இல்லை இவரோ
கண்டிப்பாக இவரும் நம் செயல்களை எல்லாம் கவனிக்கிறார்கள்.
இதோ இந்தக் கிருஷ்ணரும் இருக்காரே, இவர் பகவத்கீதையில் சொல்லி இருப்பது கடமையைச் செய்.பலனை எதிர்பாராதே.அப்படின்னால் பதிவு போடு. பின்னூட்டம் வந்தா சரி...வரலியா...அதுவும் சரி அப்படின்னுதான் அர்த்தம்.
மேலே இருக்கும் மூலராமர் படம் ஸ்ரீ ஸ்ரீ ராயர் என்று அன்பாக அழைக்கப்படும் ஸ்ரீகுரு ராகவேந்திர ஸ்வாமிகளும்,மற்றும் அவருக்கு முந்திய மாத்வ மட குருக்களும்,அவருக்குப் பின் வரும் குருக்களும் பூஜை செய்யும் சிலாரூபம். என் தமிழ் அறிவு மிகக் குறைவு என்று என் பதிவுகள் படிக்கும் அனைவருக்குமே தெரியும். இருந்தாலும் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பதிந்து விட வேண்டும் என்பது எப்போதுமே எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும்.
பேச முடியாத எத்தனையோ கற்பனைகள் ,,எழுதுவதற்குச் சுலபமாக இருப்பதே இதற்குக் காரணம். பேசுவது ஒரு கலை. எதிராளிக்கு நாம் சொல்வது முதலில் விழ வேண்டும்.
அது சொல்லும் விஷயத்திலும்,கேட்பவர்கள் அதை வரவேற்கும் விதத்திலும்
மாறி விடுகிறது.
முற்காலம் மாதிரி "ஏன்னாவொ , இன்னாங்க,!வோ " சரிப்பட்டு வருவதில்லை என் விஷயத்தில். ஏதோ ஒரு காரணத்தால் சொல், வலிமை இழக்கும்போது மௌனமே நம் எண்ணங்களுக்குச் சாட்சி. வாதாடும் வக்கீல்களுக்குத் தனித் திறமை வேண்டும் இல்லையா. அதுபோல பொய்யும் புனை சுருட்டும் சொல்லவும் கற்பனை வளம் வேண்டும். அப்படிப்பார்க்கப் போனால் வெறும் நிதர்சனமான உண்மைக்குக் கூட நிறைய முலலம் போடவேண்டி இருக்கிறது. சரஸ்வதி கடாட்சம் யாருக்கு நிறைவாகக் கிடைக்கிறதோ,அவர்களின் வாக்கு பிறரைச் சென்று அடையும் என்பது நியதி.
என் நம்பிக்கையைத்தான் இந்தப் பதிவில் எழுத நினைக்கிறேன்.
அந்த சரஸ்வதியே நேரில் வந்து ஆட்கொண்டதில் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் மகிமை தொடங்கியது. எத்தனையோநபர்கள் ,பெரியவர்கள் இல்லம் துறந்து மடங்களின் பொறுப்பை ஏற்று இருக்க, இந்த குருராஜருக்கு மட்டும் ஏன் இவ்வளவு வசீகரம்,பெருமை என்று யோசித்திருக்கிறேன்.,
ஒரேஒரு புத்தகம் கையில் கிடைக்கும் வரை....
அதுதான் திரு.அம்மன் சத்திய நாதன் என்பவர் எழுதின "ராகவேந்திர மகிமை" என்கிற புத்தகம். அது என் கைக்கு வந்ததே ஒரு அதிசயம் தான்.மாற்றுமருத்துவத்தில் எனக்கு நம்பிக்கை அதிகம். மருந்துகள் மட்டுமே ஒருவர் வியாதியிலிருந்து விடுபட உதவாது என்பதும் என்னுடைய தீர்மானம். அதன் விளைவாக ரெய்கி என்ற ஆல்டர்னேட் மருத்துவ முறை கற்க விரும்பினேன். அது தொடர்பபகப் புத்தகங்கள் படிக்க ஆரம்பிக்கும்போதுதான் முறையாக ஒரு ஹீலரிடரிமிருந்து(reiki Master)
அதைக் கற்கவேண்டும் என்று தெரிந்தது,.
முறைப்படி அணுகி ஒரு அம்மாவிடமிருந்து இந்த முறையைக் கற்றபோது வழிவழியாக வரும் superior souls and Gurus ,Guides ஆசிரியர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்தது. எத்தனையோ வெளிநாட்டு உள்நாட்டு மகான்கள், இவர்களைப் பற்றிப் படிக்கும்போது எனது குருவான ரெய்கி மாஸ்டர் தன் வாழ்க்கையின் ஒரு சம்பவத்தை விளக்கினார்.
அப்போதுதான் ஸ்ரீராகவேந்திரரின் வரலாறும் அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளும் தெரிய வந்தன.
மற்றுமொரு மகான் என்று விட்டிருப்பேன்,அன்றே எனக்கு முதுகு வலி வராமல் இருந்திருந்தால்.... இரவு நேரம் வலிதாங்க முடியாமல் தவித்தபோதுதான் குருராஜரை நினைக்கத் தோன்றியது.வலி தாங்க மருந்து இருந்தாலும் அதைச் சாப்பிட்டால் வரும் பக்கவிளைவுகளத் தாங்கும் பக்குவம் என் வயிற்றுக்குக் கிடையாது. பயம் வேறு. இது வெறும் முதுகுவலிதானா,வேற ஏதாவதா...உயிர் வெல்லக்கட்டி அல்லவா.அந்தப் பயம். வாய் லக்ஷ்மிநரசிம்மனைக் கூப்பிடுகிறது, மனம் டாக்டர் செரியன் போனில் கிடைப்பாரானு அலை பாய்கிறது,அப்போதுதான், மதியம் போஸ்டில் வந்த படம் நினைவுக்கு வந்தது.
ஆஹா, இவரைப் பார்த்து அப்ளிகேஷன் போடலாம் என்று திறந்தால் ரொம்ப சாந்த ஸ்வரூபியான முகம் கண்ணில் படுகிறது. ஸ்வாமி காப்பாத்தணும் என்று வேண்டியவள் அந்தப் படத்தைக் கையில் வைத்துக் கொண்டே உறங்கிவிட்டேன்.
அடுத்த நாள் காலையிலேயே டக்டரைப் பார்த்ததும், ரத்தக் கொதிப்பு அளவுமீறி இருந்ததும் இரண்டு நாள் தேவகி ஹாஸ்பிடலில் இருந்ததும்.
என்னை அங்கே பார்க்க வந்த ஒரு தோழி அம்மன் சத்திய நாதன் புத்தகத்தைக் கொடுத்ததும் ஒரு நீண்ட கதை.
ஆனால் எதுவுமே பிரதியாகக் கேட்காத ஒரு பெரிய குருவை அடைந்துவிட்டேன் என்பது நிச்சயமானது அன்றுதான்.
அவர் உருவில் என் மற்ற தெய்வங்களும் அடங்கி இருப்பதுதான் இன்னோரு அற்புதம். அவர் படத்தைப் பார்த்தால் தெரியும்.
முதலில் தெரிவது எங்கள் குலதெய்வம் ஸ்ரீ ந்ருசிம்ஹன், பிறகு ராமன், பங்கேற்கும் ஹனுமான்,ஸ்ரீராகவேந்திரரின் இஷ்டமான கிருஷ்ணன்.
காமதேனுவாகக் கற்பக விருட்சமாக ஸ்ரிகுருராஜன் தான் எங்களைக் காப்பவர். நான்தான் மறப்பேனே தவிர அவர் என்னைக் காவல் செய்யாத தருணமே கிடையாது.
அவரே இன்னும் துணையாக இருப்பார்.
37 comments:
இது ஒரு அனுபவம். இதில் என் நம்பிக்கையை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
இதை விட அழகாக உணர்வுகளை வடிக்க முடியாது. மிகவும் நிறைவான, நல்ல பதிவு. 200-வது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் எழுத்து மெருகேறி வருவதின் ரகசியமே அந்த ராகவேந்திரர்தான்! அருமை! வேறு வார்த்தைகளே இல்லை சொல்ல!
"பூஜ்யாய ராகவேந்த்ராயாய சத்யதர்மாய ரதாயச,
பஜதாம் கல்பவிருஷாய நமதாம் காமதேனவே!"
இரட்டை சதத்துக்கு வாழ்த்து(க்)கள் வல்லி.
கடவுள் என்றதே ஒரு அனுபவம்தான். இதையெல்லாம் விளக்கிச் சொல்லவே
(ஊமை கண்ட கனவு போல)முடியாது. மனசுலே தோணும். அதுபோலத்தான்
இன்னாரை 'குரு'ன்னு நினைக்கறதும். ஒவ்வொருவருக்கும் ஒருவித
அனுபவம் இருக்குமில்லையா?
எல்லாருக்கும் மனம்போலத்தான் வாழ்வு.
நல்லா இருங்க.
//பதிவு போடு. பின்னூட்டம் வந்தா சரி...வரலியா...அதுவும் சரி அப்படின்னுதான் அர்த்தம்.
//
:))))
is it an advice to Geetha paati..? :p
regarding the post, yes, Guru is more superior than God as his highness only shows the path to attain solvation or God.
No wonder (lakshmi)Narasimhar is your favorite God. he hee :)))
Congrats for the 200th post.
P.S: sorry for commenting english, as i'm in chennai(maamiyaar voodu, he hee). No time to comment leasurely. excuse this small child. :)))
வரணும் கீதா. வாழ்த்துக்களுக்கு நன்றி.
மீண்டும் நிறைய தமிழ் படிக்கவேண்டும். விடா முயற்சியும் வேண்டும்.
பார்க்கலாம்.
எடிட் செய்து பாரா பிரித்து மீண்டும் மேயணும்.:))
கீதா, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வலம் வந்த நாட்களை நினைவு படுத்திவிட்டீர்கள்.
முறைப்படி சரியா எழுத முடியுமோ என்று சந்தேகமாய் இருந்தது. அதனால் பதியவில்லை. நீங்கள் பதிந்ததற்கு நன்றி. வீட்டில் மிகப் பெரிய படம் இருக்கிறது. விட்டு இங்கே இருக்கிறோமேனு சங்கடமாய் இருக்கு.
வரணும் துளசி,
குரு ,ஆச்சாரியர்கள் எல்லோருமே நமக்கு மேற்பட்டு இருந்து வழி காட்டுபவர்கள். அந்த விஷயத்தில் பரமாச்சாரிய சுவாமிகளும் நம்ம ராயரும் என் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடித்தவர்கள். சில பல நிகழ்ச்சிகள் நம்மை உறுதி கொள்ள வைக்கின்றன. வாழ்த்துக்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றிப்பா.
ஆஹா, ஆடி..
அம்பி மாமியார் வீடா. என்ன வசூல் கிடைத்தது.
நான் அனுப்பின யோகலக்ஷ்மி எல்லா நன்மையும் உடனே கொடுத்துவிட்டாளே.:))
thanks for the greetings Ambi.
where will we be without encouraging words from children like you.?
200வது பதிவா? தங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
நான் இன்னும் 20 கூட வரவில்லை. :)
இருநூறாவது பதிவு!!!யம்மாடி!!!நான் இப்போதுதான் தக்கிமுக்கி இருபதைத் தாண்டியிருக்கிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!வல்லி!
ஸ்ரீராகவேந்தரின் அருள் உங்களுக்கு
என்றென்றும் உரித்தாகுக!
பதிவுக்கு மிக நன்றி,
மந்திராலயம் சென்றிருக்கிறீர்களா?.
ஸ்ரீ ராகவேந்திரர் அவதரித்தது தமிழகத்தில் சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரியில். புவனகிரியில் பிறந்து, புவனகுரு ஆகிய மகானின் பிறந்த வீட்டை கோயிலாக மாற்றியுள்ளார்கள்.
மிக அற்புதமான இடம். மகானின் பெருமையை நான் உணர்ந்த தலம்.
நேரம் கிடைத்தால் ஒருமுறை சென்று வரவும்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
//என்ன வசூல் கிடைத்தது.
//
ha haaaa :))) pant shirt.
TRC sir veetla puliyotharai, thayir saadham. :)
பொன்வண்டு வரணும்.
வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.
எவ்வளோ பதிவுனு சும்மாக் கணக்குத்தான்.
நானும் ஓடினேன் என்கிற சுய பிரதாபம்,ஊக்கம்.
நிறம்,திறம்,மணம் கொண்ட பதிவுகள் கொடுக்க முயற்சிக்கிறேன்.
வரணும் நானானி,
நீங்க சொல்ல வேண்டிய விஷயங்கள்
இன்னும் எத்தனையோ இருக்கே. இப்போ ஜூலை.டிசம்பரில் உங்க நூறு வந்துடும் பாருங்க.
நன்றிப்பா.
வாங்க முரளி,
நாங்கள் மந்திராலயம் ஒரே ஒரு தடவை போயிருக்கிறோம்.
அவர் என் மனதில் வந்து இந்தப் பதிவை எழுத வைத்ததே பெரிய கொடுப்பினைதான்.
மிக மிக நன்றி.
வணக்கம் வல்லியம்மா.....
நீங்கள் கூறிய புத்தகம் 5 பாகங்களாக வந்துள்ளது....மாத்வ ஆச்சாரியார்களில் முக்கியமான வேறு சிலர் பற்றியும் அடுத்த பாகங்களில் எழுதியுள்ளார். நான் மூன்று பாகங்கள் மட்டுமே படிக்க கிடைத்தது....
பலருக்கும் குரு/ஆச்சாரியார் என்பதைவிட கண்கண்ட தெய்வமாகவே இருக்கிறார் ராயர்.
என் நண்பன் குடும்பத்தினர் 123 வருடங்களுக்குமுன் நடந்தே சென்று ராயரின் மூல பிருந்தாவனத்திலிருந்து ம்ருத்யு எடுத்துவந்து ஸ்தாபித்த கோவில் ஒன்று கரூர் பக்கத்தில் (நன்செய் பூகளூர்) இருக்கிறது....அந்த இடத்தில்தான் நான் ராயரின் மகிமையை உணர்ந்தேன்...பின்னர் மந்திராலய தரிசனம் கிட்டியது...
ராயர் அருளட்டும்.
மேலும் 200க்கு வாழ்த்துக்கள்....
ஆறாம் புத்தகமும் வந்துவிட்டது மௌலி.
குருராஜானு கூப்பிடறதுதான். மத்தபடி அவர் தெய்வமே. என்னை அறியாமல் ஜபிப்பது ராகவேந்திரா வாகத்தான் இருக்கும். அம்மன் சத்திய நாதன் மிகப் புண்ணியம் செய்தவர். அவரை ராயர் இவ்வளவு எழுத வைத்து இருக்கிறாரே!!
ராகவேந்திரரை நினைத்த மாத்திரத்திலேயே மனசில் அமைதி வந்துவிடுகிறது.
உங்களைக்கூட நினைத்தேன்,வழக்கமாக எட்டிப் பார்ப்பாரேனு.
குருவருள் என்றும் தொடரும்.
சென்னையின் முதல் மிருத்யூ பிருந்தாவனம் எங்க வீட்டுக்குப் பக்கத்தில் ரங்காச்சாரி ரோடில் அமைந்திருக்கிறது. வெகு அமைதியான இடம். வந்ததுக்கு ரொம்ப நன்றி மௌலி.
வல்லியம்மா....
இரு சதம் அடிச்சு, டெண்டுல்கர் கணக்கா கை அசைத்து, வெற்றி விழாவா? :-)
அதுவும் துங்கா தீர விராஜன் அருளால்! வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!
//இது ஒரு அனுபவம். இதில் என் நம்பிக்கையை மட்டுமே எழுதி இருக்கிறேன்//
நீங்கள் தனியாகச் சொல்ல வேணுமா என்ன? நீங்கள் தொட்டுச் செல்லும் உணர்ச்சிகள் பல அப்படியே அடி மனத்து வாசகங்கள்! அதான் அழகா வெளிக் கொணர முடிகிறது! நாங்க எல்லாம் உறவுகள் பற்றி எழுதினா ஒரு செயற்கைத்தனம் வந்து விடுகிறதே!
200 ஆம் பதிவு ஒரு குரல் பதிவோன்னு நினைச்சு ஓடியாந்தேன்!
சரி, கண்ணன் பாட்டில் உங்க குரலை, குழலைக் கேட்பது எப்போ? :-)
அத்தனையும் பசுமையான நினைவுகள் வல்லியம்மா!
200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள். குரு ராகவேந்திரர் 100 வருடங்கள் வாழ்ந்தார். வல்லியம்மாவின் 200 வது போஸ்டில் வந்தார்,பிருந்தாவனத்தில் 400 வருடங்கள் இருப்பார். அவரது நூல்கள் 700 வ்ருடங்கள் இருக்கும்
ரங்கசாரி ரோடில் மடம் எங்கு உள்ளது
வாங்கோ தி.ரா.ச. ஒரு நிமிஷத்தில்
ராயர் சரிதையோடு என்னை
இணைத்து விடடீர்களே. நன்றி.
ரங்காச்சாரி ரோடில் நடிகை பண்டரிபாய் கட்டிய விட்டல மந்திர் இருக்கு. அதன் பின்புறம் ஸ்ரீராயரின் மிருத்திகா பிருந்தாவனம் அமைந்திருக்கிறது. அங்கே எல்லை அம்மன் கோவிலுமிருக்கும்.
மௌலி மிருத்திகா என்று படீக்கவும். வாழ்த்துக்களுக்கு நன்றிம்மா.
அம்பி, புளியோதரையும் சார் வீட்டில வசூலா:)))))
ஒடம்பு சரியாப் போச்சுல்ல. அதுவே எங்களுக்குப் பெரிய சந்தோசம். இறைவன் அருள் முன்னிற்கும்.
welcome Ravi. thanks for the greetings.
sorry for this english reply.
If I have to write abt SRIRAAYAR.S bantham in my life it would take for ever.
GURUVE charaNam
kaNNan paattila enna paattu paadalaam.:)))
எப்போதும் இறைவன்அரூள் தான்
ராகவன்.
மற்றும் ஒர்உ முறை துபாயிலும்
கை கொடுத்தார். கணக்கே இல்லை.
200வது இடுகைக்கு வாழ்த்துகள் வல்லியம்மா. இடுகையைப் படிக்க தாள் பிரதி எடுத்திருக்கிறேன். படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.
தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம். உங்களைப் புண்படுத்தும் நோக்கத்தில் எழதவில்லை. ஆற்றாமை என்று வேண்டுமானால் சொல்லலாம். இப் பின்னூட்டத்தை வெளியிடவேண்டும் என்று அவசியமும் உங்களுக்கு இல்லை.
மகான்கள் பைத்தியக்காரர்கள் என்பது என் எண்ணம். அவர்களை நம்பும் நபர்கள் அனுபவித்ததாக சொல்லும் அற்புதங்கள் பெரும்பாலும் நகைப்புக்குரியன (http://miracles.gururaghavendra.org/). உங்கள் அனுபவமும் அப்படியே. "ரெய்கி" பித்தலாட்டத்தை சிகிச்சை என்று நம்பும் ஒருவர், புத்தகம் கைக்குக் கிடைப்பது அதிசயம் என்றும், பின்னூட்டம் எழதவைப்பது ராயரின் செயல் என்றும் மேம்போக்காக எண்ணுவதில் வியப்பு ஒன்றும் இல்லை.
உண்மையிலேயே பெரிய கட்டம் நேர்ந்தால் (அப்படி எதுவும் உங்களுக்கு நேர வேண்டாம்), ஆழ்ந்த நம்பிக்கைகள் கூட பொய்த்துப் போகின்றன. எங்கள் ஊரில் பல ஆண்டுகளாக வசிக்கும் ஒரு பக்தி மிக்கக் குடும்பத்திற்கு நேர்ந்த கதி வேறு எவருக்கும் வரக்கூடாது. அமெரிக்காவிலேயே பள்ளிப்படிப்பு முதல் கல்லூரி வரை படித்த அவர்களுடைய பையனும் பெண்ணும் மற்ற குடும்பத்தினருக்கு எடுத்துக்காட்டாய் விளங்கினர். அவர்களுக்கு சுக்தங்கள் உள்ப்பட எல்லா சுலோகங்களும் அத்துபடி. ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று நடைபெரும் அபிசேகம் அக்குடும்பத்தின் உபயமே. அவர்களின் உறவினர் ஒருவர் அனுமனோடு நேரில் பேசும் வல்லமை பெற்றவர் என்பார்கள்.
சென்ற ஆண்டு சட்டம் படித்துக் கொண்டிருந்த மகனிடமிருந்து திடீரென்று வயிற்றுவலி என்று தகவல் வருகிறது. திடகாத்திரமான பிள்ளை வாய்திறந்து பேசவில்லை. பத்தே நாட்களில் சிறுநீர்ப்பையில் புற்று நோய் முற்றி இறந்து போனான். ஊரே அழுதது, ஏன் என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. "பல சுருதி"களில், சொல்லப்படும் பலன்களில் ஒரு அணுவளவாது கிட்டி, அவர்கள் வணங்கிய எந்தக் கடவுளும் காப்பாற்ற வேண்டாம், ஒரு முன்னறிவிப்பு கொடுத்திருந்தால் அந்தக் குடும்பத்திற்கு ஆறுதலாய் இருந்திருக்கும்.
"நோதலும் தணிதலும் அவற்றோரன்ன சாதலும் புதுவது அன்றே", என்ற நம்முன்னோரின் தெளிவு இந்த அறிவியல் யுகத்தில் நமக்கில்லாமல் போனது யார் செய்த பாவமோ?
வரணும் குமரன். படித்துவிட்டே சொல்லுங்கள்.
வரணும் குலவுசனப்பிரியன், நீங்கள் எழுதிதீருப்பது எனக்கு நண்றாகவேபுரிகிறது.
நானும் இதுபோல ந்இகழ்விலிருந்து மீண்டு கொண்டிருப்பவள்தான்.
யாரையும் நொந்து கொள்வதால் எதுவும் நிற்பதில்லை. அதைத் த்அஅங்கும் சகதியும் பொறுமையும் வேண்டும் என்பதற்கே இன்தப் பிரார்த்தனைகள் .
அறிவு ஞானம் என்பதெல்லாம் மயானத்தில்லிருக்கும் வரை. பிறகு சாப்பிடலாமல்லிருக்கிறோமா வாழாமல் இருக்கிறோமா.
என்னைப் பொறுத்தவரை எனறுதான் எழுதி இருக்கிறேன். உங்கள் கருத்துக்கும் நன்றி.
நேற்று தான் ராகவேந்திரர் திரைப்படம் பார்த்தேன் வல்லியம்மா. இன்னைக்கு உங்க பதிவு. சுரேந்திரன்னு எனக்கு ஒரு பள்ளி ஆசிரியர் இருக்கார். அவர் பெரிய ராகவேந்திர பக்தர். குருராஜரின் சரிதத்தை எழுதியிருக்கார். நிறைய புத்தகம் எழுதியிருக்கார். குருராஜரின் சரிதத்தையும் வலைப்பூக்களில் எழுதணும்ன்னு நேத்தைக்குத் தான் நெனைச்சேன். குருவருள் எப்படி இருக்கோ.
வரணும் குமரன்.
குருராஜர் நினைத்தால் நடக்காதது எது.
உங்களால் கட்டாயம் முடியும். எங்களுக்கும் இணையத்தில் ஒரு பற்றுக்கோடு புதிதாகக் கிடைக்கும்.
ஆரம்பித்துவிடுங்கள்.அவர் அழைத்துச் செல்லுவார்.
இருநூறா... சூப்பர் :)
வரணும் பாலா. வாழ்த்துக்களுக்கு நன்றி.
Post a Comment