இதே இடம் 1983ல் எப்படி இருந்தது என்று யோசித்தால்..
ஒரு எலுமிச்சை மரம்.
இடமோ சிறியது.
நான்கு மல்லிச் செடி, இரண்டு தென்னை,ஒரு வாழை. அவ்வளவே.
பசுமைப் புரட்சி செய்கிறேன் என்றெல்லாம் சொல்லி ஆரம்பிக்கவில்லை.
தனியாளாய் கடப்பாறையை எடுத்துப் பாடுபட ஆரம்பித்து இந்த 26 வருடங்களில் இத்தனை நூற்றுக்கணக்கான செடிகளாக ,வித விதமான தாவரங்கள், ஒரு மினி ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டியே வீட்டில் ஏற்படுத்தி இருக்கிறார் எங்கள் சிங்கம்.
இப்போது மேலும் மேலும் கவனம் செலுத்த முடியாத சமயத்தில் அந்தச் செடிக்குழந்தைகளை வரும் விருந்தினருக்கும் நர்சரிகளுக்கும் கொண்டு போய்க் கொடுத்து வருகிறார்.
மிச்சம் இருக்கும் செடிகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்கு வைத்தேன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
25 comments:
நான் தான் முதப் போணியா? :))
//ஒரு மினி ஹார்ட்டிகல்சுரல் சொசைட்டியே வீட்டில் ஏற்படுத்தி இருக்கிறார் எங்கள் சிங்கம்.
//
ஆமா, உங்க வீட்டு தோட்டத்தை எனக்கு சுத்தி காட்டும் போது எவ்ளோ ஆர்வமா, உற்சாகமா பேசினார் தெரியுமா? ஒரு முப்பது வயசு பின்னாடி போயிட்டார். He is Great. :)
குறிச்சித் தோட்டச் சொந்தக்காரரும்
துணையிருந்த குறிஞ்சி மலரும்
வாழிய வாழிய வாழியவே!
பூச்சட்டிகளின் வரிசையும்,மரங்களும் ரசிக்க வைக்கின்றது !
சோழ நாட்டு சிங்கத்துக்கு என்னோட வாழ்த்துக்கள் சொல்லுங்க அம்மா :))
அருமை வல்லி, தோட்டக்கலையில் ஈடுபாடு வந்துவிட்டால் மண் பொன்னாகும். எங்க வீட்டிலேயும் இவர் அப்படித் தான். தினமும் தோட்டத்தில் தான் காலையும், மாலையும்.ஆனால் புதிய செடிகள் வைக்க முடியலை. நாங்க இல்லைனா செடிகளைக் கவனிக்க ஆள் கிடைக்கிறதில்லை. அதனால் அது கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருக்கு. மண் வளம் பெற மனமும் வளம் பெறும். எல்லாரும் எல்லாமும் பெற முடியும். வாழ்த்துகள்.
எலுமிச்சையா அது, காய்ச்சிருக்கு?? வில்வமோனும் தோணுதே???
நான் மாமரமோன்னு நினைச்சேன். அது எலுமிச்சையா, முதல் படத்தில இருக்க வெள்ளைப்பூவை மோந்தா நல்லா தும்மல் வருமாமே. Hay Fever தூண்டி விடுமாம்.
ஆமாம் அம்பி. முதல் போணி.
ரொம்ப நாளைக்கப்புறம் பதிவு போட வந்தால் என்ன எழுதுவதுன்னே தெரியவில்லை:)
உண்மைதான் அவருக்குத் தன் குழந்தைகளைப் பற்றி மிகவும் பெருமை!
வாங்கப்பா ராமலக்ஷ்மி,
ஊருப் பேரை எங்கதோட்டத்துக்கு வச்சீட்டீங்களா. அதுவும் நன்றாகத்தான் இருக்கு.
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.
வரணும் ஆயில்யன்.
நிறைய சிரமம் எடுத்துக் கொண்டு எல்லா வேலைகளையும் செய்வார்.
அதனால் ஊரை விட்டுக் கிளம்பும்போது சிரமம் ஆகிவிடுகிறது. அவரை மாதிரி யார் பார்த்துப்பாங்க செடிகளை:)
செடிகள் தானமா?
நானும் வரேன் கையேந்தி......
சூப்பர் தோட்டம்.
உழைப்பாளிக்கு இனிய பாராட்டுகள்.
தோட்டம் சூப்பரா இருக்கு ...இதே மாதிரி ஆர்வத்துல தான் குட்டியா ஒரு தோட்டம் போட்டு இருக்கோம் ஊர்ல எங்க வீட்ல ...இவ்ளோ அழகும் நறுவிசும் இல்லை ...ஏன்னா அங்க தோட்டத்தை கவனிக்க ஆளில்லை ,
சும்மா ஒரு கொய்யா ,ஒரு மாதுளை,ஒரு நெல்லிக்காய் மரம் ,ஒரு சப்போட்டா,ஒரு பப்பாளி ,ஒரு முருங்கை மரம், அப்புறம் கொஞ்சம் ரோஜா செடிகள்,ஒரே ஒரு கருவேப்பிலை மரம், சில குரோட்டன்ஸ்னு சின்ன தோட்டம் அது ,உங்க தோட்டத்தை பார்த்து எனக்கு என் வீட்டு தோட்டத்தை இப்பவே பார்க்கணும் போல இல்ல ஆயிடுச்சு !?
கீதா வாங்கப்பா.
அது மாங்காய்.
கிட்டத்தட்ட 400 காய்ச்சு இருந்தது கடவுள் கிருபையில்.
கஷ்டப்பட்டு எல்லாருக்கும் பிரிச்சுக் கொடுத்தது.
எல்லாருக்கும் மாங்கா ஊறுகாயாக் கொடுத்தாப் பரவாயில்லையாம்:)
செடிகளும் வளர்ப்புப் பிராணிகளும் இன்னோருவரிடம் கொடுப்பது சிரமம் தான்.
வாங்கப்பா சின்ன அம்மிணி. மாங்காயே தான். புளிப்பு ருமானி.
ஆவக்காய் போட நல்ல காய்.
எனக்கு அந்த பூ அலர்ஜி இல்ல்ல. வீட்டுக்காரருக்கு எந்தச் செடியும் அலர்ஜி இல்ல:)
நல்ல வேளையா!!!!!
வாங்க வாங்க உங்களுக்கு இல்லாத செடியா துளசி.
நல்ல படியா பாத்துக்கறவங்களுக்குத் தான் செடிகளைக் கொடுக்கணும்.
உங்க பாடு உங்க சினேகிதர் பாடு.:)
வாங்க மிஸஸ் தேவ்.
இத்தனை மரங்களா. பார்த்துக்க யாராவது இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்.
எப்படி விட்டுட்டு இருக்கீங்க??
குறிச்சித்தோட்டம் குலுங்குகிறதே. பாராட்டுக்கள்.
நன்றி மாதேவி. சொந்தக்காரரிடம் சொல்கிறேன்.
தோட்டம் மிக அழகாயிருக்கு.... பெருமாள் சன்னதியும் தான் :-)
வரணும் மௌலி. நன்றி.சீக்கிரம் வந்து பார்க்கலாமே.
//எல்லோருக்கும் மாங்கா ஊறுகாயாத் தந்தாப் பரவாயில்லையாம்//
பாதகமில்லை எனக்கு மாம்பழமாத் தரலாம்!
அருமை வல்லி! உங்க தோட்டம். பாடுபட்ட சிங்கத்துக்கு ஊட்டியில் கோடைவிழாவில் கொடுக்கும் விருதை அப்படியே வாங்கி அவருக்குக் கொடுக்கலாம். வரேன்...வரேன்...தோட்டம் பாக்க...நோட்டம் பாக்க அல்ல!!!
வாங்க வாங்க தோட்டம் பார்க்க வாங்க.
சிங்கத்துக்கிட்ட சொல்லிடறேன். அவரை எல்லாரும் அறிமுகம் செய்துக்கத்தான் இந்தப் பதிவே. நன்றி
நானானி.
//வரேன்...வரேன்...தோட்டம் பாக்க...நோட்டம் பாக்க அல்ல!!!// நானும் நானும். என் ரங்க்ஸ்க்கு ஆர்வம் இருந்தாலும், சின்ன காய்கறித் தோட்டம் அவ்வளவு தான், நேரம் இல்லை. உங்க வீட்டுச் செடி, கொடி, மரங்களைப் பாக்கவே நான் வரணும். சின்ன வயசில ஒரு தோப்புல வளந்தேன்.... அந்த நினைவெல்லாம் கொசுவத்தி... அட்லீஸ்ட் உங்க மாமரத்தில் நீங்க பாக்காதப்ப, ஒரே ஒரு மாங்கா பறிச்சி சாப்பிடணும் (கல்லால அடிச்சி இல்ல:-))))
வாங்க கெ.பி.
உங்க ஊரில காய்கறித் தோட்டம் போட்டாலும் குளிர்நாள் ல பாத்துக்கறது ரொம்பக் கஷ்டமாச்சே. நல்ல பங்குனிசித்திரை மாசமா வாங்க.
காய்கள் இருக்கும்.
மொட்டை மாடிலேருந்தே பறிச்சுக்கலாம்,
சிங்கத்துக்கு வாழ்த்துக்கள். பல நாட்கள் ஊருக்கு போனீங்களே என்ன பண்ணீங்க?
அவர் மனசில்லாம் தான் கிளம்புவார். நாங்க வீட்டைப் பார்த்துக்க போடுகிற வாட்ச்மேன், செடிகளையும் பார்த்தூப்பார். நிறைய ஜலம் விட்டுடுவார். அதனால் சிலது பெருமாள்ட்ட போய்விடும்:(
Post a Comment