Blog Archive

Tuesday, June 26, 2007

பாப்பா கவலை பாப்பாவுக்குத் தான் தெரியும்

பாப்பா பாப்பா அழுதியா
ஏன்னு ஏன்னு சொல்லுவியா.
அம்மா மம்மம் கொடுக்கணுமா
பாட்டி கொடுத்தா பரவாயில்லையா

பாலுக்கு அழுதியோ பழத்துக்கு அழுதியொ....

பாப்பா சொல்லும் பதில்

பல்லு வரலியே கடிக்கறது எப்போ
நிக்க முடியலியே, எட்டி எடுத்துக்
கவுக்கறது எப்பொ
இந்தக் கவலை பத்தாதுனு
குக்கர் சத்தம் படுத்தது.
மிக்ஸி ரொம்ப அலறுது.

சத்தமில்லாமப் பழகிட்டேன்
சென்னை சத்தம்னு சொன்னா
பாப்பா என்ன செய்வேன்.
தூங்கப்போகயிலே கீரக்காரன் கத்துவான்
சாப்பிடயிலே பாத்திரக்காரன் கூவுவான்

அதுவும் இல்லன்னால் பக்கெட்டும் பாத்திரமும்
மினிம்மா கையில சண்டைபோடும்.
சுத்தம் சத்தம் பாக்கும் அம்மாவே
சத்தமே போடாத அப்பாவே
எதுக்குப்பா வந்தோம்
ஸ்விஸூக்கு.

சென்னைச் சத்தம் வேணும் மத்தச்
சின்னவங்க சத்தம் வேணும்
அழுற குழந்தயும்
கத்துற நாயும்
சுத்துற ப்ஃபானும்
பாக்கணும்,..

12 comments:

Geetha Sambasivam said...

ரொம்பவே அருமை, பாப்பா, சீச்சீ வல்லி, பாப்பா நல்லாத் தூங்கணும்னா சென்னைதான் லாயக்கு! எனக்கும் ஹோம்சிக் தான் இப்போ. :(((((((((((((((

துளசி கோபால் said...

புதுப்பாட்டு நல்லாவே இருக்கு.

பாவம் பாப்பா. அதன் கவலை அதுக்கு(-:

ambi said...

ஹா ஹா வாய் விட்டு சிரிச்சேன்!
ரொம்ப நல்லா இருக்கு.

//பாட்டி கொடுத்தா பரவாயில்லையா//

வெறும் பாட்டினு சொன்னா எப்படி? கீதா பாட்டினு இல்ல சொல்லி இருக்கனும். :)

ஒரு வேளை பாட்டினாலே அது கீதா பாட்டி தான்!னு பொருள் கொள்ளலாமா? :p

இதற்க்கு விடை அளித்து விட்டு உங்கள் ஆயிரம் பொற்காசுகளை பெற்று செல்லுங்கள். :)

பி.கு: என் சார்பாக அந்த ஆயிரம் பொற்காசுகளை கீதா பாட்டியே வழங்குவார்!னு நான் சொல்லவும் வேணுமா? :p

வல்லிசிம்ஹன் said...

கீதா,உண்மைதான்.

எனக்கு நிஜமாவே இந்தப் பாப்பாவைப் பத்திக் கவலைதான்.
அப்படியொரு நிசப்தம் இங்கே.

நீங்க சொல்ற மாதிரி நமக்கும் சென்னைக்கும் இருக்கிற பந்தம் ரொம்ப கெட்டி.:))))))

வல்லிசிம்ஹன் said...

பாப்பா திருப்பதி மொட்டைக்கெல்லாம் அழைச்சுட்டுப் போணும்.
சாமி புண்ணியத்தில.
இப்படிச் சத்தமே இல்லாத ஊரில வளர்ந்தா வெளி உலகமே தெரியாமப் போயிடுமே:((((

வல்லிசிம்ஹன் said...

அம்பி, வருது வருது, உங்க வீட்டிலேயும் பாப்பா.

அப்ப இந்தப் பாட்டிகளுக்கெல்லாம் இன்னோரு அல்வா கிடச்ச மாதிரி இருக்கும்.

பாட்டிகள் தேவையடி பாப்பானு
பாடுவீங்க அப்புறம்:)))))

நானானி said...

வல்லி!
எங்க வீட்டுப் பாப்பா சென்னை வந்தாச்சு. சுத்துமுத்தும் அது பரக்கபரக்க வேடிக்கை பார்க்கும் அழகே
அழகு! ந்ம்ம காதின் ஓசை நமக்கே
கேக்கும் அந்த நிசப்தம் கொஞ்ச நாளில் போரடிக்கும்தான். சும்மவா பாடினார்..'சொர்க்கமே என்றாலும்...'
ஆகக்கூடி பாப்பா மூலம் உங்கள் ஏக்கம் வெளிவந்துவிட்டது. ஹைனா?

வல்லிசிம்ஹன் said...

ஹான் ஹான் ஹை.
நானானி
இதுக்கு
சென்னை ரொம்பப் பிடிக்கும்னு நினைக்கிறேன்
.
என்னன்னா சும்மாக் கதவு சாத்தினாலே தூக்கிப் போடறது.
பார்க்கலாம்.உங்க வீட்டுப் பாப்பா வந்தது பத்தி ரொம்பவே சந்தோஷம்,
எஞ்சாய்.:)))

ஜீவி said...

இதோ இன்னொரு அழ. வள்ளியப்பா!
வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருமை :))

வல்லிசிம்ஹன் said...

என்ன ஜீவி சார். இது ரொம்ப டூ மச்.
அவரெங்கே.வெறும் வார்த்தைகளால் வரிகளை நிரப்பும் நானெங்கே.
ஆனாலும் நன்றி. அவர் பெயரும் என் பதிவில் வந்ததற்காக.

வல்லிசிம்ஹன் said...

முத்து லட்சுமி,
நன்றி நன்றி.:))