About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Wednesday, May 28, 2014

சில சில் நினைவுகள் 12ஆம் பதிவு தை மாதம் 1967

Add caption
Add caption
 
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
ஏரிக்கரையோரம்    நாமும்  போவோமா                 60 நாட்கள்  ஓடிவிட்டன.  குழந்தையின்   கழுத்து   கட்டியும் கரைந்து கொண்டு வந்தது.   சீனிம்மா பாட்டிச் சென்னைக்குக் கிளம்ப ஆவலாக இருந்தார். பிள்ளைகளை விட்டுவிட்டு அல்லவா வந்திருக்கிறார்!!!  

மருமகள்    வீட்டில்     இருந்தாலும்   ,தான்  கவனிப்பது  போலத் திருப்தி கிடைக்காது என்று  உணர்ந்து கொண்டேன்.  எத்தனை உதவிகள் செய்ய முடியுமொ  அத்தனையும் செய்வார். இதற்கு நடுவில் ஏகாதசி  போன்ற உபவாச நாட்கள் வேறு வந்துவிடும்.   அலுக்காமல்  குழந்தையின்   அழுக்குத் துணிகளை      வீட்டின் பின்புறம் வயல்களுக்கு   நடுவே  இருந்த   வாய்க்காலில் ஓடும் நல்ல தண்ணிரில் அலசிக் கசக்கி வெள்ளை வெளேர் என்று கொண்டு வருவார்.   தன்  கவனிப்பில் குழந்தைக்கு ஒரு உபத்திரவமும் வரக் கூடாது என்பதில் மிக அக்கறை.
                                                                                                                                                                                               அந்தி சாயும் முன்   துணிகளைக் காயவைத்து எடுத்துவிடுவார். துணிகள் முறுகக் காய்ந்தால் குழந்தைக்கு உடம்பு வலிக்குமாம்.   அதற்காக  முன்பே எடுத்து மடிக்க என்னிடம் தருவார். எனக்கும் வேலை கொடுக்கவேணுமே.                சாயந்திரம் ஆறு மணி ஆனதும்  கண்ணுக்கு மையிட்டு           உச்சந்தலையில் சிறிது ஆமணக்கெண்ணையையும்  தடவி     ஈரத்துணி இருந்தால் மாற்றி, இரண்டு மூன்று ஈர்க்குச்சிகளில் துளி  தீப  ஒளியில் சுடர் பற்ற வைத்துத் திருஷ்டி சுத்திப் போடுவார். இங்கே யாரு வந்து கண் படப் போகிறதூ   என்று கேட்டால்               சும்மா இரு என்று அடக்கிவிடுவார்.
ஒரு நாள் விட்டு  ஒரு நாள் எனக்கும் குழந்தைக்கும்   முறைவைத்து எண்ணெய் தேய்த்து  குளிக்கச் சொல்வார்.    நான் குளித்துவந்ததும்  வெந்நீர் பருகக்  கொடுத்து தலை ஈரம் போகச் சாம்பிராணி   போட்டுக் காயவைப்பார்.                 குழந்தையும் குளித்த பின்னர்  தான் தான்  குளிக்கப் போவார்.                              இதுபோல     யார்  உழைப்பார்கள் ... இப்போது நினைத்துப் பார்க்கிறேன். இரவு     குழந்தை  அழுதால்  உடனே அவரும் எழுந்து  மடியில் அவனைக் கிடத்திக் கொள்வார்.  நீ தூங்கு  , என்று   எனக்கும்    உத்தரவு வரும்.  அவர்  குழந்தையைக் கொஞ்சும்   சத்தத்திலேயே  நான் உறங்கிவிடுவேன்.    அம்மாவுக்கும் சமையல் வேலையைத் தவிர    வேறு வேலைகிடையாது...            இரண்டு பேரும் என்னென்னவோ   பேசிக் கொண்டே இருப்பார்கள்.     அப்படிப்பட்ட சீனிம்மாவும்  மதராசுக்குக் கிளம்பும் நாள் வந்தது.அதற்குள் மாமியாரிடமிருந்து      என்னையும் குழந்தையயும்    மார்ச் பிறந்ததும் கொண்டு வந்துவிடச் சொல்லிக் கடிதம் வந்தது.  அப்பாவுக்கோ  பேரன் இன்னும் தேற வேண்டும் அப்புறம் அனுப்பலாம்  என்று யோசனை. பக்கத்திலேயே   அலுவலகம் என்பதால் சத்தம் போடாமல் வந்து தூளியில் தூங்கும் குழந்தை அழகைப் பார்த்துவிட்டுப் போவார்.   அழுதால் க்ரைப்வாட்டர் அவர்தான் தரவேண்டும்..     அப்படி ஒரு அதீதப் பாசம். உங்க அப்பா உங்களைக் கூட இவ்வளவு தூக்கி வைத்ததில்லை என்பார்   அம்மா:)


நீண்டுவிட்டது பதிவு.சிங்கம் நாளைப் பதிவில் வருவார்.

10 comments:

Innamburan S.Soundararajan said...

நீண்டு விடவில்லை. ரத்ன சுருக்கமாக உளது. ஆம் நாம் நினைவின் நிழலிலே வாழ்கிறோம். 'சில சில்' தட்டச்சு பிழை இல்லை, 'சில்' என்று இருப்பதால்.

ஸ்ரீராம். said...

தாத்தாக்களுக்கு மகன் மகள்களை விட பேரன் பேத்திகளிடம்தான் பாசம் இருக்கிறது! ஒரு வழியாகப் போராடி பதிவைக் கொண்டு வந்து விட்டீர்கள்!

வல்லிசிம்ஹன் said...

நன்றி இ சார்.பொறுமையாகப் படித்ததற்கு.மிக நன்றி.

வல்லிசிம்ஹன் said...

தாத்தா அப்பாவாக இருக்கும்போது என்னையோ தம்பியையோ தூக்கி வைத்துக் கொண்டால் அந்தப் பாட்டி கேலி செய்வாராம். புத்ர பாசம் உனக்கு ஜாஸ்திடா நாரயணா என்று. இப்போது ஆசைதீரப் பேரன் பேத்திகளைக் கொஞ்ச நேரம் கிடைத்தது ஸ்ரீராம். அந்தப் பதிவு இன்னும் நன்றாக வந்தது. பரவாஅயில்லை. ஒரே கதை வரிகள் மாறிப் போகும்.அதனால் என்ன.

Geetha Sambasivam said...

//ஒரு வழியாகப் போராடி பதிவைக் கொண்டு வந்து விட்டீர்கள்!
5:54 AM//

என்ன ஆச்சு பதிவுக்கு? :( பிரச்னையா?

இந்தப் பதிவு சுருக்கமாய்த் தான் இருக்கு. சிங்கம் தான் வரவில்லையே தவிர மற்றபடி பதிவு சுவாரசியம் தான். :))))

வல்லிசிம்ஹன் said...

முன்னால போட்ட பதிவு காக்கா ஊஷ் கீதா. மீண்டும் மதியம் உட்கார்ந்து இதை எழுதினேன். பாதிக்கு மேல் தள்ளவில்லை. அதுதான் இது...

வெங்கட் நாகராஜ் said...

காணாமல் போனதை மீண்டும் எழுதியாச்சு போல....

எப்பவுமே தனது குழந்தைகளை விட பேரன்/பேத்திகள் மேல் தான் ஆண்களுக்கு பாசம் அதிகம்... :))))

துளசி கோபால் said...

சீனியம்மாவின் அன்புக்கும் அக்கறைக்கும் நாம் என்ன கைமாறு செய்ய முடியும்?

நினைச்சு நினைச்சு சந்தோஷப்படணும் இல்லையா?

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான். அநேகம் தாத்தாக்கள் இப்படித்தான். வெங்கட். பாட்டிகள் பேத்திகளிடம் இன்னுமே அக்கறை காட்டுவார்கள் .என் பெண்ணை நான் கண்டித்தால் என் அம்மாவுக்குப் பிடிக்காது. குழந்தையோடு சண்டைக்குப் போறியே என்பார்}}

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துளசி .தீர்க்கக் கூடிய கடன்கள் இல்லை இவை.நினைவுகளில் தான் போற்ற வேண்டும்.