இது இந்த ஊரில் வீட்டு வேலை செய்பவர்கள் கூடிக் கலகலக்கும் இடம்.
இந்தக் குடியிருப்பின் வாசலில் இருக்கும் நிஜத் திண்ணை:)
இது திண்ணை மரத்தடி:) இங்கேயும் வழிப்போக்கர்கள் அமர்வதுண்டு. அதுவும் இந்த வெய்யிலில் கைகளில் மோர் இருக்கும் பாட்டிலை வைத்தபடி,ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளும் இடம்.
பக்கத்து சாலையில் பஸ் வரும்வரை காத்திருக்கும் இடம்.
அலுத்துப் போய் ஒரு டாக்சியாவது கிடைக்குமா என்று தவிக்கும்போது ஆதரவாக நிழலும் காற்றும் கிடைக்கும் இடம்.
மொத்தத்தில் பாலபாரதி ஆரம்பித்து அனைவரின் நினைவுகளையும் பதிய வைக்க ஆதாரமாக இருந்த திண்ணை.நானும் இதை எழுதிப் பதிந்து விட்டேன்:)
23 comments:
மற்றுமொரு திண்ணை....கொஞ்சம் மலரும் நினைவுகள் எழுதியிருக்கலாம்...
அன்புடன் அருணா
உண்மைதான் அருணா. என் நினைவுகளை மற்றவர் திண்ணையில் பின்னூட்டமாக விட்டு விட்டேன்:)
நன்றிம்மா.
நாடுவிட்டு நாடு போனாலும் திண்ணை
இல்லாத இல்லங்களே இல்லை!!
அங்கு உங்க வீட்டு திண்ணை
வெண்ணை போல வழுவழுன்னு இருக்கு.
என்ன தலைப்பு கொடுத்தாலும்
உடுறதில்லை. அதுதான் வல்லி!!
வரணும் நானானி.
திண்ணை மனசுக்குப் பிடித்ததில்லையா. அதுவும் நீங்கள்,அபி அப்பா,ராமலக்ஷ்மி இப்படி வரிசையாக எல்லோரும் இருக்கும் திண்ணையைப் பற்றி எழுதினீர்கள். அப்படிப்பட்ட திண்ணைக்கு மரியாதை கொடுக்கவில்லைன்னா எப்படி!!!
அதான்பா எழுதினேன்.
//. அப்படிப்பட்ட திண்ணைக்கு மரியாதை கொடுக்கவில்லைன்னா எப்படி!!!//
பதிவைப் படித்ததும் அதைத்தான் சொல்ல வந்தேன். உங்கள் குடியிருப்பு இந்தக் காலத்தில் கட்டப் பட்டதானாலும், அந்த நிஜமான வழவழத்த உள்திண்ணையும், பலரும் சற்று இளைப் பாறும் வண்ணம் அமைந்த "திண்ணை மரத்தடி" எனும் வெளித் திண்ணையும் திண்ணையின் உண்மையான பயன்பாட்டை இன்றைக்கும் செய்கின்றன. அந்த வகையில் அதுவே திண்ணைக்கான உண்மையான மரியாதை. புதிய குடியிருப்பு கட்டுபவர்கள் இதைப் பின்பற்றலாம். மரியாதை செய்யப் பட்ட இக்காலத் திண்ணைப் படங்களுடன் இப்பதிவு மறுமுறை திண்ணைக்கு மரியாதை செய்து விட்டது.
உண்மையே ராமலக்ஷ்மி.
இங்க துபாயில் மனிதர்கள் வெய்யில் வேளையில் இளைப்பாற உட்காரும்போதும்,சாயந்திர வேளைகளில் பேசிச் சிரிக்கும்போதும் பார்க்க உற்சாகமாக இருக்கும்.
அங்கே சென்னையில் இருந்த திண்ணையைப் பாதுகாப்பு பொருட்டு அறை ஆக்கிவிட்டோம்.
பெரிய இடம் இல்லை.ஆனால் காற்று வீசும்போது அனுபவிக்க எனக்குத் தோதாக இருந்தது:)
மீண்டும் வீடுகளைச் சுற்றி திண்ணை வந்தால் எப்படியிருக்கும் என்று யோசித்தாலே சந்தோஷமா இருக்கு.
arumaiyana thinnai, ilaipara vasathiyum kuda!
ஆஹா, கீதா !! அக்னிப் பிரவேசத்துக்கு நடுவில் இங்கயும் வரமுடிஞ்சதா.
நன்றிம்மா.
ஒரு திண்ணை பேச்சு வீரரிடம் நீங்க கண்ணா இருக்க தெரிஞ்சுக்கனனும் இந்த பாட்டை கேடு இருக்கீங்களா மேடம்
உங்க திண்ணைக்கு வந்து, அழகியல் உணர்ந்து அப்படியே எல்லா திண்ணைக்கும் போய், ஆனந்தமாய் போனது திண்ணை படிப்பு இன்னைக்கு! :) ... பாலபாரதிக்கு ஒரு "ஓ" போட்டுக்கிறேன். நல்ல முயற்சி.
யாருமே தக்ஷின் சித்திரா பத்தி எழுதல? ... சென்னையில அழகா வச்சிருக்காங்க இந்த திண்ணை வீடுகளை பார்த்து ரசிக்க ... மூணு மயில் நடந்து, எழுபத்தஞ்சு ரூபா குடுத்து, பாத்திட்டு வந்தேன் இந்த விடுமுறையில ... திண்ணை வீட்டுக் கனவில மனசுல டீடைல்ஸ் கரெக்டா போட்டுக்க போயிருந்தேன்.
இங்க வந்து பாத்தா ஆளாளுக்கு அழகழகா பதிவு போட்டு கலக்கிருக்கீங்க!
வரணும் மதுரா,திண்ணையைப் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளது. வரப்போகும் சின்னவங்களுக்குத் தான் திண்ணை அருமை தெரியாமல் போகிறதே ன்னு இருக்கு. உண்மையாவெ பாலபாரதிக்கு பெரிய ஓ போடணும்.
நான் தக்ஷின் சித்ரா போய்ப் பார்க்கலைமா. சென்னை திரும்பிய பிறகுப் போய்ப் பார்க்கிறேன். பெண் அங்க போயி மாக்கல் சொப்பு எல்லாம் வாங்கி வந்தா. இங்க சிகாகோ கொலுவுக்காக:)
தி.ரா.ச சார்.
அந்தப் பாட்ட மற்க்க முடியுமா. கல்யாணசுந்தரம் பாட்டாச்சே. நாம ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி:)
வணக்கம்.என்ன!நம்ம ஊரு இவ்வளவு சுத்தமா மாறிடுச்சா!மெய்யாலுமா!!யாரும் சொல்லவேயில்லையே!!!
வாங்க நடராஜன்மெய்யாலுமே இது நம்ம ஊரு இல்லை. முதல் படம் மட்ட்டும் நம்ம ஊரு. அப்பால இருக்கிறதெல்லாம் துபையி.:)
மணி என்ன அங்கே இரவு 10.00 ஆ? சுகமா மெகா சீரியல்களப் பார்க்கிறத வுட்டுப்புட்டு துபாய் கணக்கா நெட்டவே சுத்திகிட்டிருந்தா எப்படி:)
அது சரி! பழக்கதோசம் யார விட்டது?வீட்டுல எல்லாரையும் கேட்டதா சொல்லுங்கம்மா.
ஆஹா அப்படி விட்டுருவோமா. நாங்க பதிவு போட்டது துபாயில. இப்ப பதில் போடறது அமெரிக்காவில;)
இங்க காலை பதினொறு மணி. அப்புறம் மெகா சீரியல் பக்கம் போகாத ஒரு அபூர்வப் பிறவி நான்:)
நலம்தானா வல்லிம்மா:))?
//அப்புறம் மெகா சீரியல் பக்கம் போகாத ஒரு அபூர்வப் பிறவி நான்:)//
என்னையும் சேர்த்துக்குங்க! அதுக்காக ஒரு பதிவே போட்டேன்ல!
நலமே ராமலக்ஷ்மி.
நான் படிக்காம விட்டேனா. பாக்கறேன்.
பதிவு போடற அளவுக்கு இது வளர்ந்திடுத்து பாருங்க. ஆனால் யாரைக் குத்தம் சொல்றதுன்னுதான் தெரியலை. பார்த்து அழறவங்களையா,அழ வைக்கிறவங்களையா!!
இந்த 10 நாளில் நிறைய படிக்காமல் விட்டிருக்கிறேன்.
நலமே ராமலக்ஷ்மி.
நான் படிக்காம விட்டேனா. பாக்கறேன்.
பதிவு போடற அளவுக்கு இது வளர்ந்திடுத்து பாருங்க. ஆனால் யாரைக் குத்தம் சொல்றதுன்னுதான் தெரியலை. பார்த்து அழறவங்களையா,அழ வைக்கிறவங்களையா!!
இந்த 10 நாளில் நிறைய படிக்காமல் விட்டிருக்கிறேன்.
இல்லயில்லை. நீங்க படிச்சுக் கருத்து சொன்னதுதான்.
//பார்த்து அழறவங்களையா,அழ வைக்கிறவங்களையா!!//
இதையேதான் அங்கேயும் சொல்லி வருத்தப் பட்டிருந்தீங்க.
அடுத்த பதிவு எப்போ?
அன்பு ராமலக்ஷ்மி, நன்றி.
பாதி எழுதினேன்.பழக்கமில்லாத கம்ப்யுட்டரானதால சேவ் செய்தது சரியாப் பயன்படவில்லை. மீண்டும் துவங்கணும்.:)
Post a Comment