Blog Archive

Friday, April 13, 2007

சித்திரராமன்.....16 ..கண்டேன் சீதையை







நான் ,முக்கண்ணனும் இல்லை,படைத்தவனும் இல்லை. காப்பவனும் இல்லை.
ஒரு சாதாரண வானரன்.
சுக்ரீவ மஹராஜாவின் சபையில் ஒருவன்.
அயோத்திமன்னன் தசரதனின் புத்திரர்கள் இராமனும்
இலக்குவனும் எங்களை
கிஷ்கிந்தையில் சந்தித்தார்கள்
மனைவியையும் வீட்டையும் இழந்த சுக்ரீவனுக்கு , இரண்டையும் அவன் அண்ணன் வாலியிடமிருந்து மீட்டுத் தருவதாக அண்ணல் ராமன் சத்தியம் செய்ய.
பதிலுக்கு இராமனின் மனைவி(சீதை அபகரிக்கப் பட்டாளாம். என்ன ஒரு அதர்மம்!!)
சீதையைக் கண்டுபிடித்துக் கொடுப்பதாகச்
சுக்ரீவன் உறுதி மொழி சொல்ல,
நாங்கள் சிலபேர் தெற்கு நோக்கி வந்தோம்.
மஹேந்திர மலை அடிவாரத்தில் சம்பாதி கழுகு
அறிவுரையின் படி இலங்கைக்கு வந்தால் என்ன அதிசயம் ராவணா! தேவி இங்கே இருக்கிறாள்.
நான் ராம்துதனாகத்தான் இங்கே வந்தேன்.
சீதையைக் கண்டேன்.
வனத்தை அழித்து இதோ உன் முன் நிற்கிறேன்''
என்று உரத்த கம்பீரமான குரலில் சொல்லி முடிக்கிறான் அஞ்சனை மைந்தன்.
வாலி மரணம் இலங்கை மன்னனைக்
கலங்க வைத்தாலும்,
ஒரு குரங்கு வந்து என்னை மிரட்டுவதா
என்ற சினத்தில் அனுமனைக் கொல்ல ஆணையிடுகிறான்.
விபீஷணன் குறுக்கிட்டு அரசியல் நீதி முறைகளை எடுத்துச் சொல்லுகிறான்.
இந்தத் தூதுவன் திரும்பினால் தான் ராமன் ம்உதலானவர்கள் இங்கே வருவார்கள்.
அப்பொது நம் வீரத்தைக் காட்டி அவர்களை வெல்லலாம்.
இப்போது வதைக்க வேண்டாம்'' என்று சொல்ல,
ராவணன்'' குரங்குக்கு அதன் வால்தான் பெருமை,
அதில் தீயிடுங்கள்'' என்று ஆணையிடுகிறான்.
ஆவேசத்தோடு அரக்கர்கள் தங்களை மிரட்டி,
திகைக்க வைத்த வானரத்தை,
இழுத்துப்போய் வாலில் எண்ணை ஊற்றி
அக்னியும் வைத்துவிடுகிறார்கள்.
அசோக வனத்திலோ சீதை இந்த செய்தியை அறிந்த
அடுத்த கணமே அக்கினி பகவானைப் பிரார்த்திக்கிறாள்.
'அக்கினியே நீ குளிர்ந்திருப்பாயாக''
என்றவுடன்
அக்கினி அனுமனை வலம் வந்து தண்மையாக எரிகிறது.
சீதையின் அருளை உணரும் வீர ஆஞ்சனேயன் வானில் சடாரென்று எழுகிறான்.
உலுக்கி விடப்பட்ட பழங்கள் போல அரக்கர்கள் வீழ,
அனுமன் விபீஷணன் மாளிகையும்,
அசோகவனத்தில் சீதாதேவி இருக்கும் இடம் தவிர
அத்தனை மாட மாளிகைகளையும் தீக்கு இரையாக்குகிறான்.
மீண்டும் அன்னையைத் தரிசனம் செய்து
அவள் ஆசியையும் வாங்கிக்கொண்டு
வான்வழி ஏறுகிறான்.
அவன் வாலில் எரிந்த தீயை, தண்ணீரில் அணைத்த இடம்
கூடக் கடலில் சிவந்து தெரிகிறதாம்.
மைனாக மலையின் உபசரிப்பை
ஏற்று மீண்டும் வான்வழி ஏகும்போது அக்கரையில் வானரக்கூட்டம் கண்களில் படுகிறது.
உடனே வீரகர்ஜனை எழுகிறது அவனிடமிருந்து.
அலையலையாக ஸ்ரீராமநாம கோஷம்
அங்கதன் முதலானவர்களைப் போய்ச் சேர்கிறது.
அதைக் கேட்டு வானரர்கள் களிப்பில் ஆழ்கிறார்கள்.
அங்கும் இங்கும் ஓடித் தாவி குதித்து
மரக்கிளைகளை உடைத்துக் கொடிகளைப்போல அசைக்கிறார்கள்.
உற்சாக வரவேற்பைக் காணுகிறான் அனுமன்.
தரையைத் தொட்டதும் அத்தனை வானரங்களும் அவன் சொல்லப் போகும் நற்செய்தியை
எதிர் நோக்கி அவனையே
சுற்றிவருகின்றார்கள்.
அவனும் சீதை இருக்கும் திசையை நோக்கி கைகூப்பி வணங்கி
'ராமனின் தேவி பத்திரமாக இருக்கிறாள்.
ராவணன் அவளைச் சிறை
எடுத்துத் தனியே வைத்து அரக்கிகள்
நடுவே வைத்து இருக்கிறான்.
துன்புற்றிருக்கும் அவளை மீட்டு ராமனுடன் சேர்ப்பது நம் பொறுப்பு ''என்கிறான்.
வானர வீரர்களின்னுற்சாகம் கட்டுக்கடங்காமல் போகிறது.
அப்படியே வானில் பாய்கிறார்கள்
கிஷ்கிந்தையை நோக்கி.
பயணத்தின் நடுவே சுக்ரீவனின் ம்அதுவனம் கனிகளுடனும் தேனுடனும் கண்களைக்கட்டி நிறுத்துகிறது அவர்களை.
அது சுக்ர்ரிவன் வெகு பாதுகாப்பாக
வைத்திருக்கும் மதுகொடுக்கும் வனம்.
தங்கள் இளவரசன் அங்கதனை அனுமதிக்காக
திரும்பிப்பார்க்கிறார்கள்.
அவனுக்கும் மனதில் ஆனந்தம் இல்லையா. வெகு வேகமாகச் சம்மதிக்க,
எல்லோரும் வனத்தில் இறங்கி மனம் நிறையும் அளவுக்கு மதுவை அருந்தி மகிழ்ச்சி கொண்டாடுகிறார்கள்.
இத்தனை நாட்கள் பட்ட சிரமங்கள், கவலை எல்லாம் மறைகிறது.
சிறிது நேரத்தில் அங்குவரும் வனக்காப்பாளன் தடிமுகன் தடுத்துப் பார்க்கிறான்.
அங்கதன் அவனை அடித்துவிரட்டுகிறன்.
ததிமுகன் தீனமுகனாய்
சுக்ரீவ,ராம லக்ஷ்மணர்களை நோக்கி விண்ணில் பறந்து வந்து கீழே இறங்கி அவனிடம் அழுத்படி,
மதுவனம் அழிந்ததை முறையிடுகிறான்.
ராமன் தன் சோகத்திலிருந்து ஒரு க்ஷணம்
விடுபட்டு இது என்ன என்பதுபோஒல் சுக்ரீவனைப் பார்க்க,
அவனோ வெற்றிக் களிப்பில் தன் வாலைச் சுழற்றிப் பாறையில் அடிக்கிறானாம்.!!!
ராமனும் லக்ஷ்மணனும் வியப்போடு பார்க்கிறார்கள்.
அவனென்னமோ அழுகிறான்.
இவன் என்னமோ கூத்தாடுகிறான் என்று அதிசயப் படுகிறார்கள்.
சுக்ரீவன் விளக்குகிறான்.
'' வானரர்கள் திரும்பி விட்டார்கள்.
சுப செய்தியோடு வருகிறார்காள். தேவிதரிசனம் அவர்களுக்குக் கிடைத்துவிட்டது.
அவளும் நலமக இருக்கிறாள்.
இதைதான் அங்கதனும் மற்றவர்களும் நமக்கு அறிவிப்பு செய்கிறார்கள்.
கவலையை விடும் ஸ்ரீராமனே. வெற்றி நமதே''
என்று ஆடுகீறான்.
மிக்க சப்தங்கள் செய்தபடி வானரர்கள் தென் திசசயிலிருந்து அஅர்ப்பரித்தபடி இறங்குகிறார்கள்.
அங்கதனும் அனுமனும்
வீற்றிருக்கும் ஸ்ரீராமனை அணுகி வணங்குகிறார்கள்.
எப்படி இருக்கும் அந்த நிலைமை என்று யோசித்தால் மனம் நெகிழ்கிறது.
ராமா எப்படி இந்த நேரத்தை எதிர்கொண்டாயோ./
மனைவி இருக்கிறாளா.
கிடைத்தாளா,.
இவர்கள் பார்த்தார்களா?
ஒன்றுமே அசைவில்லாமல் ராமன் அனுமனை நோக்க,
அனுமனும் சுக்ரீவனையும் வணங்கிவிட்டு ராமன் அருகில் வினயத்துடன் பணிந்து
''கண்டேன் சீதையை.
கற்பினுக்கு அனிகலனாய்,
இலங்கையில்''
என்று மிருதுவாகக் கூறுகிறான்.
அவ்வளவுதான் !!! ஸ்ரீராமன் ஆரத் தழுவுகிறான் அனுமனை.
நாவில் வர்த்தைகள் தெளிவில்லாமல் திண்டாடுகின்றன.
உயிர் கொடுத்த உத்தமனைக் கண்ணாரக் காண்கிறான்.
மீண்டும் அணைத்துக் கொள்கிறான்.
''என் சீதை இருக்குமிடம் தெரிந்தது. அனுமனே அவள் என்ன சொன்னாள். எப்படி இருக்கிறாள்.
எல்லா விவரமும் எனக்குச் சொல்.
துடிக்கும் என் சிந்தையை, அதன் தாகத்தை
உன் சொற்கள் அமைதிப் படுத்தும்.
என கேட்க ஆஞ்சனெயனும் தான் புறப்பட்டு, இலங்கையை
அடைந்து,
தாயைத் தரிசித்த விதத்தையும்
அனுபவங்களையும் விவரிக்கிறான்.
ஒரு சொல் கூடத் தவறி தன் வீரப் ப்ரதாபங்களை
விவரிக்கவில்லை.
இலங்கை சென்று ராவணன் சொன்ன செய்தியைச்
சொல்லி சீதை முப்பது நாட்கள்
தவணை கொடுத்து இருப்பதையும்
சொல்லி அன்னை அளித்தச் சூடாமணியை
அண்ணலின் கையில் சமர்ப்பிக்கிறான்.
எல்லோரும் பார்க்க அண்ணலின்
கண்களிலிருந்து தாபம் பிரவகிக்கிறது.
'' இந்தச் சூடாமணி சீதையின் தாயார்
தாய் வீட்டு சீதனமாகக் கொடுத்தது.
அவள் நிலைமை என்ன
என்று சொல்லுவாய்''
அனுமன் சொல்கிறான்.
''இப்பொழுது இதை உன் கையில் கொடுத்து என்னிடம் அவள் சொன்ன செய்தியும் சொல்கிறேன்
''என்னைக் காப்பாற்றுவது உன் பொறுப்பு ராமா.
அன்னையும் தந்தையையும் ச்உற்றத்தையும் விட்டு உன்னுடன் வந்தேன்.
உன்னையும் பிரியக்கூடாது என்றெண்ணி
வனமும் வந்தேன்.
இப்பொழுது இத்தனை அகலக் கடலைத் தாண்டி ஒரு தனித் தீவில் இரக்கமற்ற அரக்கியர் சூழ
ராவணனின் கொடும் சீற்றத்திற்கும் பலியாகாமல்
இருக்க ராமா உன்னில் நான் வைத்த நம்பிக்கையே காரணம்.
உன்னைச் சரணடைந்து காப்பாற்றப் படாதவர்கள் யார் இருக்கமுடியும்.?
எனக்கு
ஒரு சிறுவலி கொடுத்த காகத்தையே சுட்டெரிக்கக் கிளம்பினவன் நீ.
இப்போது இன்னும் நான் காப்பாற்றப் படவில்லை என்றால்
அதற்குக் காரணம் நான் இருக்கும் இடம் உனக்குத் தெரிந்து இருக்கவில்லை.
நான் உயிருடன் இருக்கப் போவது இன்னும்
முப்பது நாட்கள்.
அரக்கன் என்னை நினைக்கும் முன் நீ வரவில்லை என்றால் உயிர் துறப்பேன்''
என்று உரைத்து
உங்களுக்கும் இளவல் இலக்குவனுக்கும் சுக்ரிவ ராஜனுக்கும் மங்களம் உண்டாகட்டும்
என்று கல்லும் கரையும் வண்ணம் சீதையின்
வார்த்தைகளை
அனுமன் அப்படியே சொன்னவண்ணம் தருகிறான், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியிடம்.
சுந்தரமாய் இந்த சுந்தரனின் காண்டத்தைப் பூர்த்தி செய்யும் நேரம் வந்துவிட்டது.
அடியேனுடன் இது நாள் வரை
அழகன் அனுமனின் ஆற்றலையும், சொல்திறத்தையும்,செயல் வீரத்தையும்
படித்து திருப்தி அடைந்து இருந்தால் மகிழ்வேன்.
ஒரு மிகச் சிறிய அளவினால் ஆன என்
சிற்றறிவிற்கு எட்டிய அள்வில் தான் எழுதி இருக்கிறேன்.
பிழைகள் பொறுத்துப் படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
ராமாசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்//
அனுமன் லங்காபுரியைத் தீக்கிரையாக்கி
கிஷ்கிந்தை சென்றான்//
கண்டேன் அன்னையய என்றே ராமனைச் சேவித்தே நின்றான்
கடலைக் கடந்து ஐய்யன் வா//னர சேனையுடன் சென்றான்//
எல்லோருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய புதுத் தமிழஆண்டில் அனைவரும்
ஆரோக்கியத்துடனும்,
அளவில்லாத ஐஸ்வரியத்துடனும்
அன்னைதந்தையர் ஆசிகளுடனும்
நல்லறத்தோடு வாழ என் பிரார்த்தனைகள்.
ஜே ரகுராம் ஜானகி ராம்.
அஞ்சிலே ஒன்று பெற்ற அனுமன் நம்மைக் காப்பான்.
வானர சேனையுடன் சென்றான்.

21 comments:

VSK said...

ஜெகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே
உங்கள் செவிகுளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே!!

நன்றி வல்லியம்மா!

வல்லிசிம்ஹன் said...

சுந்தரகாண்டம் பூர்த்தி செய்ததும் ஸ்ரீராமபட்டாபிஷேகம் படிப்பது வழக்கம்.
பட்டாபிராமன்,ஸ்ரீராமனுக்கு ஜெய மங்களம்.
எல்லாவித நன்மைகள்...அவரவருக்கு வேண்டிய
நன்மைகள் கிடைக்கும் என்பது அனுபவபூர்வமான நம்பிக்கை.
தேன்கூட்டில் இனும் பதிய முடியவில்லை.

எல்லோருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாத்துக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

இனிய புதுத் தமிழஆண்டில் அனைவரும்
ஆரோக்கியத்துடனும்,
அளவில்லாத ஐஸ்வரியத்துடனும்
அன்னைதந்தையர் ஆசிகளுடனும்
நல்லறத்தோடு வாழ என் பிரார்த்தனைகள்.
ஜே ரகுராம் ஜானகி ராம்

அன்னை தந்தையரை பிரிந்து வாழும் மக்கள் யாவரும் அவ்ர்களுக்கு அனுசரணயாகவும் அன்புடன் இருக்கவும் வேண்டிக்கொள்ளுங்கள்

"பக்த்யா ராமஸ்ய யே சேமாம் சம்ஹிதாம் ருஷிணா குருதா 1
லேகயந்தீஹ ச நராஸ் தேஷாம்
வாஸஸ் திரி விஷ்டபே'
இந்த சுந்தர காண்டத்தையும் பட்டாபிஷேகத்தையும் படிப்பதாலும், கேட்பதாலும் சகல தேவர்களும் ,பித்ருக்களும் சந்தோஷமடைகிறார்கள். வேதங்களுக்கு சமமான இந்த காண்டத்தை ஜனங்கள் மத்தியில் பரப்புவர்களுக்கு சொர்கத்தில் ஓர் இடம் நிச்சியமாக் உண்டு.

ஸ்ரீராமச் சந்திரனுக்கு சுப மங்களம்
மாராபி ராமனுக்கு
மன்னு பரந்தாமனுக்கு சுப மங்களம்
சீதா மனோஹரனுக்கு சுப மங்களம்
ஸ்ரீ ராம துதனுக்கு சுப மங்களம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள், வல்லியம்மா!
சுந்தரகாண்டத்தின் சுந்தரமான கட்டம், சர்வஜித் ஆண்டான இன்று பதிவிட்டீர்களே! அருமை!

வல்லிசிம்ஹன் said...

வரணும் வி.எஸ்.கே சார்.

லவகுசா பாடல் காதைவிட்டுப் போக மாட்டென் என்கிறது.
அதில் குசனாக வந்த பையன் இன்றைய பிரபல ஆடீட்டர்.
என் பெண்ணிற்கும் ஆடிட்டிங் வகுப்பு எடுத்தார்.
அப்போது கூட அவரை, என்ன தவம் செய்து அவர் அம்மா பெற்றாரோ என்றுதான் வியப்புடன் பார்த்தேன்.
தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்.
நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வாருங்கள் தி.ரா.ச.
மங்களப் பாடலைப் பூர்த்தி செய்தீர்கள்.

சுந்தரகாண்டமும் ராமாயணம் முழுவதும் படிக்கப் படும் இடத்தில் அன்புக்கு வறுமை வரக்கூடாது. வராது.
குழந்தைகள் நல்லபடி பெற்றோரைப்
பார்த்துக்கொள்ளட்டும்.ராமனைப் போலவே அன்னைதந்தையிடம் அணைத்து நடக்க அவனே அருள் புரிவான்.

உங்களுக்கும் மனைவி,பெண்கள்,பிள்ளைகள் எல்லோருக்கும் சர்வஜித்
நன்மையே கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ரவி.

பொறுமையாகப் படித்தீர்களா.நன்றி.

எல்லாப் பாராக்களும் சேர்ந்தே வருகிறது.

பின்னூட்டம் ஒழுங்காக வருகிறது. வேடிக்கையாக இருக்கிறது.
உங்களுக்கும்,மனைவி குழந்தைக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
இன்னும் நிறைய பெருமாளைப் பற்றி எழுதுங்கள்.
கண்கள் கொடுத்த பகவானுக்கு நன்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

துளசி கோபால் said...

//சுந்தரகாண்டத்தின் சுந்தரமான கட்டம், சர்வஜித்
ஆண்டான இன்று பதிவிட்டீர்களே! அருமை! //


சர்வமும் ஜீத் மயம்:-)))))

வெற்றியோ வெற்றி.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்))கள்

Geetha Sambasivam said...

mmmm think, I gave comments for this post yesterday. Maybe it did not reach you. Nice post and Super pictures. Thank You.

Geetha Sambasivam said...

saw it in Thenkoodu and came through that only. So no worry. Happy Tamil New Year.

வல்லிசிம்ஹன் said...

வாஅங்க துளசி,
தமிழ்ப் பூத்தாண்டு நல்லபடியாக எல்லோருக்கும் நன்மை செய்யட்டும்.
சர்வ சித்து என்று வைத்துக்கொள்ளாலாமா?
எல்லாம் சித்திக்கட்டும்னு சொல்லற மாதிரி இருக்கும்.
தீமையை ஜெயிக்கிற வருஷம்னு சொல்லலாம்:-))

வல்லிசிம்ஹன் said...

வரணும் கீதா.
புத்தாண்டு நல்வாழ்த்துகள். உங்க அமெரிக்கப் பயணம் ரொம்ப இனிமையாக இருக்கணும்னு வேண்டிக்கிறேன்.

தேன்கூட்டில் பிறகு கொஞ்ச நேரம் கழித்துப் பதிய முடிந்தது.

வல்லிசிம்ஹன் said...

நன்றி, கீதா.
இந்தப் பின்னூட்டம் தான் வந்தது.

மெளலி (மதுரையம்பதி) said...

அருமை வல்லியம்மா,அதிலும் டிஆர்சி சார் மங்களத்துடன் மிக அழகாக இருக்கிறது பதிவு.

உங்களுக்கும், மற்றும் இங்கு வரும் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

வாங்க மௌலி.

தி.ரா.ச பாடி முடித்ததும் அழகாக இருக்கிறது.
மனத்தில் எத்தனையோ வருத்தங்கள்,முடிவில்லாத நினைவுகள்
எல்லாவற்றிலிருந்தும் விடுதலை அளிக்கக் கூடியது ராமாயணம் என்பதில் மாற்றே இல்லை.
உங்களுக்கும் எங்கள் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Geetha Sambasivam said...

Valli, will you give me the link, from where you are selecting these photos? I gave you a mail also in this connection.

வல்லிசிம்ஹன் said...

கீதா,
உங்களுக்குத் தனிமடல் போட்டேனே.
மீண்டும் எழுதுகிறேன்.

உங்கள் யாஹூ ஐடிக்கு அனுப்பினேன்.
இரண்டு நாள் ஊரில் இல்லை.
அதான் தாமதம்.

ambi said...

சென்னையில் TRC சார் வீட்டுக்கு போயிருந்தேன். என்னோட சீதா தேவியை வரவேற்க தான். :)

இதோ கரெக்ட்டா சுண்டல் வாங்க வந்தாச்சு.
இந்த பதிவை நீங்கள் மிகவும் வரி வரியாக ரசித்து எழுதியிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.

பாருங்கோ! கீதா மேடம் பதிவில் இருப்பது போல ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கூட இந்த பதிவில் இல்லை. :)

வல்லிசிம்ஹன் said...

வந்தாச்சா சீதை.:-)
அதெப்படி நெட்டுக்கு வரமுடிஞ்சது உங்களால். பிசியா இருக்க வேண்டாமோ?

அதான் சென்னை பூராவும் தோரணமா?

கீதாவை வம்புக்கு இழுக்காமல் உங்க பொழுது போகாதோ:-)

குமரன் (Kumaran) said...

மங்கலம் கோசலேந்த்ராய மஹநீய குனாத்மனே
சக்ரவர்த்தி தனூஜாய சார்வபௌமாய மங்கலம்

அம்மா. மிக நன்றாக இருந்தது சுந்தர காண்டம். இவ்வளவு நாட்கள் கழித்துப் படித்தோமே என்று என்னை நான் நொந்து கொன்டாலும், இப்போதாவது படித்தோமே என்று தேற்றிக் கொள்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

குமரன்,
இன்னும் ஒரூ பாகம் எழுதி வீடால் நிம்மதியாக்காக் கிளம்பிவிடல்லாம்.நீங்கபொறுமையாகப் படிக்கிறதே எனக்குப் பெருமையா இருக்கு. மிகவும் நன்றி.