About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Monday, July 28, 2014

தென் டகோட்டா பயணம் ஆரம்பம் கரடிகள் உலகம்

Add caption
ஒரு கரடி  நடக்க இடமில்லாம வந்துடறாங்கப்பா  வண்டி  வண்டியா.
உன் வண்டிக்கு அப்பன் வண்டியே பார்த்திருக்கேன்  போப்பா  போ.
எங்க நிழலையே காணோம்........மூச்சு வேற வாங்குது.
 
ராப்பிட் சிடி  விமான நிலையம்  சௌத் டகோடா
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஆஹா தேன் வாசனை வருதே......என்றபடி நகர்ந்த இந்தக் கரடியார் ஒரு மரத்தண்ட போயி அண்ணாந்து பார்த்தபடி    உட்கார்ந்தே விட்டார்.அசையவே இல்லை.
கீழே  இருக்கும்   எறும்புகளை முறைக்கிறார்  இவர்.
சாப்பாட்டுக்கு நேரமாச்சே.  என்ன  வச்சிருக்காங்களோ   தெரியலையே.
அருகிலிருந்த  கேர்ள் பிரண்டைக் காணோமே. எங்க போயிட்டாங்க.   இப்படியாகத் தானே  எங்கள் முதல் நாள்   ஊர்சுற்றல் தொடங்கியது. சிகாகோவிலிருந்து கிளம்பும்போது தெளிவாக இருந்த வானம் நடுவானத்தில்  கறுத்தது. மேகங்கள் திரண்டன. மிம்ன்னல் வெட்டி நாங்கள் சென்று கொண்டிருந்த விமானம்     நடுங்க ஆரம்பித்தது.   பக்கத்திலிருந்த சின்னப் பேரன்  என்னை அணைத்தபடி  பயப்படாதே  பாட்டி. ப்ளேன் இன்னும்  அரைமணி நேரத்தில் ராப்பிட் சிடி போயிடும்.  என்கிறான்.   விமானம்       தரை இறங்கியதும் பெருமூச்சு விட்டேன். கொஞ்ச நேரத்தில் வழியில் வந்த                    மின்னல் இடிகள் இங்கேயும் வந்துவிட்டன..    மிக  அழகான நிலையம்.   சுவரெங்கும் அமெரிக்க இந்தியர்கள் படம்.மியுரல் கலை வண்ணத்தில் மலைகள் புல்வெளிகளின் வண்ணங்கள்.  சிரித்த முகத்தோடு  பணிபுரியும்    மக்கள். மாப்பிள்ளை  அங்கே ஊர்சுற்றிப் பார்க்க  ஹெர்ட்ஸ் நிறுவனத்திலிருந்து பெரிய வண்டி ஒன்றை எடுத்துக் கொண்டார். வெகு சௌகரியம்.ஐந்த நாட்களும் சலியாமல் எங்களை  எல்லா இடங்களுக்கும்  அழைத்துச் சென்றது..ஒரு சத்தம் இல்லை.                                                                                                                                                                                                                            சத்தமெல்லாம்  இப்பொழுது வெளியே தான். என்னைத் தவிர எல்லோரும் ,ஒரு ஆறு மாசப் பாப்பா உள்பட வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  எப்பாடியோ ஒருவிதமாக வண்டியை விமானநிலைய வாசலுக்குக் கொண்டு வந்துவிட்டார் மாப்பிள்ளை.   நாங்களும் குடைகளைப் பிடித்தபடி வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். இனி தங்கும் கம்ஃபர்ட் இன்ன்  தங்கும் விடுதியைக் கண்டுபிடிக்கவேண்டும். ஜிபிஎஸ்  பெண்மணி  பேச ஆரம்பித்தாள். நேர வலது பக்கத்திலியே இரு  இடப்பக்கம் திரும்பு என்று நகைச்சுவையாக்ச் சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த இருட்டில் மழையில் நல்லபடியாக  ஹோட்டலுக்குக் கொண்டுவந்து சேர்த்தார் மாப்பிள்ளை..                                                                                                                                    அவரது ஓட்டும் திறனுக்கு நன்றி.   இனி அடுத்த நாள் கதைதான் மேலே நடந்தது. கரடிகள்   உலகம்,. இங்கே கரடிகளோடு  காட்டெருமைகள்.,கொம்பு பெரிதான ஆடுகள், அலாஸ்கன் ஓநாய்,மான்கள்,   என்று விதவிதமாக இருந்தன. கரடிகள் சர்வசாதரண்மாக உலாவந்தன.    வண்டியின் கண்ணாடிகளைத் திறக்கக் கூடாது என்பது  சட்டம். அது பாட்டு வந்து கார் உயரத்துக்கு நின்று   எட்டிப் பார்த்து முகர்ந்துவிட்டு நகர்ந்தது.    அத்தனையும் அவ்வளவு அழகு. ஐய்யோ பாவம் மூச்சு வாங்கறதே  என்று நான் சொன்னால்      உடனே  பெண்  அவைகள் அப்படித்தாம்மா மூச்சுவிடும் .அதுக்கு வெயிட் ப்ராப்ளம்   எல்லாம் கிடையாது என்றாள்.                            ஒரே இடத்தில் நான்கு க்கரடிகள் மர நிழலில் தூங்கிக் கொண்டிருந்தன. .......    ஒவ்வொரு மிருகங்களுக்கும்  நடுவே தடுப்பு இருந்தது. ஓநாய் மற்ற மெல்லினங்களை வேட்டையாட முடியாது.  நம்மூர் மனித ஓநாய்களுக்கும் இது போல வரம்பு இருக்கக் கூடாதோ என்று தோன்றியது.:(                                                                                                            
   ஒரு மணி நேரம் சுற்றிவிட்டு சூவனீர் வாங்கும் கடைக்கு வந்தோம். பேரனுக்கு ஒரு கரடி சட்டை வாங்கிக் கொடுத்தேன்....அவர்கள் தங்களுக்கு வேண்டும் என்பதை வாங்கிக் கொண்டு எனக்கு ஒரு காட்டெருமை பொம்மை வாங்கிக் கொடுத்தார்கள்...எல்லாம் பளாபளா. விலையும் பளாப்பளா.                                                    
 முன்போல்  ஆசை இல்லை., கடையிலேயெ இருக்கட்டும் என்று தோன்றியது.   அடுத்து போகப் போவது   மௌண்ட்   ரஷ்மோர்.  முக்கிய அமெரிக்க அதிபதிகளின் முகங்கள் பதித்த  மலைச் சிகரங்கள்.   தொடரும்.