முன்னமேயே சொல்லி இருந்தது போல எங்க சிங்கத்துக்கு ஊரோட ஒட்டி வாழப் பிடிக்காது. அதனால் நாங்க வாடகைக்கு இருக்கிற இடமெல்லாம் தனியா, கொஞ்ச தூரத்தில தேசிய நெடுஞ்சாலை கண்ணில தென் படற மாதிரி அமைந்திருக்கும்.அப்படி அமைந்த வீடு ,சேலத்தில ரயில் நிலையத்திலிருந்து பக்கத்தில உமா தியேட்டர் ஒட்டி ஒரு பத்து வீடுகளுக்கு நடுவில் ஒரு வீடு.
சுத்திவர வயக்காடு.
தவளை சார் தினம் வாசப்படியில் தவம் கிடப்பார்.
நான் வாசல் தெளிக்கும் போது
தண்ணீர் மேலே பட்டபிறகு என்னை ஒருதடவை முறைத்துவிட்டு தாவுவார், அவர் என் மேல் தாவாமல் இருக்கணுமே பெருமாளேனு நினைச்சுப்பேன்.
அந்தப் பத்து வீட்டில முத வீட்டில் ஒரு வயசானவர்,நடு வீட்டில் நான்,
அந்தக் கோடியில் ஒரு பாட்டி,தன் பேரன் நாச்சியப்பனோடு ....இவ்வளவுதான் ஜனம்.
காலை 7.25க்கு ஜீப் வரும் ,ஐய்யா ஏறிப் போய் முனை திரும்பும் வரை பார்த்துவிட்டு, உள்ள வந்து ராத்திரி மிச்சம் வைத்த சாதமும்,தயிரும் பாட்டி கொடுத்த ஆவக்காயும் ஒரு கிண்ணத்தில் வைத்து உள்ள தள்ளினால் அடுத்த இரண்டு மணி தூக்கம்தான்.
அது முதல் மகன் எண்ணில் கருக்கொண்ட நான்காவது மாதம். மதுரைக்குப் பிரசவத்துக்குப் போக இன்னும் நாலு மாதம் இருக்கே ,எப்படிடா பொழுது போகும் என்று யோசிப்பேன்.
கதையெல்லாம் படிச்சு முடிச்சாச்சு. வானொலி கிடையாது.
வரிந்து வரிந்து உற்றார் உறவினருக்கெல்லாம் கடிதம் போட்டாச்சு.
கடிதம் கொண்டுவரும் தபால்காரர்,பால்காரம்மா,நாடார்கடைப்பையன்,காய்வண்டிக்காரர் எல்லோருடய குடும்ப க்ஷேமலாபங்களெல்லாம் விசாரித்து வைத்தாச்சு.
வயல்களைத் தாண்டி இருக்கும் ரோட்டில் எப்பவாவது இருக்கும் போக்குவரத்தையும் ஜன்னல் வழியாப் பார்த்து அலுத்துப் போன நாட்களில்தான் ரேவதி பஞ்சரத்தினம் பக்கத்து வீட்டுக்குக் குடி வந்தாள்.
அவளும்,அவளுடய ரயில்வே அண்ணாவும்,அம்மாவும்
சென்னையிலிருந்து சேலத்துக்கு மாற்றல் கிடைத்து,ரயில் நிலையத்துக்குப் பக்கத்திலிருப்பதால் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து வந்தார்கள்.
என்னைப் போலவே படிப்பு,பாட்டு, சினிமா என்று ஒரே ஒத்த விஷயங்களில் ஈடுபாடு. ஒரு வயது என்னை விட மூத்தவள். கல்லூரியில் ஹோம்சயன்ஸ் முடித்துவிட்டு யார்மேல் தன் பிராக்டிகல் வகுப்பை நடத்தலாம்னு நினைச்ச போது நான் கிடைத்ததாகச் சொல்லுவாள்.
அவள் சொல்லிக் கொடுத்த குடமிளகாய்க் கட்லெட் செய்முறை இங்கே பதிகிறேன்.
உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்னோரு தடவைப் படிப்பதால் குடமிளகாய் கோபிக்காது.:))
இரண்டு பேருக்கு கட்லெட் செய்ய 2 பெரிய குடமிளகாய் சரியாக இருக்கும்.
சிற்றுண்டி...
தேவை....
திடமான பெரிய குடமிளகாய் இரண்டு.
ஸ்டஃப் செய்யத் தேவையான காய்கறிகள்
1, பட்டாணி,
2,காலிஃப்ளவர்,
3,காரட்,
4,பீன்ஸ்,
வேகவைத்து உரித்த உருளைக்கிழங்கு 4 பெரியது.
சேர்க்க வேண்டிய மசாலா
கசகசா,சோன்ஃப்,கிராம்பு,துளி இஞ்சி,சின்னவெங்காயம் 3,பச்சைமிளகாய் 4
மேல்மாவு மைதாவும் ப்ரெட் தூளும்.
செய்முறை.
1, இரண்டு குடமிளகாயையும் நன்குக் கழுவித் துடைத்து,
நான்கு பாதிகளாகச் செய்து கொள்ளணும்.
அதில் இருக்கிற விதையெல்லாம் எடுத்துவிட்டுத் தயாரா வைத்துக் கொண்டு,
நாலு உருளைக் கிழங்கையும் குக்கரில் உப்புப் போட்டுவேகவைத்துப் பொடித்து மாஷ் பண்ணவேண்டும்.
,
2 காய்கறிகறிகளைப் பொடியாக அரிந்துகொள்ளணும்.
எல் லாவற்றையும் உப்பு,மஞ்சப்பொடியோடு வேகவைக்கணும்.
3,
மசாலா விஷயங்களை வாணலியில் வறுத்துப் பொடி செய்து கொள்ளணும்.
4,மைதாமாவைத் தண்ணீர் விட்டு பஜ்ஜிமாவு மாதிரிக் கரைத்துக் கொள்ளணும்.
5,
காய்ஞ்சுபோன ப்ரெட்டைத் தூள் செய்து தனியா வைத்தால் நநம் ரெடி.
வேகவைத்த உருளைக்கிழங்கோடு ,காய்கறி,மசலா அரைத்தது எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளணும்.
ஒரு பெரிய வாணலியில் நாலே நாலு கரண்டி ரிஃபைண்ட் எண்ணையை விட்டு மிதமான சூட்டில் வைக்கணும்.
குடமிளகாய்க் கிண்ணங்களில் இந்தக் காய்கறிக் கலவையை நிரப்பி,
மைதாமாவுக் கரைசலில் முக்கி எடுத்து ப்ரெட் தூளில் ஒத்தி
சுட்ட எண்ணையில் ஜாக்கிரதையாக வைக்கணும்.
ஒரு பக்கம் வெந்தவுடன்
அப்படியே மாற்றி குடைமிளகாயோடத் தலைப்பக்கத்தை வைக்கணும்.
வடிவம் மாறாமல் அழகா இருக்கணும் இல்லையா.
இப்படியே பொறுமையா நாலு கட்லெட் என்று சொல்லப்படும் இந்த டிபனை
செய்து
புதிதாக் கலயாணமான,
அம்பி,கைப்புள்ள இவங்களுக்கு உபயோகமான பதார்த்தமாக் கொடுக்கிறேன்.
தப்பு ஏதாவது இருந்தால் அது இப்போது என்னைப் பிடித்திருக்கும் காய்ச்சல் பொறுப்பு.
நல்லா இருந்தா வல்லிம்மா காம்ப்ளிமெண்ட்.:))
சொல்ல மறந்துட்டேனே,
புதிசா ஒரு தோழி எங்க பேத்திக்குக் கிடச்சிருக்கா. அவ பேரு லல்லிம்மா:))

20 comments:
அப்போ நானும் 4 மாசம்:-)))
இப்படிக்கு
அபிபாட்டி
ஆனா இந்தக் குடைமிளகாயை மூழ்க வெச்சு பொரிக்க முடியாது. அதுக்கு எண்ணெய் எக்கச்சக்கமா தேவைப்படும். அப்படி இருக்குறப்போ மைதாலுல முக்கி எண்ணெய்ல உக்கார வெச்சா, மாவு வழிஞ்சிராதா?
இப்பிடி வாழ்க்கை வரலாறு சொல்லும் போதே சமையல் குறிப்பு சொல்றது நல்லாருக்கு. தேவன் எழுதிய அப்பளக்கச்சேரி புத்தகம் நினைவுக்கு வருது.
//இந்த டிபனை செய்து புதிதாக் கலயாணமான, அம்பி,கைப்புள்ள இவங்களுக்கு உபயோகமான பதார்த்தமாக் கொடுக்கிறேன். //
ஆஹா! எதுக்கெடுத்தாலும் முணுக்குனு மூக்குக்கு மேல உங்களுக்கு கோபம் வருது!னு தங்கமணி என்னைய தாளிக்கறா.
வீட்டுல உப்பு காரம் எல்லாம் கம்மியா தான் இருக்கு, சில நாள் சுத்தமா இல்லை. :)
இதுல குடமிளகாய் கட்லட் சாப்டுட்டு, போதாகுறைக்கு நரசிம்ஹர் வழிபாடையும் முடிச்சுட்டு கோதாவுல குதிச்சேன்னா கடைசில பூரிக்கட்டை அடி வாங்கறது என்னவோ நான் தான்! :)
எந்த காலத்துல ரங்கமணி சங்கம் ஜெயிச்சு இருக்கு? :p
வேணும்னா கீதா பாட்டி, துளசி டீச்சர், இலவசம், அபி அப்பா எல்லாரையும் கேட்டு பாருங்க. கதை கதையா சொல்லுவாங்க. :)))
சரி, விதி யாரை விட்டது? இதையும் கிண்டி பாத்துறேன் இந்த வாரம். Thanks for the recipe. :))
//புதிதாக் கலயாணமான, அம்பி,கைப்புள்ள இவங்களுக்கு
உபயோகமான பதார்த்தமாக் கொடுக்கிறேன்//
நாட் ஃபேர்.
அப்பப் பழைய கல்யாணத்துக்கு
யார் கொடுப்பாங்களாம்?
வரணும் அபிபாட்டி,
எங்கமகனும் உங்கமகனும் ஒரே நாள்ள பிறந்தாங்கனு கேள்விப்பட்டேனே. ஆச்சரியமா இல்ல இருக்கு. இந்தக் குசும்பு பிடிச்ச பையனை எப்படித்தான் வளத்தீங்களோ:)))
ராகவன் மாவு வழியாது.
அதான் நாம ப்ரெட்டுத்தூள்ள பிரட்டி எடுக்கறோமே.
நான் தனிதனிப் பாரா போட்டேன்பா. இந்தப் பதிவு கட்லெட் மாவு மாதிரி
ஒட்டி வந்துவிட்டது.
அப்பளக் கச்சேரி பாட்டி வீட்டில நடக்கும்போது பார்த்து இருக்கேன் நீட்டின காலோட பாட்டிகளும் மாமிகளும் அக்கம்பக்கம் வம்பைக் கதை பேசி காரக்டர் அனாலிஸிஸ்,
ஜீன்ஸ் (genes) வழிமுறை, எல்லாத்தையும் அப்பளமா இட்டுக் காயப் போட்டுடுவாங்க.:)))
இலவசம் எங்க போனார்னே தெரியலை.அதனாலே மத்தவங்க கிட கேக்கறேன்.
ஐயோ பாவமே அம்பி, பூரிகட்டையா கிடைக்குது ??? இத்தனை நாள் அன்புள்ள மான் விழியேனு கவிதை எழுதி இருப்பீங்கனு நினைச்சேன்.
அட்ஜஸ்ட் பண்ணிப்போங்க. சரியாப் போயிடும்னு எங்க சிங்கம் சொல்லச் சொன்னார்.
வரணும் துளசி,
ஹய்யோ ஹய்யோ.
பழசாக் கல்யாணம் செய்தவங்களுக்குப் பாய் ,கைத்தடி,ஈஸிசேர் கொடுக்கறாங்களாம்.
போய்ப் பார்க்கலாமா.:))))
ரெண்டே ரெண்டு குடமிளகாய் கட்லெட்
தானா? திடீரென்று ...பூஜைவேளைக்கு கரடி...சமையல்வேளைக்கு யாரோ..
அதாக நான் நுழைந்தால், அப்பொ என்ன செய்வீங்க அப்போ என்ன செய்வீங்க?
அது..ஸ்டஃடு குடமிளகாய் அல்லே?
உள்ளேன் வல்லிம்மா. இன்னும் ரெண்டு மூணு வாரம் இப்படித்தான். அதுக்கு அப்புறம் நார்மலா ஆகணுமுன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். :)
நானானி, உங்களுக்கு இல்லாததா.
இது சும்மா ஹனிமூன் கப்பிளூக்குச் சொன்னேன்பா.
அதுவும் இல்லாம காரக்குழம்புல வீட்டு அளவு கொடுத்து இத்தனை குழம்பை என்ன செய்யறதுனு கேட்டாங்க:))
அதான் சிக்கனம் செய்திட்டேன்.
அந்த ரேவதி இதுக்கு காப்சிகம் கட்லெட்னு பேரு சொன்னாள்.
கப்புனு பிடிச்சது தான்.விடலையே.
வரணும் கொத்ஸ். உண்மையாவே ஜூலை இரண்டாவது வாரத்திலிருந்து உங்களைக் கண்ணிலேயெ காணொம்.
ரொம்ப வேலை போலனு நினைச்சுண்டேன்.
சீக்கிரமே வேலைகள் பூர்த்தியாக வாழ்த்துக்கள்.நன்றிப்பா.
அட,அட, சமையல் குறிப்புன்னால் நம்ம ஆளுங்க எல்லாம் மாய்ஞ்சு மாய்ஞ்சு கமென்டறாங்க பாருங்க, வல்லி, :P
@நானானி, குடமிளகாய் ஸ்டப் செய்யக் குடை மிளகாயை 4 பாகமா ஆக்க வேண்டாம். காம்பு பாகம் நறுக்காமல் எதிர் பாகம் லேசாக நறுக்கிச் சின்னக் கத்தியால் உள்ளே சுரண்டி விதைகளை எடுத்து விட்டு, உப்பும், மஞ்சள் பொடியும் கலந்த வெந்நீரில் சற்று நேரம் மூழ்க வைத்து விட்டுப் பின்னர் கறிகாய்க் கலவையை உள்ளே வைத்து விட்டு இட்லித் தட்டில் சற்று நேரம் நீராவியில் வேக வைத்து எடுக்க வேண்டும். பொரிக்க வேண்டாம். பொரிக்கிற இந்த முறையை வள்ளி "குடமிளகாய் கட்லெட்"டுனு சொல்றாங்க. நாங்க பஜ்ஜினு சொல்லுவோம். இதே மாதிரி "ப்ரெட்" உள்ளேயும் ஸ்டப் வைத்து நன்றாக மூடி விட்டுப் (கடலை மாவிலேயே பஜ்ஜி மாவு போல உப்பு, காரம் போட்டுக் கலந்தது) பஜ்ஜி மாவிலேயே போட்டுப் பொரித்து எடுக்கலாம். சாப்பிடத் தான் வயிறு கடன் வாங்கணும்!
கீதா
எங்கியோ போய்ட்டீங்க.
நான் பொரிக்க நீங்க வேக வைக்க,இந்தக் குடமிளகாய்க்கு வந்த வாழ்க்கையைப் பாத்தீங்களா.
நீங்க சொன்ன வகை நல்லா இருக்கும். பார்க்கவும் அழகா இருக்கும்.
இப்போ பின்னூட்டம் பார்க்கிறவங்களுக்குப் புது ரெசிபியும் கிடைச்சிருக்கு..
நன்றிம்மா.
டெல்ஃபின் இதை எனக்குக் கத்துக்கொடுத்த ரேவதிக்கே மறந்திருக்கும்.ஆனா நான் மறக்கவில்லை. சேலத்தில தினமுமே செய்வேன். பிள்ளைங்க பிறந்து பெரிசானப்புறம் அதுங்களுக்கு வாரம் ஒரு நாள் வெல்லத் தோசையும் இதுவும் உண்டு. நான் வீட்டிலதானப்பா இருக்கேன். நேரம் இல்லாம என்ன.
haa,haa, valli, Saturday than veliyee pooren. ippothaikku inggeethaan, athukkuLLee engeeyoo poyiddeennu solRinggaLee! :)))))))
\\உங்களுக்கும் தெரிந்திருக்கும். இன்னோரு தடவைப் படிப்பதால் குடமிளகாய் கோபிக்காது.:))\\
ஹைய்ய்ய்...என் காது (கோபி க் காது) ;-))
@ அபி அப்பா
நாளைக்கு கிடேசன் பார்க் மீட்டிங்குக்கு குடமிளகாய் கட்லட்டை செய்து கொண்டுவாங்க ;-))
மறுபடியும் சொல்றேன். என் பதிவில வந்து இன்னோரு ரெசிபி கொடுத்த கீதா நீங்க எங்கியோ போயிட்டீங்க.
கிடெசன் பர்க்குல உங்க காம்ப்ளிமெண்ட்ல காப்சிகம் கூட்டாம்.:))
கோபி,
நான் கட்லெட் சொன்னா நீங்க லேது காதுனு சொல்லிட்டீங்களா.
அப்போ கோபி மன்சூரியன் செய்யலாமா.:))
எப்படியோபா நல்லா எஞ்சாய் பண்ணுங்க.
பதிவர் சந்திப்பு குடமிளகாய் சகிதம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
Post a Comment