சுப்போறதை நிறுத்தமுடியாது.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கீதா. நீளமான கதை. தொடர் விடாமல் சொல்லணும். இன்னிக்கு இரவு முடித்துவிடுகிறேன்.
அற்புதமான நாய்க்குட்டிகளின் கதைதான். மனிதனுக்கும் அந்த
நாய்க்குட்டிகளுக்குமான பந்தத்தை வெகு அழகாகச் சொல்லி இருக்கிறார்கள்.

எல் கே said...

//Too Bad. L.K./

enna panna.. cinema, serialna appadi oru verupu.. nan TV pakkam porathu only for news and sportsthan. pattukooda only in computer and mobilethan

ambi said...

இந்த படம் பார்த்த நியாபகம் இருக்கு. ஒரு நாயை பனிக்கட்டிக்கு அடியில் ஒரு சீல் துறத்தும் காட்சி செம த்ரில்லிங்கா இருக்குமே. :)

முடிவு தான் மறந்து போச்சு. அதுக்கு தான் நீங்க எழுத போறீங்களே? படிச்சுக்கறேன். :))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி,
ரொம்பப் பாவமாக இருந்தது. சினிமான்னு தெரிந்தால் கூட
நிஜமாகவே இந்த ஸ்லெட் ஹஸ்கீஸ் வாழ்க்கை கஷ்டமானதுதான்.
ஆமாம் உங்க ஊர்ல இறங்கித்தான் ஹெலிகாப்டர்ல பறந்து இந்த பேஸ் காம்புக்குப் போனோம்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, நீங்களும் பார்த்தீர்களா., அந்த ஸீ லயன் வெளில வர சீன் பிரமாதமா இருந்தது. ஒரு நிமிஷம் தூக்கிவாரிப்போட்டது போல !!
அதை எழுத விட்டுப் போச்சும்மா. நன்றி.