இது எனக்குத் தெரிந்தவரையில் ஒரு பௌத்தமத குரு.க்வான்யின் என்னும் பெயர் படைத்த தேவதை. நம் ஊரில் தன்வந்திரி தேவதையை மருத்துவத்திற்காகக் குறிப்பிடுவார்கள் இல்லையா. இந்த அம்மாவுக்குக் கருணையே உருவம் படைத்தவள் என்ற துணைப்பெயரும் உண்டு.
மற்றச் சிற்பங்கள். தத்ரூபமாகச் செதுக்கியவர்களும் பக்கத்திலியே இருந்தார்கள்.
பயணத்துக்கு முன் ஓய்வெடுக்கும் குதிரை.
மரப்பலகையிலிருந்து வெளிப்படும் கரடி ஓவியம்.
நடனத்துக்குப் புறப்படும் இளவரசி என்று வரைந்த அம்மா சொன்னார்.
காற்றில் அசைந்து ஓசை செய்யும் சிறிய மர பொம்மைகள்.
செதுக்கப்பட்ட வீடு,மற்றும் மரக்கைத்தடிகள்.
இந்தப் பெண்குழந்தை பிடித்திருப்பது பொம்மையா,தம்பியா,தங்கையா, கூர்ந்து பார்க்க , ஆக்கியவர் மறுத்துவிட்டார்:)
முந்தைய பதிவில் போட்டிருந்த படம் ஒரு யானையின் பல்.
அதுவும் கடைவாய்ப்ப்பல்.
எங்கள் தந்தை முதுமலைக் காடுகளில் உள்ள தபால் அலுவலக விஷயமாகப் போயிருந்தபோது வாங்கி வந்த யானைப்பல்.
அம்மாவிற்கு முதல் முதலாக வாங்கிய தோல் பெட்டியில் இதுவும், ஒரு குட்டித் தந்தமும், ஒரு ஏலக்காய்ப் பையும் வெகு நாட்கள் இருந்தன.
எங்கள் சின்ன வயதில் ,இந்தப் பெட்டியைத் திறந்து வாசனை பிடிக்க எங்கள் மூவருக்கும் மிகப் பிடிக்கும்.
இங்க இருக்கும் பெண் சாமர்த்தியமாகத் தாத்தாவிடமிருந்து கேட்டு வாங்கி வந்துவிட்டாள்.:)
எத்தனையோ தடவை,
எங்கள் பல்வலிக்கு இந்தப் பல் உதவி இருக்கிறது. இதை ஒரு கலுவத்தில் அரைத்து,அந்த விழுதை அம்மா பல்லில் தடவி விடுவார்.
மரப்பாச்சி பொம்மையை உரைத்துக் கண்ணுக்குத் தடவுவார்.
தேங்காயெண்ணெயைக் காய்ச்சி,அதில் ஒரு பல் பூண்டைப் போட்டு,அதை நசுக்கிய சாறு காதுவலிக்குப் பயன்படும்.
12 comments:
சூப்பர்.
இன்னொருக்கா நல்லா பார்த்துட்டு வரேன்ப்பா.
இது சிங்கம் ஸ்பெஷாலிட்டி ஏரியாவாச்சே! இதெல்லாம் பார்த்துட்டு அவர் சொன்ன கமெண்டைப் போடுங்க.
//க்வான்யின் என்னும் பெயர் படைத்த தேவதை.//
// இந்த அம்மாவுக்குக் கருணையே உருவம் படைத்தவள் என்ற துணைப்பெயரும் உண்டு.//
உண்மைதான். பார்த்ததுமே தெரிகிறது.
எல்லா சிற்பங்களும் அருமை. படைத்தவர்களைப் பக்கத்திலேயேப் பார்க்கக் கிடைத்ததும் பாக்கியம்.
ஆனைப் பல் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம்.
கடைசிப் படத்துக்கான கமெண்ட் விட்டுப் போயிற்றா? அல்லது நாங்கள் கண்டு பிடிப்பதற்காகப் போடப் பட்டதா:)?
//இங்க இருக்கும் பெண் சாமர்த்தியமாகத் தாத்தாவிடமிருந்து கேட்டு வாங்கி வந்துவிட்டாள்.:)
//
பெட்டி எனக்கே சொந்தம் அப்படின்னு ஒரு சின்ன பிரச்சனையை கிளப்பி திரும்பவும் பெட்டியை capture பண்ணிடுங்களேன் :))))))
ஹய்ய்ய் அந்த குதிரை நம்ம கப்பி அண்ணாச்சி நகர்வலம் வர்ற குதிரை மாதிரியே இருக்கே :)))))))))))
கரடி அழகாக இருக்கிறது!
நல்லா ஒவ்வொன்னும் பார்த்தேன். அட்டகாசமா இருக்கு. சிற்பிகளும் கூட இருந்தார்களா? ஆஹா....
இரக்க தேவதை. தயைக்கு ஒரு தேவதை. ( Guanyin, the Chinese Goddess of Mercy)
யானைப் பல்லில் இவ்வளோ விஷயம் இருக்கா? அப்போ ஆட்டம் வராக் கால்களுக்கு மயில்கால் தைலம் தடவுறது உண்மையா வேலை செய்யுதா? ஆட!
அதானா....மிருகவேட்டை ஜரூரா நடக்குது(-:
சில வுட் ஒர்க்குகள் நல்லாவே இருக்குல்லே!!!!!
சிங்கப்பூர்லே செந்தொஷாவுலே ஒரு ம்யூஸியம் இருக்குப்பா. கல் & மரம்.
இயற்கையாவே அந்த மரங்களில் அமைஞ்சு இருக்கும் வடிவங்கள் ஒவ்வொன்னும் ஹைய்யோ.....
படங்கள் எல்லாம் அருமை. நன்றிப்பா.
எனக்குப் பிடிச்சது இளவரசி :) யானைப் பல்லோட பல பாட்டி கை வைத்தியங்களும் சொல்லிட்டீங்க, நன்றி அம்மா :)
அம்மா துளசி, ஆட்டம் வராத காலுக்குத் தைலம் போட்டா மயிலெல்லாம் காணாமப் போயிடாதோ!!!.
அப்புறம் அதுக்கொரு கமிட்டி வைப்பாங்க:)
இந்தக் க்வான் யின் பத்தி ரெய்கி வைத்தியத்தில வரும். நீங்களும் படிச்சதா சொல்லி ஞாபகம்.
நல்லாவும் செய்திருக்காங்க. நல்லவிலைக்கும் விக்கிறாங்க:)
நம்ம ஊருச் சிற்பிகளுக்கு இதெல்லாம் இயற்கையாவே வரும்னு நினைக்கிறேன். இவங்களுக்கு எத்தனை கருவிகள் இருக்கு!! அதையே எக்ஸிபிஷன் வைக்கலாம் போல இருக்கு:)
அதில ஒருத்தர் தாய்லாந்தில போயிக் கத்துக்கிட்டு வந்ததா வேற சொன்னாரு. நுணுக்கத்தைப் பார்த்தா நம்ம ஊரு சாயல் தெரியுது பார்த்தீங்களா.
ஆமாம் கொத்ஸ். கரெக்ட். அங்க இருக்கிறவர்கிட்ட இவர் பேசினதும் ,அவர் ''ஒய் டுயு வாண்ட் டு கோ பாக்?? ஸ்டே அண்ட் ஜாயின் அஸ்'' என்று சொல்லி இந்த ஞாயிற்றுக்கிழமை பக்கத்து ஊரில நடக்கிற பயிற்சிக்கூடத்துக்கு வரச் சொல்லி அழைப்பும் விடுத்து இருக்கிறார்:)
போவாரா இருக்கும் மாப்பிள்ளையோட!!
வாங்கப்பா ராமலக்ஷ்மி, இவங்க புத்தரோட சிஷ்யைஇன்னு மாற்று சிகிச்சை முறையான ரெய்கியில் வரும்.
துளசி சொல்லி இருக்கிற மாதிரி காடஸ் ஆஃப் மெர்சி.நம்ம ஊரு ஆரோக்கியமாதா,சமயபுரத்தம்மா மாதிரின்னு வச்சுக்கலாமே.
கையில அமிர்த கலசம் ஒண்ணும் வச்சிருப்பாங்க. ஒரு புறாவும் இருக்கும்.
அப்படியே புத்தரோட சாயல் இருக்கும்.
கடைசிப் படத்துக்கு பூங்கான்னு பேரு சொன்னாங்க.
பேரன் அப்ப பார்த்து.''பாட்டி யேன்னு.வெள்ளாடு'' கட்டளை போட்டதால விட்டுப் போச்சு.
எழுந்து விளையாடப் போயிட்டேன்:)
இதுக்கு சாமர்த்தியம் அவ்ளோ போதாது. பொட்டியை விட்டு விட்டாள்.:)
அதில் அப்பா எழுதின கடிதங்கள் எல்லாம் இருக்கும். பிறந்த வீட்டில் இருக்கிறது,அழகான பின்க் ரிப்பனால் கட்டுண்டு....
நாம பார்க்கக் கூடாது இல்லையா ஆயில்யன்!!!
ஆமாம் அது .''க்ரேசி ஹார்ஸ்'' என்கிற நேடிவ் (ரெட் இந்தியன்)அமெரிக்கன் சீஃப். அவனோட குதிரையோனு நினைக்கிறேன்.
வாங்கப்பா கவிநயா.
இந்த இளவரசியை வரைந்த அம்மாவோட பொண்ணும் குட்டியூண்டா அங்க உட்கார்ந்து கொண்டு ஒரு சின்ன ஓவியம் வரைந்து கொண்டிருந்தது. அதுகிட்ட பேச்சு கொடுத்தால் ' நாந்தான் அந்த இளவரசி''ன்னு சொல்கிறது:) கற்பனை,கற்பனை!!
Post a Comment