அழகான படம்.
பெண்களின் திடத்திற்கு இவர் ஒரு முன்னோடி. பானுமதி அம்மா கூடவே போட்டி போடத் துணிந்தவர்:)
தேவ் ஆனந்த் க்ரேஸ், சிங்கத்து கிட்டயிருந்த்து பிடித்தது. இவரும் கிஷோர்ர் குமாரும் சேர்ந்து இசைக் கோவில் கட்டி இருக்கிறார்கள். ரசிகர்கள் மனத்தில்.
சிவாஜி சாருக்கு சமானமாக இவருக்கும் அப்பொது மரியாதை உண்டு.
மீண்டும் ஒரு அன்னை படம் வருமா.
டெய்சி இரானி. மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்த்ரராஜனைத் திரையில் காட்டியவர். நல்ல சுட்டிப் பெண். பையன் யார் என்று கேட்க வைத்தவர். இப்போது உருவமும் புகழும் வேறு விதமாக இருக்கின்றன. பாவம்தான்.
இரூவருக்கும் இடையே அப்படி ஒரு ஸின்க் இருந்தது.
பக்கா ஜெண்டில்மேன். நோய்க்கு இடம் கொடுத்துவிட்டார்.
உறிஞ்சும் அழகே அழகு.:)
நடீக்கவந்தபோது இருந்த அதே வெடுக் வாழ்க்கையிலும் இவரிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
மதுரை வீரனில் வாங்க மச்சான் வாங்க பாட்டுக்கு உயிர் கொடுத்தவர்.
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தால் பாட்டுக்கு ஆடும் நடனம் கண் முன்னே நிற்கும்.
மணப்பந்தல் படத்தீல் எஸ்.எஸ்.ஆருக்காகப் பாடும்' உனக்கு மட்டும் ''பாட்டு
அந்த நாட்களில் ரொம்பவே பிரபலம்.
பிழைக்கத்தான் தெரியவில்லை.
நாம் சினிமாவை விட்டாலும் சினிமா நம்மளை விட மாட்டேங்குது. இது யாரோ நடிகையோட புலம்பல் இல்லப்பா.
அவரும் மைலாப்பூர் வாசி என்று கேள்விப் பட்டீருக்கிறேன்.
''நான் ஆடுனு சொன்னா நீ ஆடணும்'' என்று சவுக்கோடு மிரட்டுவதை ரசிக்கலாம்.
உயர்ந்த மனிதனில் '' a time to play, a time to eat,and a time to rest''
மறக்க முடியாத வசனம்:)
நாம் சினிமாவை விட்டாலும் சினிமா நம்மளை விட மாட்டேங்குது. இது யாரோ நடிகையோட புலம்பல் இல்லப்பா.
நானே தான். மன்றத்தில வந்து சினிமா பத்திச் சொல்லுங்கன்னுட்டாங்க நம்ம
மதுமிதா,கவிதாயினி,சுபாஷிதம் எழுதினவங்க,சமூக சேவகி
சொல்லாளர்
கடுதாசி அழைப்பு வச்சுட்டாங்க
கடுதாசி அழைப்பு வச்சுட்டாங்க
நம்மளாலே தட்ட முடியுமா.
அதுவும் சினிமாங்கற அல்வாத்துண்டு பக்கத்தில வச்சுட்டு
கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடச் சொன்னாக் கசக்குமா என்ன:)
நேரம்தான் போறவில்லை.அவ்வளவு இருக்கு சொல்ல.
கேள்வி பதில்னு வந்தா கொஞ்சம் கற்பனை தடைப்படுது:)
நான் பார்க்க நினைச்சுப் பார்க்காம விட்ட படங்களே அதிகம்.
ஷோலேக்குக்கூட சிங்கம் தனியாப் போயிட்டு வந்தது. டூ மச் வயலன்ஸாம்:)
இப்ப ஒண்ணும் கெட்டுப் போகலே. சீன் பை சீன் யூ டுயூபில பார்த்தாகிறது.
மத்தபடி பராசக்தில ஆரம்பிச்ச நம்ம பயணம்
குழந்தைகள் பிறக்கிற வரை அப்படி இப்படி போச்சு. அப்புறம் ஒரு ஆறு வருஷம் சினிமா பக்கமெ போகவில்லை.
அப்புறமா பாமாவிஜயம் தொட்டு வருடத்துக்கு ஒரு சினிமாவாவது பார்க்கும் வழக்கம் வந்தது.
குழந்தைகளுக்காக ஹடாரி,ஷாக்கி டி ஏ, ஆஃப்ரிகன் சஃபாரி, சூப்பர்மேன்,
ஸ்டார்வார்ஸ்,மை டியர் குட்டிச் சாத்தான்னு
நிறைய படங்கள்.
அப்புறம் டிவி வந்ததில் ஏதாவது ஒரு படமாவது வாரத்துக்கு ஒரு முறை பார்த்துவிடுவதுதான்:)
சினிமா பிடிக்கும்.நல்ல சினிமா ,கொலைகள்,மற்ற குற்றங்கள்னு இல்லாம படங்கள் வரவேண்டும் என்று ஆசைதான்.
மக்கள் பார்ப்போர்களோ, தயாரிப்பாளாகளும் எடுப்பார்களொ. தெரியாது.
மீண்டும் என்னை எழுதவைத்த மதுமிதாவுக்கு வளர நன்னி.
.
,
.
22 comments:
//டெய்சி இரானி. மகா கனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்த்ரராஜனைத் திரையில் காட்டியவர். நல்ல சுட்டிப் பெண். பையன் யார் என்று கேட்க வைத்தவர். இப்போது உருவமும் புகழும் வேறு விதமாக இருக்கின்றன. பாவம்தா//
என் அம்மா அடிக்கடி பழைய படங்களில் சிறுவர் காட்சிகளில் பார்க்கையில் அதிகம் இவர் பெயரை உச்சரித்ததாக ஒரு ஞாபகம்!
கல்யாண சமையல் சாதம்! டிடியில் நான் முதன் முதலாய் பார்த்த பாடல் என்று நினைக்கிறேன் :))))
ஆமாம் ஆயில்யன். அம்மாவைப் புரிந்து கொள்ள முடிகிறது. அந்தப் பெண் 'அம்மா பொண்ணே ராமக்கா'ன்னு ஒரு பாட்டுப் பாடி நாட்டியம் வேற ஆடும்:)
மாயா பஜார் படத்தின் மேலிருந்த மோகம் இன்னும் தணியவில்லை எனக்கு!!
எங்கம்மாவுக்கு இந்த டெய்சிராணி ரொம்பப்பிடிச்ச குழந்தை நட்சத்திரம். அடிக்கடி இந்தப்பேரை சொல்லக்கேட்டிருக்கிறேன்
படங்களெல்லாம் தேடியெடுத்துப் போட்டு ரசனையுடன் எழுதியிருக்கிறீகள்.
[உங்கள் வலைப்பூ பின்னணி நிறத்துக்கு கடைசிப் பாக நிற மாற்றம் பொருந்தவில்லையே. முடிந்தால் எடிட் செய்ய முடியுமா பாருங்கள்.]
ஈ.வி சரோஜா...என் அபிமான நாட்டிய நடிகை. இவரது கிரேஸ்புல்லான
நடனம் மிகவும் பிடிக்கும். நல்ல திறமை, அழகு, நளினம்,இருந்தும் கதாநாயகர்களை தொட்டு நடிக்கத் தயங்கியதாலேயே நல்ல வாய்ப்புக்களை விட்டவர். நம் மதிப்பிலும் உயர்ந்தவர். இந்த டாப்பிக்கை தொட்டால் நம்மிருவராலும்
ரெசிஸ்ட் பண்ணவே முடியாது.
நல்ல தொகுப்பு.
//சௌகார் அம்மாவை விட முடியாது. பாண்டி பஜாரில் இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன்ன்.
//
தினமும் கண்ணாடில பாக்கறதையும் சொல்லி இருக்கலாம். :)))
மாயா பஜார் - நமோ மாதா! (எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா?) மறக்க முடியுமா? :p
வீரபாண்டியக் கட்டபொம்மன் படத்திலிருந்து ஒரு வீர வசனம் நிறைந்த காட்சி ஒன்றை இணைத்திருந்தேன். யாராவது பார்த்தீர்களா....
வாங்க சின்ன அம்மணி, இந்தக் குழந்தையைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது.
அத்தனை நல்ல நடிப்புத் திறன்.
ஒரு பனிரண்டு வயது வரை நடித்ததாக நினைவு.
பிறகு திருமணம் ,விவாகரத்து என்று போய்விட்டதாம். இப்பவும்ம் ஸ்டார்டஸ்டில் இவங்க படம் பார்த்தால் படிக்காமல் விடமாட்டேன்:)
அன்பு ராமலக்ஷ்மி, மாற்றிவிட்டேன்பா.
ஏதோ நினைவில் நிறம் மாறின எழுத்து மீண்டும் கறுப்பு வெள்ளைக்கு வந்துவிட்டது:)
சினிமா பிடித்த விஷயம். அதனால் தேடுவதில் இன்பமே!!
நன்றிம்மா.
நானானி வாஅங்கப்பா.
ஒரு கச்சிதமானா அழகு முகம் அவருடையது. நீங்கள் சொல்லி இருப்பதை நானும் முன்னே படித்த நினைவு வருகிறது. பின்னொரு தடவை தொலைக்காட்சியிலும் அவரது கணவரோடு பார்த்திருக்கிறேன்.
படு சுட்டித்தனம் தெரியும் அந்த முகத்தில்.
படிக்காத மேதை,''சீவி முடிச்சு சிங்காரிச்சு'' மறக்க முடியுமா:)
அம்பி,
ம்ம்ம். குசும்பு பார்த்தியா. ஒரு பிள்ளை பிறந்தால் கொஞ்சம் குறைய்ய்ம்னு கேள்வி. இங்க என்னடான்னால் அதுக்கும் சேர்த்து வளருகிறது.
ஆமாம் தினமும் கண்ணாடில பார்க்கறேன்.
தலைமுடியில் வித்தியாசம் இருக்கு:)
வல்லிம்மா,
ஆஹா, என்னே நினைவுகள். அற்புதம். படங்கள் எப்படி தான் தேடிப் பிடித்து போடுகிறீர்களோ. அருமை. அருமை.
நல்ல படங்களுடன் ... மலரும் நினைவுகள்..இதில் குறிப்பிட்ட படங்களும் பாடல்களும்..நடிகர்களும் அனைவரும் ரசிக்கக் கூடியவை..
சதங்கா வாங்கப்பா. கூகிளார்கிட்டச் சரியா சொன்ன்னா ,அல்வா மாதிரித் தந்துவிடுகிறார்.:)
நமக்குப் பிடித்த பழைய நட்சத்திரங்களைத் தேடிப் பார்ப்பதில் தனி சந்தோஷமில்லையா.:)
நன்றிம்மா.
வரணும்பா பாசமலர். இதுக்கு முந்தியும் சினிமா பற்றி எழுதினேன். அப்போது கிடைக்காத படங்கள் இப்ப கிடைத்ததுதான் ஆனந்தம்.
வல்லியம்மா!
படிக்காதமேதையில் சிவாஜி, அந்த ரங்கனாகவே ஆகிவிடுகிறார். சிவாஜி மட்டுமல்ல, ரங்காராவ், கண்ணாம்பா, சவ்கார், டி ஆர். ஆர் அனைவரும் நல்லா நடித்து இருப்பார்கள்!
என்ன ஒரு மனநிறைவு தரும் படம்!!!
* "உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் பேரொன்றும் தெரியாது. உள்ளத்தில் உள்ளதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது" என்ற வரிகள் கண்ணதாசனின் முத்துக்களில் ஒன்று.
சரி என் பின்னூட்டம் ரொம்ப பெரிதாகிறது. 1 மட்டும் சொல்லிவிட்டு நிறுத்திக்கொள்கிறேன்.
* உயர்ந்த மனிதனில், எனக்கு சிவாஜி-வாணிஸ்ரீ, காதல் கட்டங்கள் ரொம்ப பிடித்தது :-)
நன்றி வல்லிம்மா... சொன்னதும் போட்டதுக்கு... இத்தனை படங்கள்... பாடல்கள் விஷயங்களா? எத்தனை வாட்டி வேணா ஆடலாம் போலிருக்கே... முக்கா முக்கா மூணுவாட்டி என்று இன்னொண்ணு போடுங்க பார்க்கலாம். ஆனா நான் உங்களைக் கூப்பிட்ட என் லிங்க் குடுக்கணும். ஆமா:)
வரணும்பா வருண்.
அந்தக் காலப் படமாச்சே. உங்களுக்கெல்லாம் பிடித்திருக்கிறதுன்னு கேட்கவே நன்றாக இருக்கு.
அந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருக்கும். மிகை என்று தோன்றினாலும் யதார்த்தமாக வந்த படம்.
பாடல்களும் காட்சிக்கேற்ற மாதிரி இருக்கும்.
மிக்க நன்றி ,எண்ணங்களைச் சொல்லும்போது நீளம் எல்லாம் பார்க்கமுடியுமா!
வாணிஸ்ரீ-சிவாஜி அதீத மேக் அப் இல்லாமல் வந்த முதல் தமிழ்ப்படம் என்று நினைக்கிறேன்.
ஆஹா அதுக்கென்ன போட்டாப்போச்சுப்பா, மதுமிதா:)
உண்மையாவா.??
லின்க் கொடுத்தே போடறேன்.
அம்பி நமோ மாதாவை நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க போல:)
வரேன் வரேன் :-( புத்தக வாச அனுபவம் போடுன்னா நேரமில்லை. இதுல ரெண்டு போட்டுட்டு, மூணாவது போட சொல்லி, மதுவின் ஊக்குவிப்பு வேறு. ஆண்பாவம் படத்தில் வி.கே. ராமசாமி,"பள்ளிக்கூடம் கட்டினேன் யாரும் படிக்க வரலை. கோவில் கட்டினேன் யாரும் கும்பிட வரலை. ஆனா சினிமா தியேட்டர்
கட்டியதும் ஊரே திரண்டு வந்திருக்கு'' என்ற வசனம் நினைவுக்கு வருது. ஆயில்யனும் இரண்டு சினிமா பதிவு போடலை? நற நற நற....
ஆஆ.!!!
பயமாயிருக்கு. மது இப்படி உஷா விடற கண்டனத்தைக் கண்டுக்கலியா:))
உஷாம்மா , புத்தக வாசம் போடலாம்னு தான் காப்பி பேஸ்ட் செய்து வச்சேன். கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கா...அதால அந்தப் பதிவு தேங்கி நிற்கிறது.
சினிமாவுக்குச் சிந்திக்க வேண்டாமே:)
போட்டுடறேன்ன் சாமி.ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.
Post a Comment