About Me

My photo
கண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.

Saturday, November 20, 2010

நிலவும் வானும் நிலமும் கதிரும் பயிரும்..2


நிலவும் வானும் நிலமும் பயிரும்


++++++++++++++++++++++++++++++++++++++++

10:42 AM 11/20/2010

இந்தக் கதை-சம்பவத்துக்கு அடிநாதம் ஒரு குடிப் பழக்கம் கொண்டிருந்த தந்தை.அவர் பெயரெல்லாம் அவசியமில்லை. பாதிக்கப் பட்டவன் பரத். அவனுக்கு இப்போது தந்தையும்


அன்னையுமாக இருப்பவர்கள் அவனது மாமாவும் மாமியும் தான்.

அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.தூத்துக்குடியில் குடும்பம் நடத்திவந்த பரத்தின்

பெற்றோர்கள்,நல்லதொரு கம்பெனியின் ஆதரவில் ஆநந்த

வாழ்க்கை நடத்திவரும் போது நடுவில் வந்த வழக்கம்

இந்த மது அருந்துவது.

தூத்துக்குடியில் ஒரு செல்வந்தர் பரத்தின்

அப்பா அலுவலகத்தின் வாடிக்கையாளர்.எப்பவும் எந்த விசேஷமாக இருந்தாலும் அவர்கள் வீட்டிலிருந்து வண்டி வந்து

இவர்களை அழைத்துப் போகும்.

வேற்று மதத்தினராக இருந்தாலும் வித்தியாசமெல்லாம் கிடையாது.

அவர்கள் வீட்டிலும் குழந்தைகள் இருந்தன.இன்னும் இரண்டு மூன்று தோழர்கள் சேர்ந்து கொண்டால் நேரம் போவது தெரியாது.

சீட்டுக்கட்டும்,மதுவும், மற்ற சகலகொறிக்கும் பண்ட்ங்களும் சேர்ந்து கொண்டு

முதலில் சந்தோஷமாகத் தான் கழிந்தது.பரத்தின் அம்மா சைவம் என்பதால் அவளுக்குத் தோசையும்,ஊறுகாயும்

தயிர்சாதமும் அழகாக அலங்கரிக்கப் பட்ட தட்டில் வந்துவிடும்.

அந்த வாடிக்கையாளர்...க்ரிஸ்டோஃபர், வந்து பரத்தின் அம்மா சரியாகச் சாப்பிடுகிறாளா


என்று பார்த்துவிட்டுத் தான் போவார்,.

நல்ல மனம்.அவரது மனைவி குணவதி அம்மாளும் அப்படியே. அவளும் வயதில் பெரியவள் தான்.

ஆனால் அசராமல் கணவரின் விருந்தினர்களை முகம் சுளிக்காமல்

கவனிப்பாள்.

ஒரு இரு வருடம் இதுபோல் ஓடியது.

பரத்தின் தந்தைக்குத் திருநெல்வேலிக்கு மாற்றல்.இதற்குள் க்ரிஸ்டோபருடனான நட்பு மிகவும் வலுத்துவிட்டது. உண்மையிலியே

மிக்க அன்பு பூண்ட நண்பர்கள் ஆனார்கள்.

ஒரே ஒரு வித்தியாசம்.

பரத்தின் தந்தைக்கு மது இல்லாமல் ஒரு நாளாவது இருக்க முடியவில்லை.சம்பளப் பணத்தில் அழகாக ஓடிக் கொண்டிருந்த

குடும்பம் கடன் தொல்லைக்குள் மாட்டியது.

திடீரென முன்பின் சொல்லாமல் வந்த க்ரிஸ்டோஃபர் நண்பனின்

நிலை பார்த்து அதிர்ந்து போனார்.

என்னம்மா மகளே, எனக்கு ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா.

நான் அந்நியமாகிவிட்டேனா.'என்று வருத்தப் பட்டவர்

பரத்தின் அப்பாவைக் கையோடு

தன் ஊருக்கு அழைத்துப் போனார்.

அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்க வைத்து,

அவரைத் தெளிய வைத்து

மீண்டும் திநெல்வேலிக்கு அழைத்து வந்துவிட்டார்.அங்கிருந்தே பரத்தின்(அப்பாவின் பெற்றொர்) தாத்தா பாட்டிக்குத்

திருச்சிக்குத் தொலைபேசியில் விஷயத்தைச் சொல்லி

உடனே புறப்பட்டு வருமாறு அழைத்தார்.

அவர்களோ இது போன்ற விஷயங்களில் தெளிவில்லாதவர்கள்.

தானாகச் சரியாகிவிடும். தங்கள் மகன்

அப்படிப்பட்டவன் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார்கள்.அந்த நிலைமையில் தான் பரத்தின் அப்பாவுக்கு

அளவுக்கு மீறின போதையில் கார் ஓட்டும்போது,

ஒரு மரத்தில் மோதின விபத்து நிகழ்ந்தது.குழந்தை பரத்திற்குப் பன்னிரண்டு வயது.

நல்லவேளையாக அடியேதும் இல்லாமல் அவன் தந்தை தப்பித்தாலும்

அவரைச் சரிசெய்து வீட்டுக்கு அழைத்து வர

இப்போது இருக்கும் மாமா ரகுநாதன் தான் உதவினார்.

போலீஸ் கேஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டுஅதற்கு மேற்பட்ட உதவிகளையும் செய்து கொடுத்துவிட்டு

பக்கத்தில் இருக்கும் திருச்செந்தூருக்குத் திரும்பினார்.

அவர் வேலை,சொந்த வீடு,மனைவி மகள்,மகன்

எல்லோரும் அங்கேதான் இருந்தார்கள்.திருப்புகழ்,முருகன்,கோவில் இதுதான் அவருக்கு எல்லாம்.

தங்கை கஷ்டப்படுவதை அவரால் சகிக்க முடியவில்லை.

எங்களோடு வந்துடுமா,நான் பார்த்துக் கொள்கிறேன்

என்று எத்தனையோ சொல்லிப் பார்த்தார்.பரத்தோட அம்மாவுக்குத் தன் கணவனின் மேலிருந்த அன்போ

கரிசனமோ குறைந்ததே இல்லை.அந்த நிலைமையில் தான் சிவசங்கரி அம்மா எழுதின

ஒரு மனிதனின் கதை'' படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.


  எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

17 comments:

வல்லிசிம்ஹன் said...

தொடரும் போட விட்டு விட்டது.:0)
கதை என்றாலும் உண்மையில் நடந்த சோகமே. நல்ல வேளை
சம்பந்தப் பட்டவர்கள் அனைவரும் சந்தோஷமாக ஆரோக்கியமாக
இப்போதுவெளிநாட்டில் இருக்கிறார்கள்:)

துளசி கோபால் said...

குடியால் எத்தனையோ குடும்பம் அழிஞ்சுருக்கு. இன்னமும் பல குடும்பங்கள் இந்த அழிவை நோக்கிப் போய்க்கிட்டே இருக்குப்பா.

இதுலே அரசாங்கம் தன் பங்குக்கு ஊத்தி கொடுக்குது.

பார்க்கப்பார்க்க மனசுக்குச் சங்கடமா இருக்கு:(

குடி, குடியைக் கெடுக்கும் என்பது சத்தியமான உண்மை.

திவா said...

ம்ம்ம்ம் அப்புறம்?

வல்லிசிம்ஹன் said...

இந்தக் கதை வந்ததற்குக் காரணமே மதுத்தடை நீக்கப் பட்டதால் தான் துளசி.

1975இல் மோசம் என்று நினைத்தேன்.
இப்போ சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
கடவுள் எப்பவும் நம் பக்கத்தில் இருந்து எல்லாரையும் காப்பாற்றவேண்டும். நினைத்தாலே அடிவயிறு கலங்குகிறது. பாவம் அந்தத் தம்பதியினர்.:(

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன். நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்ப்பதே எனக்கு அபரிமிதமான களைப்பைக் கொடுக்கிறது. பட்டவர்களுக்கு எப்படி இருக்கும். திங்கள் கடைசிப் பதிவு.;)

அப்பாதுரை said...

கனக்கிறது.

அப்பாதுரை said...

என்னோட life storyயோனு பயந்துட்டேங்க... (my dad was an irresponsible alcoholic and was killed in a road accident)

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,ரொம்ப வருத்தமாகிவிட்டதும்மா. மீண்டு வந்துவிடுங்கள். இது இரண்டு மூன்று நண்பர்களின் நிஜக் கதைதான்.
எந்த விதக் கஷ்டத்துக்கும் விடுதலை உண்டு. இந்தப் பழக்கத்துக்கு மட்டும் குடிப்பவராக நிறுத்தினால்தான் வழி.பாதிக்கப் படுவது அவர் மட்டுமில்லையே.
நம் கதாநாயகனும் பாதிக்கப் பட்டவன் தான்.நன்றாக இருங்கள் துரை.

ஸ்ரீராம். said...

ஒரு மனிதனின் கதை தியாகுவை மறக்க முடியுமா? அந்தக் கதை டிவி சீரியலாக கூட வந்ததாக ஞாபகம். ரகுவரன் நடித்ததாக ஞாபகம். பொதிகையில் சமீபத்தில் சிவசங்கரி பேட்டி பார்த்தீர்களோ?

சந்தனமுல்லை said...

:-((

நல்லா எழுதியிருக்கீங்க வல்லியம்மா.

வல்லிசிம்ஹன் said...

தியாகுவையும் மறக்க முடியாது.ரகுவரனையும் மறக்க முடியாது.
வரணும் ஸ்ரீராம்.
அந்தச் சமயம் திருமதி சிவசங்கரி ஆல்கஹாலிக்ஸுக்கான மறுவாழ்வு மையத்தில் வந்து எல்லோரையும் சந்தித்தாகச் சொன்னார்கள்.
பொதிகையில் அவர் வந்தபோது நான் பார்க்கலைமா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முல்லை. அந்தக் குடும்பம் பட்ட பாட்டைக் கண்ணால பார்த்த போது இந்த உலகில் மது என்கிற விஷயமே இல்லாமப் போய்விடணும் கடவுளேனு தோணும்.

Jayashree said...

Happy thiru karthikai Mrs Simhan. Alcohol அடிக்க்ஷன் லேந்து மீண்டு வந்த ஒரு அற்புதமான தோழி எனக்கு. அவங்களோட தைரியம், டிடெர்மினேஷன் கமிட்மென்ட் என்னை HUMBLE ஆக்கும்.அடிக்க்ஷனை டீல் பண்ண , என் பழக்கம் பிறத்தியாரால, கடைகளினால என்பதை விட்டு தன்னோட POOR CHOICE என்று resposibility எடுத்துக்கொள்ளும் மன உறுதி வேணும். .சொல்வார் சொன்னா கேப்பாருக்கு மதி எங்க போச்சு என்கிறது ரொம்ப இந்த பழக்கத்துக்கும் பொருந்தும். மீண்டு வருவதில் உள்ள கஷ்ட்டம் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் . பொதுவா ஸிம்பதி அனுபவிக்கற சக குடும்பத்தாருக்கு போய், எல்லாருக்கும் இவா மேல ரொம்ப கோபமா வரும் ஆனா இந்த கடும் பழக்கம் உள்ளவர் அனுபவிக்கும் டார்ச்சர் கடந்து வந்த,வருபவர்களின் உண்மையான நிலையை கண்கொண்டு பாக்கும்போதுதான் அதன் துன்பம் புரியும்.AA ல நிறைய SUCCESS STORIES . I dedicate this comment to my dearest friend Margarette who has done an extraordinary service in this area besides winning over her own addiction 30 years ago.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜயஷ்ரீ, உண்மைதான். நானும் என் தோழியின் பக்கம் நிறையப் பேசிவிட்டேன். ஆனால் அவளுடைய நம்பிக்கையும் ,பொறுமையும் அந்த மனுஷனை மீட்டு வந்தது கண்ணால் பார்த்தது. அவர் வித்ட்ராயல் நேரத்தில் அவஸ்தைப் படுவதை அவள் சொல்லிச் சொல்லி வேதனைப் படுவாள். அத்ற்கு இந்த மறுவாழ்வு மையம் செய்திருக்கும் சேவையும் ஏஏ வும் ஒத்துழைத்தது தான் அவர்களின் வெற்றிக்குக் காரணம்.ஒரு மீட்டிங் கூட மிஸ் செய்யாமல் அவரை அழைத்துப் போக ஒரு மெம்பர் வந்துவிடுவார். அதே போல குடும்பத்துக்குத் தேவையான ஆல் அனான் குழுவிலும் அவளும் பரத்தும் இடம் பெற்று மற்றவர்களைப் பார்த்து,கேட்டு பாடங்கள் கற்றார்கள்.
ரொம்ப நன்றிமா. உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள். உங்கள் தோழி மதுவற்ற நீண்ட வாழ்வு வாழ என் பிரார்த்தனைகள்.

அப்பாதுரை said...

>>>நன்றாக இருங்கள் துரை.
நன்றிங்க.
(எங்கப்பா ஒரு பொறுப்பில்லத குடிகாரர்னு சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்குனு சில சமயம் தோணும் - i am equally irresponsible, not yet an alcoholic :)

மதுப்பழக்கம் பத்தி நீங்க சொல்றது புரியுது. அடிப்படையில் அது மனிதனின் தவறு, மனக்கோளாறு தான் என்பது என் கருத்து. Guns don't kill people; people do. மதுவை ஒழிக்க வேண்டும் என்று புறப்படுவது நடைமுறை சாத்தியமில்லை. பணத்தால் வரும் கேடுகள் இன்னும் அதிகம்; பணத்தை ஒழிக்க முடியுமா?

இந்தியாவில் இன்னொரு பழக்கம் பார்த்திருக்கிறேன் (குடிப்பழக்கம் பத்தி ஏழு வயசுல தெரிஞ்சதுனால இந்தப் பரிமாணம் கொஞ்சம் ஆழம் எங்கிட்டே); social or moderate drinking என்பதே இல்லை. பீரோ விஸ்கியோ ஒரு பாட்டில் வாங்கினால் மொத்தத்தையும் குடிச்சு விட்டுத் தான் மறுகாரியம் பார்க்கிறார்கள். ஒரு பெக் இரண்டு பெக் பிறகு, மதுவின் பரவசம் முடங்கிப் போய்விடுகிறது. எதற்குக் குடித்தோம் என்ற காரணமே புரியாமல் போய்விடுகிறது. இது இந்தியாவில் மட்டும் தானா என்று தெரியவில்லை - don't mean to sound bigoted. இப்பொழுதும் நண்பர்களுடன் போகும்பொழுது பார்க்கிறேன் - நாலு பேர் போனால் ஆளுக்கொரு பாட்டில் வரவழைக்கிறார்கள்!!

மது, சூது, மாது (ஆண்களுக்கு எதுகையா வர மாதிரி ஒண்ணும் தோணலை - this includes men :) - இந்த addictions பத்தி சின்ன வயசிலேயே பள்ளிக்கூடத்தில் group discussion பாணியில் விழிப்பு வர மாதிரி சொல்லிக்கொடுக்கணும். குடிப்பது பாவம்னு பயமுறுத்தி வைக்கிறோமே தவிர, அறியாமையை ஒழிக்க ஒண்ணுமே செய்யமாட்டுறோம். குடியில் மூழ்கினப்புறம் சாணா முழமா? what gives?

அறியாமை தான் அடிமைத்தனத்தில் கொண்டு விடுகிறது. காலப் போக்கில் இந்த நிலை மாறும். (யுகக்கணக்கில் மதுவும் போதையும் நம் கலாசாரத்தில் கலந்திருக்கிறது - மாற்றுவதும் மாறுவது சாமானியமில்லை)

சிகரெட் மற்றும் மற்ற போதைப்பொருட்களும் இப்படித் தான். இந்தியாவில் மற்ற போதைப்பொருட்கள் சாதாரண மக்கள் அளவுக்கு இன்னும் பரவவில்லையே தவிர - அபாயத்தின் சாத்தியம் இருக்கிறது. இங்கே தெருவோரத்தில் கோகெய்ன் விற்கிறார்கள் - பள்ளிக்கூடப் பிள்ளைகள் இதைப் பற்றித் தெரிந்து பெரும்பாலும் ஒதுங்குகிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்பை விட இப்போது முன்னேற்றம் என்கிறார்கள். முன்னெச்சரிக்கையாக இந்தியாவில் ஏதாவது செய்ய வேண்டும். (நாலு வருடங்கள் முன்பு ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் டீனேஜ் பெண்களையும் ஆண்களையும் பார்த்து அதிர்ச்சியடைந்தேன் - அவர்கள் பணத்தில் புரள்வது காரணமென்று புரிந்தாலும், அந்தப் பழக்கங்கள் பாமர அளவில் வந்து சேர ரொம்ப நாளாகாது)

வல்லிசிம்ஹன் said...

துரை,
குடிக்கு எது அளவு எனக்குத் தெரிந்து என் கணவரின் நண்பர் உய்ர் ரக மதுதான் சாப்பிடுவார். தினம் மூன்று பெக் அளவு. நிறுத்தி,ருசித்து சாப்பிடுவார். அவர் மனைவியும் அவருக்கேற்ற உணவுவகைகளை அருமையாகச் சமைத்துப் போடுவார்.
எப்பவாவது அவங்க ஊருக்குப் போகும்போது(கொடைக்கானல்) எங்கள் குடும்பம் அவர் வீட்டுக்குப் போவோம். அவர் அத்து மீறி நடந்ததை நான் பார்த்ததில்லை. இருந்தும் தனது 55ஆவது வயதில் பான்க்ரியாஸ் கான்சர் வந்து,அமெரிக்காவுக்குப் போய் சிகித்சை செய்தும் பயனில்லாமல் அவர் இறந்தது மகா சோகம்.

வல்லிசிம்ஹன் said...

துரை,உண்மைதான். இது இப்ப இல்லமா . ரொம்ப நாளாகவே இருக்கு. யார் அதிகமான அளவு குடித்துவிட்டு ஸ்டெடியாக இருப்பார்கள் என்பதில் ஒரு போட்டி:)

you do not sound bigoted:0)
do not worry.these things are happening and happening more. more money,more education,more power.I AM BIG ,I CAN HANDLE IT.:(

இந்தப் பிரச்சினை உலக அளவில் வெவ்வேறு விதத்தில் பாதித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இந்தியா மட்டும் பின் தங்க முடியுமா:(
இதையும் மீறி நல்ல பசங்களும் ஒளிமயமான எதிர்காலத்தோடு சந்தோஷமாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். அடித்தளம் சரியாக இருந்து,அதைச் சரியாகப் பின்பற்றும் பிள்ளைகளும் பெண்களும் வளர வேண்டும் என்றே பிரார்த்திக்கிறேன்.