பின்ன நிற்குமா காலம்:)
தம்பி ரங்கன் பாட்டுகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவன்.
அதில் கொஞ்சமே தத்துவமும் சோகமும் இழையோடும்போது,
வேண்டாண்டா.
சந்தோஷமா எழுது.
என்று புத்தி சொல்லுவேன். நமக்குத்தான் புத்தி சொல்வது மிகவும் பிடித்த விஷயமாச்சே.
அவன் ஒருவன் வசமாக மாட்டிக் கொள்வான். ஆம் ஆமா... என்று தலையாட்டிவிட்டு, மீண்டும் அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் என்று பாட ஆரம்பிப்பான்.:)
போடா ஒன்னை ஒண்ணும் திருத்த முடியாது என்று விடுவேன்.
ஆனால் ஒன்று,, பாட்டில் தான் சோகம் காட்டுவான். உண்மையில் அவன் அலுவலகத்தில் அவனை அவனுக்கு சிரிப்பு (கடி)மன்னன் என்றே பெயர்.
அவனுக்கு இந்தப் பதிவு சம்ர்ப்பணம்.
இதோ அவன் பாட்டு.
********************************
பாட்டு ஒன்று எழுத முற்பட்டேன்..
பாட்டில் இலக்கணம் தேவை என்றனர்
யாப்பு இலக்கணம் கற்க முற்பட்டேன்
மூப்பெனக்கு இலக்கணமிட்டது..தெரிந்தது
கருத்தோடு கவிதை எழுத
கவிதையில் இனிமை இல்லை.
சீர் அமைத்து எழுதச்
சீராக அதில் ஏதுமில்லை.
புதுக்கவிதை புனையலாம் என்றால்
எழுந்தது அதிலும் குழப்பங்கள்
ஆசையின் விளைவில் எழுந்த நினைவுகளில்
ஓசையின் இனிமை ஒதுங்கியது
கவிஞனின் கருத்துக்கும் இலக்கணம் தேவை
அவன் எழுத்துக்கும் இலக்கணம் தேவை.
கருத்துக்கும் எழுத்துக்கும் இசை அமைந்தால்
கவிஞனின் தமிழுக்கு இயல் மகுடம்!!
பாடல்..
நா.ரங்கன்.
எல்லோரும் வாழ வேண்டும். நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்.
24 comments:
மூன்றாம் ஆண்டின் நிறைவுக்கு வாழ்த்துக்கள்.
தம்பிக்கு பாடல் வெகு அருமை.
அன்பின் ராமலக்ஷ்மி,
உங்கள் கவிடஹிகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனையும் நினைத்துக் கொள்வேன். அறிவாளிகளின் சங்அம் கிடைத்திருந்தால் இன்னும்பிரகாசித்திருப்பான்.
தம்பிக்கான பாடல் இல்லை அது:)
தம்பியுடைய பாடல்.
அவன் ஆங்கில மீடியத்தில் படித்ததால் தமிழ் தகறாரு செய்தது அவனிடத்தில் எனக்காச்சு உனக்காச்சு என்று இரண்டாண்டுகளில் தேறிவிட்டான்:)
முடிவுக்கும், தொடக்கத்திற்கும் வாழ்த்துக்கள் வல்லிம்மா ;-)
தம்பியின் பாடல் சூப்பரு ;)
நன்றி கோபி.
ஆமாம் ஒன்று முடிந்தால் ,இன்னொன்று தொடரும்
என்பது தீர்க்கமான விஷயம்.
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.
வாழ்த்துகள் வல்லியம்மா! :-)..ஆகா..
உங்க தம்பியின் கவிதை, கருத்து நல்லா இருக்கு! //கருத்துக்கும் எழுத்துக்கும் இசை அமைந்தால்
கவிஞனின் தமிழுக்கு இயல் மகுடம்!!//
ரசித்தேன்!
தம்பியின் பாடல் நன்று :-)
அது உங்கள் தம்பி எழுதிய பாடல் என்கிற புரிதலுடன்தான் ‘தம்பிக்கு சமர்ப்பித்த இப்பதிவு’ என ஆரம்பித்து மனம் கனத்ததால் மாற்றி எழுதியதில் திருத்த விட்டுப் போயிற்று.
//ஒன்று முடிந்தால் ,இன்னொன்று தொடரும்
என்பது தீர்க்கமான விஷயம்.//
இவ்வரிகள் அர்த்தமுள்ள அற்புதமான இப்பாடலையும் நினைவு படித்தியது:
"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம் சுகமே."
முடிகிற கதையின் வேதனையிலும்
தொடருகின்ற நினைவுகளிலேதான் பெற வேண்டும் இதம். பெரியவர் நீங்கள். இருப்பினும் இந்த அனுபவம் எனக்கும் உண்டும்மா.
ஆஹா..............ஆஹா.....
இனிய வாழ்த்து(க்)கள் எல்லாத்துக்கும் (??)சேர்த்து!!!!
அடடா, ராமலக்ஷ்மி,
வருந்த வேண்டாம். தொடரும் உறவுகள், உங்கள் உறவையும் சேர்த்தே சொல்கிறேன்.
நன்றாகா வளமாக இருங்கள் அம்மா.
அவனுக்கு உன் பாட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னால் போதும் அடுத்த நாள் இன்னுமொரு நான்கு பாடல்களோடு வந்து நிற்பான்.
:)
நன்றி ராமலக்ஷ்மி.உங்கள் பணி இனிதே தொடரட்டும்.
வாங்கப்பா சந்தனமுல்லை. இந்த மகிழ்ச்சி ந்நெரத்தில் அவன்பாடலுக்கு மரியாதையும் பாராட்டும் கிடைப்பது எனக்குப் பூரண சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மிக்க நன்றிப்பா.
வரணும்வரணும் சென்ஷி. நேற்று திருவிளையாடல் நாகேஷைப் பார்த்து,, சென்ஷி ஞாபகம் ஏன் வருதுன்னு யோசித்தேன். உங்க பதிவில் அவர் படம் இருக்கும் இல்லையா:))))
ஓஓ,.
ஆஆஆஆ
வாவ்:)
இதெல்லாம் வரும்னு நினைச்சேன்:))))
துளசி!!
எல்லா,,.... வாழ்த்துக்கும் நன்றிங்கோவ்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்லியம்மா... :-)
கீதாம்மா தனி போஸ்ட் போட்டதால தெரிஞ்சது...தெரியச் செய்த அவர்களுக்கும் இங்கே ஒரு நன்றியச் சொல்லிக்கறேன். :-)
நன்றி மௌலி.
இதை நான் எதிர்பார்க்கவில்லை.
கீதாவுக்கும் உங்களுக்கும் நன்றி.
காலம்பரலே இருந்து தம்பியோட கவிதையைப் பார்த்துட்டு வரணும்னு நினைச்சும் முடியலை, இப்போத் தான்நேரம் கிடைச்சது. அருமையான பொருள் பொதிந்த கவிதை,
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் வல்லி.
எங்க உங்களுக்கு நேரம். தோழிக்குப் பொறந்தநாள்னு தூள் கிளப்பறதிலியே
பொழுது போயிருக்கும்.:)
நன்றி கீதா எல்லாவற்றுக்கும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திருகுறுங்குடி வல்லியம்மா :))
http://sangamwishes.blogspot.com/2009/04/wishes-happy-birthday.html
நன்றி ரவி. சென்ற வருடத்தை நான் மறக்கவில்லை. உங்களுக்கும் ஸ்ரீ தி.ரா.ச வுக்கும் மீண்டும் நன்றி.
அட அப்படி ஒரு தம்பி உண்டா உங்களுக்கு!
;-))
ஆமாம் வாசுதேவன் இருந்தான்.
என்னை விட புத்திசாலி.அட்டகாசமா இருப்பான் பார்க்க. ஆறடி உயரம். எப்பவுமே சிரிச்ச முகம். பொறுமை எல்லா நல்ல குணங்களும் கொண்டவன்.
//ஆமாம் வாசுதேவன் இருந்தான்.//
அடடா, நல்ல நாளிலே சில நினைவுகளை கிளரிட்டேனா? :-(
மூன்றாம் ஆண்டுக்கு வாழ்த்துகள். கவிதை அருமை..
வாசுதேவன், சிலபேர் கணக்க்குப்படி இந்று தமிழ்ப் புத்தாண்டு. சிலருக்கு நாளையாம் .
நமக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.
(இரண்டு தடவை வடை சாப்பிடலாமே.)
பரவாயில்லை. ஒன்றும் கஷ்டமில்லை வாசுதேவன். அவன் எங்கேயும் போகவில்லை. என்னுடனே இருக்கிறான். நீங்கள் சொன்னதால் புதிதாக ஒண்ணும் தொந்தரவு இல்லை. அமைதிய்யாகவே இருக்கறேன்.
புத்தாண்டு நல் வாழ்த்துகள்பா. குடும்ப்பத்துக்கும் அக்காவின் வாழ்த்துகள்.
வாழ்த்துகள்
Post a Comment