Blog Archive

Sunday, January 07, 2018

இன்று திருப்பாவை 23 ஆம் நாள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

இன்று திருப்பாவை  23  ஆம் நாள். சீரிய சிங்காசனத்தில் இருந்து 
யாம்  வந்த  காரியம்  ஆராய்ந்து  அருளச் சொல்கிறாள்..

 ஆண்டாளுக்கு கண்ணனின்  நடையழகு பார்க்க வேண்டுமாம்.
பாலும் சர்க்கரையும் சேர்ந்தது போலவாம் நரசிம்ஹ அவதாரம்.
நரனும் சிங்கமும் கலந்த அழகனாம்.

அவன் தீவிழித்துப் பார்ப்பது, கொடியவர்களை வீழ்த்த.
ஹிரண்யனை வீழ்த்தும் பார்வை. ராவணனை
அதிர வைத்த பார்வை.
துரியோதனன் சபையில்   கண்ணனை அவமதிக்கக்
காத்திருக்கிறான்.
கண்ணன் உள்ளே   நுழைகிறான். யாரும் எழுந்திருக்கவில்லை. அரசனுக்குப்
பயந்து.
கண்ணனின் கண்ணைப் பார்த்த அடுத்த கணம் துரியோதனனின் உடல் எழுந்துவிட்டதாம்.

அதனால்  அடியவர்களாகிய நாம்,சிங்கம் என்று பயப்படவேண்டாம்.
அது சீரிய சிங்கம்.
ஆண்டாள் பாவைக்காக இத்தனை நாள்     மாய உறக்கத்தில் இருந்த சிங்கத்தின்  உறக்கம் கலைந்து விழித்ததாம்.
இவர்கள் வந்துவிட்டார்கள்  என்று தெரிந்ததும் தாமரைக் கண்கள் சிவந்து விரிந்தனவாம்.
அடியவர்கள் அருகில் இருந்தால் பகவானின் கண்கள் தாமரைச் சிவப்பு கொள்ளுமாம். அவர்கள் சற்றே அகன்றாலும் அவர் கண்கள் வெளுத்துவிடுமாம்.!!

பூவைப் பூ வண்ணா,நீ உன் சிம்ம கதியில் நடந்து வந்து
எங்களுக்கு அருள வேண்டும் என்று சொல்லிவிட்டுப்  பிறகு சொன்னோமே என்று  வருந்தினாளாம்.

இந்தக் கண்ணன்  நடந்த நடை போதாதா. நான் வேறு நடக்கச் சொல்லிவிட்டேனே.

இந்தப் பாதங்களை குளிர்சந்தனம்  பூசிப் பூஜிக்க அல்லவா வேண்டும்.
என்று   உணர்ந்து அடுத்த பாசுரத்தில்(அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி ) போற்றிப் பாடுகிறாள்.

இன்றைய பாடல்

மாரிமலை முழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய  சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா  போல நீ பூவைப் பூவண்ணா உன்
கோவில் நின்று இங்கனே  போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காதனத்திருந்து  யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோ எம்பாவாய்.!
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

5 comments:

Anuprem said...

ஆண்டாள் திருவடிகளே போற்றி...


இன்றைய விளக்கம்..மிக அழகு ...

வல்லிசிம்ஹன் said...

அன்பின் அனு,
மறக்காமல் இருக்கத்தான் மார்கழி.
இளவயதிலிருந்து கேட்ட பிரவசனங்கள்,
அவ்வப்பொது நினைவுக்கு வந்து எழுத
வைக்கின்றன. எல்லாம் பெரியவர்களின் அனுக்கிரஹம் .நன்றிம் மா.

வெங்கட் நாகராஜ் said...

பாசுரத்திற்கான விளக்கம் வெகுவும் கவர்ந்தது. நன்றிம்மா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு ரசித்தமைக்கு மிக நன்றி.
எங்கள் வீட்டுப் பாடல் இது.
எங்களுக்குப் பாடம் கற்றுத்தர வரும்
ஆசிரியர் சொல்லும் விளக்கங்கள்
அவ்வளவு அருமையாக. அந்த இளம்வயதில்
கேட்டது இன்னும் மறக்கவில்லை

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
தினம் தோறும் வந்து பாசுரம் படித்துச் சொல்கிறீர்கள்...
நன்றி அப்பா..