


//யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர கிருதம் ஹஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்
மாருதீம் நமத ராக்ஷசாந்தகம்.//
அஞ்சனா நந்தனம் வீரம்
ஜானகி சோக நாசனம்
கபீசமக்ஷஹந்தாரம்
வந்தே லங்கா பயங்கரம்//
ஆஞ்சனேயா உன் அடி சரணம் .
நீயில்லாமல் எங்கள் வாழ்க்கை ஏது?
எத்தனை வடைமாலை ஏற்றுக் கொண்டாய்.
ஒரு சின்ன மாலையில் எனக்கு கொடுத்த நிம்மதியை என்ன சொல்லுவது?
இதோ உன் கோவில் வாயிலில் பந்தல்.
இன்று உனக்குத் திருமஞ்சனம்,சேவை எல்லாம் நடந்திருக்கும்.
நீயும் உன் இராமன்,சீதை குடும்பத்தாருடனும் கூடி மகிழ்ந்து
அடியவருக்குத் தரிசனம் கொடுத்து இருப்பாய்.
ராமன் '' ம்ருது பாஷி''.
மெல்லப் பேசுகிறவன். இதமான வார்த்தைகள்
சொல்கிறவன்,
அவனே புகழும் வண்ணம் வார்த்தைகளை அளந்து
பேசி, அர்த்தத்தோடு பயன்படுத்தி சீதையின் சோகம்
தணித்தாய்.
அசகாய சூரனே,அஞ்சனை புதல்வா!
உன் அடக்கமும்,அறிவும்,மொழித் திறனும்
இருந்தால் உலகையே தோழமையோடு
பார்க்கலாம் அல்லவா.
அருள்வாய்.
படங்கள் ... கூகிள் ஆண்டவர்.
நாமக்கல் ஆஞ்சனேயர்,லஸ் அனுமார் கோவில் முகப்பு,
விஸ்வரூப அனுமான்.
8 comments:
ஆஞ்சனேயமதிபாடலானனம் காஞ்சனாத்ரி கமனீய விக்ரஹம்
பாரிஜாத தருமூல வாசினம் பாவயாமி பவமான நந்தனம்
ஜெய் ஆஞ்சினேயா!!!
படங்கள் அருமை!!!
ஹைய்யா
மைலாப்பூர் ஆஞ்சநேயர்!
நன்றி வல்லியம்மா, சென்னைக்கு அழைத்துப் போனதற்கு! :-)
அப்படியே பக்கத்து மார்க்கெட்டில் கொஞ்சம் பிஞ்சு வெண்டைக்காய் வாங்கிக் கொள்ளலாம்! :-)
ராமன் = ம்ருது பாஷி
எங்கள் அனுமன் = ம்ருது சுபாஷி
எங்க வீட்டுப் பேரும் பாரிஜாதம் தான்.
அங்கேயும் துளசிக்கும் நீர் சமர்ப்பிக்கையில் ஆஞ்சனேயன் அங்கேஇருப்பதாக நினைப்பேன்.
அவன் அருள் தான் உங்க எல்லோருடைய சத்சங்கம் கிடைக்கிறது.நன்றி குமரன்.
பாலாஜி சார், நட்சத்திரம் வந்துவிட்டதா இங்கே:-0)
என் மனக்குறையைத் தீர்த்து வைக்கும் கூகிளுக்கு நன்றி.
அட ராமா,
வெண்டைக்காய் மட்டும் போதுமா/
உங்க ஊரில முருங்கைக் காய், கிடைக்கலை. சாம்பார் பண்ணனும்.
அப்படியே கொஞ்சம் சின்ன நெல்லிக்காய்.
சரியா. பையிருக்கா?ரிக்ஷாவைக் கூப்பிடலாமா?:-)
மிருது பாஷி.பூர்வ பாஷிக்கு,
சுபாஷி பொருத்தம்தான்.
பெருமாள் எவ்வழி,பக்தன் அவ்வழி:-)
Post a Comment