வாகுள மீன்
வல் யூ
வாமூன்
நாஷானா
அல்லிகா புத்தர்
லாக்கெட்
இவையெல்லாம் சின்ன கிருஷ்ணனின் மொழியில் வார்த்தைகள்.
இன்னும் இருக்கிறது.
நினைவுக்கு வரவில்லை:)
அர்த்தங்கள்.
வாகுளமீன்.......................................வாக்குவம் க்ளீனர்
வல் யூ......................லவ் யூ
வாமூன்........................லாண்மோவர்(lawn mower)
நாஷானா.........நாராயணா.
அல்லிக்கா புத்தர்...........ஹெலிகாப்டர்
லாக்கெட்...........ராக்கெட்.
இதிலென்ன கஷ்டமென்றால் அவன் சொல்லும்போது
நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால்
அவனுக்கு வருகிற கோபம்.!!!!
எங்கே நின்றாலும் ஓடி வந்து கார்ப்பெட்டில் விழுந்து புரளுவான்.
அதுவும் மரத்தரையில் இல்லை. கார்ப்பெட் போட்ட இடத்தில் மட்டும்தான்:)
இதில பச்சமொளகய்,
வடு மாங்கா, ஊறுகாய்,போற்ற்றும் (போதும்) இதல்லாம் க்ளிப்தமாக வாயில்
வருகிறது.
20 comments:
அல்லிக்கா புத்தர் தான் பெஸ்ட்!!
கார்பெட்டில் புரளுவதை விட மரத்தரையில் புரள்வது ஷேமம் அப்படின்னு சொல்லுங்க. Carpet Burn என்று சொல்லப்படும் சிராய்ப்புகள் வரலாம். மரத்தரையில் அதெல்லாம் வராது.
என்ன வயசாகிறது சின்னக் கண்ணனுக்கு?
//இதிலென்ன கஷ்டமென்றால் அவன் சொல்லும்போது
நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால்
அவனுக்கு வருகிற கோபம்.!!!!//
கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி நானெல்லாம் இப்படித்தான்!
பயங்கரகோவம் வந்து பொம்மையெல்லாம் அடிச்சு ஒடைச்சுபூடுவேன்! இப்ப நல்ல பிள்ளையா சமர்த்தா இருக்கேன்:)
//அல்லிக்கா புத்தர்
லாக்கெட்//
ஹய்யா!
பாத்தி யல்லாத்தையும் மொறுமையா கச்சுபிடிச்சுட்டிச்சி!
(இதுதான் பாட்டிகளுக்கு வைக்கிற டெஸ்ட் நீங்க 100 மார்க் எடுத்தீட்டீங்க ஒ.கே!)
கொத்ஸ்,
மரத்தரையில விழுந்து வலிக்கவே இப்படி கார்ப்பெட்ல விழறான்.
பொழச்சுப்பான்:)
அன்று எதையோ கீழே போட்டுவிட்டு
கண்ணை மூடிக் கொண்டு ''கிஷா(கிருஷ்ணா) பயா''என்கிறான்.
பயந்தே போய்விட்டானாம்.
இந்த டிசம்பருக்கு இரண்டு வயசு ஆகப் போகிறது.
ஆயில்யன் ,நிஜமாவே உடைக்கிறதை நிறுத்திட்டீங்களா:))
சமத்தா இருக்கிறத்துக்கு இப்ப என்ன வாங்கித்தரலாம்னு யோசிக்கிறேன்.:))
பாட்டிக்குப் புரியணும்னா அவனோட ஸ்பெஷல் ட்ரான்ஸ்லேட்டர் இருக்காங்களே,அவன் அம்மா அவங்க உதவிக்கு வருவாங்க.
இந்த வாமூன் தான் ரொம்ப நாளைக்குப் புரியவில்லை. பக்கத்து எதிர்த்த வீட்டில புல் வெட்டும்போது வாமூன்ன்ன்ன்ன் னு கத்துவான். இதென்னடா கத்டம்,என்ன வேணும்னு தெரியலையேனு பார்த்தோம். அப்புறம் தாத்த இந்த வீட்டில லான்மோவரை ஓட்டும் போது தாத்தா வாமூன்ன்ன்!!என்றானே பார்க்கணும்.
val you is the best .padikkira kaalaththiley dictnry thottathey illai .ippo thedi odunga
அப்படிய்யே கோமா:)
தங்கள் ஆணை சிரமேற் கொள்கிறேன்:)
ரொம்ப நன்றிப்பா. உங்களை நானானி பதிவில் பார்த்திருக்கிறேன்.
நாஷானா.........நாராயணா
நாஷானா, நாஷானா!!!! சூப்பரோ சூப்பர்!!!!!!!
//பயங்கரகோவம் வந்து பொம்மையெல்லாம் அடிச்சு ஒடைச்சுபூடுவேன்! இப்ப நல்ல பிள்ளையா சமர்த்தா இருக்கேன்:)//
குழந்தை சீக்கிரமே பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சுடுச்சு போல!! :P
ஆமாம் கீதா. பன்னிரண்டு நாமங்களையும் அழகாகத் திருப்பிச் சொல்கிறது. நாம் சொல்லிக் கொடுப்பதைக் கவனமாகக் கேட்டுக் கொள்கிறது.
இப்ப ''பேஜண்ட்......பேஸ்மெண்ட்'' போகணும்னு ஆரம்பித்திருக்கிறான்.
கழுகு மாதிரி பார்த்துக்க வேண்டியிருக்கு.
கீதா ,
இந்தக் குழந்தை பதிவு,கவிதைன்னு லீப்ஸ் அண்ட் பௌண்ட்ஸ்ல வளருகிறது:)
நாம் புரிந்து கொள்ளவில்லை என்றால்
அவனுக்கு வருகிற கோபம்.!!!!
அப்படியே தாத்தா சிங்கம் மதிரியே இருக்குமே
Thatha singam maathiri illai:)
KoLLuththatha singaththukku appa:)
Instant kobam avarthaan.
thanks T.R.C. Sir.
//வாகுளமீன்
வல் யூ//
ரொம்ப ரசிச்சேன்..:-))
வாங்கப்பா சந்தனமூல்லை.
உங்க பதிவிலயும் பாப்பா செய்கிற லூட்டியைப் படித்தேன்.
குழந்தைகள் நாம் காணும் தெய்வங்கள்.
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.
தமிழும் நல்லாப்பேசறான்.
பள்ளிக்குச் செல்லும் நாள் வரை குழந்தைகளின் கபடம் இல்லாத பேச்சு இனிமையே.
வல்லி...'வால் யூ!!
குழலும் யாழும் சேர்ந்து காதில் தேனாகப் பாய்ந்தது!!
'அல்லிகா புத்தர்' சூப்பர். என்னோட மழலை களஞ்சியத்தில் இவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன். சேரியாப்பா!!
நானானி,
வல் யூ டூ:)
வந்ததுக்கு இப்ப மழலை குறைஞ்சுடுத்துப்பா.
அல்லிகாப் புத்தர் மட்டும் இருக்கு.:)
மீண்டும் தாமதத்துக்கு மன்னிக்கணும்.
Post a Comment