Blog Archive

Tuesday, April 07, 2009

மீனாட்சி சுந்தரேஸ்வரர்களுக்கும் மயிலை கபாலீஸ்வர கற்பகம்பாளுக்கும் விண்ணப்பங்கள்

கற்பகமும் கபாலியும்
அறுபத்துமூவர்

மீநாட்சியும் சொக்கனும் ரிஷபாரூடராக.....




ஆண்டாள் தேரில் அரங்கனுடன்





ஒளிகாட்டும் கோபுரங்கள் மதுரையில்






கோபுர விலாசம் மதுரை.

இன்று அறுபத்துமூவர் வெகு உற்சாகமாக நடக்கிறது. திரும்பூம் இடமெல்லாம் தண்ணீர்ப்பந்தல். அண்டாக்களில் மோரும், கதம்ப சாதமும்,புளிசாதமுமாக வந்தவர்களுக்கெல்லாம் விநியோகம்.
அழகு அழகாய் உடை உடுத்தி பிக்ஷாடன சாமியைப் பார்க்கப் போகும்
கூட்டம்.
அறுபத்துமூவர் கும்பலிலும் தொலையாமல், பலூன்,
விசில்,டமாரம் இப்படிப் புதிது புதிதாக விளயாட்டுப் பொருட்களும் வாங்கிக்கொண்டு இப்போதுதான் கும்பல் சேரா ஆரம்பிச்சிருக்கு.
நம் வீட்டு வாசலில் நாற்காலி போட்டு உட்கார்ந்தால்,
வீசும் காற்றுக் கூட சிவனையும் அம்பாளையும் ,அறுபத்துமூன்று நாயன்மார்களையும் பார்த்த சந்தோஷத்தில்,
சத்தமாக வீசுகிறது.
இந்த உற்சாகக் கொண்டாட்டங்கள் பங்குனி உத்திரக் கல்யாணத்துடன் பூர்த்தியாகின்றன.
இந்த நேரம் நாளை மதுரையில் மீனாட்சியும் கும்பாபிஷேகம் கண்டு அருளுவாள்.பொதிகையில் பார்க்கக் காத்திருக்கிறோம்.
இவர்கள் எல்லோரிடமும் நாம் வேண்டி விண்ணப்பிப்பது எல்லாம்
நல்ல அரசு நமக்கு அமைய வேண்டும் என்பதுதான்.
மக்கள் நலம் காத்து நம் முன்னோர் விட்டுச் சென்றிரூக்கும் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவும்,
நாட்டின் அரசை நம்பி வாழும் மக்களை ஆபத்தில்லாமல் காப்பாற்றவும்,
இளைய தலைமுறை
ஆரோக்கியமான சூழலில் வளரவும் இந்தத் தெய்வங்கள் மனம் வைக்கட்டும்.





18 comments:

கோபிநாத் said...

பகிர்வுக்கும் நன்றிம்மா ;)

மெளலி (மதுரையம்பதி) said...

உங்களைப் போன்ற பெரியவர்களது நல்ல எண்ணங்கள் கண்டிப்பாக நடக்கும். முன்னோர் விட்டுச் சென்ற பொக்கிஷங்கள் பாதுகாக்கும் நல்ல அரசு அமைய வேண்டுவோம். :-)

நாகை சிவா said...

நல்லரசு அமையட்டும் :)

துளசி கோபால் said...

படங்கள் எல்லாம் அருமை.

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்தல். உங்கள் பிரார்த்தனைதான் எங்கள் பிரார்த்தனையும். நன்றி வல்லிம்மா.

Geetha Sambasivam said...

துயருற்ற மக்களின் துன்பம் தீரவும், மற்ற மக்கள் மகிழ்வுடன் இருக்கவும் நல்லரசு அமையப் பிரார்த்திப்போம். இறைவன் ஒருவனே காக்க வல்லவன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோபி. இதோ மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் கோவில் கும்பாபிஷேகம் தொடங்கி விசேஷமாக ஒளிபரப்பு நடக்க ஆரம்பித்தாச்சு.
கண்ணாம்பாள் நம்மை ரக்ஷிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் மௌலி.
அவர்கள் பார்வை பரிபூரணமாக விழட்டும்.

அபி அப்பா said...

ஆஹா அருமையான பிரார்தனையும் கோவில் பற்றிய வர்ணனைகளும்! நன்றி வல்லிம்மா!

வல்லிசிம்ஹன் said...

சிவா..

உண்மையாகவே கவலை மிகுந்ததால் அரசு பற்றி எழுதிவிட்டேன்.
யாராயிருந்தாலும் மக்கள் நலனை மனதில் வைத்தவர்களாக இருக்க வேண்டும் என்று நாம் பிரார்த்திப்பதில் நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி. எல்லாம் கூகிளார் உபயம். நேற்று அங்கே போகும்போது காமிரா எடுத்துப் போக வில்லை.

வல்லிசிம்ஹன் said...

ராமலக்ஷ்மி,
வாங்கப்பா.
எண்ணங்களும் வார்த்தைகளும் நல்ல திசையை நோக்கி நம்மை திருப்பட்டும்.

நல்ல நாளில் அனைவரும் பிரார்த்தனை செய்தால் நல்லதே நடக்கும் இல்லையா..

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
உங்களை மாதிரி, மௌலி, குமரன்,தி.ரா.ச,கைலாஷி எல்லோரும் வழங்கும் ஆன்மீகமும்
நல்வழிப் படுத்த வலையில் விளங்குகிறது.
அந்த முயற்சியும் நமக்கு நல்ல எதிர்காலத்தைக் காண்பிக்கட்டும்.

pudugaithendral said...

உங்க பதிவைபடிச்சுத்தான் பொதிகையில் நேரடி ஒளிபரப்புன்னு தெரியும். நன்றி.

பாத்துட்டு வர்றேன்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அபி அப்பா,

இங்க இருந்தால் இந்த ஒளிபரப்பையும் பார்த்திருக்கலாம். அருமையாக இருந்தது.
நல்லதே நடக்கட்டும். உங்க ஊர்ல ரெட் டைட் சரியாகி விட்டதா??

வல்லிசிம்ஹன் said...

வரணும் தென்றல். அடடா.

மறுபடி மறுபடி வரிசையாகச் சொல்லி வந்தார்களே.
நான் பொதிகை நிறைய பார்ப்பேன். மற்ற ஆட்டம் பாட்டதுக்கு இந்த சானல் நல்லா இருக்கு.
ராஜ் டிவியும், சன்நியூஸும் கூட ஒளி பரப்பினாங்கன்னு நினைக்கிறேன்.
நீங்க பார்த்திருந்தா எனக்குச் சந்தோஷம்.

Geetha Sambasivam said...

//உங்க பதிவைபடிச்சுத்தான் பொதிகையில் நேரடி ஒளிபரப்புன்னு தெரியும். நன்றி.

பாத்துட்டு வர்றேன்.//

இது அக்கிரமமா இல்லை? நான் ஒருத்தி முதலில் இருந்தே புலம்பிட்டு இருக்கேனே, அதையும் பார்த்திருக்கலாம் இல்லை? :))))))))))))

வல்லிசிம்ஹன் said...

அட நமச்சிவாயா, சொக்கா.

மிஸஸ்.சாம்பசிவம் முதல்லேயே சொல்லிட்டாங்க. தென்றல் , மருவாதியா அவங்களுக்கு நன்னி சொல்லிடுங்க.:)
எதிர்சேவை,மீனாக்ஷி கல்யாணம் எல்லாம் இருக்கே இன்னும்.

கீதா பார்த்து மகிழ்ந்தீங்களா. ராஜ்ல விளம்பரம் ஜஸ்தி. பொதிகை தேவலை.
ரொம்ப நினைச்சுக்கிட்டது உங்களைத்தான்.