Wednesday, August 15, 2012

சுதந்திர தின நினைவுகள்

 


இடம் பசுமலை   மதுரை
நாள்     15/8/1965
  12  ஆம் தேதியிலிருந்தே  தபாலாபீஸ் அல்லோலகல்லப் பட்டது.
இருக்கும் நான்கு  ஜன்னல்கள் அழுந்தத் துடைக்கப்பட்டு   சுத்தம் பளிச்சிட்டது.
என்னா விசேசாம் கண்ணு .அப்பா இத்தனை பேரோட
இவ்வளா வேலை செய்கிறார் என்று கேகும் தேவானை.
தபால் ஆப்பீசைச் சுத்தம் செய்யும் பெண்மணி.
நமக்கெல்லாம் சுதந்திரம்   கிடச்ச நாள் வருது தேவானை.

அன்னிக்கு நம்ம ஆபீஸ் மேல கொடி ஏத்திப் பறக்கவிட்டுப் பாட்டுப்
பாடிக் கொண்டாடணும்.
ஏன்  என்னா  கிடச்சுதுன்னு பாடணும்?
போன வருஷமெல்லாம் என்ன செய்தீங்க. ஒண்ணும் செய்யலையே அந்த அய்யாவுக்கு உடல் சரியில்ல. எங்களுக்கெல்லாம் லீவு  விட்டுட்டாங்க.

ஏதோ தெரியாமல் சொல்கிறார் என்று தெரிந்தது.
வெள்ளைக்காரங்க  இருந்தாங்க நம்ம ஊரில.
அவங்க நம்மளை ரொம்பக் கட்டுப்பாட்டில்  வைச்சிருந்தாங்க.

நீ சினிமா போகும் போது பார்ப்பியே
நேருஜி  இந்த மாதிரி  தலைவர்களை?
நியூஸ்னு போடுவாங்களே. அவர் இறந்துட்டாரேமா.
ஆமாம் அவருக்குப் பதிலா இப்ப  ஸாஸ்திரிஜி
வந்திருக்கார். அவர்தான் நமக்குப் பிரதம மந்திரி.
அவங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

அவங்க எல்லாம் போராடி வெள்ளைக்காரங்களை விரட்டி
அடிச்சாங்க. அந்த நாள் தான் ஆகஸ்ட் மாசம் 15.

நம்ம ஊருக்கு  எல்லாம்   வந்திடுச்சா/
 எது? 
சுதந்தரம்...
எல்லாருக்கும் வந்துடுத்துப்பா.
என்ன னு சொல்லேன்பா.
இப்ப நம்மளை இங்க நில்லு. அங்க நிக்காதேன்னு சொல்ல மாட்டங்க..
என்ன வேணா சொல்லலாம். நமக்கு வேணும்கறவங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
எதுக்கு?
 நம்மளைப் பத்தி நமக்கு வேணும்கற    தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பாங்க

யார்கிட்டப் போய்க் கேப்பாங்க.
  மெட்ராஸ் பட்டணம் இருக்கு இல்ல.
அங்க கூடிப் பேசி நல்லது செய்வாங்க.

யார்கிட்டச் சொல்லணும் .
 தேர்தல் வருமே அப்ப..
நீ சொல்லி இருக்கியா
இல்ல 21 வயசாகணும்(அப்பொழுது)
பாப்பா   அப்ப  நீ நான் போட முடியாது
ம்ஹூம்.
சரி நாளைக்கு வரேன்.
அப்பா கொடியை த் துவைச்சுக் கிட்டிருக்காரு. காயப் போடலாம்
இதுக்கப்புறம் தோக்கவேண்டிய அவசியம் வராது. நல்லா மடிச்சு அதுக்கான பொட்டியில் வச்சிரலாம் தேவானை.
அடுத்த நாள் காலையிலிருந்தே அப்பாவோடு எங்களுக்கும் உற்சாகம் பற்றிக் கொண்டது.
தம்பி பறந்தான் மிட்டாய் வாங்க.
தபால் ஆபீசின் மேலிருந்த கொடிக்கம்பத்தைப் போஸ்ட்மேன்
ப்ராசோ  போட்டுத் தங்கமென மின்ன வைத்தார்.
அப்பா வெள்ளைக் கயிறின் வெள்ளை போதுமான்னு பார்த்துவிட்டு
தேசியக் கொடியைக் குழந்தையைப் போலத் தூக்கி அதில் ரோஜ இதழ்களை நிரப்பினார். பிறகு  வடிவாக மடித்துத் தயார் செய்தார்.
கொடி மேலே ஏறியது கயிறு அப்பா கையில்.
அனைவரும்  வந்தாச்சா என்று கேட்டபடி சுற்றிப் பார்த்தார்.
அம்மா  கதவிற்குப் பின்னால் இருந்தபடி முகம் பூராவும் பெருமையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் மூவருமாபீஸ் குமாஸ்தாக்களுடனும் மற்றவர்களுடன் சேர்ந்து
சல்யூட் செய்ய ,ஏற்றப்படி  பறக்க ஆரம்பித்து ரோஜா இதழ்கள் எல்லோர் மேலும் விழுந்தது.
உடனே ஜனகணமனவும், தாயின் மணிக்கொடி பாரீரும்,வந்தே மாதரமும்

பலகுரல்களில் ஒலிக்க  அப்பா  சிறு சொற்பொழிவு நிகழ்த்தினார்..
காத்திருந்த இனிப்புப் பொட்டலங்களும் தட்டில் வைக்கப் பட்டு வந்தன.

அன்று சாயந்திரம் அப்பா கொடியை மரியாதையோடு   இறக்கும் வரை நாங்கள் நொடிக்கொருதரம்  வெளி வந்து  பறக்கும் கொடியைப் பார்த்துச் சந்தோஷப் பட்டதெல்லாம் பழங்கதையாகி விட்டது.
இந்தியா   வளம் பெறட்டும்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa