About Me

My photo

Just one more correspondent.  9/4/1948   பிறந்தநாள்

Thursday, October 20, 2011

மங்கையர் உலகம், தொலைக்காட்சியின் நலம்

திருமதி ரேவதி சங்கரன்
எழுத்தாளர்  சிவசங்கரி
ஸ்ரீவேளுக்குடி  கிருஷ்ணன்
நற்கதைகள்  கூறி நம்மைக் கவரும் கற்பகவள்ளி.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
தொலைக் காட்சியில் எத்தனையோ தொல்லைகள் இருந்தாலும்
நல்ல நிகழ்ச்சிகள் எத்தனையோ இல்லாமலா  போகிறது. பொதிகையின்  மூலிகை சமையலிலிருந்து,விஜயின் தரிசன ஸ்பெஷல், திரு வேளுக்குடி கிருஷ்ணனின் கட்டுரை மூலம்  நற்கருத்துக்களை நம் மனதில்
பதிய வைக்கும் பாங்கு.
கலஞர் தொலைக்காட்சியில் ஏழு மணிக்கு ''டாண்'' என்று ஆஜராகி நம் நாளை இனிமையாக இருக்க வாழ்த்தும் கலைமாமணி திருமதி ரேவதி சங்கரன்.

இந்தமங்கையர் உலகம் நிகழ்ச்சியை நான் முக்கால்வாசி பார்த்துவிடுவேன்.
அவசர வேலைகள் இருந்தாலொழிய.


இவரைப் பழைய நாளைய உலாவரும் ஒளிக்கதிரிலிருந்து பின்பற்றி வருகிறேன்.
சொல்லும் விதத்திலேயே ஒரு உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
இப்போதோ சகல கலாவல்லியாக ,சமையல் நிகழ்ச்சியாகட்டும்,
மற்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கட்டும்.
அசத்துகிறார்.

அவர் அணியும் வளையல்கள், மருதாணி, புடவை மற்றும் கழுத்தில் அணியும் மணிமாலைகளுக்கு என்று என் அம்மாவும் தம்பி மனைவியும் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்துதான் இப்படி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாவதே தெரியும்.
வார நாட்கள் ஐந்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதம். அந்த அரைமணி நேரத்துக்குள்,
இதய மருத்துவர் ஒரு நாள், சர்க்கரை வைத்தியர் ஒரு நாள், மூட்டு வைத்தியத்துக்கு ஒரு நாள் என்று   ஒரு நொடி கூட வீணாக்காமல் அறிவுரை வழங்கிச் செல்கிறார்கள்.
அதுமுடிந்ததும் நீதிக்கதைகள் சொல்லும் கற்பகவள்ளி ஒரு நாள் வருவார்.
திங்களன்று என்று தான் நினைக்கிறேன்.

நமக்கோ கதை கேட்க ரொம்பவே பிடிக்கும். இன்று ஒரு தகவல் தெகச்சி சுவாமிநாதனை மிகவும்    பிடிக்கும்.
அவரில்லாத  குறைக்கு இவர்கள் அந்த அளவு இல்லாவிட்டாலும்
அழகாகவே உரையாற்றுகிறார்கள்.
பின்னொரு நாள் வயோதிகத்தைப் பற்றி எழுத்தாளர் சிவசங்கரி   பேசிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.
எப்பொழுதும்  போல ஆணித்தரமான பேச்சு.:)
பிறகு ஒரு நாள் நீதித்துறையைச் சார்ந்த விஷயங்களை விளக்க வழக்கறிஞர்
ஒருவரும் வருவார்.
பின்னர் இருக்கவே இருக்கிறது மனநலம்.
பிறகு தையல் கலைகள்,கைவேலைகள்   என்று அரைமணி நேரம் போவதே  தெரியாது.
 அத்துடன் நம் தொலைக்காட்சி  பார்வை முடிந்து பாட்டு  ஒலிபரப்பு தொடங்கிவிடும்.
அதைக் கேட்டுக் கொண்டே கணினியும் மேயலாம் அல்லவா:)

காலை உணவு,பிறகு வீட்டு வேளை, தொலைத்ததைத் தேடும் படலம்,இஸ்திரி, நீலகிரீஸ் கடையில்  வேணும் வேண்டாம் என்கிற பொருட்களை அள்ளிக் கொண்டு வருவது. அம்மா பினாயிலை மறந்துட்டீங்களேன்னு நம்ம ரானியம்மா கேப்பாங்க.
அவங்களையே  வாங்கி வரச் சொல்லிப் பணமும் கொடுத்துவிட்டால் அடுத்த நாள் காலையில் சரியாகச் சில்லறையோடு கொண்டு வந்து கொடுத்து விடுவார்.

எல்லோருக்கும் தீபாவளிக்குப் புடவைகள் வாங்கிக் கொடுத்தாச்சு.
பட்டாசு ஒன்றுதான் இன்னும் வாங்கவில்லை.
குழந்தைகள் இல்லாத ஒவ்வொரு பண்டிகையும் அத்தனை ருசிப்பதில்லை.
அதனால் என்ன ராணியின் பேரன் பேத்திகளுக்கு மத்தாப்பு வாங்கிக் கொடுக்கலாம்.

அதோடு கிருஷ்ணாவில் மிக்சருக்குச் சொல்லிவிட்டால் போதும். எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள நல்லதொரு ஐட்டம்.
வீட்டில்  திரட்டிப்பாலும் ஓமப்பொடியும் தான்.
மருதாணியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
கோவில் வாசலில் விற்கிறார்களாம்.
பார்க்கலாம்.  விரல்களுக்கு யோகம் இருக்கிறதா என்று:).
அடுத்த  வாரம் தீவிளி முடிந்திருக்கும்:)))Posted by Picasa