அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்.
நன்மை தழைத்திங்கு நானிலம் பிழைத்திட வந்திடுவாள் பராசக்தி.
முந்தின பதிவில் இதயப் பரிசோதனை செய்து கொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
இன்றோடு அந்த மலிவு விலை சோதனைக் காலம் முடிகிறது.
அதாவது 300 டாலர் கொடுக்கவேண்டிய இடத்தில் நூற்றம்பது டாலரோடு முடிந்தது.
மருந்த மறந்து நான் நயகரா போனது நினைவு இருக்கலாம். அப்போது ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்து என்னைக் காப்பாற்றியவர்.:)
அவருக்கு நன்றி சொல்லிப் பணமும் கொடுக்கப் போனபோதுதான் எனக்கு இதய முப்பரிமாண சோதனைக்கு சீட்டு எழுதிக் கொடுத்தார்.
சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு, இதயபாதிப்புக் கட்டாயம் வரும்.முன்னெச்செரிக்கையாக இருப்பது நல்லது என்றுதான் அவர் சொன்னார்,.
நான் பண செலவை யோசித்தபோதுதான், வருமுன் காப்பது நல்லது என்று தோன்றியது.
ஏனெனில் எங்கள் வீட்டில் எல்லோருக்கும்(பிறந்த வீட்டில்) இந்த இதயம் சோதித்துவிட்டது.
பெண்ணிற்குக் கவலை.
அவள் இணையத்தில் தேடியபோது எட்வர்ட்ஸ் ஆஸ்பத்திரியில்
இந்தச் சோதனை செப்டம்பர் 30 வரை வெறும் 150 டாலருக்குச் செய்து கொடுப்பதாகச் சொன்னதும், உடனே பதிந்து கொண்டாள்.
போயாச்சு,வதாச்சு.
இப்போது நிலைமை என்னவென்று தெரியும். அதற்கேற்ற மருந்துகளும் கொடுத்துவிட்டார்கள்.
இன்ஸுரன்ஸ் செய்திருக்கிறோம்.
இந்த செகப்பிற்கு ரி எம்பர்ஸ் செய்ய மாட்டார்களாம்.
பரவாயில்லை.
இந்தியாவில் செய்திருந்தாலும் இதே செலவுதான் ஆகியிருக்கும்.
நான் இவ்வளவு விலாவாரியாக இதை எழுதுவதற்குக் காரணமே
சில உறவுகள் ,ஏன்யா, சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுக்கிற என்று
என்னைச் சலித்துக் கொண்டதுதான்.
இந்தச் சோதனையை நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் செய்து கொள்ளலாம்.
ஊசி, இந்த இதயத்துக்குள்ள செலுத்தற சாயம் அதெல்லாம் கிடையாது(ஆஞ்சியோ கிராம்)
ஒரு பத்து நிமிடம் சோதனைக்குப் போய்விட்டு,கேள்விகளுக்குப் பதில் சொல்லி வீட்டுக்குத் திரும்பி விடலாம்.
இதுதானப்பா விஷயம் சரியா.