Blog Archive

Friday, June 09, 2006

திருவே விளக்கே

Posted by Picasa விளக்கே திருவே
வேதனுடைய நற்பிறப்பே,
ஜோதி விளக்கே ச்ரி தேவி பெண்மணியே
அந்தி விளக்கே அலங்காரப் பெண்மணியே
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே
பசும்பொன் விளக்கு வைத்து
பஞ்சுத்திரி போட்டு
குளம்போல நெய்யைவிட்டு
கோலமுடன் ஏற்றி வைத்தேன்
பொட்டும் இட்டேன கும்குமத்தால்
பூமாலை சூட்டிவிட்டேன்

ஏற்றினேன் நெய் விளக்கு
எந்தன் குடி விளஙக
வைத்தேன் திரு விளக்கு
மாளிகையும் தான் விளங்க.

மாளிகையில் குடி இருக்கும் மாதாவைக் கண்டு
கொண்டேன்.
மங்கலியப் பிச்சை மடிப்பிச்சை தாரும் அம்மா
சந்தானப் பிச்சையுடன் தனங்களையும் தாரும் அம்மா
பொட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா.
கொட்டில் நிறைய பசுமாடு தாரும் அம்மா

புகழ் உடம்பு தாரும் அம்மா
பெருமையைத் தந்து என் மனத்தினிலே வாழும் அம்மா.
மனத்தெளிவைத் தாரும் அம்மா.
அகத்தெளிவை தந்து என் அகத்தினிலே வாழும் அம்மா.
சேவித்து எழுந்து நின்றேன்,
தேவி வடிவு கண்டேன்,
வஜ்ரக்கிரீடம் கண்டென்
வைடூரிய மேனி கண்டேன்,
முத்துக் கொண்டை கண்டேன்,
முழுப்பச்சை மாலை கண்டேன்
சௌரி முடி கண்டேன்
தாழ மடல் ஆடக் கண்டென்.
பின்னல் அழகு கண்டேன்,
பிறைபோல நெற்றி கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்
சாந்து இடும் நெற்றி கண்டேன்
தாயார் வடிவம் கண்டேன்,
குறுக்கிடும் நெற்றி கண்டேன்,
கோவைகனி வாயும் கண்டேன்.

செந்தாழம்பூ மலர் போல
செவி இரண்டும் கண்டுகொண்டேன்.
செண்பகப்பூ போல திரு மூக்கும் கண்டு உகந்தென்.

காலில் சிலம்பு கண்டேன்
காலாழி பீலி கண்டேன்
பட்டாடை தானுடுத்த பிடி இடையைக் கண்டுகந்தேன்.
மங்கள நாயகியே உன்னை மனம் குளிரக் கண்டு கொண்டேன்.
அன்பே அருந்துணையெ உனை அடைந்த எந்தனுக்கு வந்த வினை அகற்றி மஹா பாக்கியம் தந்து அருள்வாய்.
தந்தை தாயும் நீயெ, தற்காக்கும் ரட்சகி நீ.
அந்தத்திற்கு உதவி நீயே.
ஆதாரமும் நீயெ.
உன்னை உறவாக எண்ணி உற்றாரைக் கைவிட்டேன் தாயெ.
சந்தானம் சௌபாக்கியம் அளித்து சத்துக்கள் சேவை எனக்கு அளிப்பாய்.
பக்தி உள்ள மனதளித்து ஸ்ரீ தேவி அருள் புரிவாய். "
இந்தத் திருவிளக்குப் பாடல் வெகு காலமாய் இருந்து வருகிறது.
நல்ல எண்ணங்கள் தோன்றுவதற்கும்,
நம்முடைய பாசிடிவ் எனெர்ஜி மேலும் அதிகரிக்கவும் இந்தப் பாடல் எனக்கு உதவி செய்ததால் என் நண்பர்களான உங்களுக்கும் சொல்லலாம் என்று நினைத்தேன்.
நிறைய சக பதிவாளர்களுக்கும் தெரிந்துதான் இருக்கும்.
மீண்டும் இதைப் படிப்பதால், சொல்லுவதால் நன்மை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்.
மோடிவேஷன் என்று கூட சொல்லலாம்.
சட்டென தமிழ் வார்த்தை அகப்படவில்லை. எல்லோருக்கும்
எல்லா வளமும் ஸ்ரீ இலக்குமி அருளட்டும்


4 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

என் தாயார் தினமும் சந்தியாகாலத்தில் விளக்கு ஏற்றியபின் சொல்லும் பாடல் இது.இதைக்கேட்டால் மனதில்.மகிழ்ச்சியும்,மனநிம்மதியும்,ஊக்குவிப்பான் (மோடிவேஷன்) ஆகவும் விளங்கும்.இது கர்ணபரம்பரையாக வரும் பாடல் எழுதியது யார் என்றே தெரியாது.நல்ல வெள்ளிக்கிழமையன்று போட்டீர்கள். நன்றி. தி. ரா. ச

வல்லிசிம்ஹன் said...

நன்றி தி.ரா.ச சார்.
நீங்கள் சொல்லாவிட்டால் பார்த்து இருக்க மாட்டேன்.
இப்போது டெம்ப்லேட் மாற்றி விட்டென். சரியாகி விட்டது என்றே நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி டி ஆர் சை சார். நீங்கள் சொல்ல வில்லை என்றால் பார்த்தே இருக்கமாட்டென்.
இப்பொது டெம்ப்லேட் மாற்றி விட்டேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி டி ஆர் சை சார். நீங்கள் சொல்ல வில்லை என்றால் பார்த்தே இருக்கமாட்டென்.
இப்பொது டெம்ப்லேட் மாற்றி விட்டேன்.