அன்பு ,
கண்மணி,இதுதான் வயதுக்கு உண்டான சிந்தனை.
நான் குறிப்பிட்டது, முதுமைக்குச் சேர்த்துவைப்பது பற்றி.எங்கள் பெற்றோரும் அந்த மாதிரித் தான் இருந்துவிட்டுப் போயும் சேர்ந்துவிட்டார்கள்.
அவர்களுக்கு சொல்பமே என்றாலும் பென்ஷன் என்று ஒன்று வந்தது.எங்களை மாதிரித் தனியார் இடத்தில் வேலை செய்து ரிட்டையர் ஆனவர்களோ, இல்லை தொழில் செய்து ஓய்வெடுப்பவர்களோ,ஒரு sizable amount பத்திரப் படுத்திவைக்கவில்லையென்றால் பட வேண்டிய அவஸ்தை கொஞ்சம் இல்லை.நான் நேரில் பார்த்ததினால் சொல்கிறேன்.நல்ல புத்திர பாக்கியம் இருக்கலாம்.ஆனால் ஓடுகின்ற வாழ்க்கையில் யார் யாரைக் குற்றம் சொல்ல முடியும்.முதியோர் இல்லத்திற்கு யாரையும் அனுப்பும்படி நான் சொல்லவில்லை.
இன்று நீ நாளை நான் என்கிற வாக்கியத்தில் இன்று நானாகத்தான் நான் இருக்கிறேன்.எனக்கும் என் குழந்தைகள் எங்களைச் சரியாகக் கவனித்துக்கொள்ளுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.அதையும் மீறி சுதந்திரமாக இருக்கவேண்டும் என்று நான் நம்புவதில் என்ன தப்பு.நோயில் வீழ்ந்த ஒரு (புகுந்த வீட்டு)பாட்டியையும் கவனித்துக் கடைசிவாய்த் தண்ணீரையும் விட்டவள் நான்,.அந்தப் பாட்டியும் பதினாறு பெற்றவள்தான்.எல்லாவிதத்திலும் உயர்ந்த மனுஷி.அவளுக்கு வாய்த்ததும் சுலபமான சாவு இல்லை.
நோயும் மரணமும் நம் கையில் இல்லை.அதைத்தான் வாங்கி வந்த வரம் என்று சொன்னேன்.
38 comments:
யாரையும் புண்படுத்த விருப்பம் இல்லை.
உலக நியதி ஒன்றாக இருந்தாலும்,
பாக்கியம் செய்தவர்களே
அவஸ்தைப் படாமல் போய்ச் சேருகிறார்க்கள்.
முடிந்தவரைக்கும் குழந்தைகளுக்கு நாம் முன்னோடியாக இருந்து நல்வழி காண்பிக்கலாம்.
கடைசி நிமிடம் வரை கைகால் நேர இருக்க வேண்டும்ம் என்கிற பிரார்த்தனைதான் எங்களை மாதிரி இருப்பவர்களுக்கு.
அதே சமயம் முதியோர் வீட்டில் இருப்பதால்,
ஒரு சிறு outing போக வேண்டும் என்ன்றாலும் தயங்கி வீட்டோடேயே இருந்த ஞாபகமும் என்னை விட்டுப் போகவில்லை.
யாருக்கும் சூழ்னிலைக் கைதிகளாக இருக்க விருப்பம் இருக்காது,.
அதுதான் சொல்ல வந்தேன்.
//பாக்கியம் செய்தவர்களே
அவஸ்தைப் படாமல் போய்ச் சேருகிறார்கள்''//
ஆமாம் வல்லிமா..மரணம் பிறருக்குத் தொல்லை ஏற்படுத்தாமல் நமக்குள் வரவேண்டும்..ஆனால் இதெல்லாம் நம்கையில் இல்லையே?
///நோயும் மரணமும் நம் கையில் இல்லை.அதைத்தான் வாங்கி வந்த வரம் என்று சொன்னேன்.///
உண்மைதான் சகோதரி!
ஆனால் யாரும் கவலைப் பட வேண்டாம். இறைவனை நம்புவோம்
பிரார்த்திப்போம்
அவர் பார்த்துக்கொள்வார்
ஆமாம், ஷைலஜா
நம் கையில் எதுவுமே இல்லை.
புத்திசாலித் தனத்தோடு வாழலாம்.
அதையும் மிறி இறைவன் கருணை ஓண்ணுதான் எவருக்கும் துன்பமில்லாத முடிவும்,.
கொடுக்க முடியும்.
வணக்கம் ஐயா.
கவலை வேண்டாம்.
நல்ல வார்த்தை.
நடந்ததையோ நடக்கப் போவதையோ நினைத்துச் சிலசமயம் நிகழ் காலத்தை விட்டும் விடுகிறோம்.
அதெல்லாம் செய்யாமல் விழித்து இருப்பது நல்லது.
இதைத்தான் உங்கள் ஜோதிடப் பாடங்களீல் புரிகிறது. நன்றி
அதான், பேசாம சரணாகதின்னு 'அவன்' கிட்டே அடைக்கலம் வாங்கியாச்சு.
இனி 'அவன்' பார்த்துக்கணும். அதைவிட வேறு என்ன
வேலையாம் 'அவனுக்கு'?
///அதான், பேசாம சரணாகதின்னு 'அவன்' கிட்டே அடைக்கலம் வாங்கியாச்சு.
இனி 'அவன்' பார்த்துக்கணும். அதைவிட வேறு என்ன
வேலையாம் 'அவனுக்கு'?///
துளசி அக்கா (அக்கா என்பது ஒரு மரியாதைக்கு) நம்மைவிட நம்மைப் படைத்த
அவன்தானே நம்மைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்!
"எனக்கென்ன மனக்கவலை
உனக்கல்லவோ என்கவலை"
என்று சீர்காழி அவர்களின் பாடலும் அதைததான் சொல்கிறது!
உங்கள் வார்த்தை புரிகிறது... எந்தாய் தந்தையர் எண்ணங்களும் தங்களைப் போன்றே இருக்கிறது.....
எதுவும் நம் கையில் இல்லை....டீச்சர் சொல்வதுபோல முழு சரணாகதி அடைந்து, நமது அன்றாடக் கடமைகளில் மூழ்கிவிடுவோம்...அவனருளால் அனைவருக்கும் அமைதி கிட்டும்.
நல்லா விரிவா, தெளிவா, அழகா, கோர்வையா எழுதி இருக்கீங்க. :)
எல்லோருக்கும் என்ன ஆச்சு?
உடலுக்கு தான் வயது. மனதுக்கு ஏது?
பாருங்க இந்த தள்ளாத வயதிலும் கீதா மேடம் எவ்ளோ உற்சாகமா இருக்காங்க. :p
So cheer up! change the topic.
வல்லியம்மா உங்க கருத்து உடன்பாடே. வரம் கிடைப்பது அவன் செயல் என்றால் பரவாயில்லை.குடும்பத்தாரே ஒதுக்கி இதுதான் வரமென்றால்?
1000க்கு மேல் ஹார்ட் ஆப்ரேஷன் செய்தவர் 90 வயதான டாக்டர் செரியன் மொட்டைமாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார்.மணமாகாத அவர் வயதான தன் சகோதரிகளுக்கு பாரமாகக் கூடாது என்ற எண்ணம்.பலரின் உயிகாத்து வாழ்வு தந்த அவரின் நிலை பாருங்கள்.
வாழ்க்கை நெருக்கடிகளில் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் என் போன்றவர்களின் மனக்குமுறல் தான் என் பதிவு.மற்றபடி உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
கண்மணி, செரியன எங்கள் குடும்பத்தை நோயிலிருந்து மீட்டுக் கொடுத்தவர்.
இதைப் போல லட்சம் பேரைக் காப்பாத்தி இருக்கிறார்.
ஒரு அப்பா போல எனக்கும் என் தம்பிகளுக்கும்.
அவரது மரணம் இன்னும் ரணமாகத்தான் இருக்கிறது.
முதுமையில் அவருக்குத் துணை இருக்க யாரும் இல்லை.தானே வழி தேடிக் கொண்டார்.
இவ்வளவு பெரிய மருத்துவருக்கே இந்த கதி என்றால் நாமெல்லாம் என்ன கதி.
இதற்கும் மேற்பட்டுப் பணமும் கையில் இல்லை என்றால்... என்ற நிலையைத்தான் நானும் சொன்னேன்.
எனக்கு வருத்தமே இல்லை கண்மணி.
ஒரோருவருக்கு ஏதோ நியமனம் ஆகி இருக்கிறது.
நம்மால் முடிந்த உதவி எந்த ஒரு உயிருக்கும்செய்யலாம்.
அவ்வளவுதான்.
ஐயா,
சரண் என்று வாயால் சொல்வதும்
பிறகும் யோசிப்பதும் மனித இயல்பாகிவிட்டது.:-)
என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.:-)
கவலையை விட்டு வலையில் இருக்கலாம்.
நன்றி வாத்தியார் சார்.
அம்பி சும்மா ஒரு விவாதம் தான்.
அது கூட இல்லை. கருத்துப் பரிமாற்றம்.
மனசு எப்பவுமே ' யங்' தான்.
இல்லாட்டா
ஜாஸ் கேப்பேனா?:-)
மாத்தியாச்சு டாபிக்.
வரணும் மௌலி .
இது இயற்கை நியதி தான்.
காலம் காலமாக எதிர்காலம் முதுமை,நோய்த் தடுப்பு எல்லாம் நம் மனசை ஆக்கிரமித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
வயது ஏற ஏற
யோசிப்பதும் கூடும்.
சந்தோஷமாக இருக்கநம்ம மீனாட்சி பார்த்துக்கொள்ளட்டும்.
அவள் அண்ணனும் பார்த்துக்
கொள்வான்.
நம் வாழ்க்கைப் பயணத்தில் மரணமும் ஒரு ஸ்டேஷன் மாதிரி என்ன அது கடைசி ஸ்டேஷன் அவ்வளவுதான்.
பாராமாச்சாரியார் ஒருமுறை என்னிடம் சொன்னது ஞாபகம் வருகிறது. மதுரையிலிருந்து சென்னை வரும்போது தாம்பரம் வந்த உடன் நீ என்ன செய்வேன்னு கேட்டார். பொட்டி படுக்கையெல்லாம் எடுத்து வைத்து ரெடி பண்ணி இறங்குவதற்கு ரெடியா இருப்பேன் என்றேன். அதற்கு அவர் சொன்னார்.அதுபோலத்தான் வாழ்க்கையும். ஒரு காலகட்டம் வ்ந்தவுடன் சுகங்களையும்(படுக்கை)
சுமைகளையும்(பெட்டி) விட்டு விலகி கடைசி ஸ்டேஷனில் இறங்க ரெடியாக இருக்கவேண்டும். ஆரம்பித்துவைப்பவனுக்குத் தெரியாதா எப்படி முடிக்கவேண்டுமென்று.அவன் படட்டும் அந்தக் கவலையை.
poyittu appurama varen.
தி.ரா.ச,
வாங்க.
பரமாச்சாரியரின் நாமம் இங்கே வந்ததே
என் பாக்கியம்.
எத்தனை அறிவுரைகள் அவரும்
சொல்லி வந்து இருக்கிறார்.கொஞ்சமாவது மனத்தில் உறைய வேண்டும்.
அவர் திருவடிகள் நமக்கு நல்வழி காட்டவேண்டும்.
கீதா,
மெள்ள வரலாம்.
தெரிந்த விஷயம் தானே இது.
went to Kanmani's blog. but could not open it. tried again and again. so without reading that how can I comment. comments are reserved. :D
பாருங்கப்பா.
சரியாப் போச்சு.
சரி கண்மணிகிட்டே நான் பின்னூட்டம் போட்டுடரேன்
உங்களுக்குப் பதிலா.:-)
ipo than kanmaniyoda pathivukku poy padichen. opinions are reseerved. But one thing in our home, we never let ellders alone. That is alll to say now. Maybe write about it after sometime, may be.
hi, Geeth.
yes it does no happen at many places.
but exceptional situations are there too. you shd agree.
we are helpless in some situations.
paarkkalaam.
thalai ezuththu nallathaa irukkattum.
@valli madam, என்ன இது? ஆபிஸ்ல எவ்ளோ ரிஸ்க் எடுத்து உங்க பதிவு படிக்கிறோம். இப்பிடி ஒன்னுமே எழுதலைனா என்ன அர்த்தம்? :)
அட, அட்லீஸ்ட், கீதா மேடம் மாதிரி ஒரு மொக்கையாவது உங்களுக்கு போட தெரியுதா? :p
// so without reading that how can I comment. comments are reserved//
@geetha madam, ஆமா! பெரிய்ய கெளரவம் பாரிஸ்டர் சிவாஜி! ஜட்ஜ்மெண்ட்டை ரிஸர்வ் பண்ணி இருக்காங்க! :p
ambi,
am out of Chicago.
at Grand canyon.
:-)
just visiting here to see everything is ok for yr honeymoon visit.
will write after two days.
thank you.
//am out of Chicago.
at Grand canyon.//
ohh great news. take care and happy stay!
//just visiting here to see everything is ok for yr honeymoon visit.
//
intha alwaa thaane vendaamgirathu! sari, pls send 2 airtickets pls. :p
Valli, athellam ticket eduthu onnum ambiku anupa venam. nijamave purapatu vanthuda porar. inge vanthu vere sindu mudiyanuma? grrrrrrrrr ambi, honeymoon ellam madippakkathileye than., athu pothum :P
ok. Geetha.
yaaru anupparathaa soonnaa.
athellaam kuzhanthai kuttiyoda varattum.appathaan anubavikka mudiyum.:-)
சரியாகச்சொன்னீர்கள் சகோதரி!
/கைகால் நன்றாக இருக்கும்போதே../
என்பதுதான் என் பிரார்த்தனையும்.
என் த்ந்தையும் என் மாமியாரும் கடைசி காலத்தில் படுக்கையில் பட்ட
அவஸ்தைகளை கூட்யிருந்து பார்த்ததால்.கறுப்பு பூனைகள் மாதிரி
தேவையான பண பாதுகாப்பு இருந்தால்
முதுமை ஒரு வரம்தான்! அதோடு பிள்ளைகளின் அன்பும் ஆதரவும் இருந்துவிட்டால் சொர்க்கமேதான்!!
நானானி வரணும்.
இதில எழுதிப் பின்னூட்டம் போட்டவங்க எல்லாரையும் பார்க்கணும்னு இருக்கு.
அன்புக்காகத் தான் இத்தனை பாடும்.
சில காலங்களுக்குப் பிறகு, நமது இளமைவலு குறையும் போது உடம்பு போதுமெ என்கிறது .அப்போது எல்லா விதத்திலும் குழந்தைகள் அன்போடு பணமும் கையில் இருந்தால் தான் கொஞ்சமாவது நிம்மதி.
வல்லி!
எனக்கும் உங்களைப் பார்க்கணும், பேசணும், பழகணும்! சென்னை திரும்பியதும் சொல்லுங்கள்!
அப்படியே L.A.,LASVAGAS-க்கும்
கண்டிப்பாக போய்வாருங்கள்.
பேரனா? பேத்தியா?
நானானி, இன்னோரு பையன் வீட்டுக்கும் போக வேண்டி இருக்கு.
அவன் ஸ்விஸர்லாண்டில இருக்கான்.
அங்கே ஒரு டேரா.
அப்புறமாதான் சென்னை.
இந்த க்ராண்ட் ட்ரிப்பே போதும்ப்பா.
குழந்தை(பெரிய பேரன் ஸ்கூல் இன்னும் முடியலை.)பாடமெல்லாம் விட்டுப் போகிறது.
சின்னவனுக்கு ஐந்து மாதம் ஆகிறது.
திருமங்கல, 53லேருந்து 60 வரை இருந்தோம்.
அதான் ஒரு வேளை உங்க அம்மாவும் அங்கே படித்திருப்பார்களோனு நினைத்தேன்.
பெரியவங்களாம் என்ன சொல்றாங்கனு கேட்டுக்கிட்டு இருந்தேன்.
/நோயும் மரணமும் நம் கையில் இல்லை.அதைத்தான் வாங்கி வந்த வரம் என்று சொன்னேன்/
நூறு சதவிதம் உண்மை-ங்க, மேடம்!
(மேடம்-னு கூப்பிடுறதா... இல்ல.. அம்மா-னா?)
ஐயோ மேடம் வேண்டாம்
அம்மாதான் சரி:-)
வரணும் தென்றல்.
பெரியவங்க பேசரதைப் பார்த்து பயப்பட வேண்டாம்.
பயன்படற மாதிரி இருந்தால் நல்லா இருக்கு.
இல்லையில்லை, வல்லி! அம்மாவும்
திருநெல்வேலிதான்!பாட்டின் பல்லவி அம்மாவுக்குப் பிடிக்கும்!அதுபோல்
அப்பாவுக்குப் பிடித்த பாடல்'மலரே குறிஞ்சிமலரே...'
சரி!சரி நன்றாக சுற்றிவிட்டு சுகமே வாருங்கள்!
ஒரு பத்து நாள் ஊர்ல இல்லன்னா.... என்னன்வோ எழுதுறாங்கப்பா.... வல்லியம்மா, கண்மணி எழுதுனத இன்னும் வாசிக்கல... உங்களுக்கு வந்த மறுமொழிகளையும் இன்னும் வாசிக்க்கல. அதனால ஏற்கனவே யாராவது சொன்னது நான் திரும்ப சொல்றேன்னா பிரசுரிக்க வேண்டாம்.
முதுமை ஒரு பருவமே தவிர சாபமில்லை. நீங்கள் வைத்த தலைப்பைப் பார்த்ததும், மனசு பதறி வாசிக்க ஆரம்பித்தேன். குழந்தை பருவத்தை, வாலிப பருவத்தை வரவேற்கத் தெரிந்த நமக்கு ஏன் முதுமைப் பருவத்தை வரவேற்கத் தெரியாமல் போனது? குழந்தைப் பருவத்தையும், வாலிபப் பருவத்தையும் இரசிக்க பெற்றொர் இருந்தனர். முதுமைப் பருவத்தை இரசிக்க நம்மை பெற்றவர்கள் இல்லையாக இருக்கலாம். அப்பருவத்தில் நாமே பெற்றோர் தானே. நம்மை நாமே இரசிக்க, மதிக்கக் கற்றிக் கொண்டால்........
நம்மை யாராவது கவனித்துக் கொள்ள வேண்டும்; நாம் மற்றவருக்குப் பாரம் என்று எண்ணும் போது தான், முதுமை சாபமாகத் தெரிகிறது.
என்னுடைய ஈமெயில் kaattaaru@gmail.com. நீங்கள் இதை பிரசுரிக்காத பட்சத்தில், என்னை அணுக வேண்டிய பட்சத்தில், என் ஈமெயிலை பயன்படுத்திக் கொள்ளவும்.
வணக்கம், அம்மா.
/பயன்படற மாதிரி இருந்தால் நல்லா இருக்கு/
கண்டிப்பா..! நீங்க, துளசி டீச்சர், தருமி, delphine -லாம் ' ..... பிள்ளைகளுக்கு இருக்கிற பிரச்சனை போதாதா. இதுல நாங்க வேறயா?'-னு சொல்றது உங்க பெருந்தன்மைய பிரதிபலிக்கிறது. (அப்ப கூட பாருங்க, எங்க பிள்ளைங்க கஷ்டபடக் கூடாது-னு தான் நினைக்கிறீங்க).
எதையும் எதிர்பார்த்து இருந்தாதான் ஏமாற்றங்களும், வருத்தங்களும்!
அதனாலதான் என்னவோ, 'எல்லாம் 'அவன்' பார்த்துகுவான். இறைவனை நம்புவோம்.
பிரார்த்திப்போம்'-னு சரணாகதி அடையிறது எதிர்பார்ப்பை தவிர்க்கதானோ?
காட்டாறு....எழுத்திலேயே இந்த 'சர வெடி'னா உங்ககிட்ட பேசினா...
காட்டாறு சலசலனு போகும்.
காலுக்கு இதமாக இருக்கும்.
முகத்துக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.
அதுமாதிரிதான் நம்ம காட்டாறும்.:-0)
Post a Comment