Blog Archive

Monday, September 03, 2007

கனாக் காணலாம்...2

Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal
கனவுகள் இலவசம் என்று முன்பு எங்கேயோ படித்த ஞாபகம்.
இலவசமோ விலை கொடுத்தோ கனவு காண்பது
ஒரு இன்பம் தான்.:))
கனவு மெய்ப்பட வேண்டும் கைவசமாவது விரைவில் வேண்டும்,
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் கண் திறக்க வேண்டும்,கை கொடுக்க வேண்டும்//
இந்த வரிகள் சின்ன வயதில் படித்து மனத்தில் உறுதி கொடுத்தவை.
முன் பதிவில் கனவுகளை எழுதும்படி சக பதிவர்களுக்கான
tag ஒன்றை ஆரம்பித்தேன்.
அதற்குப் பதில் எழுதிப் பின்னூட்டமும் போட்டு வருகிறார்கள்.
கண்மணி சொல்லி இருக்கும்படி குறிப்பிட்ட சிலரை
நான் குறிப்பாகச் சொல்லிவிட்டால்
மற்றவர்களுக்கும் வேறொருவரை அழைக்கச் சௌகரியமாக இருக்கும்.
என் கனவையும் நான் சொல்ல வேண்டும் அல்லவா.
இதோ வெகு நாட்களாக நான் ஆசைப்பட்டுக் காணும் கனவு, அதாவது நினைவு.
ஏனெனில் என் கனவுகள் ரயிலை ஓடிப் பிடிக்க முடியாமலோ, படிகளில்
வேகமாக இறங்குவது போலவோ,
கால் தடுக்கி விழுவது போலவோ,
இல்லை எப்பவோ மேல் உலகம் போனவர்கள்
இப்போது என்னை வந்து கேள்வி கேட்பது போலவோ,
இப்படி ஒரு அத்து இல்லாமல் பயமுறுத்தும்.
இல்லாவிட்டால் நாற்பது வருடங்கள் முன்னல் தேர்வு நட்களில், கேள்வித்தாளைப் பார்த்து விழித்தது கனவாக வரும். அதிசயமாக நானே கனவை நல்லபடியாக மாற்றி,
எழுதி முடித்து வெளியில் வந்துவிடுவேன்.
இந்தக் கனவுகள் போலில்லாமல்,
உண்மையாகவே ஆசைப்படுவது உண்மையான நட்புகளுக்கு.
ஒருவருக்கு ஒருவர் போலித்தனம் சிறிதும் இல்லாமல், எதிர்பார்ப்புகள்
இல்லாமல் பழகும் உறவுகள்.
தப்பு நடந்தால் கண்டித்து,உரிமையோடு எடுத்துச் சொல்லும் நட்புகள்.
நம்பும் நட்புகள்.
பின்னால் விமரிசிக்காமல் அம்மா நீ இப்படியும் எழுதலாமே, செய்யலாமே என்று
கூற, நேரம் இருக்கும் நட்புகள்.
ஏன் இப்படி ஒரு கனவு ,நினைவு என்று தெரியாது. ஆனால் இது போல நம் இணையம் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிப்பது உண்டு.
அந்த மாதிரி நட்புகள் எனக்குக் கிடைத்து இருக்கிறது.
ஒரு கீதா, ஒரு துளசி, ஒரு டெல்ஃபின், ஒரு காட்டாறு, மதுரா, கோம்பை பிரெமலதா,நானானி
கொத்ஸ்,ரவி,அம்பி, அபி அப்பா,தம்பி ,குமரன்,தி.ரா.ச என்று என் பட்டியல் நீண்டு கொண்டு
போகிறது.
அவர்கள் கனவையும் அறிய ஆவலாயிருந்ததால்தான்
இந்த கனவு விளையாட்டை ஆரம்பித்தேன்.
இந்தக் கனவுக்கு விதிமுறைகளோ
கட்டுப்பாடுகளோ வேண்டாம்.
ஒருவர் நான்கு நண்பர்களை அழைத்தால்
விவரமாக எழுத வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
நான் நண்பர்களின் நீண்ட பட்டியல் போட்டு விட்டேன்.
முன்பு அழகு ஆறு பதிவின் போதும் நிறைய அழைப்புகள் ஒருவருக்கே
வந்தது நினைவுக்கு வருகிறது.
பின் வியர்டூ'' விளையாட்டுக்கும் அது போலவே.
அது ஏன் இது போல் நடப்பது என்றால் நாம் அழைக்கும் அனைவருமே
Very Preciuos Bloggers.
நல்ல கருத்துப் பரிமாற்றம் செய்பவர்கள்.
ஆகையினால் நண்பர்களைத்தான் ஒருவர் விடாமல் பட்டியலிட்டு அழைத்தேன்.
அதில் ராகவனும், வடுவூர் குமாரும், அம்பியும் ,மௌலியும் ஏற்றுக் கொண்டு
கௌரவித்து விட்டார்கள்.
இன்னும் அமீரகப் பதிவர்கள் பெயர்களை முழுவதும் இணைக்கவில்லை.
பாசக்காரக் குடும்பம் இல்லையா.
அவர்களை எல்லாம் அவர்களின் நண்பர்கள் அழைத்துக் கொள்ளுவார்கள்.
அதனால்
The game starts only now.:)))
நண்பர்களுக்கு நல்வரவு.
உங்களுக்கும், உங்கள் கனவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

16 comments:

வல்லிசிம்ஹன் said...

அனைத்துப் பதிவர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

நன்றி.

துளசி கோபால் said...

முதல்லே தூக்கம் வருதான்னு பார்க்கறேன். ஆமாம்.........கண்ணைத் திறந்துக்கிட்டேக் காணும் கனவு இங்கே செல்லுபடியாகுமா? :-))))

வல்லிசிம்ஹன் said...

sellum sellum.
Thlasi,

mukkaalvaasi appadiththaan naan irukken.
zombie nu sellap peyar kooda undu:)))

வடுவூர் குமார் said...

கண்ணைத் திறந்துக்கிட்டேக் காணும் கனவு இங்கே செல்லுபடியாகுமா?
எனக்கு அப்படித்தான் செல்லுபடியாச்சு.

வல்லிசிம்ஹன் said...

ok.
sellupadiyaana
kanavukaLaiyum
ezhuthalaam.
Kumaar Thank you.

இலவசக்கொத்தனார் said...

வல்லிம்மா, இப்படி மாட்டி விட்டுட்டீங்களே! என்ன எழுதறதுன்னே தெரியலையே!! கொஞ்சம் டையம் ப்ளீஸ்!

வல்லிசிம்ஹன் said...

Thank you Koths. Nithaanama
ezhuthalaam.

konjam maaRupattup padikka Asai.
MaNamaaka irunthaal azhakuthaanee:))))

Geetha Sambasivam said...

"கனவுகள் இலவசம்" பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதி ஆனந்த விகடனில் வந்து, தொலைக்காட்சித் தொடராயும் வந்தது. முடிவைத் தொலைக்காட்சிக்குச் சொதப்பிட்டாங்க. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு விவாகரத்து (பெண் விடுதலை? பெண்ணின் தனித் தன்மை?) என்று முடித்துத் தொடரின் ஜீவனே போய் விட்டது. போகட்டும், உங்க அழைப்புக்கு முயற்சி செய்யறேன். முதலில் பெரியவங்க எல்ல்லாம் எழுதட்டும். :D

வல்லிசிம்ஹன் said...

Thulasi, you are outrageous.:))

வல்லிசிம்ஹன் said...

Geetha,
itho oru periyavanga(Neengathaan)

pathil pottaachchu.:)
Anaalum iththanai adakkam Akaathuppaa.

oho Vikatanla vantha kathaiyaa.
budhdhi theLivaa thaan irukku:))
thalaippu ninaivu irukke adhai solREn.;)

Geetha Sambasivam kaaNum kanavunu oru thodar naAlAIKKU RELEASE...

தி. ரா. ச.(T.R.C.) said...

valliyammaa. wait please. i am tour as soon reach chennai i will write. irunthaalum innum pazam vitavillai

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, என்ன வல்லியம்மா கெளரவிக்கறது அப்படின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டிங்க.....நீங்க சொன்னா இதுகூட செய்யமாட்டோமா என்ன?

ambi said...

//ராகவனும், வடுவூர் குமாரும், அம்பியும் ,மௌலியும் ஏற்றுக் கொண்டு
கௌரவித்து விட்டார்கள்.
//

@valli madam, தப்பு! தப்பு! தப்பு! எழுதுடா அம்பினு உரிமையா சொன்னா கூடா எழுதுவோம் இல்ல. :p

@geetha paati, என்னது பெரியவங்களா? :))

கீதா பாட்டி, உங்களோட அனியாயத்துக்கு காமடி தான் போங்க. :p

ambi said...

@valli madam, ரயிலில் போற மாதிரி எல்லாம் கனவா? :p

பரீட்சை கனவுகளை மிகவும் ரசித்தேன். :)))

வல்லிசிம்ஹன் said...

அம்பி, சும்மா நான் மாட்டு எழுதிட்டி, நீயே பதிவிடு சொல்கிற மாதிரி நல்லா இருக்காது. அவரவர்கள் வேலையும் பார்த்துக் கொண்டு, பதிவும் எழுதணும் இல்லையா.
அதனாலதான் அப்படிச் சொன்னேன்.

பேரன், பேத்தி வந்தாலும் விடாமல் துரத்தும் கனவு, பரீட்சை ஹால் கனவு.
:))
அதுவும் ட்ரிக்னாமெட்ரி பேப்பர்:))
நன்றிம்மா.

நானானி said...

கண்கள் மூடிய கனவுகளும் கண்கள் திறந்த கனவுகளும் நிறைய உண்டு.
பதிகிறேன்.