மதுமிதா அவர்களின் பதிவில்,
தமிழில் வாசிப்பு என்பது எந்த அளவில் இருக்கிறது
என்று அறியும் முகமாகச் சில கருத்துகளைச் சொல்லி இருந்தார்கள்.
அதில் எழுத்தாளர் ,பதிவர் திரு.மாதவராஜ் அவர்களின்
பதில்களைவிடக் கேள்விகளே முக்கியம்
என்பது எனக்கு ஒரு பயிற்சிக் களமாகவே தெரிந்தது. ஒரு சுய மதிப்பீடு.
இந்தக் களத்தில்,பரீட்சையில் தொடராக நுனிப்புல்லில் நம் உஷா எழுதி இருந்தார்.
எனக்கு எழுதுவதில் அவ்வளவு அதிகப் பயிற்சி இல்லை. இருந்தாலும் இந்தக் கேள்விகளுக்காவது விடை எழுதலாம் என்றே தோன்றியது. அதன் பலன்
இந்தப் பதிவு.
மௌனமாக இருந்துவிடலாம் என்றால் அது முடியாது.
மழைக்கு முன்னால் தவளை கத்துவது போல், நாமும்
எழுதிப் பார்க்கலாம் என்ற ஒரு முயற்சிதான் இது.
http://mathavaraj.blogspot.com/2008/10/blog-post.html இந்தப் பதிவில் திரு .மாதவராஜ் கேட்டிருந்த கேள்விகள் மிக மிக அருமையானவை.
அவரை அறிமுகம் செய்த மதுமிதாவுக்கும் என நன்றிகள். இதை எழுதத் தூண்டுதலாக அமைந்த உஷாவின் பதிவுக்கும் நன்றி.
1. நீங்கள் படிக்க நேர்ந்த முதல் நாவல் எது?
மணியனின் காதலித்தால் போதுமா
2. எந்த வயதிலிருந்து நாவல்கள் படிக்க ஆரம்பித்தீர்கள்?
பதினொன்று,பனிரெண்டு வயது இருக்கும்
3. எந்த வகையான நாவல்கள் உங்களுக்குப் பிடிக்கிறது?
சமூகமும் பிடிக்கும் சரித்திரமும் பிடிக்கும்
4. ஒரு நாவலை எப்படி படிக்க தேர்ந்தெடுக்கிறீர்கள்?
ஏற்கனவே அறிமுகமானவராக இருப்பதாலும், வாரப்பத்திரிகைகளில் அவர்கள் கதைகளைப் படித்துப் பிடித்து நாவல்களைப் படிக்கத் தோன்றும்.
)
5. நாவல்களுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
நீட்டப்பட்ட சிறுகதைகளாக நாவல்களை நான் பார்க்கிறேன்.
அதே போல சுருக்கப்பட்ட நாவல்களாகச் சிறுகதைகளையும் நினைப்பதுண்டு
6. நாவல்களைப் படிக்கிற போக்கில் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் கதையின் மையப் பாத்திரமாக எப்படி உருவெடுக்கிறது?
அ. வாசகனின் அக நிலையிலிருந்து
இ.(வேறு எதேனும் காரண இருந்தால் எழுதவும்)
7. ஒரு நாவலுக்கு, குறிப்பாக எத்தனை பக்கங்கள் இருக்கலாம் என்று கருதுகிறீர்கள்?
250லிருந்து 300 வரை இருக்கலாம். ஆனால் சுவாரஸ்யம் குன்றாத
எந்த நாவலையும் எவ்வளவு பக்கங்கள் இருந்தாலும் படிக்கத்தோன்றும்
8. மிக அதிகமான பக்கங்கள் உள்ள நாவல்களைப் பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
பக்கங்களைப் பற்றிக் கவலையில்லை. கதையிருந்தால் போதும்.
9. நாவலின் சில அத்தியாயங்களைப் படித்ததுமே, இறுதிப்பக்கங்களுக்குச் செல்லும் வழக்கமுண்டா?
ம்ம்.
சிறிய வயதில் துப்பறியும் நாவல்கள் படிக்கும் போது பி.டி.சாமியின் இரட்டை மனிதனின் இருட்டு மாளிகை என்று நினைக்கிறேன்.:)
கடைசிப் பக்கத்தைப் படித்துவிட்டு மீண்டும் திருப்பிப் படித்தேன்.
10. எந்த சமயங்களை நாவல்கள் படிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்?
தீவிரமாக நாவல்களைப் படிக்கும் காலம் இருந்தது. அப்போது ஒன்றை முடித்த கையோடு இன்னோரு நாவலை எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது.
இப்போது படிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது. மீண்டும் துவங்கும் என்றே நம்புகிறேன்.
11. பாதி வரைப் படித்து, முடிக்காமல் போன நாவல்கள் எவை?
அப்படி எந்தப் புத்தகத்தையும் விடவில்லை
12. பெரும் எதிர்பார்ப்புடன் படித்து, பிடிக்காமல் போன நாவல்கள் எவை?
இருக்கின்றன. சொல்ல மனமில்லை
13. தாங்கள் படிக்க நினைத்து இதுவரை படிக்காமலே இருக்கிற நாவல்கள் எவை?
படிக்க நினைப்பது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட சில நாவலகள். சுவை வேறுபாடு இருப்பதால்
படிக்கவில்லை
14. படித்ததில் பிடித்த பத்து தமிழ் நாவல்கள் எவை?
கல்கியின் சிவகாமியின் சபதம்,
தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்,இன்னும் பிற நாவல்கள்
ஜயகாந்தன் அவர்களின் சிறுகதை யுகசந்தி,யாருக்காக அழுதான்,
பாரீசுக்குப்போ,
நடிகை நாடகம் பார்க்கிறாள்.
லக்ஷ்மி யின் அரக்கு மாளிகை,
ராஜம் கிருஷ்ணனின் மலர்கள்,
ஆர்.சூடாமணியின் சில நாவல்கள்.
எஸ்.லட்சுமி சுப்பிரமணியத்தின் நாவல்கள்
சத்தியப் பிரியனின் கல்கியில் வெளிவந்த தொடர் ஒன்று,.
இன்னும் நிறைய.
15. படித்ததில் பிடித்த பத்து பிற இந்திய மொழி நாவல்கள் எவை?
வி.ஸ ,காண்டேகரின் தமிழாக்கம் செய்யப்பட்ட நாவல்கள்.
மாயாவி என்ற எழுத்தாளர் மொழிபெயர்ப்பு செய்த சில பிற மொழிக்கதைகள்,
ஏண்டமூரி விஸ்வநாத்தின் கதைகள்.
16. படித்ததில் பிடித்த பத்து வெளிநாட்டு நாவல்கள எவை? \
நிறைய உண்டு.
17. திரும்பத் திரும்ப படித்த நாவல்கள் எவை?
அரக்கு மாளிகை, சிவகாமியின் சபதம், அன்பே ஆரமுதே
18. படிக்கும் முன்னரோ, படித்த பின்னரோ நாவலின் தலைப்புகள் குறித்து யோசிப்பது உண்டா?
வேங்கையின் மைந்தன் பற்றி யோசித்ததுண்டு. எவ்வளவு பொருத்தம் என்று.
19. நாவல்களில் வந்த கதாபாத்திரங்களை தங்கள் லட்சிய மனிதர்களாக வரித்துக் கொண்டதுண்டா? அப்படி இருந்தால் குறிப்பிடுங்களேன்.
நா.பாவின் அரவிந்தன், பூரணி.
20. பிற மொழி நாவல்களுக்கும் தமிழ்மொழி நாவல்களுக்கும் என்ன வித்தியாசங்களை உணர்கிறீர்கள்ள்
ஒன்றும் இல்லை, தமிழ் நம் மொழி மனதுடன் ஒன்றும். பிறமொழி வேற்ருக்குப் போன உணர்வு.
21. உலகின் பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என கருதிய தமிழ் நாவல்கள் எவை?
நிறைய இருப்பதாகத் தோன்றும்..
22. வாசித்ததில் தங்களது இயல்பு நிலையை வெகுவாக தொந்தரவு செய்த நாவல்கள் எவை? ..
சிவசங்கரியின்,வாசந்தியின் நாவல்கள்
23. கதாபாத்திரங்களின் உரையாடல் எப்படி இருக்க வேண்டும்?
அ.எழுத்து மொழி
ஆ.பேச்சு வழக்கு
இ.வட்டார வழக்கு
24. தாங்கள் இதுவரையில் வாசித்த நாவல்களில் பிடிபடும் பொதுத்தன்மைகள் எவை எவை?
25. எந்த நாவல்களைப் படித்ததும், அவற்றை எழுதிய எழுத்தாளரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியது?
கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்.
++++++++++++++++++++++++++++++++
26. தாங்கள் நாவல்களை தொடர்ந்து ஒரே மூச்சில் படிப்பீர்களா? அல்லது விட்டு விட்டு பல்வேறு சமயங்களில் படிப்பீர்களா?
27. உள்ளடக்கத்திற்காக மட்டுமின்றி மொழிநடைக்காகவே லயித்துப் படிப்பது யார் யாருடைய நாவல்களை?
திரு கி.ராஜநாராயணன் ஐயா அவர்களின் படைப்புகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
28. கதாபாத்திரங்களின் இயல்பு மீறி, நாவலாசிரியரே வலிந்து பேசுவது போல தோன்றியிருக்கிறதா. அப்படியானால், அந்த நாவல்கள் பற்றி உங்கள் அபிப்ராயம் என்னவாகிறது?
29. நாயகத் தன்மையற்ற நாவல்களைப் படித்திருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன்.
30. கவிதை, சிறுகதைகளைத் தாண்டி, நாவல்கள்தான் இலக்கியத்தின் உச்சம் என்று கருதுகிறீர்களா?
31. தாங்கள் கடைசியாக படித்த தமிழ்நாவல் எது?
ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
32. நாமும் ஒரு நாவல் எழுதவேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுவதுண்டா?
இல்லை
33. நாவல்கள் எழுதத் தோன்றினாலும் ஏன் இதுநாள் வரையிலும் எழுதவில்லை?
நன்றி மதுமிதா,மாதவராஜ்என்னால் இயன்றவரை நேர்மையாகச் சொன்னதாகவே நினைக்கிறேன்..
சிறு தொண்டாக அது இருக்கலாம்.
முன் பக்கம்

18 comments:
வல்லி,
நீங்கள் குறிப்பிட்ட பல நாவல்களை நான் வாசித்ததே இல்லை.
அடுத்தமுறை ஊர்ப்பக்கம் வரும்போது உங்க புத்தக அலமாரியைக் கொள்ளையடிக்கப் போறேன்:-)
நேரம் கிடைத்து போட்டாச்சா வல்லிம்மா. தீபாவளி ஆச்சா ரேவா:)
நன்னி பதில் போட்டமைக்கு:)
வல்லி, நிறைய கேள்விகள் சாய்ஸ்ல விட்டுட்டா மாதிரி இருக்கு :-)
இன்றைய நடிகர், கிரிகெட் பிளேயர்ஸ்
போல அந்தக்காலக்கட்டத்தில் பலருக்கும் மிக பெரிய இன்ஸ்பிரேஷனாய் நா.பாவும் அவரின் பொன் விலங்கு கதாபாத்திரங்களான அரவிந்தனும், பூரணியும் இருந்திருக்கிறார்கள் என்று பெரியவர்கள் சொல்லக்கேட்டு இருக்கிறேன். இதைப் பற்றி விரிவாய்
யாராவது எழுதணும்.
சும்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅச் சொல்லிட்டா ஆச்சா.
நீங்க நெட்டில படிக்காததா. மதுரை ப்ராஜெக்ட்ல படிக்கிறதா எல்லாக் குருவிகளும் வந்து சொல்லிச்சே.
நான் படிக்காததில புலிநகக் கொன்றைன்னு ஒண்ணும் இருக்கு. அப்படின்னு நினைக்கிறேன். நீங்க பொறுமையாப் படிச்சுட்டுச் சொல்லுங்க:)
இன்னும் தில்லானா மோகனாம்பாள்,கொத்தமங்கலம் சுப்புவோட கதைகள் எவ்வளவோ இருக்கு. யார் படிச்சாலும் சந்தோஷமே. இட்ஸ் ஆல் யுவர்ஸ்.:)
மது,
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்குப் போனார்னு எழுதிட்டேனோ:(என்னையே எடிட் செய்ய இன்னும் பழகலை.:)
நன்னி உங்களுக்குத் தான்.
இங்க இன்னிக்குத்தான் தீபாவளி.
வரீங்களா.
உஷாம்மா.
பதில் சொல்லத் தெரியலை. அதுவேற காப்பி பேஸ்ட் செய்தேனா. கந்தர கோளம் ஆகாமல் தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்:)
உண்மைதான் ,, அரவிந்தன் மாதிரி ஒரு கணவன் வரணும்,பூரணி மாதிரி லட்சியத்தோட வாழணும்னு நாங்க தோழிகள் பேசிப்போம்.
நா.பார்த்தசாரதி, அகிலன்,சாவி இவர்கள் எல்லோரும் லெஜண்ட்ஸ்.
அருமையா இருக்கு வல்லி, அநேகமா எல்லா நாவல்களையுமே நானும் வாசிச்சிருக்கேன். என்றாலும் பார்க்கும் கோணம் வேறே இல்லையா?? அரவிந்தன், பூரணி கதாபாத்திரங்கள் ஆன குறிஞ்சி மலர் தொலைக்காட்சியில் கூடத் தொடராக வந்திருப்பதாய் என் பெண் சொல்லுவாள். இன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரவிந்தனாய் நடிச்சதாயும் அவள் சொல்லிக் கேட்டிருக்கேன். நான் இந்தக் கதையை முதன்முதல் படிக்கும்போது திருமணம் ஆகிவிட்டதால் என்னோட மனநிலைமை வேறாக இருந்தது. இப்போ இன்னும் மாறி இருக்கு, என்றாலும் நா.பா.வின் எழுத்தின் தாக்கம் இன்னும் இருக்கு என்றே சொல்லணும். ரொம்ப நன்றி நினைவு கூர வைத்ததுக்கு. நானும் எழுதி வச்சிருக்கேன், நீஈஈஈஈஈஈளமாய் வழக்கம்போல். இரண்டு பதிவாத் தான் போடணும்!:))))))))
கண்டிப்பாக் கோணங்கள் மாறத்தான் செய்யும். எல்லோரும் ஒரே மாதிரி நினைக்கிறோமா.
சில பகுதிகள் நமக்கு ஒவ்வாத கருத்துகள் இருக்கும்.எழுதினவருக்கு உண்டான சுதந்திரம் அவர் அப்படி எழுதிவிடுவார். நமக்கு ஒத்துக்கணுமே.
எல்லா எழுத்துக்களுக்கும் மறு பார்வைகள் உண்டு என்றுதான் எனக்கும் தோணும்.
நீங்கள் சொன்ன அந்தத் தொடரை நான் ஆசை ஆசையாப் பார்த்தேன்.
ஏனோ திருப்தி இல்லை.
ராமரை நினைத்துக்கொண்டு என் டி. ராமராவைக் கும்பீடுவது போல ஆகிடும்:)
கீதா, பொன் விலங்குதான் ஸ்டாலின் நடித்து தொடராய் வந்ததாய் காதில் விழுந்தது. குறிஞ்சிமலரில்
தான் அரவிந்தனும், பூரணியும் இல்லையா? சரியான்னு சொல்லுங்க. நாங்க எல்லாம், அடுத்த பேட்ஜ் சுஜாதா, பா.கு, சிவசங்கரி, இந்துமதி செட்டு :-)
உஷா, குறிஞ்சிமலர் தான் பூரணி,அரவிந்தன்.
தொலைக்காட்சியில் வந்ததிலும் அரவிந்தனும் பூரணியும் வருவார்கள்.
திருமணத்தன்றே அரவிந்தனுக்கு
ஏதோ நிகழ்துவிட,பூரணி அவனுடைய லட்சியத்தைத் தொடருவதாகக் கதை நடக்கும்.
பொன்விலங்கு சத்தியமூர்த்தி, என்ற தமிழ்ப் பேராசிரியர் கதை, மல்லிகைப் பந்தல் என்ற ஊரில் கதை நடக்கும், கதாநாயகி, மோகினி என்ற நாட்டியப் பெண், இது தவிர, கல்லூரி பிரின்சிபாலின் பெண்ணும் சத்தியமூர்த்தியைக் காதலிப்பாள். முக்கோணக் காதல் கதை, இதுவும் முடிவு சோகமே!
குறிஞ்சி மலர் தொடர் நான் பார்த்ததில்லை, அப்போ குஜராத்தில் இருந்தோம். ஆனால் மூலக் கதையில் அரவிந்தனுக்கும், பூரணிக்கும் திருமணம் ஆகாது. திலகவதியார் போன்று நிச்சயம் செய்யப் பட்ட நிலையிலேயே அரவிந்தன் இறக்கப் பூரணி ஞானதீபம் ஏந்தித் துறவறம் மேற்கொண்டு தமிழுக்காக உழைக்க ஆரம்பிப்பாள் என்று முடியும். ஆனால் கதை வந்தப்போ நான் மிகச் சிறிய குழந்தை. படிக்கும்போது கதை வெளி வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றாலும், அப்போ இது ஒரு புரட்சிகரமான முடிவு. :)))))))
நான் பூரணியையும் அரவிந்தனையும் வாசித்தபோது எனக்கு என்ன வயதோ நினைவில்லை. ஆனால் அவர்களுக்காக அழுதது நினைஇவில் உள்ளது.
எங்க அப்பா''பிஞ்சில பழுத்தது''ன்னு கோபித்துக் கொண்டதும் நீனைவில் இருக்கிறது:)
நன்றி கீதாம்மா.
கல்கியில் ல..தாமோதரன்தான் இந்தத் தொடருக்குச் சித்திரம் வரைந்தார்!! பூரணியின் பெரிய கண்களும் அரவிந்தனின் கம்பீர முகமும் இன்னும் மறக்கவில்லை.
லதா வரைந்த சித்திரங்களா குறிஞ்சி மலருக்கு?? தெரியலை, ஏனெனில் நான் படிச்சது ஏதோ புத்தகாலயம் வெளியீடில் வந்தது. ஆனால் பொன்விலங்குக்குப் படம் வரைந்தவர் "விஜயா" என்னும் பெயரில் வரைந்த ஓவியர்.
லதா என்றுதான்நீனைக்கிறேன்.
இல்லை வீனு வோ??? கீதா
பொன்விலங்கு மொத்தமாகப் படித்த நினவில்லை.
மீண்டும் ஆரம்பிக்க்கணும்.
வல்லிசிம்ஹன் அவர்களுக்கு!
தாமதமாக இருந்தாலும், ரொம்ப நிதானமாய், நேர்மையாய் பதில் சொல்லி இருக்கிறீர்கள்.
நா.பாவின் அரவிந்தனும், பூரணியும் எல்லோர் மனதிலும் இருப்பார்கள்.
எழுத்தாளர்.தமிழ்ச்செல்வன் கூட என்னிடம் ஒருமுறை சொன்னார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் அரவ்ந்தன் போல இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டாராம்.
அது ஒரு காலம்.
கதைகளை வாசிப்பது, அதன் உலகத்திற்குள்ளே நாமும் நடமாடுவது, திரும்ப திரும்ப அந்தக் கதை பற்றி உரையாடுவது எல்லாம் இப்போது இல்லை.
ஆனால் உங்களால், மதுமிதாவால், லஷ்மியால், லேகாவால் ஒரு கடந்தகாலம் எனக்கு திரும்ப கிடைத்தது போல இருந்தது.
ஒரு விஷயம் தெரியுமா....?
இந்தக் கேள்விகளுக்கு இதுவரை எந்த ஆணும் பதில் சொல்லவில்லை, என்னைத் தவிர.
இதுவும் கூட விவாதிக்க வேண்டி இருக்கிறது.
ச்ரி. சமீபத்தில் நான் இரண்டு தொடர்களும், சில கட்டுரைகளும் எழுதி விட்டேன்.
படித்தீர்களா?
வரணும் மாதவராஜ்.
படிப்பதில் இருக்கும் ஆர்வம் ,பொறுமை பதில் சொல்லுவதில் காட்டி இருக்க வேண்டும்.
மதுமிதா லக்ஷ்மி,லேகா,உஷா எல்லோரும் இந்தக் காலத்து வாசகிகள் இல்லையா.
நான் சொல்லாமல் விட்ட பழைய எழுத்தாளர்கள் இன்னும் நிறைய.
அவர்கள் அனைவருக்கும் என் வந்தனமும் நன்றிகளும்.
உங்கள் பதிவுக்கு வந்து படித்துவிடுகிறேன் நாளைக்குள்.
ஆண்கள் தாமதமாக வருவார்கள் என்றே நம்புகிறேன்:))
மாதவ ராஜ்,
இதுவரை பதில் சொன்னவர்கள்
ராம்கி
லேகா
அய்யனார்
மதுமிதா
நிர்மலா
வல்லி
தீபா
கீதா சாம்பசிவம்
நான்& நீங்கள்
பி.கு யாராவது விட்டுப் போயிற்றா என்று பாருங்கள். உங்களையும் சேர்த்து மூன்று ஆண்கள்!
உஷா,
நான் தமிழ்மணத்தில பார்க்கும்போது 12 மாணி நேரம் தாமதமாகப் பார்ப்பதால் ,பல பதிவுகள் கண்ணில் படுவதில்லை. இத்தனை பேர் எழுதி இருக்கிறார்கள். நான் பார்க்கவில்லை.
என் பேச்சை மாற்றிக் கொள்கிறேன்:)
நன்றிம்மா.
Post a Comment