அப்பா வழிப்பாட்டி என்னை மாதிரி மாடர்ன்.:)))
ச்சின்ன வெங்காயம்,முருங்கை எல்லாம் கீரையோட சேர்த்து மண்சட்டியில் சமைப்பார். வாசனை ஊரைத்தூக்கும்.
அவங்க செய்யற இந்தக் காரக்குழம்பு, கெட்டியாக, நான்குநாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
படித்து சமைச்சுப் பாருங்க. நல்லா இருந்தா சரி. இல்லாட்ட இப்பப் பாட்டிகிட்ட கேக்க முடியாது.
செய்வதற்குத் தேவையான உணவுப் பொருட்கள்,
சின்ன வெங்காயம், ........2 கால்கிலோ பாக்கெட்
கொஞ்சம் பூண்டு,.......... 25 பல்லு
மிளகு........100கிராம்
புளி...........பெரிய எலுமிச்சம் அளவு
தனியா.......100கிராம்
மிளகாய் வற்றல்...100 கிராம்
தேவையான அளவு உப்பு.
இந்தக் குழம்பில் போடக்கூடிய தான்,அதாவது காய்கறிகள்...
முருங்கைக்காய்,.
கத்திரிக்காய்,
அவரைக்காய்,
சௌ சௌ,
கொத்தவரங்காய்,
உருளைக்கிழங்கு.
1,
புளியை முதலில் ஊற வைக்கவேண்டும்,
2 ,வாணலியில் இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணை விட்டு
3..தனியா,மிளகாய்வற்றல்,மிளகு,10பூண்டு,சின்னவெங்காயம் கால்கிலோ (பொடியாக நறுக்கினது)எல்லாவற்றையும் வறுத்து மையாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
4,நறுக்கின காய்கறிகளையும் வதக்கிக் கொண்டு,
புளியைக்கரைத்தத் தண்ணீரை மஞ்சள்பொடி உப்பு போட்டு
கொதிக்க வைக்க வேண்டும்.
புளிவாசனை போனதும் , காய்கறிகள் வெந்த பிறகு இறக்கிவைத்துவிட்டு,
கொஞ்சம் தாரளமாக எண்ணைவிட்டுக் கடுகும் சீரகமும் சின்னவெங்காயம்,மிச்சமான பூண்டு இவற்றை வதக்கிச் சேர்க்க வேண்டும்.
இதுவும் கொதித்தவரும் போது அரைத்தகலவையைப் போட்டுக்
கொதிக்க விடவேண்டும்.
குழம்பு ரெடி.
எண்ணைத் தனியாகத் தெரிய வேண்டும்.அதுதான் இந்தக்குழம்பின்
இலக்கணம்.:))))
கருவேப்பிலை,பெருங்காயத் தண்ணீர் விட்டு இறக்க வேண்டியதுதான்.
பி.கு.
செல்வநாயகி சுட்டிக் காடியதால் தான் காய்கறிகளைச் சேர்த்தேன்.
இல்லாவிட்டால் அவை வாடிப் போயிருக்கும்:))))
நன்றிப்பா.
24 comments:
காய் எப்ப எப்படிச் சேர்க்கனும்னு சொல்லவே இல்லையேம்மா நீங்க:)) அதையும் சொல்லுங்க. முயற்சித்துப் பார்க்கிறேன்.
சரி!
நீங்க தேங்காய்ப்பால் சேர்த்துக் குழம்பு வைப்பதில்லையா/
//2 கால்கிலோ பாக்கெட்//
ஒரு அரைக்கிலோ பாக்கெட்தான் கிடைச்சா என்ன செய்ய? :)))
அரைக்கிலோ வெங்காயம். 25 பல்லு பூண்டு - யம்மாடி இது எம்புட்டுப் பேத்துக்கு?
செல்வநாயகி, முன்ன பின்ன சமையல் சொல்லிக் கொடுத்துப் பழக்கம் இருந்தால் சரியாச் சொல்லவரும்.:)))
இல்லைன்னா இப்படித்தான்...:-))
தான்களை முதலிலேயே தாளித்தவுடன் வதக்கி விட்டு புளிக்கரைசலை விடணும்.இரண்டும் சேர்த்துக் கொதிச்ச அப்புறம்தான் இந்த அரைச்ச விஷயங்களைக் கொட்டணும்.
யோகன் சொல்ற மாத்ரித் தேங்காய்ப் பால் விடறவங்களும் இருக்காங்க.எங்களுக்கும் கொழுப்பு கொஞ்சம் அதிகம்,அதனால பாட்டி சமையலில் தேங்காய் தலையிடாது:))
வரணும் யோகன். தேங்காய்ப்பால் சேர்த்துச் செய்யற முறை நான் ,பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். இது வயல் வெளிகளுக்குப் போகும் முன்னர்,பாட்டியுடய அம்மா அவங்க வீட்டுக்காரருக்குச்செய்து தருவாங்களாம். புழுங்கலரிசிச் சோறும் இந்தக் குழம்பும் நல்ல கூட்டுப் போடும்.:))
வரணும் கொத்ஸ். என்னடா இந்த நக்கீரரைக் காணோமேனு
பார்த்தேன்:-))).
இது ஒரு 7 நபர் கொண்ட குடும்பத்துக்கு இரண்டு வேளை வரும்.
அதையும் டிஸ்கியாப் போடலாமா....
இரண்டு கால் கிலோனு சொன்னது,நாம அதைப் பிரிக்க வேண்டாம்,அதே பிரிஞ்சு வந்துவிட்டால் ஒரு பாக்கெட்டை அரைக்கவும்,இன்னோரு பாக்கெட்டை வதக்கவும் எடுத்துக் கொள்ளலாம்னுதான்.
அப்புறம் இந்தப் பூண்டும் சேர்ந்தால் வயிற்றில் தொந்தரவு வராதுனு பாட்டிவைத்தியம் சொல்லுது.
வயிறே இருக்குமோ இல்லை வேற எப்படினு எல்லாம் கேக்கக் கூடாது:))))
100 கிராம் மிளகாய், 100 கிராம் மிளகு
இவ்வளவு காரம் தேவையிருக்குமா?
இப்போ செய்யப் போறேன். விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு :)))))
கிட்டத்தட்ட இதே மாதிரிதான் எங்கள்
வத்தக்குழம்பும். சேர்க்கும் நேரமும் விதமும் தான் வேற.கண்டென்ஸ்டாக
செய்து வைத்துக்கொண்டால் சோம்பலான நாளுக்கு கைகொடுக்கும்.
நாக்கும் சப்புக்கொட்டும்!
ஆகா...படிக்கும் போதே ருசியா இருக்குதே...சாப்டா எப்பிடி இருக்கும். ஆமா...நம்மூர்ப்பக்கமெல்லாம் தேங்கா அரைச்சி ஊத்தாம கொழம்பு வெக்க மாட்டாங்களே! இது மட்டும் அப்படியில்ல போலிருக்கு.
ம்ம்ம்ம், கடைசியிலே நீங்களே ஆரம்பிச்சுட்டீங்க சமையல் பத்தியும் எழுத! நான் தப்பிச்சேன். ஏற்கெனவே யாரும் வரதில்லை, பதிவுக்கு, இன்னும் நான் சமையல் வேறே எழுத ஆரமபிச்சால் அவ்வளவுதான். வலைப்பக்கத்தையே தூக்கணும்! :)))))))
இன்னிக்குப் போன இடத்தில் எல்லாம் ஒரே சாப்பாட்டு விஷயம் தான், அதுவும் குழம்பு வகைகளா இருக்கு!
விளைவா.
அப்பாடி ஜெயஸ்ரீ.
காரம் ஒத்துக்காதுன்னா சாப்பிடாதீங்கோ.
புளி தூக்கலாத் தெரியத்தான் கையளவு புளியை ஊற வச்சுக் குழம்பு செய்யறது.
அது காரத்தை அடக்கிவிடும்.
இல்லாட்டிக் கொஞ்சம் வெல்லம் போட்டுச் சமைக்கலாம்.
மண்டை காயாம ஜீரணாம் ஆனா சரி.
வாங்க நானானி,
கெட்டியாச் செய்துட்டால் நன்றாகத்தான் இருக்கும். ஒரு ஸ்பூன் குழம்புக்கு நாலு வாய்த் தயிர்சாதம் உள்ள இறங்கும்.
எதுக்கும் மிளகு,மிளகாய் டிஸ்கியும்போட்டுடறேன்:))
வரணும் டெல்பின்,
உங்க சமையல் பக்குவம் ஏதாவது எழுதுங்களேன்.
நல்லா இருக்கும்.
தொட்டுக்கத் தேங்காய்த் துகையல் உண்டு ராகவன்.
உங்களுக்கு இப்ப இந்தப் பரீட்சை எல்லாம் வேண்டாம்.
அதுல சொல்லி இருக்கிற விகிதத்தில் பத்து % செய்தாலே போதும்.
கீதா, ஓரோரு ஊருக்கும் ஒரு பக்குவம் இருக்கும் இல்லையா.
சிங்கம் அடிக்கடி சொல்லுவார், உங்கம்மாவுக்குச் சீதனமா தாத்தா புளிய மரம் கொடுத்து இருக்கார்,,
புளியும் எடுத்துப்பாள்,அப்பப்போ ஏறியும் விடுவாள்னு:))))))
//மண்டை காயாம ஜீரணாம் ஆனா சரி.//
வல்லியம்மா, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஸ்மைலி போட்டிருந்தேனே பாக்கலியா? நிஜம்மாவே நல்லா இருந்தது.
//உங்கம்மாவுக்குச் சீதனமா தாத்தா புளிய மரம் கொடுத்து இருக்கார்,,
புளியும் எடுத்துப்பாள்,அப்பப்போ ஏறியும் விடுவாள்னு:))))))//
ஹாஹாஹா!!!
எங்கம்மா சமையல் ஆரம்பிக்கும் முன்னாடி புளியைக் கரைச்சு வெச்சுக்கிட்டுதான் என்ன செய்யலாம் என யோசிப்பார்கள். நானோ வெங்காயம், பூண்டு நறுக்கி வைத்துக் கொண்ட பின்னாடிதான் யோசனை எல்லாம். இது ரெண்டுக்கும் சேருதே!! இந்த வாரம் செய்ய வேண்டியதுதான்.
ரெசிப்பி நல்லா இருக்கு. ஆனா, பூண்டுக்கு தங்கமணி தடா போட்டாச்சு! வேற ஏதாவது..? :)
வாரம் ஒரு ரெஸிப்பி போடலாமே, கொஞ்சம் உபயோகமா இருக்கும். :p
ஸ்மைலி பார்த்தேன்மா ஜெயஸ்ரீ .எங்க பசங்க இந்தக் காரக்குழம்பை அவ்வளவாக ஒத்துக்கறது இல்லை.எல்லாம் மைல்ட் டைப்.
எதுக்கும் உங்களையும் ஜாக்கிரதை செய்து வைக்கலாம்னு தான் சொன்னேன்.
வாங்க கொத்ஸ் சார்.
புளி நனைக்காம எனக்கு அடுப்பு கூட ஏத்த முடியாது.:)))))
அவசியம் செய்து பாருங்க. எதுக்கும் காரம் குறைச்சலாவே இருக்கட்டும். பரோட்டாவாக்குத் தொட்டுக்கலாமா:)))
வரணும் அம்பி.
பூண்டு போடாட்டாப்போறது.
பெருங்காயம் போட்டுக்கோங்கோ.
வாரம் ஒரு ரெசிப்பியா....
ஜமாய்க்கலாமே.
//சிங்கம் அடிக்கடி சொல்லுவார், உங்கம்மாவுக்குச் சீதனமா தாத்தா புளிய மரம் கொடுத்து இருக்கார்,,
புளியும் எடுத்துப்பாள்,அப்பப்போ ஏறியும் விடுவாள்னு:)))))) //
பதிவைவிட இந்த பின்னூட்டம் சூப்பர்....ஹஹஹஹஹ்ஹ
அதையேன் கேக்கறீங்க மௌலி,
ஆசாமிக்குத் தான் இந்த மாதிரி கினி பிக் ஆயிட்டோமேனு ஏகத்துக்கு வருத்தம்.
அவங்க அம்மாகிட்டக் கூடப் பொலம்புவார். புளியில்லாம சமைக்கவே முடியாதான்னு......
அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத் தக்காளிக்கு வந்துட்டேன்.:))))
Post a Comment