Blog Archive

Friday, October 12, 2007

நவராத்திரி வாழ்த்துக்கள்

Posted by Picasaஅனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
அன்னையர்கள், சினேகிதிகள், சகோதரிகள்
நம் வலைப்பதிவு நண்பர்கள் எல்லோரும்
நன்மை பெற்று, வாழ்க்கையில் வெற்றிகள்
அடைந்து,
அன்பும் ஆதரவும்,அணைப்பும் பெருகும் குடும்பங்களோடு
சிறப்பாக வாழ அன்னை பராசக்தி
அருள்வாள் என்று நம்புகிறேன்.
அவள் நம்மைக் காக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

23 comments:

துளசி கோபால் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்து(க்)கள் வல்லி.

நம்ம வீட்டுக் கொலுவுக்கும் கட்டாயம் வாங்க.

இலவசக்கொத்தனார் said...

வந்துட்டோமில்ல. சுண்டலைச் சரியாத் தாங்க!

ambi said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்.

இன்னிக்கு என்ன சுண்டல்...? அதை சொல்லுங்க முதலில். :p

நானானி said...

வல்லி! முந்திக்கொண்டீர்கள். உங்களுக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!! எங்கள்வீட்டு கொலுவுக்கும் வந்து மஞ்சள் குங்குமம்
பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்.
சரியாப்பா?

நாகை சிவா said...

வாழ்த்துக்களுக்கு நன்றி...

உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்

சூடானுக்கு சுண்டல் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க துளசி.
கொலுவுக்கு முதல் வருகை நீங்கதான்.

நாங்களும் உங்க கொலுவைப் பார்க்கணும்.
படம் போட்டுடுங்க.:))

வல்லிசிம்ஹன் said...

வாங்க கொத்ஸ்,
வீட்டில
கொலு வச்சாச்சா?
இன்று கடலைப்பருப்பு சுண்டல்.
சுலபம்தான்.
அங்க வரதுக்குள் ஊசிப் போயிடும்.அதனால
செய்து பார்க்கவும்.:))))

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
கலயாணத்துக்கப்புறம் முதல் கொலு வச்சாச்சா??
தினம் இனிப்பு வேற செய்யணுமே:)))

கடலைப் பருப்பு சுண்டல். தேங்கா, மாங்கா போட்டது:))
நெய்யப்பம் நைவேத்யம் லக்ஷ்மிக்கு.

வல்லிசிம்ஹன் said...

வாங்க நானானி. நானும் உங்களை நம்ம வீட்டு கொலுவுக்கு அழைக்கிறேன்.

கண்டிப்பாக மஞ்சள் குங்குமத்துக்கு வரணும்.
உண்மையான அழைப்பு போனில் தேதி குறிப்பிட்டுச் சொல்கிறேன்.
ரொம்ப நன்றிப்பா அழைப்புக்கு.
மீண்டும் வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் சிவா.
புலி சாப்பிடறதுக்குச் சுண்டல் டிஹெச் எல் லில் பார்சல் வருதேஏஏஏஏஏஎ

ஆடுமாடு said...

இப்படி பதிவுல ஏதாவது பாத்துதான் ஓ...நவராத்ரியா...கிருஷ்ண ஜெயந்தியான்னு தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. நன்றி.வாழ்த்துகள்.
ஆடுமாடு

வல்லிசிம்ஹன் said...

ஆடுமாடு!!
உண்மையாகவா.
ஊரெல்லாம் அல்லொல கல்லோலப் படுகிறதே.
எந்த உலகத்துல இருக்கீங்க??
வாழ்த்துகளுக்கு நன்றி.

நானானி said...

நானும் அதே!!!!!!!!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

வல்லியம்மா கொலு நல்லா இருக்கு. நான் உள்ளூர்தானே எனக்கு மட்டுமாவது சுண்டல் தரக்கூடாதா. அப்படியே நம்ப வீட்டு கொலுவுக்கும் வந்து சுண்டல் எடுதுக்கோங்க. அம்பியும் விருச்சிகராசியும் வரத்துக்குள்ள வாங்க அப்பறம் சுண்டல்கிடைக்காது

கோபிநாத் said...

நவராத்திரி தின வாழ்த்துக்கள் ;))

வல்லிசிம்ஹன் said...

வரணும் தி.ரா.ச.
கட்டாயம் நீங்களும் உங்கள் நற்றுணையும்(:)))
வரணும்.

நானும் கண்டிப்பாக வருகிறேன்.
நவராத்திரி வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அமீரக நவராத்திரி எப்படி இருக்கிறது கோபிநாத்?
கோவில் போக முடிந்ததா...:)))
நன்றி.

செல்லி said...

வல்லி
உங்களுக்கும் நவராஅத்திரி வாழ்த்துக்கள்.
கொலு நல்லாருக்கு!

மதுமிதா said...

நவராத்திரி தின வாழ்த்துகள் வல்லிமா
அப்போ சுண்டல் நிச்சயம் கிடைக்கும்
:-)

வல்லிசிம்ஹன் said...

வரணும் செல்லி,
உங்க பதிவையும் படிச்சேன். நோன்பு இருந்து நவராத்திரி கொண்டாடுவீர்களா.

வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் மதுமிதா, கொலுவுக்கு.

வீட்டுக்கு வாங்க. சுண்டல் உண்டு:))

மெளலி (மதுரையம்பதி) said...

வல்லியம்மா...நான் லேட், ஆனாலும் பரவாயில்லைன்னு இன்னைக்கு வந்துட்டேன்....

கோபி said...

Please take part in testing Tamil Domain

http://உதாரணம்.பரிட்சை/முதற்_பக்கம்
http://உதாரணம்.பரிட்சை/தமிழ்