வீட்டிலிருந்து வரும்போது இருந்த தைரியம் போய் விட்டது.
வலிக்கிறதா என்று கேட்டால் ஆமாம் என்று மட்டும் சொல்லத் தெரிந்தது.
அங்கே அப்போது தலைமை டாக்டர் திரு.டி.ஜே.செரியன்.
கொஞ்சநாட்கள் முன்னால் தான் என் தம்பிக்கு வைத்தியம் பார்த்தவர்.
அவனைச் சரியான நேரத்தில் காப்பாற்றியவர்.
அவரும் அப்போதுதான் ஐசியூவுக்கு வழக்கமான ரவுண்ட்ஸுக்கு வருகிறார்.
என்னைப் பார்த்ததும் புதுசா, என்று கேட்டவாறு நாடியைப் பிடித்துப் பார்த்து
''she is having spasms. give her immediate attention ''
என்றவாறு
என்னை வெளீச்சத்தில் பார்த்தவருக்கு அடையாளம் தெரிந்து, முகத்தைச் சுருக்கி நினைவு படுத்திக் கொண்டார்.
யூ வில் பி ஓகே என்று தட்டிக் கொடுத்து அடுத்த கட்டிலுக்குப் போய் விட்டார்.
ஸ்பாசமா!! அப்டின்னா சீரியஸா என்று மண்டை குடைய சுற்றி நின்றவர்களைப் பார்த்தால், அவர்கள் என்னோட டயலாக் அடிக்க நேரமில்லாதவர்களாய் சலைன் பாட்டில் ,இஞ்சக்க்ஷன்
, ரிலாக்ஸ்' வார்த்தைகள் சகிதம் வாயிலேயும் ஒரு மாத்திரயைப் போட்டார்கள்.
தூக்கம் வருகிற வேளையில் பெண்ணும் தங்க சிங்கமும் கண்ணாடி வழியாகப் பார்ப்பது தெரிந்தது.
இரண்டு மணி நேரம்தான், தூக்கம் கலைந்து விழித்தபோது நான் வேறு ஒரு தனி அறைக்கு வந்தாகி விட்டது.
பக்கத்தில் அம்மா, அப்பா, பெண்,சிங்கம் எல்லோரும்.
என்ன ஆச்சும்மா, இதற்கு மேல் அப்பாவுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.
எனக்கும் உண்மை நிலை புரியாத்தால் ஒண்ணும் இல்லைப்பா. முதுகு வலின்னு சொன்னதும் மாத்திரை கொடுத்து சரி செய்தாச்சு என்றேன்.
பிறகு வரிசையாக் எல்லா பரிசோதனைகள் தொடர்ந்தன.
முதுகுக்கு எக்ஸ்ரே, வயிற்றுக்கு ஸ்கான், ஈசிஜி இன்ன பிற ஊர்வலங்களாகத் தொடங்கி முடித்ததும்,
டாக்டரும் வந்தார்.
do you know what is wrong with you?
என்றதும் நான் இல்லை என்று தலை அசைத்தேன்.
உனக்கு இன்னும் இரண்டு வாரத்துக்கு வெறும் மோர்க் கஞ்சியும் சாதமும் தான் சாப்பாடு.
காரம், உப்பு ஒன்றும் கிடையாது, கூடாது.
ஒரு நாளுக்கு நாலு வேளை இது தான்.
''
Along with medicines for hypertension, you are going to take treatment for peptic ulcer"
ulcer???
அப்பாவுக்கு அல்சர் வந்ததும் படாத பாடுபட்டு மருந்து சிங்கப்பூரிலிருந்து வாங்கியதும் நினைவுக்கு வர மேலே பேச வாய் வராமல் சும்மா இருந்தேன்.
வயிற்றுப் புண்ணுக்கும் முதுகு வலிக்கும் என்ன சம்பந்தம்?
அதைத்தான் பிறகு விளக்கினார். டாக்டர்.
நான் பல்வலி தலைவலி இரண்டுக்கும் அடிக்கடி எடுத்துக் கொள்ளும்
குறிப்பிட்ட மாத்திரைகள்கள் ,
மாதம் இரண்டு தடவையாவது கடுமையான தலவலி,
முதுகுவலி என்று அந்த அந்த வேளைக்கு ரிலீஃபுக்காக
எடுத்துக் கொண்ட மருந்துகள் வயிற்றைக் கெடுத்து இருக்கின்றன.
வயிற்றில் வலியினால் வந்த வலி அலைகள், முதுகைப் பதம் பார்க்க
முதுகும், மார்பு பக்கமும் சூழும் வலி வந்து இருக்கிறது.
ஒரு தோற்றத்திற்கு அப்படியே நெஞ்சு வலிக்கான(heart attack) அடையாளங்கள் காட்டி இருக்கிறது.
ஒழுங்காகக் கவனித்துக் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் மூன்று நாட்களில் வீடு திரும்பினேன்.
மாத்திரைகளின் உதவியால்
அப்போதிலிருந்து கட்டுப்பாடான சாப்பாடும் மிதமான நடைப் பயிற்சியுமாரம்பித்தேன்.
மனம் அந்தப் பயத்திலிருந்து விடு பட ஆறு மாதங்கள் ஆகியது.
எல்லாவற்றுக்கும்
முதல் காரணம் காலை உணவு சாப்பிடும் வழக்கமே இல்லாமல் 12 மணி வரை பட்டினி கிடப்பது,
2, தெரிந்த தெரியாத வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டாவது வீட்டு வேலைகள் நின்று விடாமல்(!!) நான்
ஓடியது
இன்னும் சில பல சொல்ல விரும்பாத குட்டிக் காரணங்கள்.(அதில் ஆவக்காய் பிசிந்த சாதமும் உண்டு):))
இப்போது இந்த க்ஷணத்தில் இதை நினைவு கூர்ந்ததற்குக் காரணம்,
பெண்கள் மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளும் மாதமாக
இந்த அக்டோபர் இருப்பதால் தான்.
வேறு புதிதாக நமக்குப் பிரச்சினை என்று வருவதற்கு முன்னால் நாமே முன்னெச்சரிக்கையாக
வருடம் ஒரு முறை நம்மைப் பரிசோதித்துக் கொண்டு விட்டால்
பாதி துன்பங்கள் வராது என்று நினைக்கிறேன்.
நலம் பெற்று வாழ விரும்புகிறேன்.
அது போல நம் சமூகமும் விழிப்புணர்வோடு ஆரோக்கியமாக
வளம் பெற்று இருக்கப் பிரர்த்திக்கிறேன்.
29 comments:
இவ்வளவு அவசரமாக இரண்டாவது பதிவும் தொடர்ந்ததற்குக் காரணம் என் வருடாந்திர செக் அப் (இன்னும் இரண்டு நாட்கள் கழித்துச் செய்யப் போகும்)கொடுத்த பூஸ்ட் தான்:))
நமக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டுங்க. :))
வாங்க வல்லிம்மா! நீங்க சொல்வது சரிதான், நான் இந்த தடவை வரும் போது சும்மாஜாலியா எல்லா செக்கப்பும் செய்யலாம்ன்னு இருக்கேன்! அது தவிர நான் சொல்றேன் கேட்டு கோங்க மனசு ஜாலியா இருந்தா உடம்புக்கு ஒன்னும் ஆகாது, இது நான் கண்ட உண்மை!!!
நான் சுனக்கமா இருந்து யாரும் பார்த்ததும் இல்லை, அது போல என்னை பார்த்தபின் யாரும் சுனக்கமா இருந்ததும் இல்லை!!!!
எங்கம்மா சொல்றதாட்டமே சொல்றீங்க.. என்னமோ தலைவலின்னா மருந்தைபோட்டுக்கிட்டு துணியை இருக்க தலையில் கட்டியபடி வேலைகளை முடித்துவிட்டு எல்லாரையும் அனுப்பிவிட்டு தான் தலை சாய்த்து ஓய்வெடுப்பார்கள். ஹ்ம்...:( பார்த்துக்கொள்ளுங்க உடம்பை.. இதில் எனக்கும் அட்வைஸ் இருக்கிறது..காலை உணவு நானும் மிக தாமதமாகத்தான் எடுப்பேன்..
இந்த முறை செக்கப் லெ எல்லாம் நார்மல்னு எழுதித்தர வைக்கணும்.ஆமா.....
வல்லி, பெண்கள் எல்லோரும் கட்டாயமாக மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஓய்வில்லாத வீட்டு வேலைகளின் நடுவே உடம்பெயும் கொண்ஜம் கவனிக்க வேண்டாமா ??
எல்லோரும் படிக்க வேண்டிய பயனுள்ள பதிவு
வரணும் கொத்ஸ்.
பார்த்தீர்களா.:)
இனிமேல் கவலை இல்லை.
அபி அப்பா:))))
அதனால என்ன. இனிமேக் கொண்டு சிர்ச்சு கிட்டு கிரிச்சிகிட்டு சந்தோஷமா இருக்கேன்.
அதுக்காக இன்னோரு தடவை துபாய் வந்து மீட்டிங் போடணுமா???
எல்லா செக்கப்பும் நல்லபடியா
செய்து நல்லாவே இருக்கணும்.
வரணும் முத்துலட்சுமி.
பாதி வியாதி
நாமா
வரவழைச்சுக்கிறதுதான்.
உங்க அம்மாவைக் குறை சொல்ல முடியாது. எங்க காலம் அப்படித்தான் கழிந்தது.
மீண்டும் மீண்டும் என் பெண்ணிடமும் பசங்களிடமும் சொல்வது, வேலையோ கோபமோ
வயித்து மேல காட்டக் கூடாதுன்னு தான்.:))
உங்க பிள்ளைங்களுக்கு ஊட்டும்போது உங்க வாயிலேயும் ரெண்டு கவளம் போட எத்தனை நாழி ஆகப் போகிறது...
எல்லாருக்கும் காலை உணவு மிக மிக முக்கியம்.கவனமா இருங்கப்பா.
வரணும்பா துளசி. நல்லாத் தான் வரும் ரிசல்ட்.
பாசிடிவ் தின்கிங்;))0
ஆமாம் நீங்க ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டாச்சா?????:))
நன்றி சீனா.
வருடாந்தர
உடல் பரிசோதனை வாழ்க்கையின் மிக முக்கியமான அங்கம்.
நாமே சரியாக் கவனம் எடுத்துக் கொண்டால் மத்தவங்களுக்கும்
சுமை குறையும்.
இது கஷ்டப்பட்டு நான் கற்றுக் கொண்ட பாடம்.
இன்னும் சில பல சொல்ல விரும்பாத குட்டிக் காரணங்கள்.(அதில் ஆவக்காய் பிசிந்த சாதமும் உண்டு):))
ஹிஹிஹி, நல்லா இருக்குமா? நான் மோர் சாதத்துக்குத் தொட்டுக்கறதே என்னோட மறுபாதி பார்க்கிற பார்வையில், அடுத்த முறை ரகசியமாச் சாப்பிடணும்னு நினைச்சுப்பேன். சாதம்லாம் ம்ஹும் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! :))))))
நல்லவேளையா, அப்புறமாவது உணவுக் கட்டுப்பாட்டில் இருந்தீங்களே, வாழ்க! வளர்க! ஒண்ணும் வராது, கவலைப்படாதீங்க!
நல்லா இருக்குமாவா????????கீதா!!
அருமை அருமை அருமையா இருக்கும்.
அது ஒரு நிலாக்காலம்:)))
தாங்கும் வரை குடல் தாங்கியது. பிறகு தடா போட்டு விட்டது:))
அவர் உங்களைச் சாப்பிட விட மாட்டாரா:))
ஆதர்ச தம்பதிகள்ப்பா. நன்றாக இருக்கணும்.
\\நமக்குப் பிரச்சினை என்று வருவதற்கு முன்னால் நாமே முன்னெச்சரிக்கையாக
வருடம் ஒரு முறை நம்மைப் பரிசோதித்துக் கொண்டு விட்டால்
பாதி துன்பங்கள் வராது என்று நினைக்கிறேன்\\
நல்லதை சொல்லியிருக்கிங்கம்மா ;))
//ஆவக்காய் பிசிந்த சாதமும் //
அடக் கடவுளே 2 நாள் முன் நானும் கிடாரங்காய் பிசிந்த சாதம் சாப்பிட்டேன்.
//முன்னால் நாமே முன்னெச்சரிக்கையாக
வருடம் ஒரு முறை நம்மைப் பரிசோதித்துக் கொண்டு விட்டால்
பாதி துன்பங்கள் வராது //
முற்றிலு்ம் உண்மை........இதற்கு மீறி வருவது இறைசெயல்.
வரணும் கோபிநாத்.
நல்லதையும் செய்திடலாம்.செக்கப் செய்திடலாம்
நலம் பெற்று வாழ விரும்புகிறேன்.
அது போல நம் சமூகமும் விழிப்புணர்வோடு ஆரோக்கியமாக
வளம் பெற்று இருக்கப் பிரர்த்திக்கிறேன்.
Good. WISH WELL AND BE WELL
வல்லிம்மா...எல்லாம் தெரிந்திருந்தும் கவனக் குறைவா இருக்குறத மாத்திக்கனும்.. ஹ்ம்ம் நன்றி..
நினைச்சேன்!
எல்லாரும் சமத்தா என்னோட "கசடற" ப்ளாக்குக் போய் இதயம் பற்றிய தோடரைமீண்டும் ஒருமுறை படிங்க!
:))
ஹி ஹி! ஒரு ஓசி விளம்பரம்!
http://kasadara.blogspot.com
அதுதான் அங்க தப்பே மங்கை. எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரிகள் தான் தப்பு பண்ணுவார்கள்.
:))
நமக்கு ஒண்ணு ஒத்துக்காதுனு தெரிஞ்சும் நாம அதைச் சாப்பிட்டா இப்படித்தான்.
ரெண்டு தடவை பட்டாச்சு. இனியும் பட சக்தி கிடையாது ஒழுங்கா இருப்பேன்.:)
நன்றிப்பா.
அட, விஎஸ்கே சாரை மறந்து பதிவு போட்டு விட்டேனே.
சார் எழுதினது அத்தனையும் உண்மை.
உங்க ஒபினியனையும் சொல்லுங்க.
கசடற மீண்டும் படித்தாலாவது புத்தி வருதானு பார்க்கிறேன்.:)
வல்லிம்மா, இப்படி ஆள் ஆளுக்கு பயமுறுத்தினா எப்படி :-) அதெல்லாம் நேரம் தவறாம சாப்பிடுடுவேன், ஆனா இந்த வலிநிவாரணி மாத்திரைகள்தான் விடமுடியவில்லை. என்ன செய்ய தெரிந்தே வேற வழியில்லாமல் இருக்கு? இப்ப நீங்க அந்த வலி, இந்த வலிக்கு மாத்திரை போட்டுக் கொள்வதில்லையா?
நட்டப்பா, நானும் வாழ்க்கையை சீரியசாக எடுத்துக்காத ஆளுதான். ஆனா நாற்பது வயச தாண்டினா
பெத்தவங்க, பணம் காசு தராங்களோ இல்லையோ, வியாதிங்க வர சான்ஸ் ஜாஸ்தி ஐயா! (அபி அப்பா வயிற்றில் புளி கரைத்தாயிற்று)
முக்கிய காரணமா நீங்க சொன்னதில் முதல் பழக்கம் இன்னும் தொடருது எனக்கு... அல்சர் வந்தும் :)
உஷா,
ஆளாளுக்குக் கதை வெளில வரது.
வலி மாத்திரைல கோட்டட் ஆஸ்பிரின் கிடச்சது கொஞ்ச நாளைக்கு. இப்போ அவசரத்துக்கு பானடால். இது ஒத்துக்கிறது. ஒண்ணும் செய்யலை இது வரை:))
பெத்தவங்க தராட்டாலும் பாட்டி தந்த சர்க்கரை என்னிடம் இருக்கு:)))
எது சிவா. மாத்திரையா, ஆவக்காயா,
ஓஹோ காலை உணவு உள்ள போறதில்லையா.
வேணாம்பா. ஏதாவது ஓட்ஸ் கஞ்சியாவது சாப்பிடுங்க.
வல்லிம்மா!
பெண்களுக்கான எச்சரிக்கை மணியை
அடித்துவிட்டீர்கள். நன்று. பல பெண்கள்
தங்கள் உடல் நலம் பேணுவதேயில்லை.
அந்தத் தலைவி ஒரு நாள் படுத்துவிட்டால்...வீடே ஸ்தம்பித்துவிடும்.
நல்ல உடல் நலத்தோடு வாழப் பிராத்திக்கிறேன். நானும் ஒரு late breakfaster -தான்.ஹி..ஹி..
வரணும் எச்சரிக்கை மணி உங்களுக்கும் கேட்டது சந்தோஷம்;)00
எல்லாருக்கும் ஏந்தானிந்த லேட் ப்ரேக்ஃபாஸ்ட்
வழக்கமாகிறதோ தெரியலை.
பார்த்துக்கோங்க.வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிப்பா.
அடடா! இவ்ளோ விஷயம் நடந்து இருக்கா, நான் 2 நாள் லீவுல போன நேரத்துல? :)
இப்பவாவது உணவு எல்லாம் கட்டுபாட்டுல இருக்கா? இதுல யாரோ பிரிகேட் ரோடுல இருந்து பெங்காலி ஸ்வீட்ஸ் கேட்டாங்க எங்கிட்ட. :p
ஆமாம் அம்பி. நாந்தான்பா கேட்டேன்:)))
பொட்டியைப் பார்த்துட்டுச் சிங்கத்துகிட்ட கொடுத்துடப் போறேன் அவ்வளவுதானே.:)
இது என்னடா இது. பார்க்கக் கூட விட மாட்டேன்னு சொல்றாங்களே.!!!!!
Post a Comment