Blog Archive
Monday, November 27, 2006
அரோரா ஸ்ரீ ஸ்ரீனிவாசர் கோவில்
சிகாகோ தவிர வேறு இடங்களில் இருக்கும்
நண்பர்களுக்கான பதிவு இது.
இந்த காற்று சூழும் நகரத்துக்குக்
கோவில்கள் நிறைந்த ஊர் என்று கூட பெயர் சொல்லலாம்.
ராமர் இருக்கிறார்.
வெங்கடாசலபதி தன் இல்லத்தரசி அலர்மேல்மங்கை மற்றும் முருகன்,பிள்ளையார்,
சிவன் அம்பாள் , ஐய்யப்பன் என்று ஷண்மத
கோவிலாக இருக்கும் இடம் அரோரா என்ற
பகுதி, கிரேட்டர்
சிகாகோ வில் இருக்கிறது.
நான் கூட 'அரோஹரா ' என்று சப்தம் வருகிறதே
என்று நினைத்தேன்.
அங்கே கோவில் கொண்டு இருக்கும் பெருமாள்
சகல சாஸ்திர சம்பிராயத்தோடு
திருமலை திருப்பதி போலவே
அலங்காரமாக விளங்குகிறார்.
கோவில் மடப்பள்ளி எங்கே என்று தேட நினைத்தேன்.
வடை வாசனை மூக்கைத் துளைத்ததால்.
அதற்கென்று தனி இடத்தில் காண்டீன் ஒன்று இயங்குகிறது.
அதுதான் எல்லோரையும் மெயின் அட்ட்ராக்ஷனுக்கு
அடுத்தபடி. இழுக்கிறது.
இதுதவிர மாத முதலில் நடைபெறும் திருமஞ்சனம்,
பகல்பத்து இராப்பத்து எல்லா
விதமான உத்சவங்களின் போதும்
எல்லாக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும்
ஓரோர் விதமான உணவு வகைகளைக் கொண்டு
வந்து பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
இதெல்லாம் போன தடவை நான் இங்கே வந்த போது
பார்த்த கேட்ட விஷயங்கள்.
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக சிக்காகோவைத்
தங்கள் உழைப்புக்கும், வாழ்க்கை மேன்மைக்கும்
தேர்ந்தெடுத்த இந்தியர்கள்
கோவிலை வளப்படுத்தித்
தமிழ் மொழி வளர்க்கும், சங்கீதம்,நடனம் என்று பலவிதமாகப்
பயிற்சிகள் நடைபெறும்
கலைக்கூடமாக என்று
பழைய காலக் கோவில் பரம்பரைக்
காட்சிகள் தோன்றுகின்றன.
இவையெல்லாம் துளசி என்னை அரொரா கோவிலா
என்று ஒரு வார்த்தை கேட்டதால்.
எழுதத் தோன்றியது.
மலர்கள்,
பல விதங்களில் பல வர்ணங்களில்
கோலாகலமாக வந்துசேர்கின்றன.
திருமணங்கள் மற்ற விழாக்கள் எல்லாமே
குறையின்றி மறை ஓதுபவர்கள்
துணையோடு நடக்கின்றன.
எல்லாவற்றிலும் அருமையான ஈடுபாடு தெரிகிறது.
சென்னை மாநகரின் (ஏன் மைலாப்பூரின்)
பல இளைய தலை முறைப் பெண்களையும்
வாலிபர்களையும் பார்க்க முடிந்தது இன்னோரு அதிசயம்.
மீண்டும் தொடரலாம்.
இவர்கள் பணி நன்று வளரட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
//வடை வாசனை மூக்கைத் துளைத்ததால்.//
ஹாஹாஹாஹா.............
நம்ம ஞாபகம் விடாது தொடரும்:-)))))
கோயில் அட்டகாசம். நம்ம பெருமாள் .... ஹைய்யோ
என்னன்னு சொல்றது?
அவருக்கென்னப்பா கொடுத்து வச்சவர்:-)))))
சூப்பர் பதிவு.
ரொம்பப் பிடிச்சிருக்கு.
'அரோரா கோயிலுக்கு வரேன்'னு நேர்ந்துக்கறென். இனி அவன் பொறுப்பு:-)))
அரோராவுக்கு அரோகரா! :-))
வல்லியம்மா....அழகான பெருமாள் படம்! முதலில் அவரைப் போட்டிருக்கலாமே!
டேபிள்,சார்,வாட்டர் பாட்டில் எல்லாம் பாத்து நீங்க சிகாகோ வலைப் பதிவர் மாநாட்டுக்குத் தான் பதிவு போட்டீங்களோன்னு ஒரு கணம் குழம்பிப் போனேன்! பின்னாலேயே என் பெருமாள், எம் பெருமான் வந்து காட்சி கொடுத்தார், உங்க மூலமா!
நன்றி வல்லியம்மா!
//சிக்காகோவைத் தங்கள் உழைப்புக்கும், வாழ்க்கை மேன்மைக்கும் தேர்ந்தெடுத்த இந்தியர்கள் கோவிலை வளப்படுத்தித்
தமிழ் மொழி வளர்க்கும்//
அவர்களுக்கும் என் வணக்கம்! நன்றி!
அப்படியே "லெமாண்ட்" கோவிலுக்கும் ஒரு நடை போயிட்டு வந்து அதைப் பத்தியும் எழுதுங்க :)
அடியேன் சிகாகோ செல்லும் போதெல்லாம் பெருமாள் தரிசன சௌபாக்கியம் கிடைப்பதுண்டு. சொல்லப்போனால் சிகாகோ போவதே பெருமாளைத் தரிசிக்கத் தான்.
துளசி,
இன்று மறுமுறை தரிசனம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
நிறைய செய்யராங்கப்பா. பட்டாச்சாரியார் தட்டில் 100$
டிப்ஸ் கூட விழுது.
மேற்கொண்டு விவரம் கிடைத்தால் எழுதுகிறென்.கட்டாயம் வருவீங்க இங்கெ.
இடம்தான் சொல்லிட்டேனே.:-)
வாங்க ரவி.இவங்க கணினிலேருந்து அப்படியே போட்டேன்.
காண்டீன் அழகும் நல்லாத்தான்
இருக்கு.
நீங்க இன்னும் இங்கே வரலியா?
லீமாண்ட் கண்டிப்பாப் போக முயற்சி செய்கிறேன்.
நன்றி அரசி.
இப்பவும் வரலாமே குமரன்.
எங்களுக்கும் ஒரு தமிழரைப் பார்த்த புண்ணியம் கிடைக்கும்.
மனசுக்கு ரொம்ப இதமான கோவில்.
சிக்காகோவில் இருக்கும் கோவில்களில் எனக்கு மிகவும் பிடித்த கோயில். முன்பு அடிக்கடி போவேன் இப்போ கொஞ்சம் தொலைவில் இருக்கிறேன்.
சூப்பர் சாம்பார் கிடைக்கும்.
மற்ற கோவில்களைப்பற்றியும் தொடருங்கள்.
வாங்க அலெக்ஸ். கோவில் சாம்பாரும் புகழ்பெற்றதுனு பேரன் மூலம் தெரிந்துகொண்டேன்.
வாய்ப்பு கிடைத்தால் மற்றக் கோவில்களூக்கும் போகிறேன்.
நன்றி அலெக்ஸ்.வாழ்த்துக்கள்.
வந்து பார்க்ககூடிய தூரத்தில் இல்லாததால்,இப்படியே சேவித்துக்கொள்கிறேன்.
நன்றி
நன்றி குமார்.
உங்க ஊரிலேயும்
இவர் கோவில் கொள்ளவில்லையா?
இருந்தால் நானும் சேவித்துக் கொள்ளுகிறேன்.
Post a Comment