Blog Archive

Wednesday, January 10, 2007

கூடாரை வெல்லும் கோவிந்தன்



கோவிந்தனுடன் கூடிக் களித்த மார்கழி மாதம் நிறைவடைய இன்னும் ஐந்து நாட்கள்
உள்ளன.
மாலே மணிவண்ணா மார்கழி நீராடினோமா,
உன் கோவில் வாசலில் தவமிருந்தோமா,

உன் நப்பின்னையைக் கூவி அழைத்தோமா
அவளை மகிழச் செய்தோமா.
ஏதும் தெரியாது.
ஏனென்னில் வலம் இடம் எது என்றே தெரியாத இடைக்குலம்.
நல்லது எது கெட்டது எது தெரியாது.

ஆனால் உன்னைத் தெரியும்.
உன் வார்த்தைகள் தெரியும்.
நீ எங்களைக் காப்பற்றத்தான் இருக்கிறாய்
என்றும் தெரியும்
கூப்பிட்ட குரலுக்கு வருவான் கோவிந்தன் அல்லவா.
ஆதலால் கோவிந்தா,மாதவா, கேசவா,ரிஷிகேசா
என்று எப்பவுமே உன்னைக் கூப்பிடும் குரல் வேண்டும்.

உன் நினைவு வேண்டும்.
உன் நாமம் நாவில் வேண்டும்.
அகத்தில் உன் உருவம் வேண்டும்.
அந்தக் கருணைமழையில் நனைந்து நனைந்து
உன் கை படும் பசுப்போல் உன் சொற்படி நாங்கள் நடந்து உன்னை வந்து அடைய வேண்டும்.
கோவிந்தன் நாமம் வாழி.

17 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

காலை 6 மணி; கூடாரை வெல்லும்
கோவிந்தனுடன் இன்றைய நாள் துவங்குகின்றது........
மகிழ்ச்சி!

கோவி.கண்ணன் [GK] said...

வல்லியம்மா,

படங்கள் அழகாகவும் குளுமையாகவும் இருக்கின்றன. கோவிந்தனை குளிர்விக்கும் உங்கள் எழுத்தும் அருமை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கூடாரை வெல்லும் கோவிந்தா!
குறையொன்றுமில்லாத கோவிந்தா!
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
என்று கோவிந்த நாமத்தைக் கடைசிப் பாசுரங்களில் கோதையும் அடுக்குகிறாள்!

நாச்சியார் பெயர் கொண்ட நீங்களும் அடுக்குகிறீர்கள்! வாழி அவன் திருநாமம்!

மார்கழித் திங்கள் முடியப் போகிறதா? தைத் திங்கள் பிறக்கப் போகிறதா??
ஆகா...வேகமாக ஓடி விட்டதே!

வடுவூர் குமார் said...

அருமையான படங்கள்.
இந்த மாதங்களில் மடவிளாகத்தை சுற்றி காலை 5 மணிக்கு பஜனை கோஷ்டியுடன் பாடிய அனுபவங்கள் கண் முன் விரிகின்றன.
நன்றி

Geetha Sambasivam said...

நாளைக்குக் கூடாரவல்லித் திருநாள். மதுரையில் இருந்த நாட்கள் நினைவில் மோதுகின்றன. காலைக் குளிரில் குளித்துவிட்டு 4 மணிக்கேக் கூடலழகர் கோவிலுக்குப் போய் பஜனையில் 4 மாசி வீதி முழுக்கச் சுத்தி விட்டுப் பின் கொடுக்கும் பிரசாதத்தை வாங்கிக் கைச் சூடு பொறுக்க முடியாமல் சூட்டோடு சூடாகச் சாப்பிட்ட நாட்கள்.
அந்த நாளும் வந்திடாதோன்னு தோணுது.

வல்லிசிம்ஹன் said...

என்றும் கூடாரை வெல்லும் கோவிந்தன். அவன் பெயர் சொல்லி இன்று அக்கார வடிசல்
வேறு.!!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கண்ணன்.
அவன் இருக்கிறான் என்ற உணர்வு ஒரு பாதுகாப்பு. நம்மை நாமே கட்டுப் படுத்த ஒரு அங்குசம்.

வல்லிசிம்ஹன் said...

பின்னே!!ஓடாமலா இருக்கும். கொஞ்சமாவா மாதவிபந்தலிலும்
கண்ணன் பாட்டிலும் மூழ்கினோம்.!!

அத்தனை கவலைகளையும் போகும் நாச்சியார் பாட்டுகள் அவளைத் தொடர்ந்து கண்ணன் பாட்டுகள்.
இரண்டு விருந்து தினம் கொடுத்தீர்கள்.
சென்னையிலிருந்து பாவை நிகழ்ச்சிகளைப் பார்ர்க்காத குறையைத் தீர்த்தக் கலியுலகக் கண்ணபிரான்.

வல்லிசிம்ஹன் said...

குமார்,
எல்லோருக்கும் ஒரு ஊர்.
எப்படியோ வலையில் அவன் கீதம் பாடிவிட்டோம் என்று தான் நினைக்கிறேன்.
நமக்காவது அந்த நினைவாவது இருக்கிறது.
நமக்குப் பிறகு வந்த சிறார்களுக்குப்
பஜனைப் பாட்ட்டு என்றால் டிவியில் தான் பார்த்துக் கேட்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, கீதா மதுரை மார்கழி நன்றாகவே குளிரும்.
ஹ்ம்ம்.அந்த நாளும் வந்திடாதோனு பாடறதை விட நாமே பஜன் ஏற்பாடு செய்தா என்னனு தோணுகிறது.
இங்கே குளிர் மார்கழியை உள்ளேயே கொண்டுவந்து விட்டது.

தி. ரா. ச.(T.R.C.) said...

கோவிந்தா... கோவிந்தா... நின்ன நாம ஒந்து அறியேனே..என்ற புரந்தர டாசரின் பாடலை மஹாராஜபுரம் சந்தானம் பாடி கேட்டிருக்கிறீர்களா. அப்படியே கண்ணை முடிக்கொண்டால் கண்ணன் நம் கண்ணெதிரே வந்து நிற்பான். படங்களும் அற்புதமாக இருக்கு.நேரிலே பார்ப்பது போல இருக்கிறது.விஷ்ணுவின் 12 நாமங்களையும் ஆண்டாள் பாசுரத்தில் ஆண்டு இருப்பது ஒரு விசேஷம்

வல்லிசிம்ஹன் said...

சிஜி சார், உங்கள் பெயர் போடாமல் பதில் பின்னூட்டம் போட்டுவிட்டேன்.
நன்றி,.

வல்லிசிம்ஹன் said...

தி.ரா.ச என்னிடம் இருக்கும் சி.டிக்களில்
பார்க்க வேண்டும்.

சந்தானத்தின் குரல் குழைவு இன்னும் யாரிடமும் பார்க்கவில்லை.
நன்றி.
பன்னிரு நாமமும் தினமும் சொல்ல வேண்டும் என்று முறை. இப்போதெல்லாம் கிருஷ்ணா என்பதோடு சரி செய்துகொள்ளுகிறேன்.:-)

மு.கார்த்திகேயன் said...

கண்ணன் கதைகளை நாள் முழுக்க பேசிக்கொண்டிருக்கலாம் வல்லி.. கேட்கும் போதும், நினைக்கும் போதும் உள்ளம் முழுக்க பரவுகிறான், உலகில் சூரியனின் ஓளி பரவுவது போல..

என்னங்க, உங்க வீட்லயும் சக்கரை பொங்கலா..

Anonymous said...

நன்றி வல்லியம்மா....காலையில் வீட்டில் நானும் பூக்கூடாரமும், பூஜையும் செய்துவிட்டு, குறையொன்றுமில்லை எனப்பாடியவாறே வந்து பார்த்தேன் யார் இதனை பதிவிட்டிருக்கிறார்களென்று....

.....என்ன?, அக்காரவடிசலா, அதில்லாமலா?....மனைவி அவள் பங்களிப்பாக அதனை நேய்வேத்தியதிற்கு செய்தளித்தாள்...

மெளலி....

வல்லிசிம்ஹன் said...

கண்டிப்பாக சர்க்கரைப் பொங்கல் உண்டு.
கார்த்திகேயன் நீங்களும் வாருங்களேன் சாப்பிடுவதற்கு முன்னமோ, பின்னாலேயொ அவன் புகழ் பாடலாம்.

வல்லிசிம்ஹன் said...

மௌலி ,
திருவிளையாடலில் 'நாகேஷ், சிவாஜி சிவனிடம் 'சைகையில் எல்லாம் ஆச்சா?'
இங்கே இனிமேதான் ஏற்பாடே'
என்பார்.
அதுபோல் சிகாகோவில் இப்போதுதான் பொழுது புலரலாமா ,வேண்டாமா என்று யோசிக்கிறது.
பிறகு என்ன, முழங்கை வழிவார
நெய் பெய்து சர்க்கரைப் பொங்கல்
உண்டு.
பூக்கூடாரம்!!என்ன அழகான வார்த்தை.
நன்றி மௌலி சார்.