எலுமிச்சங்காய் ஊறுகாயைப் பத்தின பதிவில்லைம்மா இது.
ஊறுகாயச் சாப்பிட்டவங்களைப் பத்தினது.
எல்லாரும் நல்லா இருக்காங்க. (சாப்பிட்டவங்களைச் சொல்றேன்)
ஊறுகாய்ப் பாத்திரத்தைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும்.
பாதிதான் மிச்சம் இருக்கு:)
சாதாரணமா வடுமாங்கா...பாட்டி போட்டது கொடும்மான்னு கேட்டு வாங்கிச் சாப்பிடுவாங்க ரெண்டு பேரன்களும்.
சின்னவனுக்குத் துளி சாறு அவன் சாப்பாட்டில் விட்டாப் போது. பெரியவன் தயிர்சாதத்துக்கு உண்மையாவே ரசித்துச் சாப்பிடுவான்.
மாவடு தீர்ந்து போயிடும் பாட்டி,சீக்கிரம் இன்னோரு ஊறுகாய்ப் போட்டுக் கொடு என்று ஆசையாக் கேட்கிறானெ என்று
மைக்கல்ஸில் வாங்கின எலுமிச்சம்பழங்களில் சிலதை
நீர் எலுமிச்சையும், மற்ற இருபது பழங்களை ஆவக்காய் எலுமிச்சையாகவும் செய்துவிட்டேன்.
தினம் இந்த மூடியைத் திறந்து பார்த்து விட்டு இன்னும் ஊறலையா பாட்டின்னுட்டுப் போய் விடுவான்.
நானும் அவன் இவ்வளவு காரம் சாப்பிடக்கூடாதே என்று கொஞ்சமாகத்தான் மிளகாய்,கடு எல்லாம் சேர்த்து இருந்தேன்.
அதைப் பரிசோதிக்க நேற்று அவனுக்கு எண்ணம்.
ஒரு சின்ன கப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.
ஜஸ்ட் அ லிட்டில் என்று சொல்லிச் சாப்பிட்டுப் பார்த்தான்.
எங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் படியோன்னு பயமா இருந்தது.
ஒரு துண்டு எலுமிச்சையையும் சாப்பிட்டு விட்டு,
அவன் சொல்லிய பாங்கு இருக்கிறதே அதற்காகத்தான் இந்தப் பதிவு:)
பாட்டி இப்ப உனக்கு அது எப்படி இருந்ததுன்னு சொல்லறேன். என்று என் முன்னால் வந்து நின்று கொண்டான்.
ரொம்பக் காரமாயிருக்கும்னு நினைச்சுத்தான் சாப்பிட்டேன்.
ஆனால் ஊறுகாய் அப்படியில்லை.
''You have done an awesome job paatti.
If you had added more chillipowder ,the pickle would be just another pickle.
this pickle is LEMON PICKLE.
not chilli,salt pickle''
என்று நிறுத்தி விட்டு, தொடர்ந்தான்.
நீ நிறைய எஃபர்ட் போட்டு இருக்க. இன்னும் கொஞ்சம் ஒரு முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப் பொடியும்,
கால் டீஸ்பூன் சால்டும் சேர்த்துக் கலக்கிவிட்டால் இன்னும் பிரமாதமா இருக்கும் என்றான்.
நான் வாயடைத்துப் போனேன்.
எங்கே கத்துக் கொண்டது இந்தப் பிள்ளைகள் பேச!!!!
டிஸ்கி...
எல்லா வரிகளுக்கும் லைன் போட்டது நான் இல்லப்பா.
28 comments:
இப்படியே இருந்தாலும் நல்லாத்தான் இருக்கும்.
இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்தால் சூப்பராக இருக்கும் என்பதுதான் அவன் எண்ணம்.அதை நாசூக்காக எனக்குத் தெரிவித்திருக்கிறான்:)
எழுத்துப் பிழைகளைத் திருத்த முடியவில்லை. மன்னிக்கணும்.
பயங்கர டேஸ்ட் மாஸ்டரா இருக்காரே பேரப்பிள்ளை!!!!
ஊற்காய் பாக்கவே ரொம்ப சூப்பெர்.அதென்ன ஆவக்காய் எலுமிச்சை?? ரெசிபி தர முடியுமா??
பேரன் படு கெட்டிகாரனா இருக்கானே..:)
இல்லையா பின்ன. துளசி!
எனக்கென்னவோ ,கதைகளிலெல்லாம்
வருமே,ஜஸ்ட் அ லிட்டில் பிட் ஆஃப் திஸ் அண்ட் தட்னு:)
அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.
வரணும் ராதா.
கெட்டிக்காரந்தான்,. எனக்கு இந்த மாதிரியெல்லாம் பேச வரலியேன்னு இருக்கு:)
ஆவாக்காய் மாங்கா போடுவோமில்லையா. அதே பொருட்கள் தான் தேவை.
கடுகுப்பொடி,மிளகாய்ப்பொடி,மஞ்சள் பொடி,உப்புப் பொடி எல்லாம் ஒரே அளவு.
பெருங்காயம்,வெந்தயம் வறுத்துப் பொடி செய்து போடவேண்டியதுதான்.
காய் ஊறி தண்ணீர் விட்டதும் நல்லெண்ணையைக் கலந்து கொள்ளணும்.
எலுமிச்சையின் புளிப்பைப் பொறுத்து உப்பும் மத்த அளவும்.
நான் பொதுவாக ஒரு எலுமிச்சம்பழத்துக்கு ஒரு டீஸ்பூன் கல்லுப்பு போடுவேன்.
பேரன்களுக்கு காரம் ஆகாதே எனப் பாட்டி பார்த்துப் பார்த்து பக்குவமா செய்யப் போக, பேரன் தன் பங்குக்கு திருத்தத்தை பாட்டிக்கு பக்குவமாய் எடுத்துரைத்த பாங்கு இருக்கிறதே...சூப்பர்:))!
[அவன் அழகாய் சொன்ன வரிகளுக்கு டபுள் லைன் போட்டிருக்கலாம்:)]
படத்தை பார்த்ததுமே நாக்குல சப்பு கொட்டிக்கிட்டேனாக்கும்! :)
சிம்பிளா செய்ய முடியும்ன்னா இங்க நான் லேப்லயும் டிரைப்பண்ணுவேன்! :)))
நான் தான் ஏற்கனவே சொன்னேனே, பேரன் அப்படியே பாட்டியை கொண்ட்ருக்குனு. :))
அழகா வெள்ளகாரன் மாதிரி ரொம்ப நாசூக்கா சொல்லி இருக்காரே.
வரணும் ராமலக்ஷ்மி.
ஊறுகாய் பக்குவத்தை விட இந்தப் பையனோட சொல்ல் பக்கும் தான் பெரிசா இருக்கு.
நான் எங்க வருத்தப் படுவேனோன்னு அவர் அப்படி இதமாச் சொல்லி இருக்கிறார்.:)
நான் மிளகாய்ப்பொடி சேர்க்கிறதாக இல்லை!!
பெரிய மனுஷன்னு சரியாத் தான் சொல்லியிருக்கீங்க :) பிள்ளைக்கு சுத்திப் போடுங்க!
ஆயில்யன். நல்லா செய்யலாமே.
ஒரு மூணு எலுமிச்சம்பழம் போதும்.
3 டீ ஸ்பூன் உப்பு,மிபொடி,மஞ்சள் பொடி,கடுகுப்பொடி எல்லாத்தையும் கலந்து கொண்டு, சின்னதாக நறுக்கி வைத்திருக்கிற லெமன் துண்டுகள் உடன் கலந்து வைத்துவிடுங்கள்.நாலு நாள் பொறுமையாக இருக்கணும்.
ஒரு மரக் கரண்டீயால கிளறி விட்டு, நல்லெண்ணை 100கிராம் அதுமேல விட்டுவிடுங்கள்.
இரண்டு நாளில் நல்ல ஊறுகாய் கிடைக்கும். கொஞ்சம் பெருங்காயப்பொடியை மேலாகத் தூவி விடுங்கள்.
ஆல் த பெஸ்ட். தினம் ஊறுகாயைக் கிளறி விடவேண்டும். ஃபங்கஸ் வராம நல்ல உலர்ந்த சுத்தமான கண்ணாடி ஜாடியில் போட்டு மூடி வைக்கணும்.
:-))..ஊறுகாயைப் பார்த்தாலே ம்ம்..சப்பு கொட்டிட்டேன்..!!
நல்லாயிருந்தது உங்க பேரனின் பேச்சு...:-)
வரணும் கொத்ஸ்.
நல்ல வேளை இவன் என்னைக் கொள்ளவில்லை. நானாக இருந்தால்,ஊறுகாய் சாதத்திலியே மத்தியான பலகாரத்தை முடித்துக் கொள்வேன்.:)
அம்பி,
இன்னும் குழந்தையாவே இருக்கானே.
நம்ம ஊருப் பசங்க மாதிரி விவரமா இலையேன்னு தோன்றும்.
மேலுக்குத்தான் இப்படி இருக்கான். உள்ளுக்குள்ள நல்ல எண்ணங்க்ள் ஓடுகிறதுன்னு புரிந்தது!!
அவன் பெற்றொர்கள் தான் காரணம்.நன்றாக இருக்கட்டும்.
நன்றி கவிநயா.
உங்களை மாதிரி எல்லாருடைய,
ஆசீர்வாதங்களும் அவனுக்கு இருந்தால் போதும்.
வாங்கப்பா சந்தனமுல்லை.
நான் வேணும்னா ஒரு ஊறுகாய் பிசினஸ் ஆரம்பித்து விடட்டுமா:)
நன்றிப்பா. வருகைக்கும் வார்த்தைக்கும்.
:) நல்ல விளக்கமான விமர்சனம்... மனங்கோனாம அழகா பேசி இருக்காரே பெரிய மனுசர்..
ஆமாம் முத்து கயல்.
கவனம் எடுத்துப் பேசினான்.
மனசு இன்னுமந்த ஆச்சரியத்திலிருந்து மீளவில்லை:)
நன்றிப்பா.
நான் வாயடைத்துப் போனேன்.
எங்கே கத்துக் கொண்டது இந்தப் பிள்ளைகள் பேச!!!!
டிஸ்கி...
எல்லாம் எங்கே பாட்டியிடம்தான்
வரணும் தி.ரா.ச சார்.
இது ரொம்பப் பெரிய காம்ப்ளிமெண்டா இருக்கே.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.:)
அடாடா, உங்க வீட்டிலுமா? :)
என் வீட்டிலும் குழந்தைதான் டேஸ்ட் மாஸ்டர். அம்மா குழம்பிற்கு உப்பிட மறந்தாலும் குழந்தையிடம் தான் டேஸ்ட் பார்க்கச் சொல்கிறார், இதுவும் சரியாகச் சொல்லிவிடுகிறது.
வரணும்மா அப்துல்லா.
உங்க பாட்டியும் ஏதாவது செய்து கொடுத்து நீங்களும் பாராட்டி இருப்பீர்களே:)
அதையும் எழுதலாம் இல்லையா.
இந்தக் காலத்தில எல்லாக் குழந்தைகளும், பிறக்கும்போதே ஞானவிளக்குகளாய்த்தான்
பிறக்கின்றன.
உங்க பெண் இப்படியிருப்பதில் என்ன ஆச்சரியம்?
தாத்தா ஆசீர்வாதங்கள் அப்படியே அவளுக்கு வாய்த்துவிடும்.நன்றிம்மா.
எதிர்காலத்துக்கு இப்பவே தயாராகிற புத்திசாலிப் பையன். வாழ்த்துக்கள்.
ஆம்பளைப் பசங்களை இந்தமாதிரி ஒருதலைமுறைக்கு முன்னால் இருந்தே தயார்ப் படுத்த ஆரம்பித்து விட்டது இயற்கை.
உண்மைதான் ரத்னேஷ்.
எங்களைவிட எங்க பசங்க இன்னும் நாசூக்கு தெரிந்தவர்களாக இருக்கும்போது,அவங்க பிள்ளைங்க
முன்னேற்றத்தில ஒன்றும் சந்தேகமில்லை. வாழ்த்துகளுக்கு நன்றிம்மா.
//எங்க அவன் அம்மா கையால(சொல்லால) எனக்கு மண்டகப் படியோன்னு பயமா இருந்தது.
ஒரு துண்டு எலுமிச்சையையும் சாப்பிட்டு விட்டு,
அவன் சொல்லிய பாங்கு இருக்கிறதே அதற்காகத்தான் இந்தப் பதிவு://
ஹிஹிஹி, வீட்டுக்கு வீடு வாசப்படி!!!!! ஊறுகாயை விட நான் ரசிச்சது இதான், ஊறுகாய் ஒத்துக்கறதில்லையே?? அதான் வேண்டாம்னு விட்டுட்டேன்! :P
அதையேன் செய்யணும்.!!
கீதா,அப்புறம் உன்னால் அவனுக்குச் செல்லம் ஜாஸ்தியாப்போச்சேன்னு பேரு வரும்:)
வாழ்க்கை இண்டரஸ்டிங்காப் போகிறதுக்கு இதுகள் தான் காரணம்.
மௌலீ, உங்க பேர் சொல்லாம பின்னூட்டம் போட்டுட்டேன்.
இதுவே பி.க ஆயிடுத்தோ?:)
Post a Comment