About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, October 22, 2011

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு,தீபாவளி 2011


1992   ஆம் வருடம் எடுத்த  தீபாவளிப் படம். குடும்பத்தினர்  பட்டாசு கொளுத்திய கலகலப்பில்  போஸ் கொடுக்க  வேறு ஒருவர் க்ளிக்கியிருக்கிறார். 
ஆங்கிலத்தில்
கிறிஸ்துமஸ் பாஸ்ட் கிருஸ்துமஸ் பிரசன்ட் என்று ஒரு    பழமொழி வரும். முந்திய வருடங்கள் இந்த வருடம் என்று  அசை போடுவதாக அந்த   நிகழ்ச்சி அமையும்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான  நினைவுகள். அனுபவங்கள்.பெற்றோர்களாக எங்களது தீபாவளிகள் வேறாக அமைந்தன.
நம் குழந்தைகள் குழந்தைகளாக   இருக்கும்பூது
  துணிமணிகள் எடுப்பது பெரிய விஷயமே இல்லை.
23   ரூபாய்க்கெல்லாம்   புது கவுன்
எடுத்த நாட்களும் உண்டு. பெரியவனுக்கு ராஜேஷ்  கன்னா  ஸ்டைலில்   வாங்கின உடை
 இருபத்தி ஐந்தேதான்.
பிறகு
 அவர்கள் வளர செலவும் அதிகரிக்க  அவர்களாக ஆசைப்பட்ட 
ஆடைகளைத் தேர்ந்தெடுக்க
பணம் கட்டும் வேலை மட்டும் நம்முடையதாக இருந்தது.:)
அப்போது எங்கே பார்த்தாலும்    சேல்  போய்க்கொண்டிருக்கும்.
குவித்து வைத்திருக்கும் ஆடைகளில்

நமக்குப் பிடித்ததை  விலை பேசி வாங்கின அனுபவ
மும் உண்டு.
பத்மாவதி திருமண மண்டபம் என்று அண்ணா  சாலையில் இருக்கும். அங்கு  ஒருதடவை பன்னிரண்டு ரூபாய்க்கு  புடவை  ,அதன் பெயர் நிழல் நிஜமாகிறது!
அதை வெற்றிகரமாக  வாங்கி வந்ததும் ,உடுத்தித் தண்ணீரில் போட்ட அடுத்த நிமிடம் அது  அப்படியே  சுருங்கிக் கைகள்   துடைக்கும் துணி   அளவுக்கு மாயமனதும், நிஜம் நிழலாகிவிட்டது:)
சிங்கம் ''அட   வீடு துடைக்க இவ்வளவு காஸ்ட்லியா வாங்கி இருக்கியே என்று கேலி செய்ததும் நினைவுக்கு வருகிறது. அதெல்லாம் எண்பதுகளில்.

பதின்ம  வயதைக் குழந்தைகள் எட்டியதும், ஜீன்ஸ்   வழக்கத்துக்கு வந்தது.
கார்டுராய், காட்டன் டெனிம் என்று   நீளப்  பாவாடைகளும்   ப்ரில் வைத்த சட்டைகளும் வந்தன.

பட்டாசு மத்தாப்பு வகையறா வாங்க  நம்ம ஊர்ப்
 பாரீசுக்குப் போன  அனுபவங்களும் உண்டு.

தவறாமல் மழையும் பெய்யும். மழையில் நனைந்த பட்டாசுகளைக் காய வைக்க வெய்யிலும் வரும்.

நாத்தனார்  பசங்களும், என் தம்பிகள் அவர்கள் குழந்தைகள் எல்லாம்
தீபாவளி அன்று   இங்கே வர
பிறகென்ன வெடிச்சத்தம் தூள் கிளப்பும்.
அடுத்த நாள் பக்கத்துவீட்டில்  பட்டாசுக் குப்பை ஜாஸ்தியா
நம்ம வீட்டிலா என்று ஆராய்ச்சி
நடக்கும்.
தௌசண்ட் வாலா, டென் தவுசண்ட் வாலா என்று கரியாக்குபவர்களும் இருந்தார்கள். இருக்கிறார்கள்.
நம் காது  கிர்ரென்று
இரண்டு மூன்று நாட்களுக்குக் கேட்டுக்
கொண்டிருக்கும.
 இதில்  ஒரு பக்கத்துவீட்டுப் பையன் இரவு பத்து மணிக்கு மேல் ஒரு ஒரு லக்ஷ்மி வெடியாகப் போடுவான். .
திடும் திடும் என்று வெடிப்பது கட்டிடமே ஆடுவது போல இருக்கும்.

அடுத்த தலைமுறை வந்தாச்சு. பேசி வைத்துக் கொண்டு இந்தக் குழந்தைகள் ஒருவர் மாற்றி ஒருவர் வெடிப்பது அழகாகத் தான் இருக்கிறது..விலை ஏற்றம் எல்லாம் இவர்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை.

என் காமிராவுக்குத்தான் வேலை கொடுக்கப் போகிறேன். அவர்கள் பட்டாசு வெடிப்பதையும் ,அந்தச் சந்தோசம் முகத்தில் தெரிவதையும் எடுக்க


வேண்டும்


     
எங்கள் இருவருக்கும் புஸ்வாணமும் ஒரு சீனிச்ச்சரமும் போதும்.:)

அனைவருக்கும் மனம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.
பட்டாசு செய்த சின்னக் கரங்களுக்கும் வணக்கம்.
 அந்தக் கைககள்  புத்தகங்கள் ஏந்தும் நாட்களும் வரட்டும்.எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Posted by Picasa

9 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வும்மா.. நினைவுகள் பகிர்வதில் இருக்கும் சந்தோஷம்.... :))

உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் அம்மா....

அமைதிச்சாரல் said...

அந்தக் கால, இந்தக் கால தீபாவளியை வகை பிரிச்சது அசத்தல்..

துணி எடுத்ததுமே தீவாளி கோலாகலமா தொடங்கிடுமே :-)

கோமதி அரசு said...

நல்ல பகிர்வு.

தீபாவளியை சுற்றம் சூழ ஒன்றாய் சேர்ந்து கொண்டாடும் சுகமே தனிதான்.

உங்களுக்கு எங்கள் தீபாவளி நல் வாழ்த்துக்கள் அக்கா.

தி. ரா. ச.(T.R.C.) said...

பட்டாசு செய்த சின்னக் கரங்களுக்கும் வணக்கம்.
அந்தக் கைககள் புத்தகங்கள் ஏந்தும் நாட்களும் வரட்டும்

நல்ல எண்ணம். ஆங்கிலத்தில் கூறுவார்கள் wish well and be weel தீபாவளி வாழ்த்துக்கள்

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். உண்மைதான்
நினைவுகளை எழுதும்போதே சந்தோஷமாக இருக்கிறது. அருபது வருட தீபாவளையையும் எழுதிவிடப் பொஒகிறேனோ என்ற பயம் வந்துவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல் , எழுதியதை
அசத்தும் விதத்தில் புரிந்து கொண்டு அதைச் சொல்லவும் செய்கிறீர்கள். மிக மிக மகிழ்ச்சி.
ஆமாம் துணிமணிகள் வந்ததும்
முக்கால் தீபாவளி வந்துவிட்டது:)

வல்லிசிம்ஹன் said...

சுற்றம் சூழ்ந்து இருப்பது போல்அ உணர்வை இந்தப் பதிவுகள் எனக்குக் கொடுத்துவிட்டன தங்கச்சி கோமதி.
எல்லோருக்கும் தீபாவளி ஒளி மகிழ்ச்சி கொடுக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் திரா ச சார்,. இன்று கொஞ்சம் பட்டாசும் மத்தாப்பும் வாங்கினோம்.

அந்தச் சிறுவர்களின் வாழ்க்கைக்கு இந்தப் பட்டாசுகளே ஆதாரம் என்கிறார்களே.

அவர்களுக்கும் வாழ்க்கை வளங்கள் வரட்டும்.

மாதேவி said...

தீபாவளியின் இனிய நினைவுகள்.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

இப்போது தீபாவளிக்கு வாங்கி கொடுத்த உடுப்புக்கள் சில நாட்களுக்கு முன்பே காணாமல் போய்விடும். ஒன்றை ஒளித்து வைக்கவேண்டிய நிலை அம்மாக்களுக்கு :))