Blog Archive

Sunday, September 14, 2008

இங்கு இன்று ,இப்போது

பேரனுக்குப் பத்து வயது பூர்த்தி:)






வாண வேடிக்கை நேவிபியர்




பறவைகளுக்கான தானியக் கூடு.அணிலார் வந்துவிட்டார்.






காடை கவுதாரி இனமோ







கண்ணன் வந்தார் இன்று









அரோரா பாலாஜி கோவில் வெளிப்புறம்










நேவி பியர் சிகாகோ தொழிலாளர் தினமா,தொழில் தினமா செப்டம்பர் 1ஆம் தேதி.























Posted by Picasaஒரு கட்டிடம்:)
அன்று சீனிம்மா எங்களைப் பராமரித்ததற்கும், இப்போது இங்கே நாங்கள் வந்து இங்ஊ இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இல்லை.
பாட்டிகள் மாறுவதில்லை.
அநுபவங்கள் மாறுகின்றன. அவ்வளவுதான்.

அன்றைய பாட்டிக்கு வேலை செய்ய ஆள் கிடையாது.
இங்கே பேத்திக்கும் அதே நிலைமை.

அவளும் பாத்திரம் தேய்த்து,துணி உலர்த்தி,
வீடு பெருக்கித் துடைத்து எல்லாம் செய்தாள்.
இங்கு பேத்தியும் அதையே இன்னும் கொஞ்சம் நாகரீக லெவலில் செய்கிறாள்.
அப்பளம் வடகம் வத்தல் எல்லாம் செய்ய நேரம் இருந்தது.
இன்றைய பாட்டியான எனக்கு இங்கே வந்தால்தான் அந்த வேலை.
நம்ம ஊரில்தான்
க்ராண்ட் ஸ்நாக்ஸ் எனக்காகவே திறந்திருக்கிறார்களே;)
மேலும் எங்க வீட்டு மொட்டை மாடிக்கு தூசிதும்பு அதிகம் வரும்.
ரோட்டு மேல வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்த ''ஐக் புயல்'' சூறாவளி வருவதற்கு முன்பே கொஞ்சம் ஊறுகாய் வடாம் எல்லாம் போட்டாச்சு.
இரண்டு நாட்களாக சூரியனைக் கண்ணால் பார்க்கவில்லை.
நடுநடுவே பேஸ்மெண்ட் செக்கிங் வேற. அங்க தண்ணீர் சரியாக
வெளியேற்றப் படுகிறதா என்று பார்க்க வேண்டுமாம்.
சரி இந்த தற்கால நிகழ்வுகளுக்கும் சீனிம்மாவுக்கும் என்ன சம்பந்தம்.
அவருக்கு இந்த அமெரிக்க மனிதர்கள் பற்றிய நாவல்கள் ரொம்பவும் பிடிக்கும்.
எல்லா
எழுத்தாளர்கள்,ஆர்தர் ஹெய்லி,டானியல் ஸ்டீல்,ஜெஃப்ரி ஆர்ச்சர் இவர்களுடைய ஆக்கங்களைத் தமிழ்ப் படுத்தி ராகி.ரங்கராஜன் அவர்கள் குமுதத்தில் எழுதும்போது ஒரு வரி விடாமல் படிப்பார்.
எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,
என்று நிதானமாக அதர்சைட் ஆஃப் மிட்னைட் கதாநாயகியை அலசுவார்.
என்னுடைய திருமணத்தின் போது இருந்த சீனிம்மாவுக்கும்,இப்போது
30 வருடங்கள் கழிந்த நிலையில் புத்தம் புதிதான சீனிம்மாவைப் பார்ப்பதற்கும்
ஏகப்பட்ட வித்தியாசம்.
சந்தோஷமாக இருந்தார். நான் முதல்தடவை டெட்ராய்ட்டுக்கு வந்த போது நிறைய விவரங்கள் எனக்குக்
கொடுத்தார்.அவரையும் அழைத்து வந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாரோ.
வருவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்;)பிள்ளைகளை விட்டு வரவேண்டுமே!!
காரணங்கள் இவ்வளவுதான் இந்தக் கொசுவத்திக்கு.

17 comments:

இலவசக்கொத்தனார் said...

மீண்டும் படப்பதிவா!! நடாத்துங்க.

அப்புறம் அது என்ன கேக் மேல ஒண்ணு திரும்பி இருக்கு?!

ஒரு பாக்கெட் சீடை பார்சேல்!

கோயில் படமும் கட்டடம் படமும் அருமை!

வல்லிசிம்ஹன் said...

நல்லாப் பாருங்க கொத்ஸ்.


படங்கள் கடந்த பிறகு கதையும் இருக்கும்மா:)
அலங்காரமெல்லாம் அவங்க செய்தது. போட்டோ எடுப்பது மட்டுமே என் வேலை:)

ப்ளாகர் சொதப்பலில் இதுவும் ஒண்ணு.
அதாவது முதல்ல படங்கள்.
(ஃபர்ஸ்ட் கன்சைன்மென்ண்ட்)
பிறகு கதை.
சரியா.
நன்றி நன்றி நன்றிம்மா.

ஆயில்யன் said...

//எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,//

மனதில் பதித்துக்கொள்கிறேன்!

:)

ஆயில்யன் said...

எனக்கு கேக்கும் சீடை நெண்டும் வேணும் :)))))))

துளசி கோபால் said...

அந்தக் காலக் கூட்டுக்குடும்பங்களில் ஆளுக்கொரு வேலையாச் செஞ்சாப் போதும். இப்ப 'எல்லாத்தையும்' நாமே செய்யவேண்டி இருக்கேப்பா. இந்தியாவில் கூட கொறைஞ்சபட்சமா அவசர உதவிக்குன்னு உதவியாளர்கள் கிடைச்சுடறாங்க.

நாங்க?

ரொம்பப் பரிதாபக்கேஸ், இல்லை?(-:

பேரனுக்குப் பொறந்த நாள் வாழ்த்துகளைச் சொன்னேன்னு சொல்லுங்கப்பா.

ambi said...

இந்த காலத்து பேத்திகள் பிளாக் எல்லாம் எழுதி படம் எல்லாம் காட்றாங்க. :)))

கேக், சீடை படங்கள் அருமை. சீடை அழகா, செவக்காம, முறுகலா வந்ருக்கு போல. :p

பக்கத்துல என்ன அப்பமா? இல்ல அதிர்சமா? :D

ambi said...

//மீண்டும் படப்பதிவா!! நடாத்துங்க. //

@கொத்ஸ், ஸ்பெல்லிங்க மிஸ்டேக் போலிருக்கே! :p

ராமலக்ஷ்மி said...

அங்கு அன்று, அப்போது
நடந்தவற்றை அலசி
இங்கு இன்று, இப்போதுடன்
இணைத்து முடித்திருப்பது
இதமோ இதம்.

[நானும் கொஞ்சம் சீடை எடுத்துக் கொண்டேன்:))!]

Geetha Sambasivam said...

//எதைப் பற்றியுமோ யாரைப் பற்றியுமோ அவசரமாகக் கணித்து விடமாட்டார்.
எல்லோருடைய செய்கைகளுக்கும் ஏதாவது காரணம் இருக்கும்,//

சரியான பாட்டி தான் வல்லி, எங்க பாட்டியும் ரொம்பவே நிதானம், பிரமாதமான நிர்வாகத் திறனும் கூட. அருமையான நினைவோட்டத்துடன் கூடிய பதிவுகள்.

பேரனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். சீடை எல்லாம் சாப்பிட முடியாது, வேண்டாம். ஸ்வீட் ஒண்ணுமே இல்லை போலிருக்கே?/ உங்க கிருஷ்ணர் ஸ்வீட் சாப்பிட மாட்டாரா?? எங்க கிருஷ்ணருக்குத் திரட்டுப் பால் பிடிக்கும்னு அது செய்வோம் கட்டாயமாய். சீடை, முறுக்கும் உண்டு.

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா ஆயில்யன்.

வெல்லசீடை,கேக் எல்லாம் அனுப்பிட்டேன். வந்ததும் ஃபோன் செய்யவும்.:)

சீனிம்மா மாதிரி பொறுமைக்கும் வார்த்தை சாமர்த்தியத்துக்கும் எங்க போகிறது.!!
நினைவில தான் வச்சுப் பார்க்கணும்.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
ஆமாம்பா. அதான் இங்க பெரிய ட்ராபாக்.

அலுப்ப்பா வருகிறது சிலசமயம். டிஷ் வாஷர், வாஷிங் மெஷின், சமையல், காய்கறி கடை.
மெயில் பார்த்து பில் கட்ட வேண்டியது,
:)000)))
பள்ளிக்கூட பாடம்,வீட்டுப்பாடம்,இணையத்திலிருந்து வர டீச்சரோட பயிற்சிமுறைகள்,
அதைப் படித்துப் பேரனை செய்ய வைக்க வேண்டியது. பொண்ணைப் பார்த்தாப் பாவமாத்தான் இருக்கு.

எங்க சென்னை எவ்வளவோ தேவலை. முனீம்மாவுக்குக் கோடி கும்பிடு.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, இந்தக் குசும்புதானே வேணாம்!!:)

அதென்ன அப்பம் மாதிரியா இருக்கு. ஒரு பக்கம் சீடை, ஒரு பக்கம் வெண்ணை.அப்புறம் அவல்.

அதிர்சம் ஆசையா இருந்தா வந்தப்புறம் கேசரியோட அனுப்பறேன்:)

வல்லிசிம்ஹன் said...

நடாத்துங்க சொல் ,நடத்துங்க சொல்லுக்கு இன்னோரு மாற்று சொல்.
அம்பி,
சிலப்பதிகாரம் அந்த மாதிரி பழைய காலக் கதைல வரும்.
இல்லை கம்பராமாயணமா??
நடத்து,நடாத்து ரெண்டும் ஒண்ணுதான்:)))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி,
நல்லா இருந்ததா சீடை.
கொஞ்சம் பெரிய அளவாப் போச்சு:)

சீனிம்மா இந்தப் பதிவைப் படிக்க இப்போது இல்லையேன்னு இருக்கு!

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா சீதாம்மா.

திரட்டிப்பால் இல்லாம ஸ்ரீஜயந்தியா:)

வைக்க இடம் போறலை. அடுப்பிலேருந்தே கைகாமிச்சாச்சு.

பாட்டிகள் அதுவும் பழைய பாட்டிகளை இனிமே பார்க்க முடியாது. காலம் அப்படி. தலைமுறைகளும் நாமும் மாறிவிட்டோம் , இல்லையாம்மா.

நானானி said...

பேரனுக்கு என் வாழ்த்துக்களும் ஆசிகளும். கேக் பீஸும் பிரசாதங்கள் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்.
அரோரா கோவிலில் உள்ளெ செல்லும் வழியில் என் மாமனார் மாமியார் பெயர் பொறித்து பதித்த டைல்கள் உண்டு. பார்த்தீர்களா? (உபயம் என் கொழுந்தனார்)

வல்லிசிம்ஹன் said...

நன்றி நானானி,
ரொம்பத் தாமதமாப் பதில் சொல்கிறேன்.
நேற்று கூட கோவிலுக்குச் சென்றிருந்தேன்.

எந்த இடத்தில் என்று உங்களைக் கேட்க விட்டுப் போச்சு.
எத்தனை அழகான சேவை செய்திருக்க்கிறீர்கள். பெருமாளோடு எப்பவும் ஒன்றி இருக்க இதைவிட நல்ல வழி உண்டா..