கண்ணனையும் பாகவதத்தையும் படிக்க நேரம் இருக்கிறதோ இல்லையோ நோக்கம் வேண்டும்.
எப்பவோ இந்த ஊருக்கு வரும்போது எடுத்த வந்த ஆன்மீகப் பத்திரிகை
கைக்குக் கிடைத்தது.
என் மருமகள் மாமியார் சம்பந்தப்பட்ட எல்லா பொருட்களையும் அருமையாகப் பாதுகாத்து வைக்கும் குணம் கொண்டவர்.
அம்மா நீங்க எப்போ எதைக் கேட்பீர்கள் என்று தெரியாது, அதனால்
ஒரு பேப்பர் கூடத் தூக்கிப் போடாமல் வைத்து இருக்கேன் என்று
சொல்வார்கள்.
இந்த மாதிரிக் காப்பாளிகள் இல்லாவிடில் என் வாழ்க்கை கொஞ்சம் தகறாரு செய்யும் என்றுதான் நினைக்கிறேன்.
அப்படிக் கிடைத்த புத்தகத்தில் ரதாங்கபாணி என்ற கட்டுரை
நம் இராஜாஜி எழுதியது ஒன்று பார்த்தேன்.
கோதண்டபாணி, சாரங்கபாணி எல்லாம் சரி.
சக்கரபாணிப் பெருமாளும் கும்பகோணத்தில் கோவிலில்
வணங்கியது நினைவில் இருக்கிறது.
அவனுடைய ஆயிரம் நாமத்தில் இந்தப் பெயரும் எழுதி அவன் நம்மை
ரட்சிப்பான் என்றும் சொல்லி இருக்கிறது.
ரதாங்கபாணி என்றால் ரதத்தை அங்க மாக ஏற்றவன்,
அவன் பார்த்தசாரதி.
மஹாபரதத்தில் போரில் பார்த்தனுக்கு
அருள் புரிந்து ,அவனைக் காக்கத் தனியொருவனாகத்
தேரொட்டியாகப் பணி புரிந்தான்.
இது நானாகப் புரிந்து கொண்டது.
திரு.ராஜாஜி எழுதிய அழகுத் தமிழ் இன்னும் தெளிவாகப் புரிய
வைக்கிறது.
எளிமையாகக் கண்ணனைப் பற்றி எடுத்துக் காட்டுகிறார்.
போரின்போது கர்ணன் விடும் சரம் அர்ஜுனனை
அழிக்க வரும்போது,தன் பாதத்தால்,
தேரை அழுத்துகிறான் கண்ணன்.
அது ஐந்து அங்குலம் கீழே பூமியில் பதிந்து விடுகிறது.
தலைக்குக் குறி வைத்த சரம் தலைப்பாகையைக், கிரீடத்தைக் கொண்டு போய் விடுகிறது.
அர்ஜுனன் பிழைத்துவிட்டான்.
கண்ணன் கீழே இறங்கித் தேர்க்காலை , தோள் கொடுத்து உயர்த்துகிறான். மறுபடியும் தேர் நிலைப்படுகிறது.
இதனாலேயெ அவன் ரதாங்கபாணியாகிறான்.
அவனுடைய பஞ்சாயுத ஸ்தோத்திரத்தில் சங்கம், சக்கிரம்,வில்,கட்கம்,கதை எல்லாம் அடைக்கலம் கொடுக்கும் பொருட்களாகப் பார்க்கிறோம்.
சங்கப்ருநந்தகி சக்ரி சார்ங்கதன்வா கதாதர
ரதாங்கபாணி ரக்ஷோப்யக சர்வப் ப்ரஹணாயுத..
அவனை நான் வணங்குகிறேன்.
இவ்வளவையும் என் நினைவுக்குக் கொண்டுவந்தது ஒரு நினைவுதான்.
அந்த நினைவு, மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்பும்
நாள் வந்தது ஒன்றே காரணம்.
பத்துமாதங்கள் வெளியே இருந்துவிட்டு த் தமிழ்நாடு திரும்புவது
என்னைப் பொறுத்தவரையில்.
மிகப் பெரிய விஷயம்.
இத்தனை மாதங்களும் கூடவே இருந்து காத்தவன் இனியும்
எங்களோடு இருப்பான்.
என் அமீரக நண்பர்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
சென்னையில் மீண்டும் பார்க்கலாம்.
எல்லோருடைய அன்புக்கும் நன்றி.
16 comments:
அருமையான விளக்கம். ஆக தேர் மீண்டும் நிலைக்கு வருகிறதுனு சொல்லுங்க.
:))) welcome back to chennai.
ஊருக்கு வாரீங்களா. வாங்க வாங்க. கண்ணனை பற்றி... எம்பெருமானை பற்றி படிக்க படிக்க எனக்கும் என் கிடை ஆடுகள் மாதிரி மகிழ்ச்சி தூக்கும். ஆன்மீகம் எனக்கு தெரியாது. நீங்களாவது நிறைய எழுதுங்க. எங்க கண்ணனைப் பற்றி.
ஆடுமாடு.
சர்வப் ப்ரஹணாயுத
ஓம் நம இதி
எல்லாம் நல்லபடியாகவே நடந்தேறும்.
இதுவரை காப்பாத்தியவன் இனியும் காப்பாத்துவான்.
அதைவிட அவனுக்கு வேறு என்ன வேலை?
பாரதப் போரில் தேரோட்டியவன்....அதனால் பாண்டவர்தம் வாழ்க்கைத் தேரோட்டியவன்...அவனுக்கு ரதாங்கபாணி என்ற பெயர். அதற்கு நல்ல விளக்கம். ஆனால் ஒரு ஐயம். கோதண்டபாணி என்றால் கோதண்டத்தைக் கொண்டன். ரதாங்கபாணி என்றால் ரதத்தை அங்கமாகக் கொண்டவன் என்ற பொருளா?
அருமையான விளக்கம் வல்லியம்மா...நன்றி.
ஆமாம் அம்பி,
தேர் நிலைக்கு வரப் போறது. பள்ளம் கிள்ளம் இல்லாமல் பார்த்து நிறுத்தணும்:)
சென்னை வந்து செட்டில் ஆனப்புறம் பேசுகிறேன்.
நன்றிம்மா.
வாங்க ஆடுமாடு:)
கிடையில் கிடக்கும் மாடுகளைப் பார்த்துக் கொண்டவன் தானே கோபாலன்.
எல்லா
உயிரினங்களிடமும் அன்பு கொண்டவன்,
அவனைப் பற்றி எழுதத் தயக்கமே வேண்டாம்.
ரொம்ப நன்றிம்மா.
ஆமாம் துளசி,.
அப்பப்போ நாம தான் பார்த்துக்கிறோம்னு நினைப்பு வரும் போது நல்லத் தட்டி விடுகிறான்.
அப்புறம் சரியாகிவிடுகிறது.
:)))
வரணும் ராகவன்.
இந்தப் பாராதான் விட்டுப் போச்சு.
ரதாங்கம் என்றால் தேர்ச்சக்கிரம்.
அவனுக்கு ஏற்கனவே சக்ரம் --சுதர்சனம் ஒரு ஆயுதம் அல்லவா.
இந்தச் சக்கிரத்தையும் வைத்து அர்ஜுனனைக் காப்பாற்றுகிறான்.
கண்ணன் கால் பட்டுத் தேர்ச்சக்கிரம் கீழே அழுந்திவிடுகிறது.
அதனால் தான், அவன் தோள்வலிமையாலே அது மறுபடி மேலே வருவதால் அவன் தோளுக்கு அது இன்னோரு ஆபரணம் போல ஆகிவிடுகிறதாம்.
ஏற்கனவே இருக்கும் ஐந்து காப்புகள் போல இதுவும் இன்னோரு ஆயுதமாகச் செயல் படுகிறது.
ஒரு சக்கிரத்தை உதைத்து அசுரனை அழித்தான்.
இன்னோரு சக்கிரத்தை வைத்துப் பாரதப் போரைத் தர்ம வழியில் இழுத்துப் போகிறான்.
நன்றி ராகவன் ,நீங்கள் கேட்டதால்தான் , இன்னோரு பதிவு போடாமல் பின்னூட்டத்திலேயெ பதில் கொடுத்துவிட்டேன்.
மிகவும் நன்றி.
வரணும் மௌலி.
இன்னும் விளக்கமாக அழகாக எழுதி இருக்கலாம். திடீர் அசதி. நிறுத்திக் கொண்டுவிட்டேன்.:))
நன்றிம்மா.
நல்ல கதாகாலஷேபம் கேட்டது போலிருந்தது.
10மாத பந்தம் முடிந்து எப்போது சென்னை வந்து விழப்போகிறீர்கள்.
பாத்து...கால்வலி போயேபோயிந்தியா?
Hi Naanaani,
yes ofcourse I am alright.
little bit of plaster remaining:))
vizhaamal iRanginaal sarithaan:)0
vanthuruvomilla........
thank you for the concern pa.
Just saw your blog. Very nice.
Thank you R with a View.
அமெரிக்கா, ஐரோப்பா, அமீரகம் எல்லாம் படம் மூலம் பார்க்கத் தந்த வல்லியம்மா அடுத்து சிங்கார சென்னை பற்றி நிறையா எழுதப் போறாங்க!!!
சிரமம் இல்லாமல் வீடு வந்து சேர வாழ்த்துக்கள்.
வரணும் கொத்ஸ்.
பழைய பாட்டு ஒண்ணு உண்டு. ''வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே''
என்று போகும்.
அதைப் பாடிக்கொண்டே நானும் வந்துவிட்டேன். விட்டுப்போன உறவுகள், வேலைகள்,கல்யாணாங்கள், வேறுசெய்திகள் எல்லாம் மலையாகக் குவிந்து இருக்கின்றன.
மெல்ல மெல்லத் தான் பூர்த்தி செய்து கொண்டிருக்கிறேன். ஒரே ஒரு ரிலாக்சேஷன் தமிழும் நீங்க எல்லோரும்.:))))
Post a Comment