Blog Archive

Tuesday, November 04, 2008

ஒரு கோவில்.....இந்தியக் கட்டிடக் கலை
















































































நம் ஊர்க்கோவில் டெல்லி, மற்றும் நிறைய இடங்களீல் கட்டியிருக்கும் அதே ஸ்வாமி நாராயணா கோவில்தான்.
இந்த சிகாகோவில் இருக்கிற கோவில்கள் வெங்கடாசலபதிக்கு ஒன்று, ஸ்ரீராமனுக்கு ஒன்று, ஷீர்டி பாபாவுக்கு ஒன்று என்று நிலம் வாங்கிக் கட்டி இருக்கிறார்கள்.
அதையெல்லாவற்றையும் விட இந்தக் கோவில் கலை நுணுக்கத்தில் மேலோங்கி இருக்கிறது. சென்ற போது எடுத்த படங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.













20 comments:

துளசி கோபால் said...

சூப்பர்மா.....சூப்பர்.

நானும் டெல்லியில் பார்த்து வாயைப் பொளந்து நின்னேன்.

இங்கே ஆக்லாந்தில் கூட கட்டி இருக்காங்க. ஆனா...... ஊர் நிலமைக்கு ஏத்தாப்போல சின்னக் கோயில்தான்.

தூண்கள் எல்லாம் இந்தியாவில் செஞ்சு கொண்டுவந்து இங்கே இணைச்சாங்க.

முக்கால்வாசி தன்னார்வலர்கள்தான் இந்தத் திருப்பணியில் இருக்காங்களாம்ப்பா!!!!

cheena (சீனா) said...

மீ த பர்ஸ்டா

கோவிலுக்குச் சென்றாலும் அக்கலைவண்ணத்தை சக பதிவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்கு நல்வாழ்த்துகள்

படங்கள் அருமை

Anonymous said...

படங்கள் சூப்பர். மூணாவது படத்தில இருக்க மரத்துக்கு Weeping Willows னு பேரு. இலைகள் கண்ணீர் மாதிரி விழுதா தொங்குதாம். அதான் அந்த பேரு.

Kavinaya said...

படமெல்லாம் சூப்பர் வல்லிம்மா. 4-வது படம் புரியல. பகிர்தலுக்கு நன்றி.

திவாண்ணா said...

அவசர பதிவு போல இருக்கு! போகஸ் ஆகாத படத்தையும் போட்டுட்டீங்க!

மொத்தத்திலே மனசு சந்தோஷப்பட்டது.

ராமலக்ஷ்மி said...

படங்களுக்கு நன்றி. நமது கட்டிடக் கலை அங்கு மிளிர்வதைப் பார்க்கையில் ஒரு பெருமையும் கூடவே வருகிறதல்லவா:)?

வல்லிசிம்ஹன் said...

இங்கேயும் அப்படித்தான் செய்திருக்கிறார்கள்.

துளசி! மிச்ச வேலையை எட்டு மாதங்கள் இங்க தங்கி செய்தார்களாம் நம் இந்திய சிற்பிகள்.
போன தடவை பார்த்தபோதே ஒரு 500 யானை பொம்மைகளுக்கு மேல எண்ணினேன்.
என்ன நுணுக்கம்மா:)
நாங்க போன போது தன்னார்வலர்கள் தான் உணவு வகையறாவைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
மொத்தத்தில் ஒரு நல்ல அனுபவம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க சீனா சார். அதில அந்த தண்ணிர்த்தொட்டிகளையும் நீரூற்றுகளையும் படம் ஃபோகஸ் செய்து எடுத்தான்.
அவனுக்காகத் தான் இந்தப் பதிவு.:)
நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

வாங்க அம்மிணி.
இந்த வீப்பிங் வில்லோ இவங்க வீட்டுப் பக்கத்தில இருக்கிற ஏரிக்கரையில நிறைய இருக்கு.
பொண்ணு தன் வீட்டு வாசலில் வைக்க மறுத்து விட்டாள். வெகு அழகான் மரம்.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா கவிநயா. நாலாவது படம் ஒரு தூணூட மேல்பாகம்.

அற்புதமா வேலைப் பாடு செய்திருக்கு. இந்த மாதிரி ஏகப்பட்ட தூண்கள். நேரம் இல்லாததால் வந்து விட்டோம்.

வல்லிசிம்ஹன் said...

பின்ன இல்லையா ராம்லக்ஷ்மி.

கப்பல்லில் கல்லை ஏற்றி இங்க கொண்டுவந்தும் செய்திருக்காங்க.
இந்தியாவிலியே செய்தும் கொண்டு வந்திருக்காங்க.

மொத்தத்தில ஒரு நல்ல கலை அனுபவம்.
இன்னும் உள்ள இருக்கிற சிற்பங்கள் அசத்துகின்றன. அங்கே போட்டோ எடுக்க அனுமதி இல்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வாசுதேவன். ஒரே ஒரு மரம் படம் எடுக்கும்பொட்து கை ஆடிவிட்டது. அவசரம்தான் காரணம்;)
நன்றிம்மா,.

Unknown said...

//முக்கால்வாசி தன்னார்வலர்கள்தான் இந்தத் திருப்பணியில் இருக்காங்களாம்ப்பா!!!!// ஆம், பாராட்டப் பட வேண்டிய விஷயம்!

பல மில்லியன் டாலர்கள் செலவில். இதை வந்து பார்த்துப் போவது மிகையாக‌ உள்ளூராட்கள் எனும் போது பெருமையாய்த் தானிருக்கு.

Geetha Sambasivam said...

ஹூஸ்டனில் சுவாமிநாராயணர் கோயிலும் இதே மாதிரி தான் கட்டி இருக்காங்க, ஆனால் சிற்பிகள், ஸ்தபதிகள் அனைவரும் இந்தியாவில் இருந்தே சென்று அங்கேயே தங்கித் தான் கட்டினாங்க. வட நாட்டுச் சிற்பிகள் தவிர, தமிழ்நாட்டுச் சிற்பிகள், ஓவியர்கள் அனைவரையும் பார்த்திருக்கோம்.

குமரன் (Kumaran) said...

நாங்கள் சென்ற வருடம் சிகாகோ சென்ற போது இந்தக் கோவிலுக்குச் சென்று வந்தோம். நல்ல கலைப்படைப்பு.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கெ.பி.

மிகப் பெரிய சாதனை.
ஒவ்வொரு அங்குலமும் கலைநயத்தோடு செதுக்கப்பட்டு இருக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அப்படியா கீதா. முதல் தடவை போகும்போது இந்த மாத்ரி விஷயங்களைச் சேகரித்தேன்.

நீங்கள் சொன்னதும் நினைவு வருகிறது.
எட்டு மாதங்கள் ஆச்சு இந்தக் கோவில் உருவாக என்று சொன்ன மாதிரி நினைவு.

நீங்கள் தமிழ்நாட்டு ஸ்தபதிகளை இங்கே சந்தித்ததே மகிழ்ச்சிதான்.

வல்லிசிம்ஹன் said...

குமரன், சிகாகோ வந்தீர்களா.
யாரையாவது (பதிவர்களை) சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனல் இது மிகப் பெரிய தேசம்.
என் உறவினர்களையே சென்று பார்க்க முடியவில்லை. எல்லாம் தொலைபேசியில் தான்.:)

குமரன் (Kumaran) said...

இப்ப வரலைங்க அம்மா. ஒரு வருடம் ரெண்டு வருடம் இருக்கும் வந்து. :)

நானானி said...

அற்புதமாக ' சலவைக் கல்லிலே கலை வண்ணம் கண்ட கோவில். அதைக் காணவே எங்களை அழைத்துச்சென்றாள் சகோதரி. வெளியிலிருந்து படமெடுத்துக்கொண்டே
உள்ளே சென்றேன். 'நோ..நோ கேமரா' என்று சொல்லிக்கொண்டே பிடுங்காத குறையாக ஹேண்ட்பாக்கில் போட வைத்தார் அங்குள்ளவர். கண் குளிர ரசித்த கலை வண்ணம்.
இரவில் ஒளிர்ந்தது நல்லாருக்கு.