பதினைந்து வயதில் என்ன கனவு இருக்கும்?
பள்ளிக்கூடத்தின் கடைசி நாள்!
அது ஒரு மார்ச் மாத நாள் வருடம் 1964.
கல்லூரி,படிப்பு,எதிர்காலம்,தோழிகள்,அவர்களைப் பிரிவது.
இதை எல்லாம் எழுதவேண்டும் என்று ஒரு நாள் வடித்த கட்டுரை இது.
வெற்றுரை என்பதைவிட இதில் அப்போது எனக்கு
என் மனதில் உதித்த உற்சாகம் தான்
இதைக் கட்டுரை என்று சொல்ல வைத்தது.கவிதைனு சொல்ல துணிவு இல்லை:)
நினைவலை
----------------------------
அலைகடல் பொங்குமா அலைபோலே
நிலையிலா நினைவுகள் பொங்கும் மனதில்
நின்று நிலைக்கட்டும் இன்பம் எந்நாளும்
பொன்னென்னும் நன்மை தரட்டும்
கற்பனைக் குதிரை பறக்கட்டும்
கணக்கிலா இடங்களைக் கடந்தவாறு
கண்காணவியலா இடங்களுக்கு
கண்மூடிச் செல்லட்டும் பாய்ந்தோடி
இன்பம்தான் எத்தனை எண்ணும்போதே!
ஈடேறா எண்ணங்கள் இனி இல்லை
கோடானுகோடி துன்பமெல்லாம்
கேளாமல் நமை விட்டுப் பறந்து செல்லும்!
ஆகையால் நண்பீரே
ஆச்சரியம் வேண்டாம்
ஆனந்தம் கொள்வீர்!
மனதால் இணையும்போது
பிரிவில்லைஎன்றும் நமக்கு.
*************************************************
-----------------------------------------------------------------------------
இதில் நிறைவான வார்த்தைகள் இருக்கும் என்றால் அது எங்கள் தமிழ் மாஸ்டரின் பொறுப்பு.
இலக்கணம் சரியில்லை என்று இருந்தால் அது கட்டாயம் என் தவறு தான்.
யாப்பிலக்கணம் சொல்லிக் கொடுக்கும் நேரம் எனக்கு கடைசி பென்ச் சொந்தமாகிவிடும்.:))
25 comments:
ஆச்சரியம் வேண்டாம்
ஆனந்தம் கொள்வீர்!
மனதால் இணையும்போது
பிரிவில்லைஎன்றும் நமக்கு
அட இப்படிப்பட்ட கவிதை உள்ளமா உங்களுக்கு . எங்க வீட்டு தங்கமணி கூட சொல்லுவாங்க நாச்சியார் பேசும்போது ரொம்ப இனிமையாக கவிதை போல இருக்கு. அப்படின்னு
கவித..கவித...கலக்கிறிங்க வல்லிம்மா ;))
\\ஆனந்தம் கொள்வீர்!
மனதால் இணையும்போது
பிரிவில்லைஎன்றும் நமக்கு\\
ம்ம்ம்..உண்மை தான் ;))
படிச்சாச்சே? கலக்கல்! மீ த ஃபர்ஷ்டு?
தி.ரா.ச சார் உங்க தங்கமணியும்
ஒத்துப் பேசினதனால தான் அந்த உரையாடலும் மகிழ்ச்சியாக நடந்தது. ரொம்ப நன்றி . அப்போ கவிதைனு சொல்றீங்களா:))
கோபிநாத், கவிதை தானா அது:))
எப்படியிருந்தாலும் ஓக்கேதான்.
ரசிக்க முடிஞ்சா சரி.
அருட்பெருங்கோ நட்சத்திர வாரம் ரொம்ப பாதிச்சிடுத்துனு நினைக்கிறேன்.
கலக்கல் கவிதையைப் பாராட்டினதுக்கு நன்றி கீதா.
யூ த தேர்டுப்பா:))
அப்பவே அவ்வளவு அட்டகாசம் பண்ணி இருக்கீங்களா:)))))
\\ஆனந்தம் கொள்வீர்!
மனதால் இணையும்போது
பிரிவில்லைஎன்றும் நமக்கு\\
புரிஞ்சுபோச்சு.
இனிய மணநாள் வாழ்த்து(க்)கள் வல்லி.
வாங்கப்பா எல்லாரும்.
இன்று திருமண ஆண்டுவிழாவைக் கொண்டாடிறலாம்.
ஸ்டார்ட் ம்யூஜிக்.
லல்லல்ல்லால்ல்லா....
பள்ளயிறுதி நாள் தானே..திருமண நாளா என்ன..எப்படி இருந்தாலும் பசுமை நிறைந்த நினைவுகள்..
அட்டகாசமா, சே சே.
ரொம்ப நல்ல பொண்ணுப்பா.
எஸ்கே சார்!!
அதெல்லாம் அட்டவணைக்குள் அடங்காம இருக்கும்.
இப்போ சொன்னா கதை கந்தல்:))
அட, திருமண நாளா? வாழ்த்துகள் வல்லி. மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
வரணும் வரணும் துளசி.
ம்யுஜிக்கா.
அப்புறம் மொய் யார் எழுதறது?/
நன்றிப்பா.
கண்ணோடு கண்ணோக்கின் சரி.
லலலலல்லா.ஆஹா இன்ப நிலாவினிலேஏஏஏஎ:)0
வாங்க பாசமலர். எழுதினது பள்ளிநாட்கள் கதை. இன்னிக்கு எங்க திருமணநாள்.
நன்றிம்மா.
நன்றி கீதா.
அப்புறம் பின்னூட்டம் போட்டவங்க ஒருத்தருக்கு நாளை
பிறந்த நாள். கண்டுபிடிங்கோ.
யாருக்குப் பிறந்த நாள்? திராச, சாருக்கா? இப்போவா வரும்? தெரியலையே? துளசி? கோபிநாத்? பாசமலர்? அல்லது உங்களுக்கே? அல்லது மதுரையம்பதி?
ம்ம்ம்ம்ம்ம் விஎஸ்கே?
திருமண நாள் வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் மீண்டும் வரட்டும் இதே நாட்கள் பல தடவை
டீச்சாரூக்கா??
//நாச்சியார் பேசும்போது ரொம்ப இனிமையாக கவிதை போல இருக்கு.//
உண்மை, உண்மை!
:))
//மீ த ஃபர்ஷ்டு?
//
@geetha paatti, ஆசை தோசை அப்பளம் வடை. தி.ரா.ச sir தான் பஷ்ட்டு. :)))
கீதா,
துளசிக்குத் தான் நாளைக்குப் பிறந்தநாள்.
பதிவு போட்டுடலாம்:))
அம்பி, திரா.ச சார், கீதா,பாசமலர் எல்லோருக்கும் நன்றி.
நம் எல்லா உள்ளமும் மகிழ்ச்சியோடு இருக்கவும் உடல் ஆரோக்கியத்தோடு இருக்கவும் பகவானைப் பிரார்த்திக்கிறேன்.
அருமைக் கவிதை - அக்கால கட்டத்திலேயே = தமிழாசான் சரியாகத் தான் கற்பித்திருக்கிறார். அசைபோடுதல் அழகு. இனிய மண நாள் நல்வாழ்த்துகள்.
நன்றி சீனா.
ஆமாம் அசை போடும் நேரம் இது.
ஆசானை நினைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
அவரைப்போல் எத்தனை ஏணிகள் நம் வாழ்வில்!!
உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.
அந்த வயசிலேயே அருமையான கவிதை எழுதியிருக்கிறீர்களே.
அது நான் பிறந்த வருடம்.
அடடா.
கவிதை பிறந்த நேரமா.
அந்தப் பிரிவில்லாத வரிகளை
உங்கள் பிறந்த நாளுக்கு இந்த வல்லிம்மாவோட பரிசா இருக்கட்டும்:0
நன்றி சுல்தான்.
Post a Comment