இன்று முழுவதும் இதுதான் பிரச்சினை டிவியில்.
தாரேன் சமீன் பர் படத்தின் கதநாயகன் இந்தப் பையன். இவனுக்கு எட்டு வயது என்றும் பத்து வயது என்று சிலரும் சொல்ல,
சிறந்த குழந்தை நடிகனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிற இந்தச் சின்னப் பையன் கேட்கும் கேள்வி
நான் ஏன் பெஸ்ட் ஆக்டர் என்று சொல்லப் படக் கூடாது??
அதற்கு எல்லா செய்தி சானல்களும் ஒரு போல்(poll)
எடுத்து அதற்கு 90% பார்வையாளர்கள் அவன் சொல்வது சரிதான் என்கிறார்கள்.
எப்போதும்போல் என்னால் இந்த விஷயங்களை உள்ளே உணர்வது கடினமாக இருக்கிறது.
ஆமீர்கான் எடுத்த படம். அவரும் படத்தில் பாதிக்கு மேல்தான் வருகிறாராம்.
இது டிஸ்லெக்சியா உள்ள ஒரு குழந்தையாக தர்ஷீல்
நடித்திருக்கிறாராம்.
நன்றாகவே நடித்திருக்க வேண்டும்.
நான் இந்தப் படம் பார்க்கவில்லை.
ஆனால் இந்தக் குழந்தையைப் பேட்டி எடுத்தவர் சரமாரியாகக் கேள்வி தொடுத்தாலும்,மகா ப்ரொஃபெஷனலாகப் பதில் சொன்னான்.
துளி பயம் இல்லை.படு காஷுவல்.
தீர்க்கமான தீர்மானம்...... பிரமிப்பாக இருந்தது.
கேள்விகள் வரும் முன்னாலேயே பதில்; ரெடி.!!
நான் தான் பெஸ்ட் எதிலேயும்.
தற்காலக் குழந்தைகள் வயதுக்கு மீறிய மனவளர்ச்சியுடன் இருப்பது அவ்வப்போது க்அண்களில் படுகிறது. அவர்கள் ஊடுருவும் பார்வையும் கணிப்பும் கருத்துகளும்
என்னை எப்போதுமே ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
அதனால் இந்தப் பையனின் துடிப்பும் ஆர்வமும் புதிதாக இல்லாவிட்டாலும்,
எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்
தங்கள் இளமையை இவ்வாறு
இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.
நம் ஊர் குழந்தை நட்சத்திரங்கள் சினிமாக்களில்
வயதுக்கு மீறிய பேச்சு பேசுவதைப் பார்த்து இருக்கிறோம்.
ஆனாலும் ஒருவரும் தாய் தந்தையரை மீறி நடந்ததாக இதுவரை கேள்விப்பட்டதில்லை.
இன்றைய தலைமுறைப் பெற்றோரும் தீவிரம். பிள்ளைகளும் தீவிரம். இதுதான் இந்தப் பேட்டியின் போது தெரிந்தது.
பள்ளி செல்லும் ஒரு சிறுவனின் சாமர்த்தியமன பதில்கள் நமக்கு இப்போது மனமகிழ்ச்சியை வரவழைத்தாலும்,
அதை ஒரு தேசியப் பிரச்சினை போலக் கையாளுவது ஊடகங்களின் தலையாய கடமையா??
கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்குப் பிறகு மேலும் பார்க்க விருப்பமில்லாததால்,
டிவியை நிறுத்திவிட்டேன்.
இன்னும் சென்செக்ஸ், தங்க நிலவரம், சிஎன்பிசி இது போல, இந்த தரையில் இறங்கிவந்த நட்சத்திரத்தைப் பற்றியும்
அவனா சாருக் கானா யார் பெஸ்ட் ஆக்டர் என்ற உயர்ந்த தலைப்பைப் பற்றி இன்னும் கருத்துப் பரிமாற்றம் தொடருகிறதோ என்னவோ!!!!
24 comments:
என்ன செய்ய, இன்னிக்கு இருக்கும் பசங்க எல்லாம் ஒரு போட்டிக்கு தயாராகும் மனப்பான்மையோடதான் இருக்காங்க, இருக்கும்படி வளர்க்கப் படுகிறார்கள், அப்படி வளர்க்க வேண்டிய சூழ்நிலை. யாரைன்னு குற்றம் சொல்ல?
குழந்தைகள் வளரும் சூழ்நிலையே அவர்கள் மனவளர்ச்சிக்கு காரணம் என்பது என் கருத்து.
குழந்தைகள் திரைப்படங்களில் வயதுக்கு மீறிப் பேசுவது இன்று நேற்றா நடக்கிறது. கருப்பு வெள்ளை காலந்தொட்டே. :-)
ஆமாம் , கொத்ஸ்.
மீடியா அட்டென்ஷன் இருக்கிற வரைக்கும் இந்தக் குழந்தை சந்தோஷமாக அதில் குளிப்பான்.
அப்புறம், ஒரு ஃப்ளாப் கொடுத்தால் இருக்கும் இடம் தெரியாது.
வாழ்க்கையே எதிர்நீச்சலும்,போராட்டமும்.
ஒரு துடிப்பான,அறிவாளியாக இருக்கும் இந்தக் குழந்தை இதே போலப் பிரகாசமான வாழ்வைத் தொடரவேண்டும்.
பேட்டி கொடுத்தபோது, கூடவே இருந்தவர்கள் ப்ராம்ப்ட் செய்ய நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டான்.
அதில் ஒன்று இந்த பெஸ்ட் ஆக்டர் விருது.:))பெரிய மனுஷனாக ஆக வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு வந்து விட்டது.
நானும் இன்னும் இந்தப் படம் பார்க்கலை.
மீடியான்னாவே ....எரியும் வீட்டில் குளிர்காயும் மனோபாவம்தான்.
பரபரப்பு வேணுமாமே......(-:
//எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்
தங்கள் இளமையை இவ்வாறு
இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.
//
அருமையான வரிகள்.
பக்கத்து வீட்ல ஓசி சிடி வாங்கி இனிமே தான் இந்த படம் பாக்கனும். :))
ஆமாம் துளசி. தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிற மாதிரி இருக்கு.
படம் ரொம்ப நல்லா எடுட்ர்ஹ்து இருக்காங்களாம்.
சைல்ட் ஆர்டிஸ்ட் பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வேண்டாமாம் அவனுக்கு. ஏக் தம் சூப்பர் அந்தஸ்த் கொடுக்கணுமாம்.
ஐ டிசர்வ் இட் அப்டீனு சொல்றான்.
அது குழந்தை.
ஆனால் எப்படி இந்த ஆட்டிட்யூட் வந்தது என்றுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு.
ஆஸ்கார் 2007ல அந்தக் குட்டிப் பொண்ணுஎன்ன படம்னு ஞாபகம் இல்லை,அதுவும் இப்படித்தான் ஓப்ரா ஷோல பேசித்து.
வரணும் காட்டாறு.
உண்மைதான்.
யார் பையன் காலத்திலிருந்து இது பழகியதுதான்.
படத்துKகு வெளில இந்தக் குழந்தைகள் பேசாது.
இப்ப எல்லாம் தலைகீழாக இருக்கு.
வயசுக்கு மீறின நினைப்பு:))
அம்பி, பார்த்துவிட்டு எழுதுங்கோ. நிஜமாவே நல்லா இருக்காம் இந்தப் படம்.
சின்னப் பசங்களை யூஸ் அண்ட் த்ரோ மெடிரியலாக ஆக்கிவிடுகிறார்கள்
அப்புறம் இயல்பான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவது கடினமாகும் என்றே கவலையாக இருக்கிறது.
நான் தாரே ஜமீன் பர் -க்கு விமர்சனம் எழுதும்போதும், இந்தப்பையனை குழந்தை நட்சத்திரம் என்று சொல்லக்கூடாது, சிறந்த நடிகர் என்ற விருதுக்குதான் பரிசீலிக்கவேண்டும் என்று எழுதியிருந்தேன்.
http://penathal.blogspot.com/2007/12/blog-post_31.html
படத்தைப் பாருங்கள், எனக்கென்னவோ அவன் கோரிக்கை நியாயமாகவே படுகிறது.
//சின்னப் பசங்களை யூஸ் அண்ட் த்ரோ மெடிரியலாக ஆக்கிவிடுகிறார்கள்
அப்புறம் இயல்பான வாழ்க்கைக்கு அவர்கள் திரும்புவது கடினமாகும் என்றே கவலையாக இருக்கிறது.//
உண்மைதான்.....
\\\அவனா சாருக் கானா யார் பெஸ்ட் ஆக்டர் என்ற உயர்ந்த தலைப்பைப் பற்றி இன்னும் கருத்துப் பரிமாற்றம் தொடருகிறதோ என்னவோ!!!!\\
ஆரம்பிச்சிட்டாங்களா!!??...
எதையும் விட்டுவைக்க மாட்டாங்க போல :(
மிகவும் அருமையான படம். அவசியம் பாருங்கள்..பரபரப்புக்காகவே மீடியா இதைச் செய்யக்கூடும்.
எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு... நீங்களும் பாத்துட்டு சொல்லுங்க.. உங்கள் பதிவிலிருந்து ஒரு வரி..
//அதனால் இந்தப் பையனின் துடிப்பும் ஆர்வமும் புதிதாக இல்லாவிட்டாலும்,
எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்
தங்கள் இளமையை இவ்வாறு
இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.//
மிகவும் கவனிக்கப்படவேண்டியவை. நானும் இதுமாதிரி சில சமயங்களில் யோசித்திருக்கிறேன். ஆனா, யாரும் இது பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதாகத் தெரியவில்லை. உண்மையில், இதனை ஒரு முன்னேற்றமாகவே எல்லாரும் பாக்குறாங்க.. எங்கே போய் சொல்ல..
அப்படியா சுரேஷ்.
நன்றாகத்தான் செய்திருக்கவேண்டும். இவ்வளவு நபர்களின் சப்போர்ட் கிடைக்குமா..
உங்க பதிவையும் பார்க்கிறேன்.
எனக்கு அந்தக் குழந்தையின் நடிப்பில் சந்தேகமில்லை. இதை தேசிய அளவில் விவாதம் செய்து இந்தஅளவுக்கு நேரம் வீணாக்கவேண்டுமா என்றுதான் தோன்றியது.
குழந்தை முலமாக வேறு யார் இதைஅரசியல் செய்கிறார்களோ என்றும் நினைத்தேன்.நன்றிப்பா.
//எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்
தங்கள் இளமையை இவ்வாறு
இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது.//
இன்றைய காலகட்டத்தில் தேவையான பயம் இது! :((((((( அப்பா, அம்மாக்கள் குழந்தைகளின் குழந்தைத் தனத்தை வெகுவாகவே இழக்க வைப்பது நம் நாட்டில் நடப்பது ஒன்றும் புதிதல்லவே! :(
வரணும் கோபிநாத்.
சுரேஷ் சார் எழுதின விமரிசனத்தைப் படித்தபிறகு, அந்தக் குழந்தை ஆசைப்படுவதில அர்த்தம் இருக்கு என்றுதான் தோன்றுகிறது.
ஆனால் அதை வைத்து இந்த மீடியா பரபரப்பு, வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் வயசுக் குழந்தை திசை மாறிப் போய்விடுமோ என்றும் தோன்றுகிறது:((
வரணும் மௌலி.
சிறுவர்கள் பிரகாசிக்கவேண்டும். அதே ப்ஓல அவர்களது எதிர்காலமும் கவனிக்கப் படவேண்டும்.
நானே ரொம்ப ஆசைப்படுகிறேனோ என்று நினைக்கிறேன்:))
வாங்க Bee morgan. THANK you for yr first visit.
நடப்பதெல்லாம் ரொம்ப செயற்கையாக இருக்கிறது. அப்படிப் பார்க்கப் போனால் சினிமாவே செயற்கை ஜாலம்தானே.
இப்படிப் பேசுவதும் நடப்பதும்தான் இன்றைய வழி என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
இதிலிருந்த வெளியில் வருகிற சாமர்த்தியமும் அவர்களிடம் இருக்கட்டும்:))நன்றிப்பா.
வரணும் பாசமலர்.
படத்தைப் பார்க்கவில்லையே என்று வருத்தமாக இருக்கிறது. ஆனால் இதுவும் ஒருவிதத்தில் சைல்ட் லேபர் தான்.
ஆமாம் கீதா.
புதிது இல்லை.
நம்ம குடும்பத்தில் நீ தான் பெரியவன், அட்ஜஸ்ட் பண்ணிண்டு போகணும்னு சொல்வதிலிருந்து நாம் அவர்களுடைய இளமையைக்
கொஞ்சம் சுரண்டிவிடுகிறோம்.:((
எனக்கும் இந்தப் படம் பார்க்க வேண்டும். வல்லி!
விசுவின் அரட்டை அரங்கத்தில் குழந்தைகள்...குழந்தைகளாகவா பேசுகிறார்கள்?
//இலவசக்கொத்தனார் said...
இன்னிக்கு இருக்கும் பசங்க எல்லாம் ஒரு போட்டிக்கு தயாராகும் மனப்பான்மையோடதான் இருக்காங்க, இருக்கும்படி வளர்க்கப் படுகிறார்கள்//
இது மெகா உண்மை.
//வல்லிசிம்ஹன் said..
எத்தனை குழந்தைகள் வெகு சீக்கிரம்
தங்கள் இளமையை இவ்வாறு
இழந்துவிடுகிறார்களோ என்ற பயம் வருகிறது//
இது பக்க விளைவு. திருக்குரள், ஆத்திச்சுடி,ஹாரி பாட்டர், சிட்னி ஷெல்டன், டிஸ்னி-டோனல்ட் டக்கின் வரலாறு என்று இன்னும் பல விஷயங்களை, இக்குழந்தைகள் மிகச் சிறிய வயதிலேயே படித்துவிடுகிறார்கள்.
சிறு வயதிலேயே புத்தகம் படிக்கும் பழக்கம், கணினி, information about anything and everything on the tip of the fingers - i mean the internet, அத்தனையும் சேர்ந்து, சிறு வயதிலேயே கருத்துச் சொல்லும் மனதைக் கொடுக்கத்தானே செய்யும். அது இம்மாதிரியும் வெளிப்படும் தான்.
படி, அறி ஆனால் கருத்துகளை இவ்விடத்தில் இப்படித்தான், சொல்ல வேண்டும் என்னும் கோட்டுக் குள்ளும் நில் என்பது.....
கேள்வி கேட்கும் அவர்களையும் குழப்பும் பதில் சொல்லும் பெற்றோரையும் குழப்பும்.
பதில் சொல்லும் பெற்றோர் இன்னும் நிறைய அறிய வேண்டும் , படிக்க வேண்டும். அப்பொழுது தான் பிள்ளைகளைத் தன்னை விட அறிவாளிகள் ஆக்குவதுடன், அவர்களை கோட்டுக்குள்ளும் நிற்க வைக்க முடியும்.
//இலவசக்கொத்தனார் said...
இருக்கும்படி வளர்க்கப் படுகிறார்கள், அப்படி வளர்க்க வேண்டிய சூழ்நிலை. யாரைன்னு குற்றம் சொல்ல?//
வளர்ப்பவர்கள் அதிகப் பொறுப்பு ஏற்க வேண்டும். சிறு வயது அறிவின் வேகம் என்பது கேட்பவை எல்லாம் உள்வாங்கும்.எனவே, பொறுப்பு என்பது நமக்கு அதிகம். :)
ஓ! ஜனவரி மாதம் பதிவா? தமிழ்மணத்துல முதல்ல இருந்தது...:)
Welcome New bee.
எனக்கு வெதர்பீ தான் ஞாபகம் வருகிறது.:)
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மைதான்.
எங்கள் கால கோடைவிடுமுறைக்கும் இப்போது வருகிற கோடை விடுமுறைக்கும் வித்தியாசம் ஒன்றே போதுமே.
இந்த ஊரிலாவது கொஞ்சம் விளையாடுகிறார்கள்.
கொத்ஸ் ஊரில் எல்லாம் குழந்தைகள்
சந்தோஷமாக இருப்பதாகத் தான் தெரிகிறது. எங்க் பேரன் காலையில்
எழுந்ததும் கேட்கும் முதல் கேள்வி வாட்ஸ் ஃபார் டுடே.?
என்ன ப்ரோக்ராம். அரேஞ்ச் அ ப்ளே டேட்.:))யாரைக் கூப்பிடப்போறே. மகாப் பெரிய பிரச்சினைகள் விடுமுறை வந்தால். அவனுக்கு நாள் பூராவும் ஏதாவது திட்டம் இருந்தால் சந்தோஷம்தான். நீச்சல்,கால்பந்து,பாட்டு இன்னும் என்ன என்னவோ. காலம் மாறிவிட்டது. அவ்வளவுதான்.
Post a Comment