Blog Archive

Thursday, March 01, 2007

மழை,மின்னல்,இடி பயமா?




















படங்களைப் பார்க்கக் கூட பயந்த காலம் உண்டு.
வில்லிபுத்தூரிலோ, திருமங்கலத்திலோ தெரியவில்லை,
சினிமா பார்க்கப் போகும் முன்னமேயே மழைக் காட்சி வருமா என்று கேட்டுவிட்டுப் போகும்
வழக்கமும் இருந்தது.
பெற்றோர் மழுப்பி அழைத்துப் போவார்கள்.
பின்ன?/அப்பாவுக்கோ ஆடிக்கொருதரம் நேரம் கிடைக்கும்,அதில் ஒரு வீரபாண்டியக் கட்டபொம்மனோ, சம்பூர்ண ராமாயணமோ தான் பார்க்க அனுமதி.
சின்ன ஊர்களில் அம்மாவுக்கு தனியாக எங்களை அழைத்துப் போக அனுபவம் பற்றாது.
பரமசாது.
அதனால் எல்லோரும் வெளியில் சேர்ந்து போகும் வேளையில், தொந்தரவு செய்யாமல் ஒரு கலர், ஒரு மிக்ஸர் என்று இனிமையாக(?) போனோமா வந்தோமா என்றீல்லாமல் சினிமாவில் மழை வந்தாலே கண்ணு காது மூடும் பெண்ணை என்ன செய்ய முடியும்?
இத்தனை தூரம் இடி மின்னலைப் பார்த்து கேட்டு மிரளுபவர்கள் இருக்கிறார்களா என்று தெரிய வேண்டும்.
இது ஒரு ஃபோபியாவோட சேர்த்தியா?
கன்சல்டிங் சைக்காலஜிஸ்ட் கிட்ட போக வேண்டிய கேசா.?
தானா சரியாப் போறதுக்கு இன்னும் நிறைய நேரம் எல்லாம் கைவசம் இல்லை.
சில பேர் சொல்கிறமாதிரி இடிமழை ப்ஓது வெளியில் நின்று எதிர் கொள்ள வேண்டுமா.?
சேசே அது செய்ய முடியாது.
இப்போது நேற்று இரவெ எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது
எனக்கு மட்டும் ஒரே ஒரு மின்னல் கீற்று வெளிச்சம் ப்அட்டதும் விழிப்பு வருவானேன்.
இந்த ஊரில எல்லாம் கண்ணாடி.
ஒரெ வெள்ளைவெளேர்னு பளிச்சிடும் மின்னல்.
அதைவிடக் கொடுமை இடி வரக் காத்திருப்பது.
விறுவிறுனு எழுந்து துணிமணி மாட்டி வைக்கும்
(வாக் இன்)வார்ட்ரோபில் போய் உட்கார்ந்துவிட்டேன்.
இரண்டு மணீயிலிருந்து 4 மணி வரை ராம ஜபம்.
அதெப்படி சரியாக அங்கே போனேன் என்று நினைக்கீறீர்களா/
அதெல்லாம் ஒரு சுய பாதுகாப்பு தான்,
வெதர் சானலில் மழை, இடியுடன் கூடிய மழை என்று சொன்னத்,
செவ்வாய்க் கிழமை.
அன்றிலிருந்தே நம்ம ரேடார் வேலை செய்ததால்
ஒளிய இடம் கண்டுபிடிக்க முடிந்தது.:-0)
யாரோ சொன்னார்கள், இந்த ஊருகிற
சாதி இருக்கிறதே அதாம்பா அந்த பேர் சொல்லாத
படம் எடுக்குமே,
அதுவாக நான் போன ஜன்மத்தில் இருந்து இருப்பேனாம்.
ஏதாவது இடி சத்ததிலே,
பொட்டுனு சாமிகிட்ட போயிடருப்பபேனாம்.
அதான் பூர்வ ஜன்ம வாசனை இப்படிப் போட்டுத் தாக்குதாம்.
அதுக்காக இப்ப என்ன செய்ய முடியூம்.
நாடி ஜோசியம் பாக்கலாம்.
அவங்க சொல்ற கோவிலுக்கெல்லாம் போயி விளக்கேத்தலாம்.
அதுவும் மழை சீசனா இல்லாமல் இருக்கணும்.:-)
ஒரே ஒரு பரிகாரம் கேக்கப் போயி,
ஒன்பது ஜென்ம பாபங்களையெல்லாம் வரிசையாகச் சொல்லுவதைக் கேட்டு
இடியே தேவலைனு திரும்பி வரலாம்.
யாருக்கெல்லாம் என்ன என்ன பயம்னு சொல்லுங்கப்பா. நானும் மனசைத் தேத்திக்கறேன்.

14 comments:

துளசி கோபால் said...

இடி, மழை இல்லேன்னா தமிழ்சினிமா பொழைக்காதுப்பா. தண்ணியிலே நனைஞ்சே
ஆகவேண்டிய கட்டாயம் கதாநாயகிக்கு உண்டு.

அதென்ன வார்ட்ரோப்லே ஒளியறது? சிங்கப்பூர்லே தோழி வீட்டுலே ( அடுக்குமாடி)
ஒரு ச்சின்ன அறைக்கு மட்டும் ஒண்ணும் ஆகாதாம். பாம் போட்டாலோ, நில நடுக்கமுன்னாலோ,
எதோ ஆபத்துன்னாலோ அங்கேபோய் இருந்துக்கலாம். அங்கேதான் அவுங்க
சாமி அறை!

எனக்கு பயமுன்னா ஒரே ஒரு விஷயம்தான். 'போற நேரம்' படுக்கையில் விழறது(-:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அக்கா!
போன இடிக்கும் மின்னலுக்கும் ஏதுமே நடக்கவில்லை இப்போதும் ஏதும் நடக்காது என
நினைத்து; மனதைத் தேற்றுங்கள்!!
அந்த கடைசிப் படம் பிரமாதம்

வல்லிசிம்ஹன் said...

வாங்கப்பா துளசி,இங்கே அதுதானே இருக்கு?
இல்லாட்டா பேஸ்மெண்டுக்குப் போலாம். தனியா இருக்கும் .விடுங்கப்பா. அபோதைக்கு இப்போதே சொல்லியாச்சு.
நம்ம கோவிந்தன் பார்த்துப்பான்.
இத்தனை சினேகிதர்கள் இருக்கோமே.
எல்லாரும் ஒண்ணா ஒரு வீடு கட்டலாம்.அதான்(வடுவூர்) குமார் கட்டப் போறாரே.
தூள் கிளப்பிடலாம்.

வல்லிசிம்ஹன் said...

யோகன், எத்தனையோ இடி மின்னல் பார்த்தாச்சு.இல்லையில்லை உணர்ந்தாச்சு.
வாழ்க்கையில் நேரும்போது தாங்கியாச்சு.
கேவலம் இடிக்கு பயப்படறியெனு நானே என்னை சொல்லிப்பேன்.:-0)
நன்றி. இதுவும் கடக்கும்.
குமரன் ஊரில எல்லாம் ரொம்ப ஸ்னோ ஸ்டார்ம்.

இலவசக்கொத்தனார் said...

கன்புயூஸ் பண்ணறீங்களே.

இடிக்கு பயமா?

மின்னலுக்குப் பயமா?

மழைக்குப் பயமா?

தெளிவாச் சொல்லுங்க. ஏன்னா வேற வேற பெயருங்க இருக்குல்ல.

Astraphobia or Astrapophobia- Fear of thunder and lightning.

Brontophobia- Fear of thunder and lightning.

Ceraunophobia or Keraunophobia- Fear of thunder and lightning.

Tonitrophobia- Fear of thunder.

Ombrophobia- Fear of rain or of being rained on.

Pluviophobia- Fear of rain or of being rained on.

இவ்வளவு பெயர்கள் இருக்கு பாருங்க. அதுனால் உங்களை மாதிரி நிறையா பேரு இருக்காங்க.

எங்க ஊரில் முதல் மழை பெய்யும் போது கிளம்பும் மண் வாசமும், சின்னப் பயலா இருக்கும் போது அந்நேரத்தில் நனைஞ்சுக்கிட்டே போயி வாய்க்காலிலோ தாமிரபரணியிலோ ஆட்டம் போடும் சுகமும்...

அப்புறம் கொஞ்சம் பெருசான பின்னாடி மழை வந்தா எல்லாரும் ஒதுங்கி நிக்கும் போது பைக்கை எடுத்துக் கொண்டு போயி அப்போ ஊசியா முகத்தில் அடிக்கும் மழையின் சுகமும்....

வாழ்க்கையில் ரொம்பவே மிஸ் பண்ணிட்டீங்க!! இப்பவும் மழையில் நனைவது நமக்கு ரொம்ப பிடித்தமான ஒரு விஷயம்தான்!!

வல்லிசிம்ஹன் said...

ஹலோ கொத்ஸ் யாரு சொன்னது ?
நான் மழைல நனைஞ்சதே இல்லையா.
இந்தப் பசங்களெல்லாரையும் பஸ்ஸீல் ஏத்திட்டு குடைகளை அவங்க கிட்ட கொடுத்துட்டு ஜாலியா நனைஞ்சு வருவேன்.

இடிச்சா ஓடி வந்து விடுவேன்.
இத்தனை ஃபோபியா இருக்கா?
ஆஹா, அதிசயப் பிறவினு நினைச்சேனே.
Brontophobia- Fear of thunder and lightning.

இதுதான் நல்ல சத்தம் வரது.இதையே எனக்கு வைத்துக் கொள்கிறேன்.
உங்க விக்கிபசங்க பதிவிலே வரத்துக்குத் தகுதி உண்டா?
உண்மையாகவே கேட்கிறேன்.
நன்றி கொத்ஸ்.

மெளலி (மதுரையம்பதி) said...

என்ன உங்களுக்கு பயமா?....உங்கள பார்த்து அடுத்தவங்க பயப்படுவாங்கன்னுல்ல நினைத்தேன்.
:-)

வல்லிசிம்ஹன் said...

இப்படி ஒரு கேள்வி போட்டுட்டீங்களே மௌலி.
நான் என்ன தாடகையா சூர்ப்பனகையா?
ஏதோ சொன்னதைக் கேட்டு எல்லோரும் நடந்துப்பாங்க.
அவ்ளோதான்.
மத்தப்படி பயம் கியம் ஒண்ணும் என் சாம்ராஜ்ஜியத்தில் கிடையாது.
எங்க சிங்கம் கூட ஆமாம் ஆமாம் என்கிறாரே:-)

ambi said...

//சினிமா பார்க்கப் போகும் முன்னமேயே மழைக் காட்சி வருமா என்று கேட்டுவிட்டுப் போகும்
வழக்கமும் இருந்தது.
//
:)))) ha haaaa.

இப்ப எல்லாம் மழை காட்சி இருந்தா தான் அது படம்!னு சொல்றாங்க.
என்ன கொடுமை இது!

//எங்க சிங்கம் கூட ஆமாம் ஆமாம் என்கிறாரே//
:)
உங்களை பார்த்து அவருக்கு பயமோ என்னவோ? :p

முந்தைய பதிவுகளையும் இப்ப தான் படிச்சேன்.
ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன், பட்சணம் ஏதவது கிடைக்குமா? :)

வல்லிசிம்ஹன் said...

அம்பி!!!
எத்தனை நாளாச்சு பார்த்து.
கீதா பதிவுல பார்க்கும்பொது நினைத்துக் கொள்ளுவேன்.
என்ன பட்சணம் வேணும் உங்களுக்கு.?
மைசூர்பாகு செய்து தருகிறேன்.
ஊருக்கு வந்த பிறகு.;-0)
தான்க் யூ அம்பி.
ஆமாம்.மழை இல்லாத சினிமாவா/
கதா நாயகி வீட்டைவிட்டுத் துரத்தப்படும் போதும், யாராவது வயசானவர் டொம் என்று கட்டிலில் சாயும் போதும், ஹீரோ தற்கொலைக்குக் கிளம்பும்போது, அப்பாடி இந்த மழைக்கா வேலை இல்லை.!

மெளலி (மதுரையம்பதி) said...

//நான் என்ன தாடகையா சூர்ப்பனகையா?//

தாடகை-சூர்பனகை கண்டு மட்டும் தான் பயமா?,

நாங்க எல்லாம் தடாதகைக்கும் பயப்படுபவர்கள் வல்லியம்மா....அவளைக் கண்டு, கொஞ்சுவோம், கெஞ்சுவோம், அழகை மெச்சுவோம்...எல்லாம் அவளே...

வல்லிசிம்ஹன் said...

தடாதகையின் கண்ணல்லவா நம்மை ஆள்கிறது.
அவள் கடாட்சம் இருந்தால் போதுமே.

அவளைத் துதிப்போர்க்கும் வல்வினைபோம்.
பச்சையம்மா பார்வையில் பயமில்லாமல் இருக்கலாம்.உங்க
தேவிக்கும் இன்னோரு பேரு மீனாட்சியா?

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம், எனக்கு இப்போப் படிக்கிற ஃபோபியா வந்துடுமோன்னு பயமா இருக்கு. :)))))))
வல்லி, கொத்ஸ் சொல்ற மாதிரி மழை ஆரம்பிக்கும் அழகும், அதுவும் ஈசானிய மூலையில் சின்னதாய் ஒரு கறுப்புப் பொட்டுத் தெரியும் முதல்லே, அப்புறம் அது கொஞ்சம் கொஞ்சமாய்ப் பெரிசாப் போய் ஒரு பயங்கர ராட்சஸன் மாதிரி வியாபிச்சுத் திடீர்னு இருட்டாகி, சில்லிப்பும் வந்தப்புறம் பெய்யற மழை இருக்கே அது போல் வேறு ஏதும் இல்லை. ஆனால் ரோட்டிலே மழை பெய்தால் தண்ணீர் மாதக் கணக்கில் இல்லை இங்கே எல்லாம் தேங்குது. அதான் மழை சமயம் பிடிக்காத விஷயம். அந்த விஷயத்தில் ஊட்டியில் இருக்கிறப்போ எப்போ வேணா மழை வரும், நல்லா ரசிக்கலாம். சில சமயம் எதிர் மலையில் மழை பெய்யும், நம்ம மலைக்கு வராது. நம்ம மலையில் மழைமேகம் நம்மைத் தொட்டுக் கிட்டே போகும். உள்ளே வந்து மழையையும் ரசிக்கலாம் இடி, மின்னலுடன். தண்ணீர் தேங்குதலா? மூச்!

வல்லிசிம்ஹன் said...

கீதா, நீங்க ஊடியை விவரிக்கிற அழகு, நாம அங்கே இருக்காமப் போயிட்டோமேனு தோணுது,.
எதுவுமே அனுபவம்தான்.
இந்தப் பயம் என்னோட சிப்ஸ் லே பதிவாயிடுத்து போல.:-0
சில பேருக்கு சிலது கொடுப்பினைனு தான் நினைக்கிறேன்.