எல்லா ஊரிலயும் யாராவது முதல்ல வந்துதானே
ஆகணும்.?
அதுபோல வரும்போது மனித நாகரீகம் வளர்கிறது.
வேறு உடை,நடை,பாவனை எல்லாம் இடத்துக்கு ஏத்த மாதிரி மாறும்.
கிளம்பி வந்த இடத்திலிருந்து கொண்டு வந்த எல்லாவற்றையும் மூட்டை கட்டிப் பரணில்(ஆட்டிக்கில்)
வைத்துவிட்டு
வந்த இடத்தோடு ஒன்றிப் போகிறவர்களும் உண்டு.
நல்ல நாள்.,அல்லாத நாள் எல்லாம் வரும்போது
அந்தப் பழைய வேஷங்களைப் போட்டுக்
கொள்ளுவதும் வழக்கம்.
இது நம்ம நாட்டுக்கு மட்டும்னு இல்லை. எல்லா (ஏழு) க் கண்டங்களுக்கும் பொருந்தும்.
ஆனால் எனக்கு ரொம்ப ஆச்சரியத்தைத் தந்தது
நான் எட்டு வருடங்களுக்கு முன்னால்
போன ஒரு இடம்தான்.
அங்கே 1960 களில் குடியேறிய இந்தியர்கள்,
அப்புறம் பத்து பத்து வருடங்களாக
அப்புறம் வந்தவர்கள் என்று ஒரு
வகைகளாகப் பிரிக்கப் பட்ட குழுக்களைப் பார்த்தேன்.
நமக்கோ ஊரை விட்டு வந்துத் திருப்பிப் போற
வரைக்கும் பேச ஆள் தேடிய காலம்.
அங்கே கோவிலில் இருந்த குருக்கள் ஒருத்தர்தான்
தமிழ்ச்சங்கம் என்று ஒன்று இருப்பதையும்,
சினிமா,டிராமா,இசைக் கச்சேரிகள்
தெலுகு சமாஜம்,வடஇந்திய சங்கங்கள்
எல்லாம் இருப்பதைச் சொன்னார்.
சரினு, தமிழ்ச்சங்க அறிவுப்பு ஒன்றை எடுத்துப் படித்தேன்.
அதில் ஒரு பெயர் மிகப் பழக்கப் பட்டதாக இருக்கவே
அந்த குருக்களிடம் அவர்களைப் பற்றி
விசாரித்தேன்.அமாம் வர்கள் சேலத்திலிருந்து வந்தவர்கள்தான்.
உங்களுக்குத் தெரியுமா என்றார். தெரியுமாவா, எனக்குத் தெரிந்து அந்தப் பெண் கல்லூரி முடித்து,
கல்யாணம் ஆகிறவரை அவர்கள் பக்கத்து வீட்டில் இருந்தோமே, அவர்கள்ஃபோன் நம்பர் கிடைக்குமா
என்று விசாரித்து, என் பெண்ணின்
தடைகளையும் மீறி:-)0
போன் செய்தேன். முதலில் ஆச்சரியப் பட்டுப் போன அந்தப் பெண்
ஒரே ஆங்கில மழையில் என்னை நனைத்தாள்.
1975 வந்தபோது (கல்யாணமாகி)
தினம் எனக்குத் தமிழில் கடிதம் எழுதிய பெண் இது இல்லை.
மாறிவிட்டாள் என்று அறியக் கொஞ்சம்
கஷ்டமாகத்தான் இருந்தது.
அதற்காக 22 வயதுப் பெண்ணும் நாற்பத்து ஐந்து
வயது அம்மாவும் ஒன்றாக இருக்கமுடியுமா என்று கேட்காதீர்கள். அவளூக்குப் பெண் ஒன்று பையன் ஒன்று பிறந்து அந்தக் கலாச்சாரத்திலேயே வளர்ந்து
விட்டதாகப் பெருமையுடன் சொன்னாள்.
இந்தியாவுக்கு ஐந்து வருடங்களுக்கு
ஒரு தடவை வருவதாகச் சொன்னாள்.
சேலத்தில் பக்கத்து யேற்காடு மலைக்குக்
காரில் போக பயந்து " அங்கே ஏதாவது பாறை உருண்டு
விழுமோ'' என்ற பெண்.'அறியாப் பொண்ணு'னு சொல்ல மாட்டொமா அந்த வகை:-0))
அது இப்ப உங்களை எப்பவாவது மீட்
செய்ய முயற்சிக்கிறேன் என்றதும்
முதல் அதிர்ச்சி.
எப்பவாவதா. !!!
நம்ம வீடே, ரேடியோகிராமே கதினு
இருந்த பொண்ணா? அப்படினு என் பெண்ணைக்கேட்கத் திரும்பிய போது
இதைத்தான் முதலில் நான் சொல்ல வந்தேன்.
எனக்கு ரெண்டு வருஷமாத் தெரியும்.
கோவிலில் பார்த்தேன்.'அவர்கள் வீடு, ரெண்டு கார்
என்றெல்லாம் டோட்டல் அமெரிகன் ஆயாச்சு.
நீ ஏம்மானு ' இழுத்ததும்
அடடா என்று யோசிக்க ஆரம்பித்தேன்,.
இது இருக்கட்டும், நாம இப்போ
கிழக்குக் கடற்கரை(அமெரிக்காவின்)க்கு போவோமா.
அங்கே போக வேண்டிய
உறவுப் பொண்ணு தங்களோட பிள்ளைக்கு
ஃப்ரென்ச் பொண்ணைக் கல்யாணம் கட்ட அழைப்பு விடுத்தாங்க. அட இவங்கதான் லவ் மெரேஜ். பிள்ளையுமானு அதிசயம்.
கல்யாணப் பொண்ணு அழகோ அழகு.
இவங்களும் இந்தியா வந்து திருமணப்பாயிலிருந்து சகலமும் வாங்கி வச்சு இருந்தாங்க. எங்க முறைப்படி கூறைப்புடவை,பஞ்சகச்சம் திருமணம்.
சாயந்திரம் கோட்,சூட்டுடன் சர்ச்சில் கல்யாணம்.
நாங்க சுத்தி உக்கார்ந்து பார்த்தோம். நமக்கு டான்ஸ் ஆட வரலை. எப்பவோ 'காதலிக்க நேரமில்லை' படத்தில சச்சு
ஆடின ட்விஸ்ட் மட்டும் தெரியும்.
அது இங்கே ஓடுமா.இல்லை ஆடுமா.?
அப்போ பக்கத்தில் புளூஜாகர் (காது, கழுத்து,கை)பளபளக்க
இரண்டு மூன்று இந்திய மாதர்கள் இருந்தார்கள்
நாமதானே ரொம்பப் புதிசு.
பக்கம் போய் ஹலோ
சொல்லலாம்னு போனேன்.கீழே டயலாக்:-)
'ஹை!
ஹை!
யூ ஆர் ரிலேடெட்?
நான் 'ஆமாம்.'
மதராஸ்/?
ஆமாம்.'
ரொம்ப சிம்பிளா வந்துட்டீங்களே. இது கூட
நல்லத்தான் இருக்கு..ஸ்மைல்:-0)
""ஆமாம்'
பிளேன் கடல்ல விழும்னு பயம்.அதனாலெ
தோடு தங்கம் எல்லாம் லாக்க்ரில் வச்சுட்டுவந்துட்டேன்''
ஏன் இவர்களுக்கு தோடு பத்தி இத்தனைஆர்வம்னு யோசிச்சு
என் கசினைக் கேட்டேன்.
யாரு என்று, நோட் செய்து கொண்டு,
எனக்கு ஒரு ஐய்யோ பாவமே ஸ்மைல் கொடுத்தாள்.
முதல்ல நீ தெரிஞ்சுக்க வேண்டியது நிறைய. கேளுனு ஆரம்பித்தாள்.
எல்லா இந்தியர்களும் இங்கே ஓர் குலம் இல்லை.
2,மேஃப்லவர் குருப்புனு இங்கிலாந்தில் முதல் போட்டில்
வந்தவர்கள் ஒரு ஜாதி. அவர்கள் முதல் அமெரிகர்கள்.
இந்த ஈஸ்ட் கோஸ்ட் அவர்களால் நிறைந்தது. ஒரு பார்பேரிக் நாட்டுக்கு (?)நாகரீகம் கொண்டுவந்தவர்கள்.
அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து தானும் முன்னேறியது.
அப்புறம் வந்த(இந்தியர்கள்)வர்கள் நாம்.
நம்மில்(இந்தியர்களில்) முதலில் குடிவந்தவர்கள் கிட்டத்தட்ட 50வருடங்களாக இருக்கிறார்கள்.
அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்
நல்ல செழிப்பாகவே இருக்கிறார்கள்.
என்ன வைரங்களுக்கு நிறைய மதிப்புக் கொடுப்பார்கள்.
இஃப் யூ ஹேவ் தெம்,
யூ ஆர் அக்சப்டட்.
2,செகண்ட் லெவல் என்னைப்போல வேலைக்குப்
போய் வீடுகட்டி இருக்கும் ரகம் நாங்க மிடில் க்ளாஸ்..
'அண்ட் வி டூ நாட் கெட் இன்வைடட் தர்'' என்றாள்.
ஆகையினால் என் அருமை நண்பர்களுக்கு
நான் சொல்ல வந்தது, ஒரு சின்ன ஹிண்ட்.
ஒருவரை நாட்டிலிருந்து பிரிக்கலாம்.
நாட்டை அவரிடமிருந்து பிரிக்க முடியாது.
சென்னையும் பொகீப்சியும் ஒன்றே.
தப்பா சொல்லலைப்பா.
மாற்றம் வராத நிலையான ஒன்று பொருளாதாரப் பிரிவு .
என்கிறேன்.
இது 10 வருடத்துக்கு முன்னாலே நிலமை.
இப்போ எப்படினு தெரியாது.
12 comments:
கடைசில கொஞ்சத்தை ப்ளொகர் விழுங்கிருச்சுங்க!! :O(
எதைப்பா?
ஷ்ரேயா. வருக வருக.
(மழை ஓய்ஞ்சப்புறம் வந்தவங்க.:-))
உங்க பின்னூட்டத்தையா?
ஆமாம் என் பதிவின் பலவரிகளையும் முழுங்கிடிச்சி.
அதனாலே பரவாயில்லை.
ரொம்பப் பசியோ.
நீங்க அப்பவே வந்ததை நான் இப்பத்தான் பார்த்தேன்.
சூப்பர்.
நல்லவேளைப்பா..... ஒருவழியா வைரம் வாங்கி வச்சுக்கிட்டு இருக்கேன்.
ஆனா ரொம்பப் பொடியா இருக்கு. பரவாயில்லையா? :-)))
ப்ளூ ஜாகர் எல்லாம் இல்லை. 1994லே மகளிர் மட்டும் படம்
ச்சென்னையில் 'தியேட்டரில்' பார்த்தப்ப முன் சீட்டுலே இருந்த
ப்ளூ ஜாகர் மாமி ஞாபகம் வருதே...:-))))
ஓ ஞாபகம் வன்னோ.
நானில்லையப்பா அது.
இப்போ யாரும் விக்கிறது இல்லையாமே.நமக்கு சிர்கான்
கூட ரொம்ப்பப் பிடிச்சிருக்கே.
உங்க ஊரில இது, அதாவது
இந்த நான் முன்னாடியே வந்துட்டேன், நான் இப்பதான் வந்தேன் உண்டா?
கொஞ்சம் எல்லா வட்டங்களையும்
பார்த்தால் மாமியார் ,மருமகள் கூட அடங்குவார்கள் என்று நினைக்கிறேன்.:-))
இது எனக்குப் புது விஷயம். பொதுவா வட இந்தியாவிலே பல நாளா இருக்கிறவங்க எங்களை மாதிரி மாற்றலில் போறவங்க கூட நல்லாவே பழகுவாங்க. அமெரிக்காவிலே இந்த மாதிரி இருக்குன்னு இப்போதான் தெரியும். சில நேரங்களில் சில மனிதர்கள்.!
கீதா நீங்க உங்க பெண்ணைப் பார்க்கப் போகும்போது
ஏதும் நோடிஸ் செய்தீங்களா/
மேபி நான் கொஞ்சம் இன்னும் நிறைய மனிதர்களை(மாமிகளை)ப்
பார்த்து இருந்தால்.....
//அதனாலே பரவாயில்லை.//
அதெப்படி! மீதி பதிவு படிச்சதும்தான் பதிவைப் பத்திக் கருத்து சொல்றதா இருக்கேன்.. ஆமா!! :O))
எங்கூர்லே தமிழ்க்காரங்க கூட்டதுலேன்னு சொன்னா, 'நான்' முன்னாடி வந்த முத ஆளு:-))))
அதனாலே நாந்தான் இந்தக் கைங்கர்யதை ஆரம்பிச்சு வைக்கணும்.
வல்லி,
இங்கே ச்சீனர்களிடம் இது இருக்கு தெரியுமா?
அந்தக் காலத்துலே இங்கே தங்கம் தோண்ட வந்து இங்கேயே தங்கிட்டவங்க, இப்ப
இங்கே வந்து குடியேறிக்கிட்டு இருக்கற ச்சீனர்களைக் கொஞ்சம் கீழ் லெவலில் பார்க்கறாங்களாம்.
இது எப்படி இருக்கு:-)))
ஓஹோ !!
பதிவே அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பிச்சுப் பிச்சு வந்துது.
அதிலேயும் முழுசா வரலியா. அடப் பாவமே.{நீங்க இல்ல நான்.)
இருந்து இருந்து நல்லா கமெண்ட் போடரவங்க வரும்போது இப்படி ஆகுதே.
இதையே ஒரு பதிவா போட்டுரலாமா.:-)நன்றிப்பா.
அப்படியா துளசி.
ஒண்ட வந்த பிடாரி, ஊர்ப் பிடாரினு சொல்லுவாங்க.
ச்சீனாக் காரங்களுக்குள்ளேயுமா?
இந்தக் கீபோர்ட் படுத்துதுப்பா.
படிக்கிறவங்க ச்சீனா காரம், இந்தியா ஸ்விட்னு படிக்கப் போறாங்க.
நீங்க முதல்ல வந்ததாலே அங்கே எல்லோருக்கும் லாபம் தானே.
நான் இப்போ ஒரு ஏஜென்சி ஆரம்பிச்சு இருக்கேன்.
உலகத் தமிழர்களே நியூசீலண்ட்
போனால் முதலில் துளசியைக் கண்டுகிட்டு(பிள்ளையாரையும்)
மேலே போகவும்--வாழ்க்கையில்!
இது எப்படி?;-0)
இதைப் படித்த போது; காசேதான் கடவுளடா!!
தெளிவானது.
எங்கும் இதற்குக் குறைவில்லை.
யோகன் பாரிஸ்
வாங்க யோஹன்.
அதேதான். பொருள் பொருள் பொருள்.
அத்தனை நமக்கு வேண்டாம். வாழத்தேவையானது போதும்.
Post a Comment