கூகிள்ள தேடிப் படமும் போட்டாச்சு.
உண்மையிலேயே நிலாவும் கடலும் மேஜிக் தான்.
லுனடிக் ,லூசுத்தனமான நடவடிக்கை இன்னிக்கு அதிகரிக்கும்னு சொல்றதை நான் நம்புகிறேன்.
உண்மையாகவே நாம் அதிகமாக உணர்ச்சி வசப் படுகிற நாட்கள் எப்போதுனு ஒரு சார்ட்(?) போட்டு வைத்தோமானால் அமாவாசை அன்னிக்குக் கோபமும்
முழுநிலா அன்னிக்குச் சோகமும் கொஞ்சம் மிகைப் படுகிறதோனு தோன்றும்:)
இல்லாட்டத் தான் என்ன!. சாதாரணமாவெ அமைதியா இருக்கறவங்க அமாவாசை அன்னிக்கு மட்டும் அம்மனோ சாமியோ செய்வாங்களா?
இதில எவ்வளவு லாபம் இருக்குனு பார்க்கலாம்.
யாராவது நம்மளை தொந்தரவு(விடாக் கண்டன்) செய்தாங்கனு வச்சிக்கலாம்.
அப்போ ரெண்டு போடு போடலாமானு தோணுமா தோணாதா?(மனசளவில தான்)
இப்போ அமாவாசை , பௌர்ணமின்னால் நிஜமாவே கம்பால சாத்தினாக் கூட யாரும் ஒண்ணும் நினைக்க மாட்டாங்க. எல்லாம் லூனார் சைக்கிள் செய்கிற வேலைனு சொல்லிடுவாங்க.
ஆனா அடிபட்ட ஆளு திருப்பி அடிச்சான்னால் அதையும் வாங்கிக்கொள்ள சக்தி வேணும்;)
அவனுக்கும் அதே லேசா கலங்கி இருக்கிறதுனாலத் தானே முதல்ல நச்சுப் பண்ண வரான்.
இதெல்லாம் ஏன் இன்னிக்கு எழுதணும்னு நீங்க கேக்கலாம்.
காரணம் இருக்கு.
எங்க வீட்டுக்கு அமாவாசை, வெள்ளிக்கிழமை,ஆடிக் கூழ், கோவில்,கும்பாபிஷேகம்னு ஒரு சில பேர் அப்பப்போ தரிசனம் கொடுக்க(வாங்க) வருவாங்க.
முடிந்த வரை உறுதியாக தர மாட்டேன் என்று சொல்லிவிடுவேன்.
ஏனெனில் செமையாக ஏமாந்த நிகழ்ச்சி ஒன்றினால், யாரைப் பார்த்தாலும் சந்தேகம்.
தர மாட்டேன்னு தெரிந்ததும் அவர்கள் பாடும் வசவு இருக்கே !!ஆஹா:))
அந்த மாதிரி இன்னிக்குத் திருவண்ணாமலை பேரு சொல்லிட்டு இரண்டு பேரு வந்தார்கள்.
நீட்டி முழக்கி லட்சுமியை அழைத்துவிட்டு, நான் வெளில வந்து என்னனு கேட்டதும் பௌர்ணமி மகிமை, தானம் செய்ய வேண்டிய அவசியம், எல்லாம் சொல்லி முடித்து ஒரு திருமணப் பத்திரிகையும் கொடுத்தார்கள். அவர்கள் தங்கைக்காக,
சென்னையைச் சுற்றிப் பணம் சேகரித்து
பங்குனி மாதம் கல்யாணம் செய்யப் போவதாகச் சொன்னார்கள்.
நாம தான் ஏற்கனவே சூடு கண்ட பூனையாச்சே(சாரி துளசி)
வாசலிலேயே நிறுத்தி, பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிறகு அவர்களிடம் இன்னும் 10 அழைப்பிதழ்களைக் கேட்டேன்.
என் சினேகிதிகள் ,உறவுகளிடம் சொல்லி பணம் வசூலித்துக் கொடுப்பதாகச் சொன்னதும் அவர்கள் மேற்கொண்டு பேசவில்லை. சென்னை முழுவதும் வினியோகம் செய்ய ஒரு பத்திரிகை எப்படி போதும் என்று கேட்டுக் கொண்டே பத்திரிகையைப் பிரித்தால்,
அவசரத்தில் காப்பி எடுக்கப்பட்ட இன்னோரு பத்திரிகை.
அதுவும் ஏற்கனவே நடந்த திருமணத்துக்கானது.!!
எங்க மாமியார் சொல்லுவார்கள், தனக்கு கோபம் வந்தால்
எப்படி ரத்தம் கொதிக்கும்(அநியாயத்தைக் கணும் சமயம்) என்று;)
எனக்கு தற்போது அந்த அளவு கோபம் வரவில்லை.
இப்படி மதச்சின்னங்கள் தரித்து,எல்லோரையும் ஏமாற்றுகிறார்களே என்றுதான் வருத்தமாக இருந்தது.
கதவைச் சாத்தியபிறகுதான்,
சுர்ரென்று கோபம் ஏறியது.
கோபமும் தாபமும் நமக்குச் சர்க்கரை அளவைக் கூட்டி விடும். அதனால் நிறையத் தண்ணீரைக் குடித்து
நிதானத்துக்கு வந்தேன்.
பின்ன 'இதுதான் உலகமா'னு பாடவா முடியும்!!
அதான் சமாதான நிலாப் படங்கள் போட்டுப் பதிவும் எழுதியாச்சு.
ஏமாற்றாதே , ஏமாறாதேனு சும்மாவா சொன்னாங்க:).
30 comments:
ஓம்...........
சாந்தி நிலவ வேண்டும்
ஓம் சாந்தி நிலவ வேண்டும்
ஆத்ம சக்தி ஓங்க வேண்டும் உலகிலே
சாந்தி நிலவ வேண்டும்.
அடிவாங்குன பூனை பாடறாருன்னு எடுத்துக்குங்கப்பா.
கோபமும் தாபமும் நமக்குச் சர்க்கரை அளவைக் கூட்டி விடும். அதனால் நிறையத் தண்ணீரைக் குடித்து
நிதானத்துக்கு வந்தேன்
அடவால்லி அம்மாவுக்கு கோபம் கூட வருமா என்ன. ஆனால்வைத்தியம் ஸ்ரீஹரி அவர்களுடையதவிட சீப்பா இருக்கே. தங்கமணிக்கு சிபார்ஸு செய்கிறேன்.
நானும் நிறைய்ய ஏமாந்து இருக்கிறேன். அது என்னவோ நம்ம முகத்திலேயே எழுதி இருக்கிறாதாஎன்ன "இவ்விடம் ஏமாறப்படும்"அப்படின்னு.
இந்த மாதிரிதான் ஓல்லியா ஒரு அம்பி கல்லிடைகுறுச்சின்னு சொல்லிட்டு வந்துண்டு போயிண்டு இருக்கான் தம்பியோட.அடுத்த தடவை
ஜாக்கிராதையா இருக்கனும்
நம்பதானே பஷ்டு.
வல்லி! நான் 'ஒத்த ரூபா தாரேன்'னு கொடுத்து அனுப்பிவிடுவேன்.
அதற்கு முன் தாயாகவும் மகாலட்சுமியாகவும் தெரிந்த நாம் கொடுக்காவிட்டால் பேயாகவும் ஸ்ரீதேவிக்கு அக்காவாகவும் தெரிவோம்.
துளசி, ஆமாம்பா.
சன்ஸ்கார் சானலில் ஆரம்பித்து நிறைய ஷாந்தி சொல்லிக்கிட்டே தான் காலை ஆரம்பமாகுது.
கீழே அடுத்தாற்பொல் தி.ரா.ச சார் சொல்றது போல இப்படி ஒரு கும்பல் அப்படி ஒரு கும்பல்;))
அதேதான் நானும் ரொம்ப நாளாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
அறிவிப்புப் பலகை எங்கியோ மாட்டி இருக்காங்க. இல்லாட்டா இங்கேயெ இத்தனை பேர் வரக் காரணம் என்ன என்று:)
கல்லிடைக்குறிச்சி பசங்களா...இருக்காதே.ஏமாத்தாது சார் . தாமிரபரணியாச்சே.
வரணும் நானானி.
ஒரு ரூபாயா??????
இதெல்லாம்
புடவை,500ருபா கேக்கறவங்கப்பா.
நீங்க சொல்ற அத்தனையும் சத்யமான வார்த்தைகள்:)))
சிட்டிக்குள்ள விடு இருந்தா இது தான் பிரச்சனை. இதுக்கு தான் அம்பத்தூர்ல வீடு இருக்கணும்னு சொல்றது. :)))
@TRC sir, Grrrrrrrr.இனிமே தான் எங்க வேலையை காட்டலாம்னு இருக்கோம். எப்படி வசதி? :p
இதுக்காகல்லாம் அம்பத்தூர் போக முடியுமா அம்பி.
இதுவரைக்கும் கொடுத்த மகராசிக்கு இப்போ என்ன ஆச்சோனு சொல்லிட்டுப் போயிடறாங்க:))
தி.ரா.ச சார் ஒபன் சாலஞ்ச்!!!
//
@TRC sir, Grrrrrrrr.இனிமே தான் எங்க வேலையை காட்டலாம்னு இருக்கோம். எப்படி வசதி? :p//
அம்பி, பின்னி எடுத்துடலாமா? :)
//இந்த மாதிரிதான் ஓல்லியா ஒரு அம்பி கல்லிடைகுறுச்சின்னு சொல்லிட்டு வந்துண்டு போயிண்டு இருக்கான் தம்பியோட.அடுத்த தடவை
ஜாக்கிராதையா இருக்கனும்//
திராச, சார், ரொம்ப லேட்டான ஞானோதயம் ஆனாலும், இப்போவாவது வந்ததே! அதுவரைக்கும் நல்லது.
//சிட்டிக்குள்ள விடு இருந்தா இது தான் பிரச்சனை. இதுக்கு தான் அம்பத்தூர்ல வீடு இருக்கணும்னு சொல்றது. :)))//
க்ர்ர்ர்ர்ர்., உங்களை மாதிரி விலாசமே சொல்லாத ஆளுன்னா நினைச்சீங்க, எங்களைத் தேடிட்டு அமெரிக்காவிலே இருந்தெல்லாம் விருந்தாளுங்க வந்துட்டும், போயிட்டும் இருக்காங்க, தெரியுமா? :P :P
வல்லி, ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 5 பேராவது இப்படி வராங்க, என்ன செய்யறது? சிலபேருக்குப் பிழைக்க இது ஒரு வழி!
challange accepted. எதுக்கும் லஸ் சர்ச்சுரோடுக்கு கூட்டின்னுடு வரலாமான்னு யோஜனை
கீதா, இந்தச் சில பேர்னால உண்மையா யாருக்காவது உதவி செய்யணும்னு வரும்போது,
சந்தேகித்துண்டே கொடுக்க வேண்டி இருக்கு.:(
அமெரிக்காலேருந்து வரவங்க இங்க வராமலியே போயிட்டாங்க அம்பி:)
கொத்ஸ்,
எங்க எங்க??
நானும் அந்த இடத்துக்கு வரேன்.
பின்னிப் பெடலெடுக்கிறதை நான் பார்த்ததே இல்லை:))
தி.ரா.ச சார்.
லஸ் சர்ச் ரோட் பழகின இடம்தான்.:)
கட்டாயம் அழைத்து வரலாம்.
கொத்ஸ் வேண்டாம்.அப்பறம் நீ இங்கே கோவையில் பண்ணதெல்லாம்
ரிலீஸ் ஆயிடும்.PPPP
கர்ர்ர்ர்., உங்களை மாதிரி விலாசமே சொல்லாத ஆளுன்னா நினைச்சீங்க
உங்களுக்கு தெரியாதா அட்ரெச்ஸ்சுக்குத்தான் இப்போ மும்முரமா இருக்கார் உங்க பிரதம பாங்களுர் சிஷ்யகேடி.இதுக்கு உபஹாரமே உங்க இன்னொரு பாங்களூர் மதுர கீததொண்டர்தான்
இன்னும் சிலபேர்,'இந்த வழியா போயிட்டிருந்தேன். ஏதோ ஒன்று இங்கே போய் கேள்! என்றது.' என்று நம்மை பெரிய ரேஞ்சுக்கு ஏத்திவிடுவார்கள். நம்ம நெத்தில இளிச்சவாய்ன்னு எழுதி ஒட்டியிருக்கும் போல!!
முதலில் எல்லாம் மயங்கினேன். இப்போ பின்னி பெடலெடுத்துடுவேன்.
அடடா. மர்மக்கதை ரேஞ்சில போறதே..இப்படி சுவாரஸ்யமா என்னவோ நடக்கறது எனக்குத் தெரியலையே.
பாங்களூரில ரெண்டு தொண்டர்களா. ஆஹா குமுதம் கிசி கிசு தோத்தது!!!
நானானி, சொன்னீன்ங்களே ஒரு வார்த்தை!1
எங்க வீட்டு சாமியே இளிச்ச வாயன்ன்னு தான் பேரு வச்சி கிட்டு இருக்காரு.
அவர் கேட்டதைக் கொடுக்கும் வள்ளல்.
அதைப் போல நம்மளால் தரமுடியுமா.:))
அவர் கேட்டதைக் கொடுக்கும் வள்ளல்
ஆஹா அப்படியா இதுதெரியாம போயிட்டதே இவ்வளவு நாளா. இனிமேல்
வள்ளலை பாடும் வாயால் வல்லியைப் பாடுவேனோ !
ஐயா,தி.ரா.ச
நான் சொன்னது சாமி நரசிம்மனை:)
எங்க எஜமானர் நரசிம்மனும் கேட்டதும் கொடுப்பவ்ரே.
அதனால அவரையோ பாடுங்கோ:))
தனி மயில் (தனிமையில்) பார்க்கலையா?
துளசி, இப்போது பார்க்கிறேன்.
மயிலின் மூக்கு வெகு அழகு:)
//பாங்களூர் மதுர கீததொண்டர்தான்//
அதுயாருங்க மதுர கீத தொண்டர்?.....ஆமாம் திரச உங்களுக்கு தெரியாத மதுர கீதம் இருக்க முடியுமா என்ன?.. :-)
நல்ல அனுபவம் தான். :-)
நிலா படமெல்லாம் நல்லா இருக்கு.
நல்ல அனுபவம் தான். :-)
நிலா படமெல்லாம் நல்லா இருக்கு.
வரணும் குமரன் . இரண்டு தடவை சொல்லிட்டீங்களே.
அதனால இப்ப நன்றி நன்றினு இரண்டு தடவை சொல்லறேன்.
தி.ரா.ச.சொன்னாதுக்கு நானும் டீப்பீட்!
அருமையாகச்சொல்லிவிட்டார்.
//இனிமேல் வள்ளலை பாடும் வாயால் வல்லியைப் பாடுவேனோ//
சூப்பர் தி.ரா.ச. அவர்களே!!
அடடா,
நானானி,
இப்படி ஒரு காக்கா கூட்டம் பறக்கறதுனு சிங்கத்துக்குத் தெரியலயே:)
Post a Comment