சென்னை வந்ததில் விநாயக சதுர்த்தியை ரசிக்க அனுபவிக்க முடிந்தது. வேறு ஊராக இருந்தால் இன்னுமொரு பொழுதாகக் கழிந்து இருக்கும்.
வந்ததும் வீட்டுக்குள் ஓடிய பல்லி,கரப்பான் பூச்சி அதுகளொடு ஒண்டுக் குடித்தனம் இருந்த எலியார் எல்லோரையும் நோட்டீஸ் கொடுத்து வேறு இடத்துக்குப் போகச் சொன்னோம்.:))
என்ன இருந்தாலும் அவர்கள் சௌகரியங்கள் வேற,
நம்ம வாழ்க்கை முறை வேற இல்லையா?
தூசி நிறைய என்று சொல்ல முடியாது.
ஒரு வாளித் தண்ணீரில் இரு பாதங்களையும் கழுவி விடலாம்.
தரையில் இருந்த ஜீவ ராசிகளைவிட மேலே தொங்கிய சிலந்தி சார் எல்லாம் அவ்வளவு பயமுறுத்தவில்லை.
வந்த அன்று இரவே சுனாமி பயம் சொன்னார்கள். அதுவும்
கொஞ்ச நேரத்தில் வாபஸ் ஆகிவிட்டது.
என்னடா நாம வந்த நேரம்னு யோசிப்பதற்குள்
நிலைமை மாறியதால் நல்ல நேரமே என்று நினைத்துக் கொண்டேன்.
வீட்டில் இரு பூட்டிய வாடை போக நான்கு நாட்கள் ஆகி இருக்கு.
பின்ன போகும் பொது வைத்துவிட்டுப் போன அம்பிகா
அப்பளம், இரண்டு வெங்காயம் இதெல்லாம்
வாசமிகு மலர்ச்சோலையாக மாற்றி இருக்கிறது.
எலி மட்டுமா வரும்!!
அவங்களைத் தேடி பூனையாரும் நடமமடுகிறார்.
ஏதோ நம்ம ஜிகே உறவாக இருக்கப் போகிறதே என்று
அதன் மேல் தண்ணியைக் கொட்டாமல் இருந்தேன்P:))
அப்படி முறைக்கிறது அந்த சாம்பல் கலர் பூனை.
வசதியா மாடி ஜன்ன்ல் வழியாக உள்ளே வந்து
கூடத்தில் இருக்கும் சோஃபாவில் ஐய்யா தூங்கி இருக்கார்.
அன்பே வா அருகிலேஏஏனு கனகா பாடாத குறையா
ஏகப்பட்ட மாடி வளைவுகள் இல்லாமல் சின்னதாக அளவாக வீடு கட்டிக் கொடுத்த பெரியவர்களைச் சொல்லணும்.
இன்னும் மாடிக்குச் சுத்தம் செய்யப் போக வில்லை. என்னென்ன ஆச்சரியம் காத்து இருக்கோ.
தாய் மண்ணே வணக்கம்!!
19 comments:
//அன்பே வா அருகிலேஏஏனு கனகா பாடாத குறையா
ஏகப்பட்ட மாடி வளைவுகள் இல்லாமல் சின்னதாக அளவாக வீடு கட்டிக் கொடுத்த பெரியவர்களைச் சொல்லணும்//
எதுக்கு சொல்லுரீங்கன்னு புரியல்லையே?
மௌலி, கிளி பேச்சு கேக்கவானு ஒரு படம்...
சரியா..
அதில் ஒரு பெரிய்ய்ய பூத் பங்களா.
அதில் கனகா ,அன்பே வா அருகிலேனு....
ஒரு இடத்திலிருந்து இன்னோரு இடம் போயி மாடிப்படி வளைவுகளில் இருந்து மமூட்டியைப் பயமுறுத்துவார்.
எங்க வீட்டில ஒரே ஒரு மாடிப்படி.
அது வழியா எலி ஏறிப்பொறதை நான் பார்த்தேன்...:))
இதே மாதிரி ரெண்டு மூணு மாடிப்படிகள் இருந்தால் என்ன கதி!!!!!
அதை நினைத்து, அப்பாடி நல்லவேளை சிறிய அளவில் வீடு கட்டிக்கொடுத்தார்களே என்று நன்றி சொன்னேன்பா:))))
வெல்வினைகள் அகன்றன போலும்!
:-)
புள்ளையார் இருக்குமிடத்தில் எலி கட்டாயம் இருக்கும்.
எலி இருக்கும் இடத்தில் ஜிகேஸ் இருப்பாங்க.:-)
எலி மாடிப்படிக்கட்டில் ஏறிப்போச்சா? இல்லை கைப்பிடி வழியாவா?
எது எப்படியானாலும் சி.செ. உங்களை வரவேற்று வாழ்த்துகிறது.
வல்லிம்மா பொட்டியை சுத்தம் செய்து பதிவு எல்லாம் போட ஆரம்பிச்சிட்டிங்க போல! :)
எப்படி இருக்கு நம்ம ஊரு?
வரணும் ஜீவா.
வேரறுக்க அவன் இருக்கும் போது நமக்கு எந்த வினை அண்டும்!!!
வெறும் சுண்டெலி எல்லாம் ஜுஜூபி :))))
பாவம் அதையும் அடிக்கலை. பக்கத்து வீட்டுக்குப் போனு சொல்லியாச்சு:))
வரணும் துளசி, ஆஹா அந்தச் சாம்பல் பூனையோட சாமர்த்தியத்தை என்ன சொல்வேன்.
எலி சார் படியேறிப் போனால் இவர் கைப்பிடி மேல் பதுங்கி நிற்கிறார்.
ஒரு ரியல் டாம் & ஜெர்ரி ஷோ:)))
என்ன ,,,மாடிக்குப் போகவே பயமா இருக்கு.
அங்கே யாரு குடித்தனம் செய்யறாங்களோ!!!
ஊரை விட்டு ரெண்டு மாசம் வெளில போகலாம். பத்து மாதம்னு சொன்னா பிரச்சினைதான்:))))
வரணும் கோபி. ஆஹா அதுதானே இல்லை:)
இன்னும் ஒரு பொட்டி பிரிக்கலை.
அதில பரண்ல ஏத்த வேண்டிய குளிர்கால உடைகள் இருக்கின்றன,.
நம்ம ஊருக் குளிர்தான் தெரியுமே:)
அடுத்த டிரிப்பும்போது (!!!!!?????)பிரிக்கலாமானு, தமிழ்மணத்துக்கு வந்து விட்டேன்:))))
வந்தவுடன் கர்மமே கண்ணாக ஒரு பதிவை போட்டீங்க பாத்தீங்களா? அங்க தான் வல்லி மேடம் நிக்கறீங்க, (கால் வலிக்கும் உக்காந்துக்கோங்க) :p
அம்பி, நின்னு நின்னு அலுத்துப் பதிவு போட வந்துட்டேன்.:))0)
இன்னும் சீரியஸாகப் படிக்க ஆரம்பிக்கலை.
கணினி இருக்கு
கற்பனை இருக்கு
கதைக்கத்தான் நேரமில்லை:))
ம்ம்ம்ம்., வல்லி, நீங்க தப்பிச்சுட்டீங்க, எனக்கு என்ன எல்லாம் தாய்மண்ணிலே காத்துட்டு இருக்கோ தெரியலை!, போகட்டும், இந்தக் கணினிக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம் போலிருக்கு. நேத்திலே இருந்து மறுபடி ஜி3 பண்ண முடியாமல், யாருக்கும் போய்ப் பின்னூட்ட்ம் போட முடியாமல், புதுப் பதிவு எழுத முடியாமல் ரொம்பவே கஷ்டமா இருக்கு. இப்பொ போடற விநாயகர் பதிவே, முன்னாலே எழுதி சேமிச்சு வச்சது தான். இன்னும் "சிதம்பர ரகசியம்" பக்கம் போக முடியலை.:(
நான் ஒண்ணு எழுத அதிலே நான் எழுதின சிதம்பர ரகசியம் சம்மந்தமான பதிவுக்குப் பதிலா வேறே ஏதோ ஜி3 ஆகுது! எல்லாம் நேரம்! :P
அப்பாடி, ஒரு வழியா உங்க பதிவிலே பின்னூட்டம் போட்டுட்டேன் வல்லி, இன்னும் இந்தியாவிலே என்னோட கணினி என்ன செய்யப் போகுதோ தெரியலை, ஏற்கெனவே நான் வரும் போது அதை விட்டுட்டுப் போறேன்னு கோபத்திலே என்னோட பதிவை எல்லாம் பப்ளிஷ் பண்ணாமலே இருந்துச்சு, வேதாவுக்கு அனுப்பி பப்ளிஷ் பண்ணிட்டு இருந்தேன், இப்போ நினைச்சாலே பயமா இருக்கேஏஏஏஎ!!!!!!!!
கீதா, ஜி3ன்னா என்ன அர்த்தம்:((((?:?
கணினி எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.
பயப்படாம வாங்கோ.:)))
நண்பர்கள் பட்டாளம் இருக்கே.
கவலை ஏன்....
ஜி3க்கு அர்த்தம் தெரியாமல் இப்படி ஒரு "அப்பாவி"யா நீங்க? நம்ம ப்ளாக் யூனியனிலே இருக்காங்களே ஜி3, அவங்களைக் கெளரவப் படுத்தும் விதமாய் யூனியன் மக்கள் எல்லாரும் சேர்ந்து காப்பி, பேஸ்ட் என்றால் ஜி3, ஜி3 என்றால் காப்பி, பேஸ்ட் எனப் பெயர் மாற்றம் செய்து பல நாள் ஆகி, அது பத்தி நான் ஒரு பதிவும் போட்டுட்டேனே? வலை உலகுக்கு அறிவிக்கும் விதமாய்த் தான் அந்தப் பதிவே! இருங்க லிங்க் தரேன்.
sivamgss.blogspot.com/2007/08/3.html
ஆஹா, ஜி3ன்னா ஒரு ஆசாமியா. ராமா.
:)))
ஆசான் சொன்னாக் கேட்டுக்க கேட்டுக்க நான் ரெடி.:)))0
லின்க் போயிப் பார்க்கிறேன்.
வேளுக்குடி கீதை சொல்கிறார் .
தினமும் பொதிகையில் காலை 6.30க்கு
//வேளுக்குடி கீதை சொல்கிறார் .
தினமும் பொதிகையில் காலை 6.30க்கு//
வீட்டை கூட்டி பெருக்கி கொண்டே நானும் பார்க்கிறேனே! :)))
எவ்ளோ எளிமையா, ஆனா இனிமையா, சரளமா சொல்றார் இல்ல!
சன் டிவில பிரம்மோத்ஸ்வம் காட்றாங்களே! :)
அப்படியா சேதி.
அம்பி,
நானும் அதைக் கற்பனை செய்து பார்த்துக்கிறேன்:)))
கீதை புரிய வைக்கிறாரே அதுக்கே ஆயிரம் நமஸ்காரம் சொல்லணும்.
ஆனால் 15 நிமிஷம் கொஞ்சம் குறைவுதான்.
ஊரெல்லாம் சுத்தி முடிச்சு திரும்பியாச்சு போலிருக்கே அம்மா. சென்னை வெயில் மழை எப்படி இருக்கு?
Post a Comment