Blog Archive

Wednesday, August 01, 2007

லக்ஷ்மிகல்யாண வைபோகமே...2

புஷ்பா என்கிற பாப்பாவுக்கு ஜாதாகம் கணிக்கவில்லை. ஸ்ரீ வீரரரகவனுக்கும் அவரது மனைவி திருமதி.ருக்குமணிக்கும் வயது வித்தியாசம் கொஞ்சம் நிறைய.
ருக்குமணி அம்மா ஆயில்ய நட்சத்திரமானதால் திருமணம் தடைப்பட்டு
12 வயதில்தான் தன்னைவிட 14 வயது மூத்த ஸ்ரீ வீரராகவனைத் திருமணம் செய்தாராம்.
அதுவும் அவருடைய அப்பா ,அம்மா இருவரும் ஏற்கனவே காலமாகிவிட்டதால்தான் இந்தத் திருமணம் நடந்ததாக எங்க கொள்ளுத் தாத்தா செவல் ராமய்யங்கார் சொன்னதாக புஷ்பா என்ற பாப்பா அதான் எங்க அம்மா ஜயலக்ஷ்மி நாராயணன் சொல்வாங்க.
அதனால்தான் பெண் பிறந்ததும் ஜாதகம் குறிக்கவில்லையாம்.

குழப்பிட்டேனா. சரி, ஒரிஜனல் கதைக்கு வரலாம்.
இந்த மாதிரி ஜாதகம் இரண்டுபேருக்குமே இல்லைன்னதும்
திருநெல்வேலிலேருந்து தாத்தா ஸ்ரீனிவாசன் சென்னைக்கு கடிதம் போட்டாராம்.

எல்லாம் பகவான் விருப்பம் சங்கல்பம்.
Wஅராயணனுக்குப் பெண்ணைப் பிடித்தால் பூக்கட்டிப் போட்டு கோவிலில் சம்மதம் வாங்கலாம் என்று சொன்னாராம்.
அதன் படி 22 வயது சிரஞ்சீவி நாரயணன் தன் அக்காவோடும் அத்திம்பேர் இன்னும் என் வருங்கால மாமியார் திருமதி கமலா சுந்தரராஜன் இவர்கள் சகிதம் ஒரு டாக்ஸியில்,
அந்த வரிசை ஸ்டோர்வீட்டில் பெண் பார்க்க வந்தார்களாம்.

சேச்சிப்பாப்பாவும் தூக்க முடியாத ஒரு பட்டுப்புடவை கட்டி,கழுத்து நிறைய நாலு வடம் சங்கிலி போட்டு, புதிதாகத் தைத்த பஃப் ஸ்லீவ் ரவிக்கை போட்டு, ஜயதி ஜயதி பாரத மாதா பாடிக் காண்பித்துக் குரல்வளம் உண்டு என்று நிரூபிக்க,

தலை கூட நிமிராமல் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளை சாரும் சரின்னு சொல்லிட்டாராம்.
மேற்கொண்டு சம்பந்தம் பற்றிப் பேச, பெண்ணின் அப்பா திருநெல்வேலி வந்து சேர்ந்தார். அங்கு காருகுறிச்சியில் ஏற்கனவே சகலை இருந்ததால்
அவரையும் அழைத்துப் போய் லௌகீகம் பேசி முடித்தனர்.
திருமணம் வரும் வைகாசி மாதம்,மே 17 நடக்க நிச்சயம் செய்தனர்.
கீழநத்தத்தில்தான் திருமணம் என்பது உறுதியானது.

அப்போது இரண்டாம் உலகப்போர் நடந்த சமயம்.விலை வாசிகள் உயர்ந்த பட்ச விலையில் இருந்ததால் கிராமத்தில் திருமணம் நடத்த ,இப்படித்தீர்மானம் செய்திருக்கவேண்டும்.

திருநெல்வேலியிலிருந்து கீழநத்தம் வரும் வண்டி செலவை பெண்ணின் அப்பா ஏற்றுக்கொண்டார்.
மூன்று நாட்கள் திருமணம். பிள்ளைவீட்டாருக்குத் தனி வீடு அமைத்துக் கொடுத்து சமைக்க ஆளும் ரெடி.
வெள்ளைக்குதிரைகள் பூட்டின சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைக்க வேண்டும்,
புஷ்பா என்கிற படு நாகரீகமான பேரை (!) ஜெயலக்ஷ்மி என்று மாற்ற வேண்டும், இதெல்லாம் திருமதி திருவேங்கடவல்லி ஸ்ரீனிவாசன், பையனோட அம்மா போட்ட கண்டிஷன்.:)))
ஆனால் இந்த வெள்ளைக் குதிரை வேற நினைத்து விட்டது.
எங்கள் வீட்டு காமெடி டைம் நிகழ்ச்சி அப்பாவின் குதிரைவண்டி சவாரியும்
குதிரை தறிகெட்டு ஓடினதும்தான்.:))))

19 comments:

வல்லிசிம்ஹன் said...

எழுத்துப் பிழைகளை மன்னிக்கணும்.

திருமணத்துக்கு எல்லோரும் வந்து தம்பதிகளுக்கு வாழ்த்துகள் சொல்லும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

ramachandranusha(உஷா) said...

இன்னும் என் வருங்கால மாமியார் திருமதி கமலா சுந்தரராஜன் இவர்கள் சகிதம் ஒரு டாக்ஸியில்//

வல்லிம்மா, இதுல நீங்க எங்க வந்தீங்க :-) சொந்தம் புரியலே ? படிக்க சுவாரசியமா இருக்கு. தொடருங்கள்.

இலவசக்கொத்தனார் said...

வந்துட்டேன். வாழ்த்துக்கள் சொல்லலாம். பந்தி எப்போ? அதைச் சொல்லுங்க முதலில்.

ambi said...

//எங்கள் வீட்டு காமெடி டைம் நிகழ்ச்சி அப்பாவின் குதிரைவண்டி சவாரியும் குதிரை தறிகெட்டு ஓடினதும்தான்.:))))
//

ha haaaaa :)))

விரிவாக எழுதவும். எனக்கும் சாரட் வண்டில போகனும்னு ரொம்ப ஆசை. சென்னைல எங்க அதுக்கு வழி? அதனால ஜானுவாசத்தையே கேன்சல் செய்து விட்டேன்.

வாழ்த்த வயதில்லை, ஆசிர்வாதம் ப்ளீஸ். :p

வல்லிசிம்ஹன் said...

இந்தக் கதை அம்மா அப்பாவோட கல்யாணக்கதை உஷா.
நான் எப்படி வரமுடியும்.
பெண் பார்க்கத் துணை வந்தது எங்க அப்பாவோட கசின்,

பிற்காலத்தில் எங்க மாமியார் ஆகப் போகிறவர்.
திருமதிகமலாசுந்தரராஜன்.:))
அதாவது தம்பிக்கும் பெண்பார்க்க வந்துட்டு, பெற்றபிள்ளைக்கும் பெண் பார்க்க அதே வீட்டுக்கு வந்தார்,.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கொத்ஸ்.
அடுத்த பதிவில கல்யாணம்தான்.

முதல் பந்தி நமக்கெல்லாம்தான்.:))

வல்லிசிம்ஹன் said...

வரணும் அம்பி. நிறைய ஆசீர்வாதங்கள் உங்களுக்கு என் பெற்றோர் அனுப்புகிறார்கள்.:)
மைலாப்பூர்
சிருங்கேரி மடம் அருகில் ஒருவர் சாரட் வைத்திருக்கிறார்.
வடநாட்டுக் கல்யாண மாப்பிள்ளைகள் வருவார்கள். அதுதான் ஒருவன் ஒருவன் முதலாளில கூட வந்ததாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மாப்பிள்ளைசாருக்காக
ஜயதி ஜயதி யா..
சூப்பர்..:)

மெளலி (மதுரையம்பதி) said...

ஜானவாசத்தன்னைக்கு என்ன மெனு?.....அதனையும் சொல்லுங்க...ஹிஹி

மெளலி...

Geetha Sambasivam said...

mmmmmm., munnaaleye vanthu pennai reserve sythutangala unga mamiyar? paravayillaiye? :))))))))))) athu sari, nanga eppadi vazththu solrathu? venumna aasikal vaangikarom! :D nalaavee pookuthu, ammavin kathai!

வல்லிசிம்ஹன் said...

முதல்ல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்து இறங்கட்டும். அப்புறம் ஆரத்தி எடுத்து மேளம், நாயனம் ஊதி,
அப்பாடி இன்னும் எத்தனை வேலை டெல்ஃபின்.

திட்டம் போட்டு நல்லா நடத்திடலாம்:))

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முத்துலட்சுமி, அம்மாவுடைய பாட்டு நோட்டு ரொம்ப நாள் நான் வைத்து இருந்தேன். எங்கே போட்டேனோ. நல்லாப் பாடுவாங்க.

வல்லிசிம்ஹன் said...

வாங்க வாங்க மௌலி,
உங்களைத்தான் பந்தி விசாரணைக்குப் போடலாம்னு நினைச்சேன். மெனு அடுத்தாப்புல போட வேண்டியதுதான். காசி ஹல்வா கண்டிப்பா உண்டு.:))

துளசி கோபால் said...

ஒரே அட்டகாசமான பதிவு.

படிக்கவே ஜோரா இருக்கு.

சீக்கிரம் அடுத்த பகுதியைப் போடுங்க.

நேயர் விருப்பமா.... கல்யாண 'மெனு' ப்ளீஸ்:-)

வல்லிசிம்ஹன் said...

கீதா, அழைப்பிதழ் கிடைச்சது வரேன்னு சொன்னதுக்கு நன்றி. சின்னவாளாக் கல்யாணம் பண்றோமா வாசிக தோஹக க்ஷந்தவ்ய போட்டுடணும். கட்டாயம் ஆசிகள் வாங்க்கிக்கத்தான் கூப்பிட்டேன்.:))
ஆமாம் மாமியாருக்கு முன்யோசனை ஜாஸ்தி. தெளிவான மனுஷி.

வல்லிசிம்ஹன் said...

துளசி,
கல்யாண மெனுவில் எல்லார் விருப்பமும் நிறைவேறுகிற மாதிரிப் போட்டுடலாம்.

அடை,வடை,அவியல்,மோர்க்குழம்பு.....:))

தி. ரா. ச.(T.R.C.) said...

ருக்குமணி அம்மா ஆயில்ய நட்சத்திரமானதால் திருமணம் தடைப்பட்டு 12 வயதில்தான் தன்னைவிட 14 வயது மூத்த ஸ்ரீ வீரராகவனைத் திருமணம் செய்தாராம்.


வல்லியம்மா பயமா இருக்கு. நம்ப பெண்ணுக்கு ஆயில்யம்தான்.
ஆனாலும் கவலையில்லை. இவளை படைத்தவன் இவளுக்கு ஒத்தனை படைக்காமலா இருப்பான்?
கல்யாணத்தைப் பற்றி விரிவாக் எழுதுங்கள் ஆனால் சாப்பாட்டையும் விரிவாக எழுதி வயத்தெரிச்சலை கிளப்புகிறீர்களே இது ஞயமா?

நானானி said...

மணமக்களுக்கு ஆசிகள் வேண்டிய
வாழ்த்துக்கள்!! சீக்கிரம்...மொய் வெச்சுட்டு பந்திக்குப்போணும்...இல்ல..பந்திக்குப்போய்ட்டு வந்து மொய் வெக்கோணும்.
எப்படி வசதி? ரொம்ப நல்லாருக்கு.
வல்லி!
என் நாத்தனார் பொண்ணுகளுக்கு பெண் பார்ப்பதிலிருந்து மறுவீடு வரை
கூடவே இருந்திருக்கிறேன். படிக்கும்போது அந்த நெனப்பெல்லாம் வந்தது.

வல்லிசிம்ஹன் said...

dear Naanaani,
welcome to the wedding.
fist pandhila utkaara veendaamaa.
ippadi late seyyak kudaathu.
thank you.